பக்கம்:Tamil varalaru.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியத்திற்கு முந்துநாலுண்மை 293 கம்பிலிக் கொடிக்கம்ப கட்டதும் " எனச் சோழர் மெய்க் கீர்த்தியில் வருதலானும், கோயில்தோறு முள்ள கொடிக்கம்ப்ங்களானும், ஆண்டுப் பல்லோருஞ் சென்று வழிபடுதலானும் உண்மை உணரலாம். கந்தழி என்பது கந்தளி என்னும் வடசொற்கண் ளகரம் ழகரமாகத் திரிக்கதாகும். பிர வாளம் பவளம், பவழம் என்பது போலக் கொள்க. கந்தளி அம் மொழியிற் கொடிக்குப் பெயரா த ல் கேட்டுணர்ந்து கொள்க. வல்லி வள்ளியென மருவி வழங்குவது தெரிந்தது. கொடியேற் றம், கொடியிறக்கம் என்பன இரண்டும் கோயில் விழவுகளின் முதலினு முடிவினும் கிகழ்தலால் இவற்றின் சிறப்பு நன்கு தெளியலாம். வடுங்ேகு சிறப்பின்மூன்றும் ' என இவற்றைக் கூறுதலானும் இவற்றின் உயர்த்தி நன்கு அறியலாகும். இச்சூத்திரங்களின் கருத்தோடொத்துத் தெய்வத்திற்கு உறைவிடமாகப் படை வீடுகள் கூறப்படுதலும் அத்தெய்வத்தின் கண் ஆற்றுப் படுத்தலும் அதனேப் பரவலும் புகழ்தலுமேயல்லா மல் ஓங்கிய-விறற்கொடிவாழிய ' (திரு முருகு 38, 39.) எனக் கொடி முதலியன வாழ்த்தப்படுதலும் பிறவும் திருமுருகாற்றுப் படையுட் காணலாம். ' புள்ளனி நீள்கொடி புணர்கிலே " (சிலப். 11-136) என்பதுங் காண்க. கொடிக்கம்பத்திற்றெய் வம் கிலே கொள்ளுதல் கந்திற் பாவையைப்பற்றி மணிமேகலை கூறுமாற்ருல் உணர்ந்துகொள்க. பட்டினப்பாலேயுள், விழவரு வியலாவணத்து - மையறு சிறப்பிற் றெய்வஞ் சேர்த்திய மலரணி வாயிற் பலர் தொழு கொடியும்” (158—160) என வருதலானும் இதனுண்மையுணர்க. தமிழ் காட்டிலே பல் லூர்களிலும் இக் காலத்தும் ஒரு கம்பத்தை கட்டுப் பெருஞ் சோறு படைத்துத் தெய்வம் வாழ்த்திப் பாத்துண்பது ' கம்ப சேவை ' என்னும் பெயரான் நிகழ்தல் காணலாம். கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப், பலிகண் மாறிய பாழ்படு பொதியில் ' (புறம். 53) என்பதளு ற் பொதியில்களிலும் கம்பங்களிற் றெய்வ வழிபாடு நிகழ்ந்தது தெரியலாம். பட்டினப்பாலேயுள், பலர் தொழ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/301&oldid=731471" இலிருந்து மீள்விக்கப்பட்டது