பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/பாட்டி
Appearance
கூன் விழுந்த பாட்டி,
குட்டைக் காலை நீட்டிப்
பாலுஞ் சோறும் ஊட்டிப்
படுக்க வைப்பாள் ஆட்டி!
ஈரும் பேனும் பார்ப்பாள்!
எங்கும் தூய்மை சேர்ப்பாள்!
நோயை நன்கு தீர்ப்பாள்!
நாளும் அன்பை வார்ப்பாள்!
அண்டை வீடு செல்வாள்!
அரட்டை பேசி வெல்வாள்!
கொசுவை ஈயைக் கொல்வாள்!
கோடிக் கதைகள் சொல்வாள்!