பக்கம் பேச்சு:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/527

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

புறநானூறு 106[தொகு]

106. தெய்வமும் பாரியும்!

பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன்: வேள் பாரி. திணை: பாடாண். துறை : இயன்மொழி.

(‘பாரி கைவண்மை செயலைக் கடப்பாடாக உடையவன்’ என, அவனது இயல்பு கூறலின் இயன்மொழி ஆயிற்று)

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்,

கடவன், பாரி கை வண்மையே.
5

நல்லதாயினும் தீயதாயினும் அல்லாத, குவிந்த பூங்கொத்தும் புல்லிய இலையும் உடைய எருக்கம் பூவாயினும், ஒருவன் உள்ளன்புடன் சூட்டினால் அதனைத் தெய்வங்கள் விரும்பி ஏற்குமேயன்றி, ‘யாம் அவற்றை விரும்பேம்’ என்று கூறா. அது போல, அறிவில்லாதாரும், புல்லிய குணத்தாரும் தாமறிந்தவரை பாடிப் புகழ்ந்து சென்றாலும், பாரி, அவர்க்கும் உவந்து வழங்குவதே தனது கடமை எனக் கருதும் பெருவண்மை உடையவனாவான்.

காண்க: https://ta.wikisource.org/wiki/பக்கம்:புறநானூறு-மூலமும்_உரையும்.pdf/136

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 10:50, 9 சனவரி 2023 (UTC)