உள்ளடக்கத்துக்குச் செல்

புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்/பாடவேறுபாடுகளும்

விக்கிமூலம் இலிருந்து

பின்னிணைப்பு 3

புதுமைப்பித்தன் கதைகள்:

வெளியீட்டு விவரங்களும் பாடவேறுபாடுகளும்

புதுமைப்பித்தன் கதைகள் ஒவ்வொன்றும் முதலில் எந்த இதழில் வெளியானது, எந்தப் புனைபெயரில் வந்தது, எந்த நூலில் முதலில் தொகுக்கப்பெற்றது என்ற செய்திகள் வரிசையாக இங்கு வழங்கப்பட்டுள்ளன. புதுமைப்பித்தன் வாழ்ந்த காலத்தில் அவருடைய கதை ஒன்றுக்கு மேற்பட்ட இதழில் வெளிவந்திருந்தாலோ, ஒன்றுக்கு மேற்பட்ட நூலில் இடம்பெற்றிருந்தாலோ அச்செய்திகள் பதிவு செய்யப் 'பெற்றுள்ளன; அவர் மறைந்த பிறகே முதலில் நூலாக்கம் பெற்ற கதை என்றால் மட்டுமே அச்செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. பிற்காலப் பதிப்புகள் கணக்கில் கொள்ளப்படவில்லை.

இந்நூற்பதிப்புக்கு எது மூலபாடமாகக் கொள்ளப்பட்டதோ. அதற்குப் பக்கத்திலேயே அடைப்புக்குறிக்குள் 'மூலபாடம்' எனக் குறிக்கப்பட்டுள்ளது.

'புனைபெயர்' என்பது கதையை வெளியிடப் புதுமைப்பித்தன் பயன்படுத்திய பெயரைக் குறிப்பிடும்; கதையை வெளியிடத் தம் இயற்பெயரையே அவர் கையாண்டிருந்தாலும் 'புனைபெயர்' என்பதன்கீழ் தான் இடம்பெறும்.

பாடவேறுபாடு என்பது மூலபாடமாகக் கொள்ளப்பட்ட வடிவத்திலிருந்து மாறுபடும் பாடங்களை வரிசைப்படுத்துகின்றது.

'நூல்' என்பதன்கீழ் நூல் தலைப்புகள் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளன. முழுப் பதிப்பு விவரங்களைப் பின்னிணைப்பு 2இல் காண்க.

புதுமைப்பித்தன் கதைகள், (1940)
ஆறு கதைகள், (1941)
நாசகாரக் கும்பல், (1941)
காஞ்சனை, (1943)
ஆண்மை, (1947)
சிற்றன்னை, (1950)
கபாடபுரம், (1951)
விபரீத ஆசை, (1952)
அவளும் அவனும்,(1953)
புதிய ஒளி, (1953)

1. ஆற்றங்கரைப் பிள்ளையார்

முதல் வெளியீடு : மணிக்கொடி, 22. 4. 1934; 29. 4. 1934 (மூலபாடம்); முதல் நான்கு பிரிவுகளும், கடைசிப் பிரிவுமாக இரு பகுதிகளாக வெளிவந்துள்ளது.

புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் படைப்புகள் (ஐந்திணைப் பதிப்பகம், 1987)

2. சங்குத் தேவனின் தர்மம்

முதல் வெளியீடு : காந்தி, 25.4.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
பாடவேறுபாடு:

(i) 'சங்குத் தேவனின் தர்மச் செலவு' என்ற தலைப்பு நூலாக்கத்தின் போது பெயர்மாற்றம் பெற்றுள்ளது.

(2) "காசுக் கடைச் செட்டியின் பணம் இந்தப் பாடு பட்டது! செட்டிக்குத் தெரிந்தால்?" என்ற கடைசி வரி நூலில் நீக்கம் பெற்றுள்ளது.

3. பொன்னகரம்

முதல் வெளியீடு : மணிக்கொடி, 6. 5. 1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)

4. திருக்குறள் செய்த திருக்கூத்து

முதல் வெளியீடு : காந்தி, 10.5.1934 (மூலபாடம்)
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : அவளும் அவனும்

5. கட்டில் பேசுகிறது

முதல் வெளியீடு : மணிக்கொடி, 13.5.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)

கதைத் தலைப்பின் முடிவிலிருந்த வியப்புக் குறி நூலாக்கத்தின்போது நீக்கம் பெற்றுள்ளது.

