பக்கம் பேச்சு:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/45

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

சொக்கப்பனை[தொகு]

சொக்கப்பனை : சொக்கப்பனை கொளுத்துதல் என்பது சிவாலயங்களில் கார்த்திகை தீபத் திருவிழாவின் பொழுது நடைபெறும் நிகழ்வாகும். இந்நிகழ்வு திருமால், முருகன் கோயில்களிலும் நடத்தப்படுகிறது. இந்நிகழ்வு பூச்சிகளைக் கவர்ந்திழுத்து அழிப்பதற்கு உதவியாக இருப்பதாக கூறப்படுகிறது. ... இவ்வமைப்பு சொக்கப்பனை என்று அழைக்கப்படுகிறது. [நன்றி: தமிழ் விக்கி

எடுத்துக்காட்டு: (1) கார்த்திகை தீபத் திருவிழாவன்று எரிக்கப்படும் `சொக்கப்பனை வைபவம்' மிகவும் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகை விளக்கீடு விழாவுக்கும், பனைமரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. `பூலோக கற்பக விருட்சம்’ என்று புராணங்கள் பனைமரங்களைப் போற்றுகின்றன. பனைமரத்தின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்படுகின்றன. - சொக்கப்பனை எரித்து, சாம்பலை வயலில் தூவி....

(2) சகல ஆலயங்களிலும் சொக்கப்பனை வைபவம் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படும். ‘குறிப்பாக உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயிலில் வைக்கப்படும் சொக்கப்பனை தமிழகத்திலேயே பிரமாண்டமானது’ என்கிறார், சிவபக்தரும் உவரி திருக்கோயில் ராஜகோபுரத் திருப்பணிக் கமிட்டியின் தலைவருமான ஜி.டி.முருகேசன். - திருக்கார்த்திகை தினத்தில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன்?

(3) பனை ஓலையை எரிப்பதால் ஏற்படும் புகையில் மனிதனுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, விஷப்பூச்சிகளை கொல்லும் ஒருவித நச்சுத்தன்மை இருந்ததால்; ஆறு மற்றும் குளக்கரையில் தானே முளைத்து வளர்ந்துள்ள பனை மரத்திலிருந்து பச்சை மட்டையை வெட்டி எடுத்து வந்து நம் சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் ஊரின் மையத்திலுள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயிலின் முற்றத்தில் ஒவ்வொன்றாய் அடுக்கி அதனை கோபுரம் போல் வடிவமைத்து திருக்கார்த்திகை அன்று மாலை நேரத்தில் "சொக்கப்பனை" கொளுத்துவார்கள். - சொக்கனை-மகிழ்விக்கும்-சொக்கப்பனை

(4) சொக்கப்பனை எரிந்து முடிந்ததும், அதில் இருந்து வரும் சாம்பலை, அதாவது கரியை, தைலத்துடன் சேர்த்து ரட்சையாக காப்பாக நெற்றியில் பூசிக் கொள்வார்கள். சாம்பலை எடுத்துச் சென்று வயக்காடுகளிலும் பூமியிலும் தூவுவதும் நடைபெறும். இதனால் விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை. மேலும் வீடு, மனை விஷயத்தில் ஏதேனும் சிக்கலோ வழக்குகளோ இருந்தால் அவை சட்டப்படி தீர்ப்பு வெளியாகி, அந்தத் தீர்ப்பு நமக்கு சாதகமாகவே வெளியாகும் என்பது ஐதீகம்! - சொக்கப்பனை

(5) சொக்கப்பனை என்றால் என்ன? அதன் பின்னணி என்ன? - திருக்கார்த்திகை நாளன்று மாலை அனைத்து சிவாலயங்கள், முருகன் ஆலயங்கள், அம்மன் கோயில்கள் என்று அனைத்து கோயில்கள் முன்பும் ஒரு மூங்கில் கம்பைச் சுற்றி பனை ஓலைகளை கோபுரவடிவில் கட்டி வைத்திருப்பார்கள். சுவாமிக்கு பூஜை முடிந்ததும் அந்த விளக்கினைக் கொண்டு சொக்கப்பனையை ஏற்றுவர். இந்த சொக்கப்பனை ஏற்றுவதற்கு பல காரணங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. அவற்றுள் சில: நம் அஞ்ஞானமும் அகங்காரமும் சொக்கப்பனையைப் போல் எரிந்துவிடும் என்று சிவதத்துவம் கூறுகிறது. - சொக்கப்பனை

- - மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 07:50, 19 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]