பக்கம்:Tamil varalaru.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல் காப் பி யம் 271 ஆகாரென்பது, கடல்கோளை ப்பற்றிக் கூறியவிடத்துத் தொல் காப்பியனரைக்குறித்து வரும் பகுதிகளால் நன்கறிந்ததாகும். பழைய உரைகாரராற்றலேயோத் தென்று துணியப்பட்டசிலபல செய்யுள்கட்கும், பாரத காலத்தனவென்றும் கடல்கோளுக்கு முந்தியனவென்றும் தெளியப்படும் சிற்சில செய்யுள்கட்கும், அகத்தியகுத்திாமென முன்னேரெடுத்தாண்ட ஒருசிலகுத்திரங் கட்கும் இவர் செய்த தொல்காப்பியம் பிற்பட்டதென்று கூறலா மல்லது, மற்றுத் தமிழில் இப்போது வழங்குகின்ற பல நூல் கட்கும் முற்பட்டதென்று துணி தற்குச்சான்றுகள் பலவுள்ளன. இவர் செய்யுள் பற்றியும் வழக்குப் பற்றியும் கூறியுள்ள இலக் கனங்களிற் பலவற்றிற்கு இலக்கியங்காட்டுதல் இப்போதுவமுங் ஆம் நால்கவே க் கொண்டு இயலாமையானும், இவர் கூறிய இலக் கனங்களின் வேருய்ச் சிலசொற்களுங் கொள்கைகளும் இந் நால் களிற் காண்டலாலும், இவர் இந்நூாற்கெல்லாம்.முக்தியவரென்று துணிதல் ஒருதலையாவது. இவர், ' அவற்றுள், ல ள ஃகான் முன்னர் யவ்வுக் தோன்றும் ' (எழுத்தறி. நான்மரபு. 36) எனக் கூறுதலான் ஒரு மொழிக்கண் லகாரப் புள்ளியின் முன்னர் யகரம் வந்து மயங்கிய ஒருமொழி வழக்கு இவர்காலத்து உண் டென்று கன்கு தெளியலாம் ; அவை வல்யம், அல்யம் என்றன போன்ற சில சொற்களாகும். இப்போதுள்ள எந்நூற் செய்யு வரினும் இவ்வித வழக்குக் காணப்படாமை கோக்கிக்கொள்க. இம்மயக்க விதி ஒரு மொழிக் கல்லது புணர்மொழிக்கு ஆகா தென்பது கச்சிளுர்க்கினியருரை கோக்கித் தெளிக. அவர் இச் ருத்திர வுரைக்கண், இவ்வாசிரியர் நால் .ெ ச ய் கி ன் ற காலத்து வினைத் தொகைக் கண்ணும் பண்புத் தொகைக் கண்ணுமின்றி ஒரு மொழிக்கண்ணே மயங்கு வனவும் உளவாதலின் அவற்றைக்கண்டு இலக்கணங் கூறினர். அவை பின்னர் இறந்தனவென்று ஒழித்து உதாரண மில்லனவற்றிற்கு உதாரணங் காட்டாமற் போதலே நன்றென்று கூறலுமொன்று ' என்றுரைத்தவாற்ருன் இத லுண்மை உணர்க. E.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/279&oldid=731445" இலிருந்து மீள்விக்கப்பட்டது