பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/மீளும் மணிமுடி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


9

மீளும் மணிமுடி

பண்டிதர் இந்த வரலாற்று காட்சிகளிலிருந்து மறைக்கப்பட்டதற்கு என்ன காரணம்? தமிழகத்தில் நூற்றுக்கணக்கான முற்போக்கு தலைவர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், மேதாவிகள் இருந்திருக்கிறார்கள், 1907-1914 வரை வெளிப்படையாக இதழ் நடத்தி பல நாடுகளில் தன்னுடைய இயக்கத்தையும் தோழர்களையும் கொண்டிருந்து பல எதிர்ப் புகளை சமாளித்து கலகம் செய்து வந்த பண்டிதர், இவர்களின் கண்களுக்கு மட்டும் தெரியாமல் போன மாயம் புரியவில்லை என்று சொல்ல முடியாது.

பிளேட்டோ சொன்னது போல உண்மையான தத்துவ ஞானியைப் போல அரசியல் மேதைமையும், ஞானமும் ஒருங்கே வாய்த்தவர் அயோத்திதாச பண்டிதர். இந்த நாடு மாட்சிமை பெற வேண்டுமானால் தத்துவ ஞானிகளை ஒருவேளை இந்த சாதி இந்துக்கள் அறியணை ஏற்றி அழகு பார்க்கலாம். ஆனால், எல்லாம் இருந்தும், ஒரு தீண்டப் படாதவனாகப் பிறந்து விட்டதால், தென் இந்திய சமூக சீர்திருத்தத்திற்கு ஒளியேற்றி தொடங்கி வைத்த பண்டிதரை புறக்கணித்தது. அவரைப் புறக்கணித்ததே தவிர அவரது கொள்கைகளைப் புறக்கணிக்கவில்லை, அதை தனக்குள் செரித்து தன்னை வளமாக்கிக் கொண்டதன் மூலம் அக் கொள்கைக்கு நிலைத்த தன்மையை வழங்கிவிட்டது. ஆனால் ஒடுக்கப் பட்ட மக்களின் நலன் சார்ந்த கோரிக்கைகள் சொத்து படைத்த வர்க்கத்தின் கோரிக்கைகளாக மாறிப் போனதுதான் வரலாற்றின் விந்தை, அதுவும் ஒரு முரண் விந்தை எனினும், எப்படி பார்த்தாலும், இட ஒதுக்கீடு, விகி தாச்சார உரிமை எனும் சமூக நீதியின் கொள்கையை வழங்கிய க. அயோத்திதாச பண்டிதர் அவர் தரித்த சமூக நீதி முடியை மற்றவர்கள் பிடுங்கிக் கொண்டிருந்தாலும் பண்டிதர் அந்த முடியை தென் இந்தியாவிற்கு மட்டும் வழங்கவில்லை, ஜம்பு தீப துணைகண்டம் முழுவதற்கான கொள்கையாக, கொடையாக வழங்கினார் என்பதே என்றென்றும் மக்களின் உண்மை என வரலாறு கூறும்.. 
குறிப்பு நூல்கள்

முதல் நிலைத் தரவுகள்

ஒரு பைசா தமிழன் மற்றும் தமிழன் இதழ்கள் - 1907 முதல் 1914 வரை - ரோஜா முத்தையா நூலகம் , சென்னை.

இரண்டாம் நிலைத் தரவுகள் - தமிழ் நூல்கள்

அயோத்திதாசர் சிந்தனைகள் (மூன்று தொகுதிகள்) தொகுப்பு ஞான. அலங்சியஸ் , நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், நெல்லை-1999,

கமுசலை அம்மாள் வெளியீடு. பழங்குடி தவைர்கள் வரலாறு. 1974

கி. வீரமணி, வகுப்புரிமை வரலாறு. திராவிடர் கழக வெளியீடு இரண்டாம் பதிப்பு 1996 - சென்னை.