6. மோட்சம்

முதல் வெளியீடு : சுதந்திரச் சங்கு, 25.5.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல்: காஞ்சனை (மூலபாடம்)

7. ராமநாதனின் கடிதம்

முதல் வெளியீடு: சுதந்திரச் சங்கு, 1.6.1934 (மூலபாடம்)
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : அன்னை இட்ட தீ (காலச்சுவடு பதிப்பகம், 1998)

8. காளி கோவில்

முதல் வெளியீடு : மணிக்கொடி, 10 .5. 1934 (மூலபாடம்)
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல்: புதிய ஒளி

9. உணர்ச்சியின் அடிமைகள்

முதல் வெளியீடு : மணிக்கொடி, 8.7.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல்: காஞ்சனை (மூலபாடம்)

10. நிகும்பலை

முதல் வெளியீடு : மணிக்கொடி, 15.7.1934 (மூலபாடம்) புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல் : புதிய ஒளி

'அன்', 'அர்' விகுதி மயக்கம் மூலபாடத்தில் உன்னவாறே பதிப்பிக்கப்பட்டுள்ளது.

31. நியாயம்

முதல் வெளியீடு : மணிக்கொடி, 22.7.1934
புனைபெயர்: சொ. விருத்தாசலம், பி.ஏ.
நூல் : காஞ்சனை (மூலபாடம்)

12. புதிய நந்தன்

முதல் வெளியீடு : மணிக்கொடி, 22.7.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல்: ஆண்மை (மூலபாடம்)

அச்சுப் பிழையின் காரணமாக நிறைவு பெறாத இரு வாக்கியங்கள் மணிக்கொடியிலிருந்து எடுத்து நிரப்பப்பட்டுள்ளள.

13. கவந்தனும் காமனும்

முதல் வெளியீடு: மணிக்கொடி. 22.7.1934
புனைபெயர்: கூத்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
பாடவேறுபாடு:

(1) ப. 108,3ஆம் பத்தி :"நீங்கள் இரவு எட்டு மணி... பிரமிப்பை உண்டாக்காது" என்பது சேர்க்கப்பட்டுள்ளது.
(2). 109, 4ஆம் பத்தி: "அதோ மூலையில் சுவற்றருகில் பார்த்தாயா?"
(3) ப. 109, 4ஆம் பத்தி : "நீ போட்டிருக்கிறாயே உன் பாப்லின் ஷர்ட்டு, உன் ஷெல் பிரேம் கண்ணாடி!"
(4) ப.109,5ஆம் பத்தி: "அட போடா! உன்னிடம் தத்துவம் பேசிக் கொண்டிருக்க நேரமில்லை",

பாடவேறுபாடுகள் 2-4, வாசகரைச் சுட்டும் முன்னிலை ஒருமையிலிருந்து முன்னிலைப் பன்மையாக மாற்றப்பட்டுள்ளதைச் சுட்டுகின்றன.

14. இது மிஷின் யுகம்!

முதல் வெளியீடு: மணிக்கொடி, 29.7.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகன் (மூலபாடம்)

'மனித யந்திரம்-!' என்ற தலைப்பில் வந்த இக்கதை, நூலாக்கத்தின் போது பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

15. ஒப்பந்தம்

முதல் வெளியீடு: மணிக்கொடி, 5.8.1934 (மூலபாடம்)
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதிய ஒளி

16. திறந்த ஜன்னல்

முதல் வெளியீடு : மணிக்கொடி, 12.8.1934

புனைபெயர்: சொ. விரு(த்)தாசலம்
நூல்: புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)

17. தனி ஒருவனுக்கு

முதல் வெளியீடு : மணிக்கொடி, 12.8.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல்: ஆண்மை (மூலபாடம்)
பாடவேறுபாடு:

(1) மணிக்கொடியில் மேற்கோள் குறிக்குள் 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனின்' என்று தலைப்பு அமைந்துள்ளது.

