பக்கம்:Tamil varalaru.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட ல் ேகா ள் 31 முதற் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல்கொள்ளப் பட்ட மதுரை” எனக்கூறுதலால் முதற்சங்கமென்ருென்துண் டென்றும், அச்சங்கமுடிந்தது ஒர் கடல்கோளால் என்று மறி இன்ருேம். அக்களவியலுரைகாரரே, இடைச்சங்கத்தைப்பற்றிக் கூறியவிடத்து அகத்தியனர் தொல்காப்பியனர் முதலியேசர் அச்சங்கமிருந்தார் என்றும், அவரைச் சங்கமிர் இயினர் வெண் டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறனிருக ஐம்பத்தொன் பதின்மர் என்ப என்றும் அவர் சங்கமிருந்து தமிழாராய்க்கது கபாடபுரத்தென்ப, அக்காலத்துப்போலும் பாண்டிய காட்டைக் கடல்கொண்டதென்றும் உரைத்தார். இதல்ை முதற் சங்க வரலாற்றிற்குறித்த கடல்கோள் நிகழ்ந்தகாலம் இடைச் சங்கத் திறுதியிலென்று காட்டியவாறு .ெ த எரிய லாம். இக்கடல் கோளேயே அடியார்க்கு நல்லார், 1.நிலந்தரு திருவிற்பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத் திரி இயினன்: அக்காலத்து அவர் காட்டுக்குமரியின் வடபெருங் கோட்டின் காறும் கடல் கொண்டது” === (சிலப். வேனில்-உசை). என்றதஞற் றெளிய வி ள க் கி ைர். களவியலுரைகாசர் கடைச்சங்க வரலாற்றில், கடைச்சங்கமிரி இயிஞர் கடல்கொள்ளப்பட்டுப் போக் இருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதியிருக நாற்பத்தொன்பதின்மர் என்ப' எனவுன் ரத்தார். இதல்ை இடைச்சங்கமிருந்த கபாடபுரமும், முதற்சங்க மிருந்த தென் மதுரையும் கடல்கோளால் அழிய அக் கபாடபு சத் இருந்த மு. டத் திரு மாறன் எவ்வாருே உயிர் தப்பிக் கடல் கொள்ளப்படாது போந்து, தன் ட்ைடு வடக்கண் மதுரையைக் கண்டு, அதன்கட் சங்கத்தைத் தான் முன் இரீஇய முறையே இ இயிஞனென்று துணியத்தகும். கடைச்சங்கக் தொடங்கிய மதுரையை வடமதுரையென்றது அதற்கு மிகத் தெற்கே கடல் கோளால் முதற்கட் சங்கமிருந்தழிந்த தென் மதுரையை கோக்கி யேன வுய்த்துணரலாம். இதல்ை கடைச்சங்கத் தொடக்கத் தின் முன்னுக்கும் இடைச்சங்க விறுதிக்குமிடையே, முடத்திரு மாறனென்னும் பாண்டிய ன் கபாடபுரத்திருந்த காலத்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/39&oldid=731547" இலிருந்து மீள்விக்கப்பட்டது