பாரதி பிறந்தார்/1

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பாரதி பிறந்தார்.pdf


பூட்டிய விலங்கைப்
பொடிசெய் வதற்குப்
பாட்டுக் கவிஞன்
பாரதி பிறந்தான்

பாரத அன்னை
படும் துயர் போக்க
வீரன் பிறந்தான்
வேங்கைப் புலிபோல்கொஞ்சிப் பேசும்
குழந்தைப் பருவம்
அஞ்சி நடக்கும்
அழகுப் பருவம்

ஈன்ற அன்னை
இலக்குமி அம்மாள்
மாண்டு மடிந்தாள்
மண்ணில் மறைந்தாள்

பாரதி பிறந்தார்.pdf
பாரதி பிறந்தார்.pdf

கணக்கும் அறிவுக்
கலையும் யந்திர
நுணுக்கம் பலவும்
கற்றுக் கொடுக்கத்

தந்தை நினைத்தார்
தனயன் ஏனோ
சிந்தையில் அவற்றைச்
சேர்க்க மறுத்தான்


கணக்கை வெறுத்துவந்தான் - கண்டால்
காத வழிசென்றான்
பிணக்கெனச் சொல்லிவந்தான் - பாரதி
பிடிவாதம் செய்துவந்தான்

சோலைக் குயிலைப்போல் - பூவைச்
சுற்றும் வண்டைப்போல்
காலை மாலைகளில்-அவன்
கவிதை பாடிவந்தான்.

பாரதி பிறந்தார்.pdf
பாரதி பிறந்தார்.pdfஎட்டய புரத்தினிலே - வாழ்ந்து
இருந்த புலவரெல்லாம்
பட்டம் கொடுத்தார்கள் - அவனைப்
பாரதி என்றார்கள்

கோட்டுக் களிற்றிடையே - சிங்கக்
குட்டி இருப்பதுபோல்
பாட்டுப் புலவரிடை - இளம்
பாரதி வீற்றிருந்தான்

தந்தை இறந்துவிட்டார் - துன்பம்
தாங்க முடியாமல்
சிந்தை துடித்தழுதான் - ஏதும்
செய்வ தறியாமல்

பிள்ளைப் பருவத்திலே - வறுமை
பேய்போல் வந்ததம்மா
துள்ளும் இளம்வயதில் - துன்பம்
சூழ்ந்து கொண்டதம்மா

பாரதி பிறந்தார்.pdf
பாரதி பிறந்தார்.pdf


முல்லை மலரழகி - சிவந்த
முருக்கம் பூவழகி
செல்லம் மாளைமணம் - விரைவில்
செய்து முடித்தார்கள்


பன்னிரண் டாமாண்டில் - இளம்
பாலகன் சுப்பையா
கன்னி ஒருத்திக்குக் - காதற்
கணவன் ஆகிவிட்டான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பாரதி_பிறந்தார்/1&oldid=1016537" இருந்து மீள்விக்கப்பட்டது