பக்கம்:Tamil varalaru.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Յ0 த மி ழ் வ ர லா று அறியலாம். குமரிக்குத் தெற்கட் பஃறுளியை வைத்து அதற்குக் தெற்கே தென் பாலி முகத்தைவைத்து, அத்தென்பாலிமுகத்தை அவர் நாட்டுத் தென்பாலிமுகம் என்று விளக்கியதல்ை இத லுண்மையறிக. தன் டைாகி ஆறில்லாத இடதைலின் ஆண்டு வடிம்பலம்ப கின்ற பாண்டியளுகிய நெடியோன் வளம்படுத்திப் பஃறுளியாற்றை உண்டாக்கினன் என அறிக. இதனே 'கெடியோனு லுளதாக்கப்பட்ட பஃறுளி' எனப்புறப்பாட்டுரைகாரர் 'முந்நீர் விழவினெடியோன் ■ ■ 睡 ■ ■ 睡 ■ 睡 ■ ■ ■■ 暉 ■■ பஃறுளி என் புழி உரைத்ததுகொண்டு தெளிக. இவனே குமரியாற்றிற்கப்பால் முத்தங்கொழிக்கு முதுர்ேக் கடற்கு விழவெடுத்தனன் (புறம், 9) என்றும், கிலனுங்கடலுங் குமரியாற்றிற்கப்பாலும் இவனே உடையனென்று மறிக. பிற நாடென்றது தமிழ் கூறு நல்லுலகத்தின் வேருய்ப் பிற திசை மொழி வழங்கிய நாடென்று கொள்க. இக்கடல்கோளிற் பஃறுளியாறும் பன்மலையடுக்கமும் குமரி யின் வடபெருங்கரைவரையும் மூழ்கியழிந்தனவென்று நன்கு தெரியலாம். குமரியாறு முழுதுமழிந்ததென்றற்குக் 'குமரியின் வடபெருங்கோட்டின் காறும்' என விளக்கிஞர். குமரியாறு ஒழிந்து அது கடலாகியபின் அக்கடற்றுறை குமரித்துறையெனத் தன் பழம் பெயரே பெயராய் வழங்கலாயிற் றெனத் துணியலாம். இதல்ை மேலே இந்நூலுள் எடுத்தாளப் படும் பஃறுளியாற்றைப் பற்றியனவும் குமரியாற்றைப்பற்றி யனவுமாகிய செய்திப்பாடல்கள் கடல்கோளுக்கு முற்பட்ட காலத்தனவென்று தெரிந்துகொள்ளலாம். இக்கடல்கோட் காலத்தை வைத்து இதற்கு முன்னும் பின்னும் பன்னுால்கள் உண்மை கேட்கப்படுதலான் இக்கடல்கோள் நிகழ்ந்தகாலம் இஃதெனத் துணியவேண்டுவது இன்றியமையாததாகின்றது. தமிழ் நூல்களால் இக்கடல்கோள் கிகழ்ந்தது என்பதுமட்டில் துணியப்படுவதல்லது அதன் காலமிதுவென்று துணிவது அரி தாகவுள்ளது. ஆயினும், இறையனர் களவியலுரைக்கண்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/38&oldid=731546" இலிருந்து மீள்விக்கப்பட்டது