(2) ப. 123, 3ஆம் பிரிவின் தொடக்கத்தில் "பட்டினி கிடந்ததினாலும், முன்பு அடிபட்டதினாலும், சூடு பொறுக்க முடியாத உணவு திடீரென்று சென்றதினாலும் இறந்துபோனார் சுவாமியார்" என்ற ஒரு வரி நீக்கம் பெற்றுள்ளது.

18. பறிமுதல்

முதல் வெளியீடு மணிக்கொடி, 19.8.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்); ஆண்மை
பாடவேறுபாடு:

(1) ப. 125, 8ஆம் பத்தி, 2ஆம் வாக்கியம்: "மகாத்மா 'எனது அந்தராத்மா' என அடிக்கடி சொல்லுகிறாரே, அதுபோல் இவருக்கும் கொஞ்சம் இருக்குமோ என்னவோ?" என்ற வாக்கியம் மணிக்கொடியிலும், ஆண்மையிலும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

(2) ப. 127, கீழிருந்து 2ஆம் பத்தி : "நமது அரசாங்கமாக இருநதால் என்ன? அந்நியனுடையதாக இருந்தால் என்ன?" என்பதில் இரண்டாம் கேள்வி, ஆண்மையில் மட்டும் நீக்கப்பட்டுள்ளது.

19. தெரு விளக்கு

முதல் வெளியீடு : ஊழியன், 24.8.1934
புனைபெயர்: சொ. வி.
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)

20. அகல்யை

முதல் வெளியீடு: ஊழியன், 24.8.1934
புனைபெயர்: சொ. விருத்தாசலம்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
ஊழியனில் கௌதமர் ஒருமையில் சுட்டப்பட்டுள்ளார்.

21. கடிதம்

முதல் வெளியீடு : மணிக்கொடி, 26.8.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்); ஆண்மை.

22. சித்தம் போக்கு

முதல் வெளியீடு : மணிக்கொடி, 2.9.1934 (மூலபாடம்)
புனைபெயர்: கூத்தன்
நூல்: புதிய ஒளி

23. நன்மை பயக்குமெனின்

முதல் வெளியீடு மணிக்கொடி, 2.9.1934
புனைபெயர் : சொ. விருத்தாசலம்
நூல்: ஆண்மை (மூலபாடம்)

அச்சுப் பிழைகன் மணிக்கொடி பாடத்தைக் கொண்டு திருத்தப்பட்டுள்ளன.

24. தியாகமூர்த்தி

முதல் வெளியீடு : காந்தி, 5.9.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல்: காஞ்சனை (மூலபாடம்)
பாடவேறுபாடு:

(1) ப. 151, 6ஆம் பத்தியின் கடைசியில் "இல்லாததனால் நேராகச் சாராயக் கடைக்குப் போனார்” என்ற வாக்கியம் சேர்க்கப் பெற்றுள்ளது.

25. கண்ணன் குழல்

முதல் வெளியீடு: காந்தி, 5.9.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் படைப்புகள் / ஐந்திணைப் பதிப்பகம். 1987) மூலபாடம்: கொல்லிப்பாவை, ஏபரல் 1985

இக்கதை வெளியான காந்தி இதழின் பக்கங்கள் பதிப்பாசிரியகுக்குப் பார்வையிடக் கிடைக்கவில்வை. எம். வேதசகாயகுமார் வெளியிட்ட தகவல் பா. மதிவாணனைக் கொண்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

26. வாடா மல்லிகை

முதல் வெளியீடு ஊழியன், 7.9.1934
புனைபெயர்: சொ. விருத்தாசலம்
நூல் : ஆறு கதைகள் (மூலபாடம்)
பாடவேறுபாடு:

(1) ‘ஸரஸு', ஊழியனில் 'சரஸா' எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது; ஸரஸுவீன் தம்பியின் பெயர் 'துரைசாமி' என்பதற்குப் பதிலாக 'சீமா' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(2) ப. 56, 2ஆம் பத்தி, 10ஆம் வரி "சாம்ராஜ்யப் பிரஜையின் நிலைதானா?" என்பதன்முன் "பிரிட்டிஷ்" என்ற சொல் நீக்கம் பெற்றுள்ளது.

(3) ப. 156, 2ஆம் பத்தி, கடைசியில் "மடையர்களிடம்" என்ற ஒரு சொல் நீக்கம் பெற்றுள்ளது.

