பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/சேவல்

விக்கிமூலம் இலிருந்து


சேவல்

காலையிலே கண் விழிப்பாய் சேவலே - நீ
கதிரவனை நின்றழைப்பாய் சேவலே!
வேலை யிதோ எந்தநாளும் சேவலே? - நீ
வேறு வேலை என்ன செய்வாய் சேவலே?

குப்பை மேட்டில் ஏறி நின்று சேவலே! - நீ
கொக்கரக்கோ கொக்கரக்கோ என்கிறாய்!
செப்பு வதற் கென்ன பொருள் சேவலே! - வந்து
சேர்ந்த இன்பம் என்ன கண்டாய் சேவலே!

அரும் பரும்பாய் அழகுமிக்கக் கொண்டையும்- கூர்
ஆணி போல வன்மை சேர்ந்த மூக்கையும்,
திரும்பு கையில் ஆடுகின்ற தாடியும் - எங்குத்
தேடிப் பெற்றாய் என்று சொல்வாய் சேவலே!