பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/வீட்டைக் கட்டினான்

விக்கிமூலம் இலிருந்து


வீட்டைக் கட்டினான்

மண்ணைப் பிசைந்தான்;
கல்லை உடைத்தான்;
'மள மளவென்றே சுவர் வைத்தான்!

திண்ணை அமைத்தான்;
படிகள் வைத்தான்;
தண்ணீர்த் தொட்டி ஒன்றமைத்தான்!

மரத்தைப் பிளந்தான்!
பலகை அறுத்தான்!
'மழ மழ'வென்றே அதை இழைத்தான்!

அரத்தைக் கொண்டும்,
ஆணிகள் கொண்டும்
அழகுக் கதவுகள் பல செய்தான்!

கம்பியை வளைத்தான்;
பலகணி செய்தான்!
கட்டி முடித்தான் ஒரு வீட்டை!

தம்பியும் மகிழ்ந்தான்!
தங்கையும் மகிழ்ந்தாள்!
தாயும் தந்தையும் மகிழ்ந்தனரே!