27. கொடுக்காப்புளி மரம்

முதல் வெளியீடு : மணிக்கொடி, 9.9.1934 (மூலபாடம்)
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதிய ஒளி

28. நம்பிக்கை

முதல் வெளியீடு : மணிக்கொடி, 15.9.1934(?)
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் படைப்புகள் ((ஐந்திணைப் பதிப்பகம், 1987)
மூலபாடம்: கொல்லிப்பாவை, ஏப்ரல் 1986.

மணிக்கொடியை பதிப்பாசிரியர் நேரிடையாகப் பார்க்கவில்லை. வெளியீட்டு விவரங்களும்,கொள்ளப்பட்ட பாடமும் முறையே எம். வேதசகாயகுமார் தம் நூலின் அட்டவணையிலும், கொல்லிப்பாவையிலும் வழங்கியவாறு தரப்பட்டுள்ளன. ப. 166 'அவன் குறைகள் அவளையறியாமலே ...' என்று தொடரும் வாக்கியத்தில் 'குறைகள்' என்ற சொல் பொருள் தரவில்லை மணிக்கொடி வார இதழ் 9.9934க்கு அடுத்து 16.9.1934இல் வந்துள்ளது. எனவே, 15.9.1934 என்ற தகவல் பிழையானது.

29. புதிய ஒளி

முதல் வெளியீடு மணிக்கொடி, 16.9.1934 (மூலபாடம்)
புனைபெயர் : கூத்தன்
நூல் : புதிய ஒளி

30. களவுப் பெண்

முதல் வெளியீடு : மணிக்கொடி, 16.9.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்]
பாடவேறுபாடு;

(1) மணிக்கொடியில் மன்னன் பெயர் 'ராஜ ராஜன்', 'ராஜ ராஜ சோழன்', 'ராஜ ராஜ வர்மன்' என வேறுவேறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(2) ப. 169. 3ஆம் பத்தி "அதெல்லாம் பழைய கதை; ராஜ ராஜன், தான் இருந்த தலைநகர் இப்பொழுது பெயர் தெரியாமல இருக்கும் என்று கண்டானா? கம்பன் பாட்டிலே, கம்பன் கண்ட கனவிலே பெரிய கனவுகளைச் சமைத்தான்..." என்று அமைந்துள்ளது.

31. 'நானே கொன்றேன்!'

முதல் வெளியீடு : ஊழியன், 21.9.1934 (மூலபாடம்)
புனைபெயர்: மாத்ரு

'மாத்ரு' என்ற பெயரில் ஊழியனில் (12.10.1934) வெளியான 'கதைகள்' என்ற கட்டுரை புதுமைப்பித்தன் கட்டுரைகள் (ஸ்டார் பிரசுரம், 1954) நூலில் 'சிறுகதை 3' என்ற தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நூல் புதுமைப்பித்தன் மறைந்த பிறகு தொகுக்கப்பட்ட நூலாயினும், இது அவருடைய கட்டுரைதான் என்பதை இனங்காட்டும் சில தொடர்கள் - முக்கியமாகச் சிறுகதையை வாழ்க்கையின் சாளரமாகக் காணும் உருவகம் புதுமைப்பித்தனின் பிற படைப்புகளிலும் இடம்பெற்றுள்ளன. 'மாத்ரு' என்ற இதே புனைபெயரில் இந்தக் கதை ஊழியன் (21.9.1934) இதழில் அதாவது 'கதைகள்' கட்டுரை வெளிவருவதற்கு முன்பே- வெளிவந்துள்ளது; எனவே, இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

32. சாயங்கால மயக்கம்

முதல் வெளியீடு : மணிக்கொடி, 23. 9. 1934
புனைபெயர் : புதுமைப்பித்தன
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
பாடவேறுபாடு:
(1) ப. 181, 9ஆம் பத்திக்கு பிறகு,

"அப்பொழுது எங்கெங்கோ வாரியிறைத்த பிரம்மதேவனின் கனவுகள் போல் வாழ்க்கைத் தியாகத்தின் கானல்கள்போல் நட்சத்திரங்கள்" என்ற வரி நீக்கம் பெற்றுள்ளது.

(2) ப. 183. கடைசி வரி: "இன்னும் என்ன வேண்டுமானாலும் கூறிக் கொள்ளுங்கள்," என்ற வரி நீக்கம் பெற்றுள்ளது.

