பக்கம்:Tamil varalaru.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 த மி ழ் வ ர ல வ வழியிற் பாணினிக்குப் பிற்பட்டனராவர் என்று துணியலாம். இங்கே பாணினி மதத்தை உடம்படாது வேற்றுமை எட்டென்ற ஐந்திர மதத்தை அகத்தியனர் உடம்பட்டது காணலாம். அவர் உடம்பாடே தொல்காப்பியர்ைக்கும் உடம்பாடாதலால், 'ஐந்திர கிறைந்த தொல்காப்பியனெனக் தன் பெயர் தோற்றி' என்று பாயிரத்திற் பாராட்டப் பட்டனரென்று கொள்ளலாம். இதற்கேற்பவே தொல்காப்பியனுர், வேற்றுமை தாமே ஏழென மொழிப என்பதல்ை, பிறர் மதங்கூறி, விளிகொள் வதன் கண் விளியோ டெட்டே ' என்னுஞ் குத்திரத்தால் தந்துணிபுரைத்தாரென் க. இவ் விரண்டு குத்திரங்களும் மேற் காட்டிய அகத்திய குத்திரப் பொருளேயே தழுவிவந்தவாறு எளிதில் உய்த்துணரலாம். ஒதிய புலவனும் உளன்' என்றது அகத்தியனர் தங்கா லத்தே பாணினி உளதை ல் பற்றி என்று துணி தற்கு இடந்தருகின்றது. இந்திரன் இலக்கணம் தென்னுட்டுப் பயிலப்பட்டு முற்காலத்தே போற்றப்பட்டு வந்ததென்பதற்குச் சான்றுகளும் உண்டு. புண்ணிய சரவணம் பொருந்துவிராயின் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவிர் ' (சிலப். காடுகாண். 99.100) ' கப்பத்திக் திரன் காட்டிய நாலின் மெய்ப்பாட்டியற்கையின் விளங்கக் காணுய் ' (டிெ. டிெ. அடி, 154-5) எனச் சிலப்பதிகாரத்து வருமிடங்களில் விண்ணவர் கோமான் விழு நால்' என்னும் பகுதிக்கு 'இந்திர ளு ற் செய்யப்பட்ட ஐக் திரவியாகரணம் என்னும் இலக்கணம் ' எனவும் இந்திரன் காட்டிய நால் ' என்னும் பகுதிக்கு 'இந்திரன் தோற்றுவித்த வியாகரணம்' எனவும் அடியார்க்கு கல்லார் பொருள் கூறுத

  • புத்தமத Tarಿ அவதான சதகத்தில் சாபுத்தன் தனது பதினரும் ஆண்டில் ஐந்திரம் படித்தான் என்று சொல்லி யிருக்கிறது. . . . . . . . . செந்தமிழ். Vol. 26.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/210&oldid=731370" இலிருந்து மீள்விக்கப்பட்டது