உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதிதாசன் கதைப் பாடல்கள்/இந்த நூற் பரிசு

விக்கிமூலம் இலிருந்து


இந்த நூற் பரிசு

என்றும் இளங்கண்ணன் இன்னினிய
தோழமையில்

நன்று நினைக்கின்ற நட்புரிமை
அன்பு ஈகை

குன்றாது உறவில் கொழுதமிழ்
வாழ்ந்துயர

அன்றாடம் ஆழ்அறிவைத் தந்துவக்கும்
ஆர்வலன்,

சீர்மிகுந்த வள்ளுவம் செந்நூல்கள்
சேர்ந்திணைந்து

வேர்விட்டு நல்ல விழுதுபோல்
பாட்டுநூல்

சந்தத்தில் ஈகின்ற சால்பினன்
அன்புக்கே

இந்த நூல் ஏற்றப் பரிசு.

                      த. கோவேந்தன்