பக்கம்:Tamil varalaru.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 த மி ழ் வ ர லா று தள்ளாப் பொருளியல்பிற் றண்டமிழாய் வந்தி லார் கொள்ளாரிக் குன்று பயன் என்பதல்ை இத்தொல்காப்பியனர் பொருளிலக்கணத்தை எடுத் தாளுதல் காணலாம். ஈண்டுப் பொருளியல்பிற்றமிழ் என்ப தற்கு உரையாளர் பரிமேலழகர் பொருளிலக்கணத்தை யுடைய தமிழை ' என உரை கூறியது நோக்கிக்கொள்ளலாம். இறையனர் களவியலுரைகாரர். இதற்கேற்பவே கடைச் சங்கத் தாருக்கு நாலாயிற்றுத் தொல்காப்பியம் என்றுரைத்தலும் தெளியலாம். ஐந்திர கிறைந்த தொல்காப்பியன் ' எனப் பாயிரத்துக் கூறலான், இத்தொல்காப்பியனர் காலத்தே ஐந்திரவியாகரண வுணர்ச்சி சிறந்ததாக மதிக்கப்பட்டதென கினேதல் தகும். பரணர் பாடிய ஐந்தாம் பத்துக்கொண்ட செங் குட்டுவன் தம்பியாகிய இளங்கோவடிகள் காலத்தே இவ்வைந்திர வியாகரணம் வழக்கற்று அருகிய தென்பதும், அவர் காடுகாண் காதைக்கண், புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவில்." (98-99) என வும், கப்பத் திந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணுய்" (154-155) எனவும் கூறுதலான் அறியப்படும். இதல்ை ஐந்திரம் வழங்கிய காலத்திற்கும் ஐந்திரம் அருகிய காலத்திற்கும் இடையிட்ட காலம் பேரளவினதேயாக வேண்டப்படுமாதலானும்தொல்காப் பியனர் காலம் பிந்தியதாகாது என்று ஒரு தலையாகக் கொள்க. இதற்குப் பொருந்தவே, வேந்தனும் வேந்து கெடும்' (குறள் 899) என் புழி இந்திரனும் அரசுகெடும் என்று திருவள்ளுவனரும் தொல்காப்பியனர் வேந்தன் மேயம்ேபுன லுலகம்" எனக் கூறியதையே தழுவிக் கூறியது காண்க. இவற்ருல் தொல் காப்பியத்தின் பழைமை நன்குணரப்படும் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/362&oldid=731538" இலிருந்து மீள்விக்கப்பட்டது