பக்கம்:Tamil varalaru.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாபுராணம் மாபுராணம் என்பது, பழந்தமிழ் இலக்கண நூலென்பதும் தொல்காப்பியத்துக்கு முற்பட்ட தென்பதும் தொல்காப்பியப் பாயிர வுரைக்கண், முந்து நூல் அகத்தியமும், மா புராணமும், பூதபுராண மும், இசை நுணுக்கமும் : அவற்றிற் கூறிய இலக்கணங்களா வன, எழுத்துச்சொற்பொருள் யாப்பும், சந்தமும், வழக்கியலும், அரசியலும், அமைச்சியலும், பார்ப்பனவியலும், சோதிடமும், காந்தருவமும், கூத்தும், பிறவுமாம்.' என கச்சிஞர்க்கினியர் உரைத்தவாற்ருன் அறியப்படுவன. இந் ஆாற் பெயரால், இத்தமிழ் காட்டு, வடமொழி வழக்கு மிகவும் இறப்ப முக்தியே பயின்றதென்று உய்த்துணர லாகும். மாபுரா ணம் என்பது பெருங் தொன்னுால் ' என்ற தமிழ்ப் பெய ருக்கு வடமொழிப் பெயராக ஆண்டது போலும். புராணம் என்று பேரிட்டுக்கொண்டு செய்யுளிலக்கண முதலாகப்பல்வகை இலக்கணமுங் கூறுதல் வடநாலார்க்கும் உடன்பாடு. இதனே வடநால் அக்கினிபுராணத்துட் கண்டுகொள்க. இம்மாபுராணம் பெரும்பான்மை வெண்பாவும், சிறுபான்மை சூத்திரமுமாக இருந்ததென்பது இந் நூற் பெயரால் எடுத்து உரைகாரர் மேற் கோள் காட்டிய பகுதிகளால் விளங்குகின்றது. இந்நூற் பாடலுள், ஒதினர் தொன்னுால் உணர்வுடையோர் ' எனவும், வழுவென மொழிப வாய்மொழிப் புலவர் ' எனவும், வருதலான் இவர்க்கு முன்னரே பல தொன்னுரல்கள் உளவென்பதும், அவற்றின்கண் கல்லறிவுடைய வா ய்மொழிப் புலவர் பலர் இருந்தனர் என்ப்தும் அறியக்கிடப்பன. கச்சிளுர்க் கினியர், அகத்தியம், மாபுராணம், பூத புராணம், இசை துணுக் கம் என்னும் இவை இன்னின்ன இலக்கணங் கூறுவன என்று தொகுத்தோதியதல்ை இந் நாற்கு முற்படவே இத்தமிழ் காட் டார் வழங்கிய யாப்பும், சந்தமும், வழக்கியலும், அரசியலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/232&oldid=731394" இலிருந்து மீள்விக்கப்பட்டது