உள்ளடக்கத்துக்குச் செல்

பாலைப்புறா/அத்தியாயம் 37

விக்கிமூலம் இலிருந்து

திருச்சி வானொலி நிலையத்தின் பகல் இரண்டு பத்து மணி செய்திகள். புதுடில்லியில் கூடியிருக்கும் என்.டி.திவாரி, அர்ஜுன் சிங் ஆகியோரின் போட்டிக் காங்கிரஸ் கூட்டம் பற்றி தெரிந்து கொள்ள, ஆங்காங்கே சின்னச் சின்னக் கூட்டங்கள். ஆனாலும், அதைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை. மாநிலச்செய்திகள் என்பதால், செளகரியமாய்ப் போயிற்று- வானொலிக்கு,

எஸ்தர், இரண்டு கைகளிலும் மனோகரை ஏந்திக் கொண்டு, கோணச்சத்திரம் ரயில் நிலையத்திற்கு வெளியே வந்தாள். அவளுக்கு, அவன் பெரிய சுமையாகத் தெரியவில்லை. ஒரு காலத்தில், எழுபது கிலோவாக இருந்தவன், இப்போது இருபத்தைந்தாக சுருங்கிக் கிடந்தான். ஆனாலும், அவன் கண்களில் மட்டும் ஒரு பிரகாசம். அந்த இடத்தை அடையாளம் கண்டது போன்ற தலையாட்டல்.

எஸ்தர், சுற்றும் முற்றும் பார்த்தாள். அவள் தோள் வழியாய் தொங்கிய ஜோல்னாப் பை, அவளின் முட்டிக் கால்களின் முன்னால் முட்டுக்கட்டையானது. உடனே அவள், முதுகில் உட்காரும் காகங்களை விரட்ட, மாடு ஒரு வளைவு வளையுமே, அப்படி லாவகமாய் வளைந்தாள். ஜோல்னாப்பை, பக்கவாட்டில் போனது…

அந்த நிலையிலும், மனோகரின் கண்கள் அங்குமிங்குமாய் பிடிப்போடு பார்த்தன. அந்த இடத்தில் ஏற்பட்ட மாற்றங்களை, அதிசயித்துப் பார்த்தன. அசல் பொட்டல் மேடாய் இருந்த இதே இடம், இப்போது முடி சூடிக் கொண்டிருந்தது. அதுவும் சுருட்டை முடியாய்… இதே ரயில் நிலையத்திற்கு முன்னால் நின்ற பதினைந்துக்கும் குறையாத வில் வண்டிகள் இரண்டாய்க் குறைந்தன. ஆனாலும், அவை விசாலமாய் நின்ற இடத்தில், நான்கைந்து 320 பாலைப்புறா

வெள்ளை நிறக்கார்கள்... அத்தனையும் நாசூக்கான வாடகைக்கார்கள்... நாசூக்கு இல்லாத மீட்டர்களை காட்டிய கறுப்புக்கார்கள்... நான்கைந்து ஆட்டோக்கள்... பக்கத்திலேயே இரண்டு பெரிய வேன்கள்... விதவிதமான ஆட்கள் ஏறுவதைப் பார்த்தால், அந்த வேன் அநேகமாய் ஏழைகளின் வாடகை வாகனமாக இருக்க வேண்டும். தலைக்கு இவ்வளவு என்று நிர்ணயித்து, ஏறுகிறவர்களை ஊர்ஊராய் இறக்கிவிடும் சாதனமாக இயங்க வேண்டும். இதன் அருகேயே லவகுசாமாதிரி ஒரு ஜெராக்ஸ், ஒரு பி.சி.ஒ. நிலையம். ஜெராக்ஸ் கட்டிடம் வெள்ளை கண்ணாடியாலும், பொது தொலைபேசி மையம் உள்ளே எதையும் காட்டாத பச்சைக் கண்ணாடி யாலும் பளபளத்தன. இவற்றின்அருகேயே, ராமலட்சுமணர்போல்ஆடியோ வீடியோ அலங்காரக் கூடம். அங்கே ஒரு கானாப் பாட்டு. தொலைவில் ஒலைகட்டியிருந்த பள்ளிக்கூட இடத்தில், இப்போது.இரண்டடுக்கு மாடிக் கட்டிடம்... நாற்றம் பிடித்த ஒரு குட்டை நிரப்பப்பட்டு, அதில் கம்ப்யூட்டர் பயிற்சிப் பள்ளியாம். அதன் சுவரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஒட்டம்... துவக்கி வைப்பவர்மாவட்ட சுகாதார அதிகாரி.