33. தேக்கங்கன்றுகள்

முதல் வெளியீடு : ஊழியன், 28.9.1934 (மூலபாடம்)
புனைபெயர்: சொ.வி.
நூல்: புதிய ஒளி

34. இரண்டு உலகங்கள்

முதல் வெளியீடு : ஊழியன், 12.10.1934 (மூலபாடம்) புனைபெயர்: சொ.வி.
நூல்: புதிய ஒளி

35. புதிய கந்த புராணம்

முதல் வெளியீடு : மணிக்கொடி, 28.10.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல்: ஆண்மை (மூலபாடம்)

35. குப்பனின் கனவு

முதல் வெளியீடு மணிக்கொடி, 4.11.1934 (மூலபாடம்)
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதிய ஒளி

37. பாட்டியின் தீபாவளி

முதல் வெளியீடு - ஊழியன், 9.11.1934 (மூலபாடம்) புனைபெயர்: சொ.வி,
நூல் : புதிய ஒளி

38. ஆண்மை

முதல் வெளியீடு : மணிக்கொடி, 18.11.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல்: புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்); ஆண்மை
பாடவேறுபாடு:

(1) மணிக்கொடியிலும் புதுமைப்பித்தன் கதைகளிலும் 'ஆண் சிங்கம்' என்ற பெயரில் வெளிவந்தது. வேறு பல சிறுசிறு சொல், தொடர் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

(2) ப. 216 : "ஆனால் சீமா, பரமேச்வரய்யரிடமும் உலகத்தினர் முன்பும் ஆண்மையுடன் நடந்துகொண்டான்" என்று ஒரு வரி இறுதியில் அண்மை நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.

39. கடவுளின் பிரதிநிதி

முதல் வெளியீடு : மணிக்கொடி, 25.11.1934 (மூலபாடம்)
புனைபெயர் புதுமைப்பித்தன்
நூல் : புதிய ஒளி

40. கோபாலய்யங்காரின் மனைவி

முதல் வெளியீடு : மணிக்கொடி, 9.12.1934 (மூலபாடம்)
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதிய ஒளி

41. சணப்பன் கோழி

முதல் வெளியீடு: மணிக்கொடி, 16.12.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல்: ஆறு கதைகள் (மூலபாடம்)
பாடவேறுபாடு :

(1) ப. 227, 1ஆம் பத்தியின் கடைசி வரி, "தண்ணீர் தெளித்துவிடப்பட்ட பையன். விதி என்ற சமாதானம்." நீக்கம் பெற்றுள்ளது.

(2) ப. 229,1ஆம் பத்தியின் கடைசி இரு வாக்கியங்களுக்கு முன் "இவ்வளவிற்கும் காரணம் இயற்கையின் தேவை. அதனால் ஏற்பட்ட ஏமாற்றம்" என்ற வாக்கியங்கள் நீக்கம் பெற்றுள்ளன.

42. மாயவலை

முதல் வெளியீடு : ஊழியன், 28.12.1934 (மூலபாடம்) புனைபெயர்: சொ.வி.
நூல் : புதிய ஒளி

'அன்', 'அர்' விகுதி மயக்கம் மூலபாடத்தில் உள்ளவாதே பதிப்பிக்கப்பட்டுள்ளது.

43. பால்வண்ணம் பிள்ளை

முதல் வெளியீடு : மணிக்கொடி, 30.12.1934 (மூலபாடம்)
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல் : புதிய ஒளி

44. குற்றவாளி யார்

முதல் வெளியீடு : ஊழியன், 4.1.1935 (மூலபாடம்) புனைபெயர் : நந்தன்
நூல்: அன்னை இட்ட தீ (காலச்சுவடு பதிப்பகம், 1998)

45. வழி

முதல் வெளியீடு : மணிக்கொடி, 6.1.1935
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல்: ஆறு கதைகள் (மூலபாடம்); ஆண்மை
பாடவேறுபாடு :

(1) 'அலமு', 'அலமி' எனப் பெயர் மயக்கம் உள்ளது.
(2) ப. 250; கடைசி வரியில், "இவ்வளவுக்கும் காரணம் இயற்கையின் தேவை" என்பதற்குப் பிறகு " 'தேவை'யென்று பெரிய எழுத்துக்களில்" என்ற வரி உள்ளது (மணிக்கொடி, ஆண்மை).
(3) ப. 251, கடைசிப் பத்தியில், "இரத்தம் வெளிவருவதே பரம ஆனந்தம்" என்பதற்குப் பிறகு "சொல்லமுடியாத, அன்றிருந்த மாதிரி ஆனந்தம்” என்ற வரி ஆண்மையில் நீக்கம் பெற்றுள்ளது.

