உள்ளடக்கத்துக்குச் செல்

பறவைகளைப் பார்/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து

முன்னுரை

ரு தேசம் குழந்தைகளுக்கு எத்ததைய புத்தகங்களை உண்டாக்கித் தருகிறது என்பதைக் கொண்டு அந்த தேசத்தின் முன்னேற்றத்தைத் தீர்மானித்துவிடலாம் என்று கூறுவார்கள். நாம் சுதந்தரம் அடைந்த பிறகு எவ்வளவோ முன்னேற்றமடைந்திருக்கிம்; ஆனால் மேலே கூறிய அளவு கோலைக் கொண்டு பர்ர்த்தால் நாம் இன்னும் பின்தங்கியே இருக்கிருறோம் என்று தான் சொல்லவேண்டும். அரசாங்கம் இதை நன்கு உணர்ந்திருக்கிறது. நமது நாட்டின் கல்வித் தேவைகளைப் பற்றி ஆலோசனை கூறுமாறு அண்மையிலே நிறுவிய ஒரு கமிஷன் கூறுவதாவது : “இந்தியாவிலுள்ள மாணவர்கள் எல்லாரும் படிக்கக்கூடிய ஒரு பொதுவான நூல் இருப்பதாகவே தெரியவில்லை. அதனால் தான் தேசிய ஒருமைப்பாட்டிற்கு நமது கல்விமுறை மிகச் சிறிய அளவிலேயே உதவுகிறது” எல்லாக் குழந்தைகளும் படிக்கக்கூடிய பொதுவான நூல்கள் வேண்டும் என்பதைக் கல்வி அமைச்சுடன் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவும் ஆதரித்தது.


நேரு பால புஸ்தகாலயத்தின் கீழ் தயாரிக்கப்படும் புத்தகங்கள் நம் குழந்தைகளின் இந்த முக்கியமான தேவையைப் பூர்த்தி செய்யும் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நம் நாட்டிலுள்ள முக்கியமான மொழிகளைப் பேசும் குழந்தைகள் அனைவருக்கும் மிகச் சிறந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்டதும், அழகான முறையிலே தயாரித்து வெளியிடப்பட்டதுமான உயர்ந்த நூல்கள் கிடைக்கும்படியாக இந்திய தேசிய புத்தக ட்ரஸ்ட் திட்டம் வகுத்துள்ளது. ஒவ்வொரு நூலும் எல்லா முக்கியமான மொழிகளிலும் ஒரே சமயத்தில் வரவேண்டும் என்னும் நோக்கம் மிகச் சிறந்ததாகும்.இந்த வகையில் இந்தியாவிலுள்ள குழந்தைகள் எல்லாம் ஒரே கருத்துள்ள நூல்களைப்படிக்க இயலும் அதனால் அவர்களுக்குத் தேசிய ஒருமைப்பாட்டு உணர்ச்சியும் வளரும்.

ஸ்ரீமதி ஜமால் ஆரா அவர்கள் எழுதிய இந்த நூலைப் பார்க்கும்போது இம்முறையில் வரும் நூல்கள் அனைத்தும் குழந்தைகளால் மிகவும் போற்றப்படும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். இந்த நூலிலே பல உண்மைகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இவை குழந்தைகளுக்குப் பெரிதும் பயன்படுவதோடு உற்சாக மூட்டுவன வாகவும் உள்ளன. அழகான முறையிலும் இந்நூல் உருவாகியுள்ளது. குழந்தைகள் இதை மகிழ்ச்சியோடு படிப்பார்கள் என்று நம்புகிறேன்.

வி. கே. ஆர். வி. ராவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பறவைகளைப்_பார்/முன்னுரை&oldid=1137530" இலிருந்து மீள்விக்கப்பட்டது