மனோகர், தனக்குள்ளயே பேசிக் கொண்டான். ‘நாடு முன்னேறிவிட்டது. ஆனால், நாட்டு மக்கள்தான் முன்னேறல. கிராமத்துக்கு விஞ்ஞானம் வந்து விட்டது. கூடவே எய்ட்ஸ்ஸும் வந்துவிட்டது. ஆனாலும் உற்றார் உறவினரைப் போல் அல்லாமல், இந்த எய்ட்ஸ் கிருமிகள் நல்லவை. இந்த வகை நோயாளி இறக்கும் போது, அவனோடு கூடவே இறந்து போகிறவை... உடன் பிறப்புக்களைவிட, ஒரு படி உயர்ந்து போன உடன் இறப்புக்கள்’

மனோகர், வெறுமையாகத் தலையாட்டியபோது, அவனைச் சுமந்து நின்ற எஸ்தர் வாகனங்களை நோட்டமிட்டாள். இதற்குள், அவர்கள் இருவரையும் கும்பல் கும்பலாய்ப் பார்த்தார்கள். சிலர், அவள் கையில் கிடப்பவனை அடையாளம் கண்டது போல், ஒரு காலாட்சபமே, நடத்தினார்கள். மற்றவர்கள், அந்த எலும்பு பிரேமை - படம் சுருங்கிய சட்டத்தை அறுவெறுப்பாகவும், அனுதாபத்தோடும் பார்த்தார்கள். கழுத்துப் புண்ணில் நீர்க்கசிவு. காதோரம் செம்படை. ரத்தத் திட்டுக்களால்ய்த் தெரிந்த பைஜாமா... லேசாய் ஊதிப் போன வயிறு. எம்மாடி... மனுஷன் இப்படில்லாம் ஆக முடியுமா?

எஸ்தர் நடந்த போது, மனிதாபிமானிகள் கண்களை மூடிக் கொண்டார்கள். மற்றவர்கள் விலகிக் கொண்டார்கள்... அவள், ஒரு ஆட்டோவைப் பார்த்து நகர்ந்தபொழுது, அது பயந்து போய், ஒடி வேறு இடத்தில் நின்றது. உடனே அவள், ஒரு வெள்ளைக்காரைப் பார்த்தபோது வெளியே நின்ற டிரைவர் சிறிது விலகிப் போய் நின்று, அவளை முறைத்தார். சு.சமுத்திரம் 321

வேன் பக்கம் போனாலோ, அதில் ஏறியவர்களில் ஒரு சிலர் தவிர, எஞ்சியவர்கள் இறங்கப் போனார்கள். நடத்துனர் பையன் கத்தினான். ‘இறங்காதிய... இறங்காதிய... அந்த ஆளை ஏத்த மாட்டோம் என்றான். இறங்கப் போனவர்கள், இருக்கையில் உட்கார்ந்தார்கள். அதுவும், அய்யோ பாவம்’ போட்டபடி...

எஸ்தர், மனோகரை... ஒரு குலுக்கி, குலுக்கி மார்போடு நெருக்கமாய் சாத்தியபடியே, திடுக்கிட்டாள். நல்லவேளையாக, இவர்களைப் போல், ரயில் பயணிகள் புறக்கணிக்கவில்லை. அது ரிசர்வ் செய்யப்படாத பெட்டி என்பது ஒரு காரணம். இவனுக்கு எய்ட்ஸ் இருப்பது தெரியாதது இன்னொரு காரணம். ஒரு வேளை தெரிந்திருந்தால், நடுக்காட்டில் சங்கிலியை இழுத்துக் கூட, ரயிலைநிறுத்தி இருக்கலாம்

எஸ்தர், என்ன செய்வது என்று புரியாமல் நின்றாள். இப்போது கைகூட வலித்தது. மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக மனோகர் கூறிய அவன் கிராமத்திற்கு நடந்தே போகலாமா என்ற வேகம். அந்த வாகனங்களையும், வாகனக்காரர்களையும் விட்டு விலகி நின்றாள். பிறகு, அருகே உள்ள ஒரு கப்பிச்சாலை பக்கமாய்ப் போனாள். அந்தப் பக்கமாய், ஒரு வண்டி வந்து கொண்டிருந்தது. பைதா எனப்படும் மரச்சக்கரங்களைக் கொண்ட கட்டை வண்டி. கமிஷன் மண்டியில், பல்லாரி மூட்டைகளையும், மல்லிக்குழைகளையும், தக்காளி கூடைகளையும் இறக்கிவிட்டு வரும் வண்டியாக இருக்கலாம்...

