பக்கம்:The Knavery Of Kalappa.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) காளப்பன் க்ள்ளத்தனம் 5 āᎼfᎥ• 乐町。 $ff . கொண்டிருந்தான் ; அவளது அழகைப் பற்றியும் ஒய்யாத் தைப் பற்றியும், ஒரு நிமிஷமும் விடாது பேசிக்கொண்டிருந் தான் , அவளது புத்திகூர்மையைப் புகழ்ந்து, அவள் வார்த்தை யாடும் அழகைப்பற்றி, அடங்காத சந்தோஷத்துடன் வர்ணித் தான் இவ்வுலகில், அவள் வார்த்தையின் புத்தி சாதுர்யத்தை விட மேம்பட்டது வேருென்றும் கிடையாது என்று நான் எண்ணும்படி அவள் பேசிய வார்த்தைகளை யெல்லாம் ஒன்று விடாது என்னிடம் உரைத்தான். இதெல்லாம் எங்கு போய் முடிகிற தென எனக்குத் தெரிய வில்லை. ஒருநாள், அவனது காதலியை வளர்த்து வந்த குறவர்கள் கூட் டத்திற்கு அவனுடன் நான் போய்க் கொண்டிருந்த பொழுது, பக்கத்து சந்தில் ஒரு விட்டில், கொஞ்சம் கூச்சலும் அதிக அழுகையும் நாங்கள் கேட்டோம், நாங்கள் என்னவென்று விசாரிக்க, ஒரு பெண்பிள்ளை,காங்கள் அங்கு போனல், அங்கு இாண்டு அங்கிய தேசஸ்திரீகள் இருப்பதாயும், அவர்கள் ஸ்திதியைக் கண்டால் கருங்கல்லும் உருகும் மென்றும், பரி தாபம் என்பது எங்கள் மனதில் கொஞ்சமேனும் இருக்கு மாயின், அவர்களைக்கண்டு நாங்கள் பச்சாத்தாபப் படுவோ மென்றும், பல பெருமூச்சுகளுடன் தெரிவித்தாள். இதெல்லாம் எங்குபோய் முடிகிறது ? இப்புதுமையைக் காணவேண்டு மென்று ஆவல்கொண்டவனுய் லாவண்யனிடம், அதைப்போய்ப் பார்க்கலாமென்று வற்புறுத் தினேன். அங்கு சென்று ஒரு அறைக்குள் நுழைந்த பொழுது, அங்கு ஒருகிழவி மாணுவஸ்தையிற் கிடந்தாள் ; அவள் பக்கலில், ஒரு வேலைக்காரி, கோவென்று அழுது கொண்டிருந்தாள், ஒரு அழகிய பெண் கண்ணிர் ஆருக பெருக நின்றுக் கொண்டிருந்தாள். அப்பெண்ணின் அழகை யும், பரிதாப நிலையையும் வர்ணிக்க, என்னுல் முடியவே முடியாது. ஆஹா ! அவள் இருந்த ஸ்திதியில் வேறு யாராவது இருந்திருப்பார் களாயின் அது அவலட்சணமாயிருந்திருக்கும்; ஒரு பழைய பாவாடை ஒன்றைக் கட்டிக் கொண்டு, கிழிந்த அங்கவஸ்திரம் ஒன்று அணிந்து கொண்டிருந்தாள்; தலைமயிர் அவிழ்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/11&oldid=732127" இலிருந்து மீள்விக்கப்பட்டது