பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கு ற ம க ள் (அங்கம்-2 அதில் ஒன்றும் தவறில்லை. படித்துப் பார். யார் இவர், உனது மாமனும் என்று அழைத்துக் கொள்பவர்? என்னுடைய துார பந்துக்களில் ஒருவர்-மாமன் முறை யாக வேண்டும். கலெக்டர் உத்யோகத்தில் மற்றவர்களுக்குக் கலியாணம் செய்து வைப்பதும் அடங்கியிருக்கிறது என்று எண்ணு கிருர் போலும்! உம் இவர் பழய காலத்து ஆசாமி. (தனக்குள் கடிதத்தைப் படிக்கிருர்) அவர் எப்படிப்பட்டவாாகவாவது இருக்கட்டும். அவரு டைய பெண் சரியானவளாயிருந்தால் நீ கலியாணம் பண் னிைக் கொள்ளுகிறது தானே இன்னும் அந்தப் பழய ஞாபகமெல்லாம். நீங்கவில்லையா ? உம் (பெருமூச்செறிந்தி) அது ஒரு புற மிருக்கட்டும். நான் கலியாணம் செய்து கொள்ளத் தீர்மானித்து, இவ்வுல் கில் இவர் பெண் தவிர வேருெருத்தியும் இல்லாவிட்டா லும், இவர் பெண்ணே நான் மணம்புரியேன். புத்தியில்லாக ஒன்றும் படிக்காக மூடப்பெண், நல்ல கறுப்பு, பணம் மாத் திரம் இருக்கிறது. அவ்வளவு தான். எனக்கிருக்கும் பணம் எனக்குப் போதும். இவர் பெண்னும் வேண்டாம். இவர் சம்பந்தமும் வேண்டாம். (அக்கடிதத்தைத் திருப்பிக்கொடுக்கிரு.ர்.) சரி, உன் இஷ்டம். ஆயினும் நீ தனியாகக் கலியாண மில்லாதிருப்பது எனக்குத் திர்ப்திகரமாயில்லை. இனி மேல் கிழவனை பிறகா கலியாணம் செய்து கொள்ளப் போகிருய்! சிக்கிரம் தக்கபடி படித்த பெண் யாரையாவது பார்த்துக் கலியாணம் செய்து கொண்டு நீ சுகமாய் வாழ வேண்டு மென்பது தான் என் கோரிக்கை. உங்கள் பந்துக் களில் படித்த புத்திசாலியான பெண் ஒருத்தியும் இல் &bulin P

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/28&oldid=731839" இலிருந்து மீள்விக்கப்பட்டது