எஸ்தர், கெஞ்சினாள்...

‘பெரியவரே... எவ்வளவு பணமுன்னாலும் தாரேன். இவரை வெள்ளையன்பட்டி வரைக்கும் கொண்டு போகணும்...”

‘சரி வண்டில ஏத்து.. அதான் சொல்லிட்டேனே... பிறகு ஏன் அழுகிறே?”

“அழுது அழுது கண்ணீர்லே கண்ணே கரைஞ்சிப் போச்சு... எதுக்காக அழுவுறேன்னு எனக்கேத் தெரியல. ஒங்களை கையெடுத்துக் கும்பிடணும் போல இருக்குது.”

‘இதுல என்னதாயி இருக்குது... இப்படி எனக்கே ஆயிட்டால், என்னைத் தூக்கிப் போடவும், ஆண்டவன் ரெண்டு பேரை அனுப்பணும்பாரு... இவர் யாரு...?”

‘வெள்ளையன்பட்டி மனோகர்....”

‘சுப்பையாமுதலாளியோடமருமகனா..? அடக்கடவுளே...” tiir. 21 322 பாலைப்புறா

வண்டிக்காரர், எஸ்தர் ஏந்திய மனோகரை, தன் வண்டியில் கிடத்தினார். தக்காளிக் கூடைகளை வைப்பதற்காக வைக்கோல் பரப்பப்பட்டு, அதற்குமேல் ஒலைப்பாய்கள் விரிக்கப்பட்டிருந்த மெத்தை போன்ற மேல் பரப்பு.

வண்டிச்சக்கரம், காலச்சக்கரம் போல் சுழன்றது.

வண்டிக்காரர், இடுப்புக்குமேல் எதுவும் இல்லாமல் இருந்தார். அறுபது வயது இருக்கலாம். இன்னும் துருப்பிடிக்காத இரும்பு. நொந்து போய் நட்ந்த கிழட்டுமாடுகளை, ‘இம்மா இம்மா என்று செல்லமாய் அதட்டினார். மனோகரைப் பின்னால் திரும்பப் பார்த்தார். மனமும் கேட்கவில்லை.. கண்களும் கேட்கவில்லை. பல வருவுங்களுக்கு முன்னால. எப்போன்னு சட்டுன்னு வரமாட்டக்கு... எல்லா ஊர்பயலுவளுக்கும் செய்யுறது மாதிரி, இவனைப் பார்த்ததும், தோளில் கிடந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டினார். ஆனால் இந்தப் பையன், ஊர்லே மனுஷன் இருக்கானோ... இல்லியோ... நீங்க மனுஷன் என்று சொல்லி, இடுப்பில் கிடந்த துண்டை எடுத்து தோளில் போட்டான். அதற்கு பிறகு இவர் துண்டு போடுவதே இல்லை... போட்டால்தானே ஊரானுக்கு தோள்துண்டு, இடுப்பு பெல்டாகும்... இது மட்டுமா? எப்போ பார்த்தாலும் ‘மூக்கையா.. மூக்கையா...! உங்க கடைக்குட்டிப்பையன் நல்ல பையன்... நல்லா படிக்க வையுங்க. அவன் வேலைக்கு நானாச்சு'ன்னு சொன்ன பையன். ஏதோ ரகசியமான நோயின்னு பேசிக்கிட்டாங்க. பாவம், அப்பன் தவசிமுத்து வோட பாவ காரியங்கள், மகனை முடக்கி போட்டுட்டு... பிள்ளையோட புண்ணியத்தையும் மீறி, அப்பனோட பாவம் அவ்வளவு பெரிசா இருக்குது.’

வெயிலில் மனோகர் தவித்தான். கூடாரம் இல்லாத கட்டை வண்டி... இருபக்கமும், பூவரசு கம்புகளால்தான் பொருத்தி வைக்கப்பட் டிருந்தன. ஒரு சேலையை மட்டும் மேலே போட்டால், அதுவே பாடை...

