பக்கம்:Tamil varalaru.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச ங் க ம் 51 ஆண்டது கூறுதல் உணர்ந்து கொள்க. கோப்பெருஞ் சோழன் பொத்தியாண்ட் வரலாறு புறப்பாட்டிற் காண்க. இப்பழையன் மாறன் ஒரு சிற்றரசன் என்றெழுதினரும் உண்டு. 'நெடுந்தே, ரிழையணி யானைப் பழையன் மாறன் மாடமலி மறுகிற் கூடலாங்கண்' (அகம். 346) என வருதலான் கூடலேயாண்ட பேரரசனேயாதல் தெளியலாம். சோழனேயும் மா ற னே யு ம் வைத்த வ ஞ் சி ன ம் வாய்ப்ப வென்று' என்ற எண்ணும்மையாலும் ஒத்த பேரரசர் இருவரை வென்றது குறித்தல் காண்க. 'பழுதில் கொள்கை வழுதிய ரவைக்க ணறிவுவீற் றிருந்த செறிவுடை மனத்து வான்ருேய் கல்லிசைச் சர்ன்ருேர் குழிஇ யருந்தமிழ் மூன்றுக் கெரிந்த காலை” என இடையள காட்டு மணக்குடியான் பால்வண்ணதேவனை வில்லவதரையன் அகநானுாற்று உரைப்பாயிரத்துக் கூறுதலும் காண்க. இக்கருத்தானன்றே பாண்டியர் காட்டைத் தென்றமிழ் நாடென்றும் அவர் தலைநகரைத் தமிழ் மதுரையென்றும் இளங் கோவடிகளும், சாத்தருைம் வழங்கிக் காட்டுவாராயினர் என்க. 'தென்றமிழ் நாட்டுத் தீது தீர் மதுரை' (சிலப். 10, 58) 'தென்றமிழ் மதுரைச் செழுங்கலப்பாவாய்' (மணிமே. 25, 139) என வருவன காண்க. இளங்கோவடிகள், 'புலவர் செங்காப் பொருந்திய நிவப்பிற் பொதியிற் றென்றல் போலா தீங்கு மதுரைத் தென்றல் வந்தது காணிர்' (சிலப். புறஞ்சேரி. 130-32) என்பதன ல், பொதியத் தென்றலினும் மதுரைத் தென்றற் குள்ள சிறப்பு, புலவர் செங்காப் பொருந்திய ஏற்றமென்று தெரி யக் கூறுதல் காணலாம், பொதியச் சந்தன மணங் கமழ் தென்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/59&oldid=731569" இலிருந்து மீள்விக்கப்பட்டது