பக்கம்:Tamil varalaru.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 த மி ழ் வ ர ல | று குடென்றே உடன்படுவர். இங்ங்னம் தமிழ் க்றும் கல்லுலகம் என்று பழந்தமிழ் நூலாசிரியர் துணிதற்குப் படைப்புக்காலக் தொட்டு அடிப்பட்டு வழங்கியதோர் உண்மைக் கோட்பாடு இருந்திருக்கவேண்டுமென்று எளிதில் கினைத்தலாகும். தமிழ் கூறும் நாடுகள் பலவுளவேனும் அவற்றுக்கெல்லாம் இதுவே தாயகமென்று சிறப்பித்தல் கருதியே நல்லுலகம்' என்று வெளியிட்டனர் போலும் இனி அவரே "லெத்தொடு முந்து ஆால் கண்டு............... புலங் தொகுத்தோன்” என்று தொல் காப்பியனரைக் குறித்தலால் அம்மொழி வழக்கை அதன் தாய்கில வழக்கொடு வைத்து ஆராய்ந்து மொழியுண்மை தெரிந்து இலக்கண நூல் தொகுத்தானென்று அறியவைத்தலுங் காண்க. இதல்ை இங்ங்னம் தொல்லாசிரியர் துணிந்த உண்மையைச் சில கூறி உறுதிப்படுத்த விரும்புகின்றேன். தமிழர் காற்றிசையினையும் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என வழங்கினர். ஒரு காட்டின் சொல்லில் திசைபற்றிய பெயர் மிகவும் பழமையை அடைந்திருக்க வேண்டுமென்பது பல் லோர்க்கும் உடன்பாடாகும். ஞாயிறு தோன்றும் திசை முத லாகப் பல திசைக்கும் அடையாளங் குறித்த பெயர் வழக்கே யில்லாது ஒரு நாட்டார் அறிவின் வளர்ந்தனர் என்று கினேப்பது ஒருக்காலும் பொருந்தாது. இவர்கள் காணப்பட்ட திசைகட்குப் பல பெயர்கள் உடைய ராதலேயன்றி, அத்திசைகளினின்று வீசும்காற்றுக்களுக்கும் தனித்தனிப் பெயரிட்டு வழங்குதலானும் இவர்களுடைய திசையுணர்ச்சி நன்கறியத்தகும். கீழ்காற்றைக் கொண்டலென்பதும், கொண்டலொடு புகுந்து' (சிலப் 14, 110), தென்காற்றைத் தென்றல் என்பதும், தென்னவன் பொதியிற் றென்றல்' (சிலப். 34, 115), மேல் காற்றைக் கோடை என்பதும், கோடையொடு புகுந்து' (சிலப் 14, 123), வடகாற்றை வாடை வடந்தையென்பதும், 'கார ரசாளன் வாடையொடு வரூஉம்' (சிலப். 14, 98) இக்காட்டு அடிப்பட்ட வழக்காம். இங்கனம் திசையை ஆளும் பெயர்களுள் ஞாயிறு தோன்றுந் திசைக்குக் கீழ் என்பதும், கிழக்கு என்பதும் இத் தமிழ் மொழியிற் பள்ளத்திற்குப் பெயராகவும் வழங்குதலுண்டு. ஞாயிறு மறையுந் திசைக்கு வழங்கிய மேல் என்பதும், மேற்கு என்பதும், மேக்கு என்பதும் மேட்டிற்குப் பெயராக வழங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/32&oldid=731491" இலிருந்து மீள்விக்கப்பட்டது