பக்கம் பேச்சு:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/159

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

எளிமையான இலக்கணம்[தொகு]

அறிஞர்களான நம் முன்னோர்கள் சீர் குறித்த வாய்ப்பாடுகளை வகுக்கும்போதே அவற்றைச் சீர் பிரித்தாலே அவை என்ன என்பது தெளிவுறுமாறு அமைத்துள்ளனர்.

இனி ஒவ்வென்றாகப் பார்ப்போம்:

ஈரசைச் சீர்:
நேர் நேர் → தேமா → தே-நேர் ; மா-நேர். எனவே நேர் நேர் ஆவது தேமா.
நிரை நேர் → புளிமா → புளி-நிரை; மா-நேர். எனவே நிரை நேர் ஆவது புளிமா.
நேர் நிரை → கூவிளம் → கூ-நேர்; விளம்-நிரை. எனவே நேர் நிரை ஆவது கூவிளம்.
நிரை நிரை → கருவிளம் → கருவிளம்-நிரை; விளம்-நிரை. எனவே நிரை நிரை ஆவது கருவிளம்.

மூவசைச்சீர்:
தேமாங்காய் → தே-நேர்; மாங்-நேர்; காய்-நேர். எனவே நேர் நேர் நேர் என்பது தேமாங்காய் என்கிறது வாய்ப்பாடு.
இதே போன்று
புளிமாங்காய் → புளி-நிரை; மாங்-நேர்; காய்-நேர் → எனவே நிரை நேர் நேர் ஆவது புளிமாங்காய்
தேமாங்கனி → தே-நேர்; மாங்-நேர்; கனி-நிரை → எனவே நேர் நேர் நிரை ஆவது தேமாங்கனி.
புளிமாங்கனி → புளி-நிரை; மாங்-நேர்; கனி-நிரை → எனவே நிரை நேர் நிரை ஆவது புளிமாங்கனி
கூவிளங்காய் → கூ-நேர்; விளங்-நிரை; காய்-நேர்; எனவே நேர் நிரை நேர் ஆவது கூவிளங்காய்
கருவிளங்காய் → கரு-நிரை; விளங்-நிரை; காய்-நேர்; எனவே நிரை நிரை நேர் ஆவது கருவிளங்காய்
கூவிளங்கனி → கூ-நேர்; விளங்-நிரை; கனி-நிரை; எனவே நேர் நிரை நிரை ஆவது கூவிளங்கனி
கருவிளங்கனி → கரு-நிரை; விளங்-நிரை; கனி-நிரை; எனவே நிரை நிரை நிரை ஆவது கருவிளங்கனி

நாலசைச்சீர்:
ஏற்கனவே ஈரசைச் சீர்களுக்கான வாய்ப்பாட்டை மேலே கண்டோம். இப்போது
தண்பூ → தண்-நேர்; பூ-நேர்; எனவே நேர் நேர் ஆவது தண்பூ
தண்ணிழல் → தண்-நேர்; ணிழல்-நிரை; எனவே நேர் நிரை ஆவது தண்ணிழல்
நறும்பூ → நறும்-நிரை; பூ-நேர்; எனவே நிரை நேர் ஆவது நறும்பூ
நறுநிழல் → நறு-நிரை; நிழல்-நிரை; எனவே நிரை நிரை ஆவது நறுநிழல்.

ஈரசைச் சீர் வாய்ப்பாட்டுடன் மேலுள்ளதை இணைப்போம்.

நேர் நேர் நேர் நேர் → தேமாந்தண்பூ
நேர் நேர் நேர் நிரை → தேமாந்தண்ணிழல்
நேர் நேர் நிரை நேர் → தேமாநறும்பூ
நேர் நேர் நிரை நிரை → தேமாநறுநிழல்
நேர் நிரை நேர் நேர் → கூவிளந்தண்பூ
நேர் நிரை நேர் நிரை → கூவிளந்தண்ணிழல்
நேர் நிரை நிரை நேர் → கூவிளநறும்பூ
நேர் நிரை நிரை நிரை → கூவிளநறுநிழல்

நிரை நேர் நேர் நேர் → புளிமாந்தண்பூ
நிரை நேர் நேர் நிரை → புளிமாந்தண்ணிழல்
நிரை நேர் நிரை நேர் → புளிமாநறும்பூ
நிரை நேர் நிரை நிரை → புளிமாநறுநிழல்
நிரை நிரை நேர் நேர் → கருவிளந்தண்பூ
நிரை நிரை நேர் நிரை → கருவிளந்தண்ணிழல்
நிரை நிரை நிரை நேர் → கருவிளநறும்பூ
நிரை நிரை நிரை நிரை → கருவிளநறுநிழல்

இலக்கணத்தை எவ்வளவு எளிமையாக வடிவமைத்துள்ளனர் நம் முன்னோர்.

மாணாக்கருக்கு எளிதில் விளங்குமாறு இலக்கணத்தை எடுத்தியம்பிய எம் தமிழாசான் S.முத்துசாமி, M.A.(Tamil), M.Ed. ஆ ஜ சா நிதி உயர்நிலைப் பள்ளி, ஆலந்தூர், அவர்களுக்கு எம் கோடானு கோடி நன்றிகள் உரித்தாகுக.

மு. தாஹா இப்ராஹிம் புஹாரி 17:45, 11 பிப்ரவரி 2023 (UTC)