பக்கம்:Tamil varalaru.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 த மி ழ் வ ர ல | று இசையையே முதன்மையாகக் கொண்ட பாட்டிடைக் கலந்த பொருளவாகிப் பண்ணத்தியெனப் பெயரிய சில நால்களும் இருந்தவாறு தெரியலாம். இவைகள் சிற்றிசையும் பேரிசையு முதலாக இசைத் தமிழில் ஒதப்படுவன என்பர் இளம்பூரணர். அதுவே தானும் பிசியொடு மானும் ' (செய்யுளி. 181) என்பதன்கண் பண்ணத்தி பிசியோடொக்கு மென்று கூறுதலான் இப்பண்ணத்தி அடி நிமிராது சுருங்கிய அளவில் வருமென்று கருதினு ராயிற்று. ' கொன்றை வேய்ந்த செல்வனடியை யென்று மேத்தித் தொழுவோம் யாமே ' இது, பிசியோடொத்த அளவிற்ருகிப் பாலையா ழென்றும் பண்ணுக் கிலக்கணப் பாட்டாகி வருதலிற் பண்ணத்தியாயிற்று, என்பர் இளம்பூரணர். பெளத்தபாலி நூல்களில் இப்பண்ணத்தி என்ற சொல் வழக்கு நன்கு பயின்றுள்ளது ஆண்டு இவ்விடக் திற் கேற்ற பொருள் இஃதென்று துணி தற்கு வாயிலாக இப் பெயர் வழங்கியுள்ளது. (Loror:#3 – The method of determining signification ; History of Pali literature, page 345). ஒரு பொருளேப் பலதுறையால் விளக்கும் வாயில் பண்ணத்தி என்பதும் பெளத்த சமயத்தர் கருத்தாம். அறம் ஒன்றேனும் புத்தரும் பல்வகைப்படுத்து அதனையே கூறியுள்ள தைப் பண்ணத்தி முறை என்பர். அவைதாம் நூலினை ' (செய்யுளி.105) என்னுஞ் சூத்திரத்திற் ருெகுத்துக் கூறியவற் விற்கு வகுத்து இலக்கணங் கூறி, கிறுத்த முறையின் வேருய் முன்னே தோற்றுவாய் செய்யாததாய் ஆண்டுக்கூறிய நூல் முதல் குறிப்பீருக வுள்ள அறுவகைக்கும் இலக்கணங் கூறிய பின்னர், இப்பண்ணத்தி இலக்கணம் தனியே எழுதலால், இஃ தொன்றினை வேறு வைத்துத் தனியே இலக்கணங் கூறுதற் குடன்படாது ' அது பிசியொடுமானும் ' என்றும், அதஞல் இவ்வகை ஆருயினவன்றி ஏழாயின இல்லை என்றுக் தங் கருத் துப் புலப்படுத்தினரென்றே நன்கு கொள்ளத்தகும். பிசி யொடுமானும் ' என்பது அடி சுருங்குதற் றன்மையாலென்று உ.ை யாசிரியர் கொண்டார். அடியிகந்து வரினுங் கடிவரை யின்றே ' (செய்யுளி. 183)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/324&oldid=731496" இலிருந்து மீள்விக்கப்பட்டது