(4) ப. 252, கடைசியாக ஒரு வரி "பிரம்மாவின் மூஞ்சியில் வாரியடிக்க
வேண்டும், நியாயமும் சமூக தர்மமும் இருக்கும்போது!" என்ற வரி மணிக்கொடியிலும் ஆண்மையிலும் உள்ளது.

46. வெளிப்பூச்சு

முதல் வெளியீடு : மணிக்கொடி, 13.1.1935
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல்: காஞ்சனை (மூலபாடம்)

47. கோபாலபுரம்

முதல் வெளியீடு : ஊழியன், 25.1.1935
புனைபெயர்: சொ.வி.
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
பாடவேறுபாடு :

(1) ப. 259, கடைசிப் பத்திக்கு முன் பத்தியின் இறுதியில் "ஒருவனைப் பேயாக அலைய வைக்கும் மிருகங்கள்" என்ற வரி நீக்கம் பெற்றுள்ளது.

48. 'பூசனிக்காய்' அம்பி

முதல் வெளியீடு : ஊழியன், 1.2.1935 (மூலபாடம்)
புனைபெயர் : நந்தன்
நூல் : புதிய ஒளி

49. சாமாவின் தவறு

முதல் வெளியீடு : மணிக்கொடி, 10.2.1935 (மூலபாடம்)
புனைபெயர்: புதுமைப்பித்தன்

நூல் : புதுமைப்பித்தன் படைப்புகள் / (ஐந்திணை பதிப்பகம், 1987) இக்கதையை முதலில் கண்டெடுத்துக் கொல்லிப்பாவையில் (ஏப்ரல் 1986) வெளியிட்டவர் எம். வேதசகாயகுமார். இவ்வடிவமே ஐந்திணைப் பதிப்பிலும் இடம் பெற்றுள்ளது. இதை மூலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்ததில், ஆறு பத்திகள் இடம்மாறிப் பொருளற்ற முறையில் அச்சாகியிருப்பது தெரிந்தது. இப்பதிப்பில் திருத்தமான பாடம் வழங்கப்பட்டுள்ளது.

50. கலியாணி

முதல் வெளியீடு : ஊழியன், 15.2.1935
புனைபெயர்: சொ.வி.
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)

பாடவேறுபாடு : 'ஊழிய'னில் சுந்தர கர்மா ஒருமையில் குறிப்பிடப் படுகிறார்.

51. ஒரு கொலை அனுபவம்

முதல் வெளியீடு : ஊழியன், 22.2.1935 (மூலபாடம்}
புனைபெயர்: சொ.வி.
நூல்: அன்னை இட்ட தீ (காலச்சுவடு பதிப்பகம், 1998)

52. துன்பக் கேணி

முதல் வெளியீடு மணிக்கொடி, 31.3.1935; 14.4.1935, 28.4.1935; முதல் மூன்று பிரிவுகள் 31 மார்ச் இதழிலும், அடுத்த நான்கு பிரிவுகள் 14 ஏப்ரல் இதழிலும், மீதமுள்ள பிரிவுகள் 28 ஏப்ரல் இதழிலும்

வந்துள்ளன.
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
பாடவேறுபாடு:

மணிக்கொடியில் இக்கதை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு பிரிவுகள் 'முன்னுரை' எனவும், அடுத்த இரண்டு பிரிவுகள் இரண்டாம் பகுதியாகவும், அடுத்த மூன்று பிரிவுகள் மூன்றாம் பகுதியாகவும், அடுத்த மூன்று பிரிவுகளில், பின்னிரண்டு பிரிவுகள் ஒரே பிரிவாகச் சேர்க்கப்பட்டு நான்காம் பகுதியாகவும், கடைசி ஐந்து பிரிவுகள் ஐந்தாம் பகுதியாகவும் வெளியாகியுள்ளன. முதல் மூன்று பகுதிகளின் தொடக்கத்திலிருந்த பாடல் வரிகள் நீக்கம் பெற்றுள்ளள.
முதல் பகுதி:

உழவையும் தொழிலையும் நிந்தனை செய்வோம்
உண்டுகளித் திருப்போர்க்கு வந்தனை செய்வோம்

—பாரதியல்ல: உண்மை

இரண்டாம் பகுதி :

ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஓடியக் காண்பது நங்கையர் உள்ளம்.

