உள்ளடக்கத்துக்குச் செல்

பவழபஸ்பம்/பதிப்புரை

விக்கிமூலம் இலிருந்து

பதிப்புரை


னித சமுதாயத்தில் இன்னமும் ஜடமாகவும் முடமாகவும் இருக்கின்ற விகாரங்களை—விவஸ்தை கெட்ட விஸ்வரூபங்களை அளந்து காட்டும் அடையாளச் சீட்டாக, 'சிறுகதை' இருக்க வேண்டும்.

மனித மனத்தை நிறைவு படுத்தும் வேலையை, கொஞ்சம் அழகாக எழுதத் தெரிந்த யாராலும் செய்து காட்ட முடியும். அதுவல்ல, சிறுகதை.

ஒரு மனத்தின் சேஷ்டையை மற்றொரு மனத்துக்கு எடுத்துக் காட்டுவது மட்டுமல்ல; அந்த மனத்தின் கசிவைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் அது பொருந்தி இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட கதையைத்தான் 'சிறுகதை'யாகக் கொள்ள முடியும்.

காலத்துக்கேற்ற மாதிரி—சூழ்நிலைக்குத் தகுந்த விதத்தில் எந்த ஒரு பூவும் தன் நிறத்தை மாற்றிக் கொள்வதில்லை. ஆனால் மனிதருக்குப் புத்தி சொல்லக் கிளம்பும் சில புஸ்வாண எழுத்தாளர்கள் மட்டும் உடயை மாற்றிக்கொள்வதுபோல் மனத்தை மாற்றிக்கொண்டு, எழுதுவதையெல்லாம் 'கதை' என்றுகதைக்கின்ற இந்தக் காலகட்டத்தில், உங்கள் கரங்களில், உண்மையான உயிருள்ள கதைகளைச் சிருஷ்டித்த பெருமைக்குரிய பேரறிஞர் அண்ணா அவர்களின் சிறுகதைத் தொகுப்பை, 'பவழபஸ்பம்' என்னும் தலைப்பில் தவழவிட்டிருக்கிறோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் 'சிறுகதை' என்பது சுவீகாரக் குழந்தைதான். அதுவும் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட குழந்தை அது.

அந்தக் குழந்தையை அமரர் அண்ணா அவர்கள், தம் கரத்தில் ஏந்தித் தவழவிட்டிருக்கும் பாங்கை இதில் நீங்கள் பரவலாகக் காணலாம். அந்தக் குழந்தையின் மூலமாக அவர் வெளிப்படுத்தியிருக்கும் ஒவ்வொரு விஷயமும் விழிப்பை மட்டுமா, நல்ல வெளிச்சத்தையும் தரக்கூடிய மருந்தாகும்.

அந்தக் சிறப்புள்ள—பேரறிஞர் அண்ணா அவர்களின் உயிர்த்துடிப்புள்ள கதைகளை நாங்கள் வெளியிட்டுக் கொள்ளும் உரிமையைப் பூரணமாக வழங்கி இருக்கும் திருமதி இராணி அண்ணாதுரை அவர்கட்கு எங்களின் இதய பூர்வமான நன்றி.

—பூம்புகார் பதிப்பகத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பவழபஸ்பம்/பதிப்புரை&oldid=1640917" இலிருந்து மீள்விக்கப்பட்டது