உள்பாடி போட்டிருந்த எஸ்தர், அவன் மேல் போர்த்துவதற்காக மானத்தைப் பற்றிக் கவலைப்படாமல், சட்டையைக் கூட கழட்டப் போனாள். அதற்குள், மூக்கையா பார்த்து விட்டார். அவரும் கோவணம் கட்டுவதில் இருந்து, டவுசர் அளவிற்கு முன்னேறியவர். வேட்டியை உருவி எஸ்தரிடம் கொடுத்தார். ‘நல்லாபரப்பி போடு தாயி என்றார்.

மூக்கையா, ‘முடியலியே என்பது மாதிரி திரும்பிப் பார்த்த மாடுகளை, நோட்டமிட்டார். அதற்குள், அந்த மாடுகள் மூக்கணாங் கயிற்றைப் பிடித்து இழுக்க வேண்டிய அவசியம் இல்லாமலே நின்றன. அவர் யோசித்தார். ஒரு வேளை, செடி செத்தை பாம்பு இருப்பதால் இப்படி பம்மி நிற்குதா என்று சு.சமுத்திரம் 323

பார்த்தார். அப்படியும் தெரியவில்லை. சாட்டைக்கம்பால், ஒரு சின்ன் விளாசல். ஒடிய மாடுகள் ஒரு இடத்தில் போய், மீண்டும் சத்தியாக்கிரகம் செய்தன. அவர், மனோகர் பக்கமாய் திரும்பினார். லேசான வாடை.. மாடு மூக்கு, அவர் மனித மூக்கைப் போல்மரத்துப் போகவில்லை.

மூக்கையா, செல்லப்பிள்ளைகளான அந்த மாடுகளை, முதல் தடவையாக, அவைகளுக்கு வலி கொடுக்கும் அளவிற்கு அடித்தார். அவர் கையில் பிடித்த சாட்டைக் கம்பு, பாம்பு போல் சுருண்டும் நீண்டும் சீறிப் பாய்ந்தது. மாடுகளுக்கும் ரோஷம். நீயே மூக்கணாங் கயிற்றை சுண்டி இழுக்கப் போகிறே பார் என்பது மாதிரி ஓடின.

அந்தக் கட்டைவண்டி, இப்போது ஓங்கிப் பெருத்த அந்த பிரசவ மருத்துவமனை சாலை வழியாக, வெள்ளையன் பட்டியின் விலாப்புறத் திற்கு வந்தது. மருத்துவமனை வந்ததாலோ என்னமோ, சில நஞ்சைப் பகுதிகள் கூட பிளாட்டுக்களாக, வெள்ளைக் கற்களைக் காட்டின. சில, குட்டிப் பங்களாக்களாய் வடிவெடுத்திருந்தன; எஸ்தர் யோசித்தாள். மனோ சொன்னானே... கலைவாணி கருத்தரித்த மருத்துவமனை என்று. அது இதுதானோ? இங்கேயே, இவனை சேர்க்கலாமா? மொதல்ல இவன் iட்டுக்குப் போகலாம்...

இந்த வண்டி, பள்ளிக்கூட மைதானம் வழியாய்ப் போகவில்லை. சுற்றிலும் மதில் மாதிரியான காம்பவுண்ட். போனால் போகிறது என்பது போல், போட்டுவைத்திருந்த, அதன் பக்கத்து வண்டித்தடம் வழியாகப் போனது. நார்க் கட்டிலில், கம்பளிப் போர்வைக்கு மேல் கிடந்த “லாரிக்கார’ மாரியப்பனால் ஏறிட்டுக் கூட பார்க்க முடியவில்லை. கண்கள் இருந்த இடத்தில் குழிகள்... கைகால்கள் இருந்த இடத்தில் வெறும் குச்சிகள். அவன் பக்கமாய் நின்ற வாடாப்பூதான், அந்த வண்டியைப் பார்த்தாள். உடனே என் ராசாவே ராசாதி ராசாவே’ என்று புலம்பிப்புலம்பி, தலையில் அடித்தபடியே அந்த வண்டியைப் பார்த்து ஓடினாள். அவளை, மாரியப்பன் திட்டப் போனான். உதடுகளை அசைக்கவே முடியவில்லை. பின்னால் துரத்தப் போனான்..., கால்கள் நகரவில்லை... ஆனாலும் அசைந்தான். அப்படி அசைய அசைய முதுகுக் கொப்புளங்கள் வலி கொடுத்தன. முகப்புண்கள், நச்சரித்தன. பிடறிப்படைகள் பிய்த்தெடுத்தன.

