பக்கம்:Tamil varalaru.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியத்திற்கு முந்துநூலுண்மை 291 ஆசிரியர் கருத்தென்பது அவர் கொள்கை. எங்கனமாயினும் அறுவகை என்பது பரவல், புகழ்ச்சி,குறிப்பு,கொடிங்லே, கந்தழி, வள்ளி என ஆசிரியர் விதந்தோதிய ஆறு மன்றி வேறே ஆறு ஆகாமை அறிவாளரே ஆராய்ந்து கொள்வாராகுக. ஆசிரியர் இவ்வாறனுள் கொடிங்லே, கந்தழி, வள்ளி என்ற மூன்றனேயும் ஒரு கூருக உடன்படுதல், வடுங்ேகு சிறப்பின் முதலன மூன்றும் ” (தொல். புறத். 33) என்று அவர் குத்திரஞ் செய்தவாற்ருன் எளிதிலுணர லாகும். முதலன மூன்று ' என்பதற்கு முற்கூறப்பட்டமூன்றென்றே கச்சிஞர்க்கினியர் உரை கூறிச் செல்லுதல் காண்க. மேற் கூறிய ஆறனுள்ளும் இக்கொடிங்லே முதலிய மூன்றும் முதலனவாகக் கருதப்படாவாயின் முற்கூறப்பட்ட மூன்றென்று கூ று த ல் பொருந்தாமை காண்க. இனி, கச்சினர்க்கினியர் குறிப்பு என்பது அறம் பொருள் இன்பம் பற்றி முன்னுேர் கூறிய குறிப்புப் பொருள் என்பர். கொடிகிலே, கந்தழி, வள்ளி என்ற மூன்றும் ' அத்தேவரைப் போல் ஒருவழிப் பிறக்கும் பிறப்பில்லாத தெய்வங்கள்” என்று கொண்டு கொடிங்லே வெஞ்சுடர் மண்டிலமென வும், கந்தழி ஒரு பற்றுக் கோடின்றி அருவாகித் தானே கிற்குக் தத்துவங் கடந்த பொருள் எனவும், வள்ளி தண்கதிர் மண்டிலம் எனவும் உரை கூறிப் போந்தார். அவர் தேவருள் ஆண் தெய்வமேயன்றிப் பெண் தெய்வமுங் கொடிங்லை கந்தழி வள்ளி யென்புழியடங்கு மென்று கொண்டு திங்கள் பெண்டன்மையுடைமை காட்டுவர். கச்சிர்ைக்கினியர் கூறிய உரை கொண்டு ஆராயுமிடத்து அறு வகை என்றது முனிவர் முதல் உலகீருக அவர் கூறிய ஆறேயா மென்றும் ஆண்டு அறுவகையுள் அடங்காத அக்கொடிங்கல முதலிய மூன்றும் அவ்வறுவகையுட் சொல்லப்படாதனவாய் வேறேயா மென்றுங் கொள்ளக்கிடப்பது நன்கு தெளியலாம். இங்ஙனமாயின் கொடிங்கல ” என்ற குத்திரத்து (புறத். 33) ‘ முதலன மூன்றும்” (முற்கூறப்பட்ட மூன்றும்) என்று கூறி யதைேடு முரணுதல் காணலாம். இவர் கொடிநிலை முதலிய மூன்றிற்கும் முன்னேர் யாருங் கொள்ளாத பொருள்களே உரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/299&oldid=731467" இலிருந்து மீள்விக்கப்பட்டது