பக்கம்:Tamil varalaru.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியங் கூறும் நூல் வகைமை 315 குறித்த பொருளே முடித்தற்கு வரூஉ மேது துதலிய முதுமொழி யென்ப ' (செய்யுளி. 177) என்பதன லறியலாம். ஒரு காட்டில் அறிவு வளர்ச்சியிற் கட்டளையில் அமைந்த செய்யுட்கள் யாக்கப்படுதற்கு முன்னே வழக்கின்கண் முது சொல்லே எதுகையோ மோனேயோ அமைந்து முற்பட வளரும் என்பது அறிவாளர் அறிந்ததொன்று. அதுவே செய்யுளாகிய கறுங்கனிமரம் தழைத்து உதவுதற்கு மூலம் எனக் கொள்வது கன்கு பொருந்தும். இம்முதுசொல் தொல்காப்பியனர்க்கு முன் னரே நால்கள் யாத்தற்கு உதவியாய் உள்ளன என்பது இதன் நுட்பமும், சுருக்கமும், ஒளியுடைமையும் விளங்கத்தோன்ற கின்று குறித்த பொருளே ஏதுவால் முடித்தற்கு வருமென்று இம்முதுமொழி யிலக்கணம் இவர் கூறியவாற்ருல் நன்குணர லாம். இதற்குக் காட்டிய பழம் பாடல், உழுத வுழுத்தஞ் செய் யூர்க்கன்று மேயக் கழுதை செவியரிங் தற்ருல்-வழுதியைக் கண்டன கண்ணி ருகுப்பப் பெரும்பணேத்தோள் கொண்டன மன்னே பசப்பு ' என்பது. இதன் கட் பின்னடிகளிற் கூறிய பொருளை முன் னடிகளிற் கண்ட பழமொழியால் விளக்கிக் காட்டுதல் கண்டு கொள்க. இவையன்றி, எழுத்தொடுஞ் சொல்லொடும் புணராதா கிப் பொருட் புறத்ததுவே குறிப்பு:மொழி யென்ப (செய்யுளி. 179) என்பதளு ற் குறிப்பிற்ை பொருள் தோன்றி கின்று சொல்லாற் பொருள் தோன் ருவாறு - குடத்தலேயர் செவ்வாயிற் கொம்பெழுந்தார் கையி னடக்கிய மூக்கின. ராம் ' என்பது குஞ்சரம் என்ரு ற்போ லச் சொல்லிசைவு என்று சொல்லப்படாது பொருளிசைவென்று பெயர் சொல்லக்கூடிய செய்யுள்கள் அடிவரையறையின்றி யாக்கப்பட்ட சில நூல்களும் இவர்க்குமுன் இருந்தன என்று தெரியலாம். இவையன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/323&oldid=731495" இலிருந்து மீள்விக்கப்பட்டது