அந்த வண்டிக்குப் பின்னால், வாடாப்பூ ஒடிக் கொண்டே இருந்தாள்... எஸ்தரால் யூகிக்க முடிந்தது. இவள் வாடாப்பூவாக இருப்பாள் அல்லது தேனம்மாவாக இருப்பாள்.

அந்த வண்டியை, ஊராரில் பலர் முகம் சுழித்துப் பார்த்தார்கள். சிலர் இரண்டில் ஒன்றைப் பார்த்துவிடப் போவதுபோல், அதன் பின்னால் ஒடிக் 324 பாலைப்புறா

கொண்டிருந்தார்கள். காசு போட்டு சீட்டாடிக் கொண்டிருந்த சுப்பிரமணியன், சீட்டுக்கட்டை போட்டுவிட்டு, விளையாட்டு சகாக்களை அந்த வண்டியைக் காட்டி உசுப்பிக் கொண்டிருந்தான். அந்த வண்டி அங்குமிங்குமாய் புரண்டு, ஒரு மூன்று பத்தி வீட்டின் முன்னால் போன போது, ஜன்னல் வழியாய் வெளியே பார்த்த ஆனந்தி, கதவைத் திறந்து கொண்டு, மேடை போல் இருந்த திண்ணைக்கு வந்தாள். இரண்டு பிள்ளைகளை இரண்டிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே பறிகொடுத்தவள்.

இப்போதும் உண்டாகி இருக்கிறாள். ஆனாலும் கர்ப்ப கால வாளிப்பிற்கு பதிலாக முகம் கூம்பி இருந்தது. தோள் எலும்புகள் துருத்தி நின்றன. அவளால், கணவனை ஏமாற்ற முடிந்தது. ஆனால், தன்னை ஏமாற்ற முடியவில்லை... எப்போதோ தெரிந்து போன விஷயம். ஒரு தடவையில் வராது என்று பல தடவை நினைத்தவள்தான். இப்போது உள்ஸ்ரீப்புக்கள் தடுமாறுவதையும், தடம் மாறுவதையும் பார்த்துப் புரிந்து கொண்டாள். ஆகையால், மனோகரைப் பார்த்ததும், அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது. திண்ணையில் நின்று, அவளைப் போலவே நின்ற பெண்களைப் பார்த்து ஒலமிட்டாள்...

‘இந்தப் பாவியால.. இந்த ஊர் என்னபாடுபடப் போகுதோ...? இவன், இன்னும் எத்தனைபேரைசாகடிக்கப் போறானோ...? இந்த ஊர் முழுசையும் சாகடிக்காமல், இவன்சாகமாட்டான்...”

அக்கம் பக்கத்துப் பெண்கள், பயந்து போனார்கள். வெளியூருக்குப் போய்விட்டாலும், இன்னும் ஊர் அபிமானத்தை விடாத ஆனந்தியைப் பார்த்து வியந்து போனார்கள். வீடுகளுக்குள் மொச்சைக் கொட்டை சீனிக்கிழங்கு வகையறாக்களை நொறுக்கிக் கொண்டிருந்த ஆம்பளைங்களின் கொம்புவே, உள்ளே ஒடிப்போனார்கள்.

அந்த வண்டி, கலைவாணியின் வீட்டுக்கு முன்னால் போன போது, தற்செயலாய் வெளியே வந்த சுப்பையா, அவனைக் கோபங்கோபமாகத்தான் பார்த்தார். ஆனால், பார்க்க பார்க்க, கண்கள் பனித்தன. எவனும் தன்னை வேண்டுமுன்னு அழிப்பானா. என்ன சந்தர்ப்பமோ? என்ன இழவோ? மனோகர், அவரைப் பார்த்து வாயாட்டினான். கலைவாணி, எப்படி இருக்காள் என்று கேட்பது போல்...