ஏ.கே. ராஜன். எம்.எல். இட ஒதுக்கீட்டின் சட்ட வரலாறு அமைதி அறக்கட்டளை வெளியீடு - 1993

கௌதம சன்னா க அயோத்திதாசர் பண்டிதர். சாகித்ய அகாடமி - 2007

பெரியார். வெ.வெ.ரா. சிந்தனைகள் - தொகுதி 2. மார்க்ஸிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி வெளியீடு.

மா.சு. சம்பந்தன் சென்னை மாநகர் வரலாறு , இரண்டாம் பதிப்பு -1978, தமிழ்ப்பதிப்பகம், சென்னை.

கோ, தங்கவேலு.தமிழ் நில வரலாறு, தமிழ் நாடு பாடநூல் நிறுவனம்,முதல்பதிப்பு. 1976.

அன்பு பொன்னோவியம் - வரலாற்று கட்டுரைகள் தொகுப்பு - கௌதம சன்னா (அச்சில்)

அம்பேத்கர் பிரியன். பண்டிதர் அயோத்தி தாசர் வாழ்க்கை வரலாறு

திருநாவுக்கரசு.க. களத்தல் நின்ற காவலர்கள்

திருாவுக்கரசு.க. திராவிட இயக்கவேர்கள்

அம்பேத்கர் பிரியன்,திவான்பகதூர் ரெட்டமலை சீனிவாசன் - 1994, சென்னை

கோபtல்செட்டியார் டி,ஆதிதிராவிடர் பூர்வ சரித்திரம்-1916, தெ.சா. பௌ.சங்கம் திருப்பத்துர் (மறுபதிப்பு) அன்தோனவா கெ.அ.கத்தோவ்ஸ்கி.கி.கி, இந்தியாவின் வரலாறு தொகுதி 2 - 1987, 18ம் நூற்றாண்டு ஒரு பகுதி முதல் நம் காலம் வரை), முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ.

பிளேட்டோ, குடியரசு, தமிழில் ஆர். இராமானுஜசாரி (1965) சாகித்ய அகாடமி

நீதிக்கட்சி 75வலது ஆண்டு (பவள விழா மலர்) 1992

இதழ்கள்:

உழைப்பவர் ஆயுதம். மே, 2007

ஆங்கில நூல்கள்

ALOYSIUS.G - Religion as emancipatory laentity, New Age International Publishing - reprint - 2000

ALOYSIUS.G - Dalit Subaltern Emergence in Religio-Cultural Subjectivity, Ayothee Thasassar & Emamcipatory Buddasim, Critical Quest. New Delhi 2004

KAMALANADAN T.P - Scheduted Caste's Struggle for Emacipation inSouth India. The South India Sakya Buddist Assn. Tirupattur - 2.4.84

KAMALANATHAN T P - Mr.K.Veeramani M.A.B.L. is Refuted and The Historical Facts about the Scheduled Castes Struggle for Emacipation in South India. Published by Ambedkar Self respect Moment - 1985

MAJAHAN.V.D. Modern Indian History. S. Chand & co. new Delhi 1988

PARDAMAN SINGH, Lord Minto and Indian Nationalism - 1905-1910. Abhishek Publications, Chandigash (1976) - Reprint (2005)

SYED RAS WAST|, Lord Minto and The Indian National Movement 1905-1910. Claxendon Press - Oxford - 1964

VENKATAKRISHNAPPA.B. Legal and constitutional History - India S.M. Amritmahal. Bangalore 1968.

ᏫᏫᏫ
 

                  ஆசிரியரின் பிற நூல்கள்

 1. மதமாற்றத் தடைச் சட்டம்
    வரலாறும் விளைவுகளும்
    மருதா வெளியீடு. விலை ரூ. 60

2. க. அயோத்திதாசப் பண்டிதர்
     சாகித்ய அகாதமி வெளியீடு - விலை ரூ. 25


3. கலகத்தின் மறைபொருள்
    மருதா வெளியீடு அச்சில்

                            


  ❖

விமர்சனங்களும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.
                    g_sannah@yahoo.com
                    nalandaí956@yahoo.com

தலித் இயக்க வரலாற்று ஆவணங்களைக் காண வாருங்கள்
                    www.Sangamaran.com