பயனர் பேச்சு:கரிகாலன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

கரிகாலன், விக்கிமூலத்தில் உங்கள் பங்களிப்புகள் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றிகள்.--Kanags 03:41, 29 மே 2010 (UTC)[பதிலளி]

புதுமைப்பித்தன் கதைகளைப் பார்க்க நேர்ந்தது. விக்கிமூலத்தில் தங்களின் பங்களிப்பு கண்டு வியந்துபோனேன். கதைகளை அது எழுந்த காலத்தோடு குறித்திருப்பது அதன் தரத்தை உயர்த்துகின்றது. மகிழ்ச்சி! வாழ்த்துக்கள். தங்களின் அரும்பணி சிறக்க மீண்டும் ஒருமுறை என்வாழ்த்துக்கள். நன்றி!--Meykandan 05:28, 5 ஜூன் 2010 (UTC)

ஆக்கங்களின் மூல நூல்கள், மின் மூலங்கள்[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிமூலத்தில் தாங்கள் ஆற்றி வரும் அரும்பணிக்கு நன்றி. தங்கள் பங்களிப்புகள் தொடர்பாக பின்வரும் விவரங்கள் தேவைப்படுகின்றன:

  • தாங்கள் பதிவேற்றும் ஆக்கங்களின் மூல நூல்கள் பற்றிய விவரங்கள் தேவை. ஆசிரியர் பெயர், பதிப்பகத்தின் பெயர், பதிப்பகத்தின் முகவரி, வெளியிட்ட ஆண்டு, எத்தனையாவது பதிப்பு, ISBN எண் (இருந்தால் மட்டும்) போன்ற விவரங்கள் உதவும். இந்த விவரங்களைச் சேர்ப்பதன் வழி மூல நூலின் நம்பகத்தன்மை, அவை திரிபுகள், பிழைகள் இன்றி மின்னாக்கம் பெற்றுள்ளன என்பதை வாசகர்கள் உறுதி செய்யலாம்.
  • தாங்கள் பதிவேற்றும் ஆக்கங்கள் தாங்களே கைப்பட தட்டச்சு செய்ததா அல்லது இணையத்தில் ஏற்கனவே உள்ளவற்றைப் படியெடுத்து இடுகிறீர்களா? படியெடுத்து இடுகிறீர்கள் என்றால் அப்படிகள் முதலில் இடம்பெற்ற தளங்களின் விவரங்கள் தேவை. எடுத்துக்காட்டுக்கு, மதுரைத் திட்டம், தமிழ் இணையக் கல்விக்கழகம் முதலிய தளங்களில் பல சங்க இலக்கியங்கள் ஏற்கனவே தொகுக்கப்பெற்றுள்ளன. இத்தகைய தளங்களுக்கு இணைப்பு தந்து நன்றி நவில்வதன் மூலம் உறவு நிறுவனங்களுடன் இணக்கத்தைப் பேணலாம்.

இந்த விவரங்களை அந்தந்த ஆக்கங்களின் முதன்மைப் பக்கங்களின் பேச்சுப் பக்கங்களில் குறிப்பிடலாம்.

ஒரு வேளை, நீங்கள் கைப்படவே தட்டச்சு செய்கிறீர்கள் என்றால், அதனைத் தவிர்த்து கூகுளின் ஒளிவழி எழுத்துணரிக் கருவியைக் கொண்டு தானியக்கமாகப் பெருவாரியான பக்கங்களைப் பதிவேற்றலாம். இதன் மூலம் உங்கள் நேரமும் உழைப்பும் மிச்சப்படும். இது தொடர்பாக உதவி தேவையெனில் உதவக் காத்திருக்கிறோம். நன்றி. --இரவி (பேச்சு) 06:19, 19 ஏப்ரல் 2016 (UTC)

விக்கிமேனிய அறிவிப்பு[தொகு]

வணக்கம், முதல்முறையாக இந்தாண்டு உலகளவில் பல நாடுகளில் விக்கிமேனியா கூடலை நடத்துகின்றனர். அதில் தமிழ் விக்கிமேனியா மதுரையில் ஆகஸ்ட் 14 இல் நடைபெறுகிறது. அதில் நீங்களும் கலந்து கொள்ள விழைக்கிறோம். அது தொடர்பான அறிவிப்பும் உரையாடலும் இங்கே நடைபெறுகின்றன. -ஒருங்கிணைப்பாளர் சார்பாக (NeechalBOT (பேச்சு) 05:19, 27 சூலை 2022 (UTC))[பதிலளி]

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:கரிகாலன்&oldid=1434786" இலிருந்து மீள்விக்கப்பட்டது