மூக்கையா, அந்த வண்டி, தவசிமுத்துவின் வீட்டுக்கு முன்னால் போனபோது, மூக்கணாங் கயிற்றைப் பிடித்தார். எஸ்தரை பொருள்படப் பார்த்த போது, அவள் கீழே குதித்தாள். மனோகரைமெள்ள இழுத்து இழுத்து, மீண்டும் கைகளில் ஏந்திக் கொண்டு, அந்த வீட்டு வாசல் பக்கம் நடந்தாள். சு.சமுத்திரம் 325

அந்த வண்டியை அங்குமிங்குமாய்ச் சூழ்ந்த கூட்டம் சிறிது சிதறியது. தாய்மார்களோ, தத்தம் பிள்ளைகளை பின் பக்கமாய் இமுத்தார்கள், ஆண்களும் பெண்களுமாய் நின்ற கூட்டத்தைப் பார்த்துவிட்டு, மாடுகள் மிரண்டன. மூக்கையாவிற்கு அந்த நிலையில் அங்கிருந்து போக மனமில்லை.

அதற்குள், தவசிமுத்து வாசலில் வந்து கதவாய் நின்றார். மனோகரைப் பார்த்ததும், அவர் சிறிது ஆடிப் போனது உண்மைதான். ஆனாலும், அந்த இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்காமல் போனதையும், கலைவாணியின் நகைகளைக் கைப்பற்ற முடியாமல் போனதையும் மனதில் வலிந்து வரவழைத்தார். ஆடிப் போன மனம், இறுகிப் போனது... கல்லர்கி, இரும்பானது...

‘இவனை எதுக்குடி. இங்கே கொண்டு வந்தே? ஒன்னத்தாண்டி”

தாய்க்காரியான சீதாலட்சுமி, கணவன் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தாள். மகனை பார்த்துவிட்டு, வாசல் தாண்டி அங்கிருந்தே பாயப் போனாள். நான் பெத்த மவனே ஏன் பெத்தோமுன்னு சொல்லும்படியா ஆயிட்டியேடா..? என் சீமைத்துரையே, செவ்வரளிப்பூவே என்று ஒலமிட்டாள். உடனே தவசிமுத்து, அவளைப்பிடித்து வீட்டுக்குள் தள்ளிக் கதவை சாத்தினார். வெளித்தாழ்ப்பாளான இரும்புக் கம்பியை குறுக்காய்ப் போட்டார். அப்படியும் சீதாலட்சுமி, ஜன்னல் பக்கமாய் வந்தாள்... பெற்ற வயிற்றை மாறி மாறி அடித்தாள். பாலூட்டிய மார்பகத்தை கைகளால் குத்தினாள். ஜன்னல் கம்பிகளில் தலையை மோதினாள். எஸ்தரின் கைகளில் முடங்கிக்கிடந்த மனோகர், அம்மாவைப் பார்த்து லேசாய் கையைத் தூக்கினான்.துக்கிய வேகத்திலேயே கீழே போட்டான்.துக்கச்சுமையைவிட, பெரிய சுமை. இதைப் பார்த்த சீதாலட்சுமியின் வாய் பேசாமல், அப்படியே அகலப்பட்டு நின்றது. மாரடித்த கரங்கள் வளைவாகவே நின்றன. அம்மாவின் பக்கத்தில் வாயும் வயிறுமாக நின்ற மீரா, ஒப்பாரி போட்டாள். இதனால், கூட்டத்தில் நின்ற ஒரு சிலர், தவசிமுத்துவை கீழே தள்ளிப் போட்டுவிட்டு, கதவைத் திறந்து வீட்டுக்குள் ஒடினார்கள். வெளியே நின்றவர்கள், தண்ணிதெளிடா'சுக்கு வச்சு ஊதுங்கடா என்று ஆளுக்குள் ஆள் உபதேசம் செய்தார்கள்.

தவசிமுத்து, மனைவியின்நிலைக்கு மகனே காரணம் என்றும், அவனை இங்கே கொண்டு வந்தவளும் ஒரு உடனடிக் காரணம் என்றும் கற்பித்துக் கொண்டு கத்தினார். ‘எதுக்குடி இந்தப்பயல, இங்கே கொண்டு வந்தே...? இவனை உறிஞ்சுறது வரைக்கும் உறிஞ்சி, சக்கையாக்கிட்டு... கையிலே இருந்த இரண்டு லட்சமும், பேங்கிலே இருந்த எழுபது பவுன்நகையும் தீர்ந்த 326 பாலைப்புறா

பிறகு, எல்லாத்தையும் விழுங்கிட்டு... எதுவும் இல்லாமப் போன பிறகு... இங்க வாரதுக்கு, இது என்ன சத்திரம் சாவடியா?”

