பயனர் பேச்சு:Kuzhali.india

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

Tournesol.png வாருங்கள், Kuzhali.india!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

விக்கிக்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கியில் தொகுப்பது பற்றிய அடிப்படைகளை தாங்கள் இப்பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--Nandhinikandhasamy (பேச்சு) 03:29, 28 ஜூன் 2014 (UTC)

மூல நூல்கள்[தொகு]

வணக்கம், குழலி! எழுதத் தொடங்கியமைக்கு வாழ்த்துகள். விக்கிமூலத்தில் மூல உரைகளை மட்டுமே சேர்க்கிறோம். எனவே, ஒருவர் எழுதிய உரையை சிறிதும் மாற்றம் இல்லாமல் அவ்வாறே சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். முற்காலத்தில் நிகழ்ந்தவற்றை எழுத்தாளர்களும், வெளியீட்டாளர்களும் தங்களின் வர்ணனையில் மாற்றி பதிப்பிக்கக் கூடும். உண்மையிலேயே இது மூல உரை தானா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கூடுதல் குறிப்புகளோ, விவரங்களோ எதுவும் தர வேண்டாம். அவற்றை விக்கிப்பீடியாவில் குறிப்பிடுங்கள். இந்த மூல உரைக்கு பதிப்பு உரிமை இருக்கக் கூடாது. ஒரு குறிப்பிட்ட உரைக்கு ஏதாவது ஒரு நிறுவனம் பதிப்புரிமையைக் கொண்டிருக்கலாம். அவ்வாறான பதிப்புரிமை உள்ள உரைகள் நீக்கப்படும். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வெளிவந்த பெரும்பாலான உரைகளுக்கு பதிப்புரிமை இருக்காது என நினைக்கிறேன். அவற்றை சேர்க்கும்பொழுது பதிப்புரிமை உள்ளதா என சோதித்துவிடுங்கள். சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தவையாக இருந்தால் அவற்றிற்கு பதிப்புரிமை உண்டா என கட்டாயம் பார்க்க வேண்டும். உதவி தேவைப்படும்பொழுது கேளுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:23, 6 ஆகஸ்ட் 2014 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kuzhali.india&oldid=23284" இருந்து மீள்விக்கப்பட்டது