பக்கம் பேச்சு:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/58
தலைப்பைச் சேர்Appearance
முப்பத்திரண்டு அறங்களும் விளக்கமும்
[தொகு]முப்பத்திரண்டு அறங்கள் பற்றிய பட்டியல் இது. இலக்கிய நூல்களுக்கிடையே இந்தப் பட்டியலில் சிறு, சிறு மாறுபாடுகளும் காணப்படுகின்றன.
- ஆதுலர்க்குச் சாலை (ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களும் தங்கி வாழ்வதற்கு விடுதி அமைத்தல்)
- ஓதுவார்க்கு உணவு (கல்வி பயிலும் மாணவர்களுக்கு நல்ல முறையில் உணவளித்தல்)
- அறுசமயத்தோர்க்கு உண்டி (சைவம், வைணம், சாக்தம், கௌமாரம் , காணபத்தியம், சௌரம் என்னும் அறுவகை சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உணவிடுதல்)
- பசுவிற்கு வாயுரை (பசுவிற்கு உணவு)
- சிறைச் சோறு (சிறைக் கைதிகளுக்கு உணவு)
- ஐயம் (இரப்பவர்க்கு ஈதல். யாசகம் கேட்டு வருபவர்களுக்கு ‘இல்லை’ என்று சொல்லாமல், இயன்ற உதவி செய்தல்)
- தின்பண்டம் நல்கல் (விழாக் காலங்களில் இனிப்பு வகை உணவுகள், சிற்றுண்டிகள் வழங்குதல்)
- அறவைச் சோறு (ஆதரவற்றோருக்கு உணவளித்தல்)
- மகப்பெறுவித்தல் (பெண்களின் பிரசவ காலத்தில் உடனிருந்து உதவுதல்)
- மகவு வளர்த்தல் (குழந்தைகளைப் பராமரித்து அவர்களை வளர்க்க உதவுதல்)
- மகப்பால் வார்த்தல் (தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்கும், உணவுக்கு வழியில்லாத ஏழைக் குழந்தைகளுக்கும் பாலளித்தல்)
- அறவைப் பிணஞ்சுடல் (ஆதரவற்றோர் மற்றும் கைவிடப்பட்டோரின் உடல்களுக்கு ஈமச்சடங்கு செய்து தகனம் செய்தல்)
- அறவைத் தூரியம் (ஆதரவற்றோர்களுக்கு தேவையான துணிமணிகள் மற்றும் ஆடைகள் கொடுத்து அவர்கள் மானம் காத்தல்)
- சுண்ணம் (தாம்பூலம் தரிப்பவர்களுக்கு சுண்ணாம்பு கொடுத்து உதவுதல்)
- நோய் மருந்து (நோயில் தவிப்பவர்களுக்கு மருந்து வாங்கித் தந்து உதவுதல்)
- வண்ணார் (ஏழை எளியோர்கள், ஆதரவற்றோர்கள், பிணியாளர்களின் துணி துவைக்க உதவுதல்)
- நாவிதர் (ஏழை எளியோருக்கு தலை முடி திருத்துதல், முகச்சவரம் செய்ய உதவுதல்)
- கண்ணாடி (ஒருவர் தங்களை ஒழுங்குபடுத்திச் சரி செய்து கொள்ள கண்ணாடி கொடுத்து உதவுதல்)
- காதோலை (பெண்கள் காதணி இல்லாது இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு காதணி வாங்கித் தந்து உதவுதல்)
- கண்மருந்து (பெண்கள் தங்கள் கண்களை அழகுபடுத்திக் கொள்ள கண்மை அளித்தல்)
- தலைக்கு எண்ணெய் (எண்ணெய் பூசாது காய்ந்த தலைகளோடு இருக்கும் ஏழை எளியோருக்கும், ஆதரவற்றோருக்கும் தலைக்கு எண்ணெய் வாங்கித் தந்து உதவுதல்)
- பெண் போகம் (தனக்குரிய பெண்ணிடம் முறையான இன்பம் அனுபவிக்க வழியில்லா ஏழைகளுக்கு உரிய தனியிடம் அமைத்துத் தந்து, அவர்களது காம நோய் தணிக்க உதவுதல்)
- பிறர் துயர் தீர்த்தல் (காயமோ, நோயோ ஏற்பட்டு துன்பப்படுபவர்களுக்கு, வாழ்க்கையில் பிரச்னைகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஆறுதலாக இருந்து உதவுதல்)
- தண்ணீர்ப் பந்தல் (வெயிலில் வாடி, தாகத்தால் தவிப்பவர்களுக்குத் தண்ணீர் அளித்து உதவுதல்)
- மடம் (வழிப்போக்கர்கள், வறியோர்கள் தங்க விடுதி அமைத்தல்)
- தடம் (வழிப்போக்கர்கள், வறியோர்கள் நீர் அருந்தி இளைப்பாறக் குளம் தோண்டுதல், அவற்றைப் பராமரித்தல்)
- சோலை (நிழல் தரும் மரங்கள், சோலைகள் அமைத்து, பயணம் செய்யும் மக்கள் தங்கி இளைப்பாற்றிச் செல்ல உதவுதல்)
- ஆவுறுஞ்சு தறி (பசுக்கள் மேயும் இடங்களிலும், பசுக் கொட்டில்களிலும் அவை தங்கள் உடலைத் தேய்த்துக் கொள்ள உராய்ந்து கொள்ளும் கல் தூண்களை நிறுவுதல்)
- ஏறு விடுத்தல் (பசுக்களைச் சினைப்படுத்த, தரமான காளைகளைக் கொடுத்து உதவுதல்)
- விலங்கிற்கு உணவு (பல்வேறு விலங்கினங்களும் பசியாற உணவளித்தல்)
- விலை கொடுத்து உயிர் காத்தல் (கொலை செய்யப்படுவதற்காகவும், பலியிடப்படுவதற்காகவும் அழைத்துச் செல்லப்படும் உயிர்களை விலைக்கு வாங்கி, அவற்றை இறுதி வரை பாதுகாத்தல்)
- கன்னிகா தானம் (ஏழைப் பெண்களுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும் திருமணம் நடக்க உதவுதல்; திருமண வயது நெருங்கியும், திருமணமாகாமல் தவிக்கும் முதிர்கன்னிகளுக்குத் திருமணம் செய்து வைத்து உதவுதல்)
காண்க: 32 _அறங்கள்
- TI Buhari (பேச்சு) 3:05, 21 ஆகத்து 2024 (UTC)