எஸ்தர், கூட்டத்தினரைப் பார்த்தாள். பெரும்பாலோர், அப்பன்காரனை ஆட்சேபிக்காமல், நிற்பதைப் பார்த்தாள். இப்போது அவளே உச்சக்கட்ட சத்தத்தில் பேசினாள்...

“யோவ் பெரிசு. ஆம்புளையாச்சேன்னு பார்க்கேன்... நீயெல்லாம் ஒரு அப்பனாய்யா...? இந்த மனோகர்கிட்டே எவ்வளவோஎடுத்துச்சொன்னேன். ஊரு வாணான்டா... வாணான்டான்னு ஒப்பாரி போட்டே சொன்னேன். கேட்டாத்தானே...? அம்மா மடில தலை வைக்க முடியாட்டியும், கால் மாட்லாவது சாகனுமுன்னு பினாத்துனான். ஆத்தாக்காரி, காலடிக்குப் போகும் முன்னாடியே, நீயே சாகடிச்சிடுவே போலுகே’

‘செருப்பு பிஞ்சுடுண்டி...’

‘பிய்யட்டும்... வாங்கிக்கிறேன். இந்த மனோ நல்லபடியா வாழத்தான் முடியல. இவனைநல்லபடியாசாகவாவது விடுய்யா. அதிகநாள் காத்திருக்க வாணாய்யா... ரெண்டு நாளுல போயிடுவான். திரும்பி வராமப் போயிடுவான்... டாக்டரே சொல்லிட்டார்”

‘அதெல்லாம் முடியாது... எந்த வழியாய் வந்தியோ... அந்த வழியாப் போ... இவனோட போ...’

சீதாலட்சுமி, மீண்டும் ஜன்னல் பக்கம் வந்து, சுமந்து பெற்ற பிள்ளையை, இன்னொரு தடவை சுமக்கப் போவது போல் கைகளை வெளியே விட்டு ஆட்டினாள். பக்கவாட்டில் தெரிந்த தவசிமுத்து பக்கமாய், தலையைத் திருப்பி முடியாமல், கண்களைக் கோணலாக்கியபடியே கத்தினாள்.

‘இந்தா பாரும் மரியாதையா என் மவன... என் செல்வத்த... iட்டுக்குள்ள தூக்கிட்டு வாரும்... நான் பெத்த பிள்ளைக்கு என் சீமைத்துரைக்கு... இல்லாத வீடு, எவனுக்கும் இல்ல... என் மவன், எங்கே பிறந்தானோ, அங்கேயே சாகட்டும்... அய்யோ! நான் தவமிருந்து பெத்த மவனே...! நீ சாகப் போறியா...? செத்துத்தான் போவியா...”

சீதாலட்சுமி புலம்புவதைப் பார்த்து, கூட்டம் கையைப் பிசைந்தது. ஆனாலும், பட்டைதாரியாய் போன பட்டாதாரி சுப்பிரமணியன், பழைய ராமசுப்பு, ஆனந்தியின் தந்தை, இறந்ததுபோக எஞ்சியிருக்கும் உள்ளூர் விவேகிகள் ஆகியோர், ஆங்காங்கே செம்மறியாடாய் நின்றவர்களை சண்டைக்கிடாவாய் மாற்றும் வகையில் காதுகளில் ஒதினார்கள். “இவன், சு.சமுத்திரம் 327

இங்கே இருந்தால், ஊரே ஒழிஞ்சுடும். இந்த நோயி அப்படிப்பட்ட நோய்... அவன் மூச்சுப்பட்டாலே முடிஞ்சுடும். அவன் உடம்பிலே படுற காத்து... நம்ம உடம்பிலே பட்டாலே போதும்... ஒரு வழியாயிடுவோம்’

உள்ளுர் பெரிய தலைகள், ஒன்றாய்க் கூடின. பச்சாதாபமாக தலைகளை ஆட்டினாலும், அவற்றின் கண்கள் பயங்கரமாயின. இப்போது லேசாய் தடுமாறி நின்ற தவசிமுத்துவைப் பார்த்து, பழைய கூட்டாளியான ராமசுப்பு தீர்ப்பளித்தார்.

