பக்கம் பேச்சு:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/424

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

நைட்டிகப் பிரம்மச்சாரி[தொகு]

நைட்டிகப் பிரம்மச்சாரி : ஆயுள் முழுதும் பிரமசரியம் பூண்டொழுகும் ஆண் மகன்.

எடுத்துக்காட்டு :

(1) சிதம்பர சுவாமிகள் ஒரு பெண்ணை மணந்து கொண்டு இல்லறத்தை நடத்தவில்லை என்பது உலகறிந்த உண்மையாகும். இருப்பினும் அச்செய்தியை சுவாமிகள் "இல்லறத்தான் அல்லேன்' என்ற தொடரால் குறிப்பிட்டுள்ளார். அவர் பெண்ணை விரும்பாத நைட்டிக பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர். இயல்பாகவே மனம் ஒன்றையும் பற்றாமல் இருக்க, அப்பற்றின்மையின் காரணமாக அவர் துறவு பூணவில்லை. - என்றே-நான்-ஈடேறுவது

(2) அந்த தேவதாசி என்ற பெயருடைய பெண், தான் இவ்வளவு அழகாக அலங்காரம் செய்து கொண்டும் , இந்த ஆண்மகன் தன்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லையே என தன் அக்காவிடம் கேட்க, அவரும்...இவர் விப்ர நாராயணர், நைட்டிக பிரம்மச்சாரி, பெண்களை நோக்கார். திருமாலுக்கெனத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என விளக்குகிறார். - திருமாலை - அறிமுகம்

(3) இந்த நாற்பத்து எட்டு நல்ல இளமையான ஆண்டுகளை இப்படி நிற்க வேண்டிய நல்ல நெறியில் நின்று தருமத்தையே விரும்பும் கடைப்பிடியொடு - விரதத்தோடு கழிக்கிறார்கள் அதாவது இந்த நாற்பத்து எட்டு ஆண்டுகளும் நைட்டிக பிரம்மச்சரியம் காக்கிறார்கள் . உணவின் சுவை கூடப் பாராது உண்டு, எந்தப் பொருளிலும் பற்று வைக்காது ஓதுதல் ஒன்றே குறியாக இருந்து ஓதி, மனத தெளிவும், கூர்த்த அறிவும் பெறுகிறார்கள். - துன்பங்கள் நீக்கும் திருமுருகாற்றுப் படை

(4) நந்தனார் கீர்த்தனை இயற்றிய கோபாலகிருட்டின பாரதியார் வாழ்க்கை முழுவதும் மணமில்லாதவர் (நைட்டிக பிரம்மச்சாரி) ஆவர். - தமிழ்ப் பொழில் (18/4)

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 05:45, 20 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]