“ஒம்ம பையன்... இந்த ஊர்ல இருக்க முடியாது’

ஜன்னல் கம்பிகள் வழியாய் ஒரு சத்தம்

‘எங்க வீட்டுல இருந்தா ஒனக்கென்ன...? என் பிள்ளை என் வீட்டுலதான் இருப்பான்... நீ எதுக்கு சம்மன் இல்லாம ஆசராகரே?”

‘ஒன் வீடும், இந்த ஊர்லேதான் இருக்குது. தவசிமுத்து.. ஒன்னைத்தான்... ஊரைப் பகைக்கின் வேரோடு கெடு முன்னு ஒன் வீட்டுக்காரிக்கிட்டே சொல்லு.’

‘'சாமிகளா... தர்மபிரபுக்களா... என் பிள்ளையை என்கிட்ட இருந்து பிரிச்சிடாதிய... ஒங்களுக்கு கோடிப்புண்ணியம்... அய்யாமாருங்களா... ரெண்டு நாளுதான்னு... அவள்சொல்லிட்டாள். யாரு பெத்த பெண்ணோ...? அவளே கலங்கும் போது... ஒங்க மனசு கல்லாப் போகலாமா? அய்யாமாரே... அம்மாமாரே... ஒங்களத்தான்...’

சீதாலட்சுமி, ஜன்னல் கம்பிகள் வழியாய் கண்களால் கெஞ்சினாள். கையெடுத்துக் கும்பிட்டாள். கூட்டத்தில் பாதிப்பேர் மனம் கரைந்தது. வாடாப்பூவும், ஒவ்வொருவர்மோவாயாய்ப் பிடித்துக் கெஞ்சினாள்.

இயலாமையில் தவித்த கூட்டத்தில் ஒருத்தன், இன்னும் வண்டியைத் திருப்பாமல் நின்ற மூக்கையாமீது பாய்ந்தான்.

‘எல்லாம்... இந்த மூக்கையாவால வந்த வினை. ஒன்னை யாருப்பா வண்டில ஏத்திக்கிட்டு வரச்சொன்னது...? கடைசியிலே ஒன் சாதிப்புத்தியக் காட்டிட்டே... பாரு... காலனி புத்திய காட்டிட்டேபாரு’

மூக்கையா, தன்னை அறியாமலே வேட்டியைத் தார்பாய்த்துக்கட்டினார். பிறகு விஷயம் புரிந்து, அதை இழுத்துப் போட்டுக் கொண்டே பதிலடி கொடுத்தார்.

‘இந்தாபாரும்... எதைப் பற்றி பேசினாலும், சாதியப் பத்தி 328 பாலைப்புறா

பேசாதேயும்... அப்புறம் எங்க சின்ன பயல்கள எங்களால கட்டுப்படுத்த முடியாது... அதோட, சாதிகளப் பத்தி பஞ்சாயத்து பேசினால், ஒங்க சாதிக்குத்தான் அசிங்கம்’

‘இவனுக்கு திமிரைப்பாரேன்’

‘ஏய். வெண்டைக்காய் வியாபாரி சும்மாக்கிட... இப்பத்தான் கூலித்தகராறும்,"குத்தகை தகராறும் தீர்ந்திருக்கு... உனக்கு நிலமில்ல என்கிறதால நீபாட்டுக்குப் பேசப்படாது’

‘சரிப்பா... மூக்கையாவை விடு... இந்த சீக்காளி மனோகரை என்ன செய்யலாம்?”

‘ஊருக்குள்ளவைக்கப்படாது. அவ்வளவுதான் எனக்குத் தெரியும். மீதி விஷயத்தை ஊருதான் தீர்மானிக்கணும்.’

தவசிமுத்தும் மன்றாடினார்...

‘இவனை தல முழுகுன தகப்பன்தான் நான். ஆனாலும் மனசு கேட்கமாட்டக்கு. இன்னைக்கு மட்டுமாவது, இவனை பெத்தபாவி மொட்டை, சீதாலட்சுமியோடஏக்கத்தை போக்குங்கய்யா...!”

‘ஊரு முழுசையும் நீரு கொல்லணுமுன்னு நினைச்சா, நாங்க சும்மா இருக்க முடியுமா?”

ஊரார், இப்போது ஒன்றுபட்டு நின்றார்கள். வீட்டுக்குள் அழுகைச் சத்தங்கள்... வெளியே கோபதாபச்சத்தங்கள்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_37&oldid=1639257" இலிருந்து மீள்விக்கப்பட்டது