மூன்றாம் பகுதி :

புண்பூத்த மேனி, புகைமூண்ட உள்ளமடா. அவள்
மண்பூண்ட பாபம், நம் மதிமூத்த கோரமடா.

(1) ப. 286, 14ஆம் வரி : சுடலைமாடனுக்கு "உயர்திரு" என்ற அடைமொழி நீக்கம் பெற்றுள்ளது.
(2) ப. 289, 3ஆம் பத்தியின் கடைசியில், "மருதி ஒரு இளம் பெண்" என்ற வரி நீக்கம் பெற்றுள்ளது.
(3) ப. 290. 2ஆம் பத்தியின் இரண்டு வாக்கியங்களுக்கு இடையில் "கவலையின்மையும் கோடை மழைபோல் வந்து மறைந்தது" என்ற வாக்கியம் நீக்கம் பெற்றுள்ளது.
(4) ப. 291,3ஆம் பத்தி, 8ஆம் வரியில் "... கைமேல் காசு!" என்பதற்குப் பிறகு "அதாவது வாழ்க்கையை நடத்துவதற்கு கூலியில் ஒரு பகுதி" என்ற தொடர் நீக்கம் பெற்றுள்ளது.
(5) ப. 301, கடைசி வாக்கியம், "சுப்பனின் திருவிளையாடல்கள் எப்படியிருந்தாலும் அவை அடிக்கடி நடக்கும் - மருதியின் பேச்சை யாராவது எடுத்தால் அவர்கள் கதி அதோகதிதாள்" என்று அமைந்துள்ளது.
(6) ப.302. 1ஆம் பத்தி, 2ஆம் வாக்கியம், "வாட்டர் பாலத்திலேயே பதிநான்கு வருஷங்களைக் கழித்தாய் ஒருவரும் களங்கமற்றவராக- மானஸீகமாசுவாவது இருக்க முடியாது" என்று அமைத்துள்ளது.

(7) ப. 307, 6ஆம் பத்தியின் இறுதியில், “வாட்டர் பாவத்தில் அந்தச் சரக்கு மட்டிலும் மிகவும் உபயோகமற்றதாகக் கருதப்பட்டாலும். வெள்ளைசசியைப் பொறுத்தமட்டில், அவள் வேறு இடத்தைச் சேர்த்தவள் என்று அவனுக்குத் தெரியும்" என்ற வாக்கியம் நீக்கம் பெற்றுள்ளது.

53. டாக்டர் சம்பத்

முதல் வெளியீடு : மணிக்கொடி, 14.4.1935 (மூலபாடம்)

புனைபெயர்: சொ. விருத்தாசலம், பி.ஏ.
நூல் : புதிய ஒளி

54. ஞானக்குகை

முதல் வெளியீடு : மணிக்கொடி, 28.7.1935
புனைபெயர் புதுமைப்பித்தன்
நூல் புதுமைப்பித்தன் கதைகள் மூலபாடம்)
பாடவேறுபாடு:

(1) ப. 319, 2ஆம் பத்தி, 2ஆம், 3ஆம் வாக்கியங்கள் "சொத்தையும் செல்வாக்கையும் ஆளவந்த ஒற்றைக்கொரு பிள்ளை. காசி ராமேஸ்வரங்களின் பயன் என்பது அவன் தகப்பனார். தம் மனைவி கருவுற்றிருக்கும்பொழுது நினைத்தது" என அமைந்துள்ளன.

(2) ப. 320, 1ஆம் பத்தி, கடைசி வாக்கியம் "தலைக்கட்டு" என்பது "நாட்டாண்மை" என மாற்றம் பெற்றுள்ளது.

53. சிற்பியின் நரகம்

முதல் வெளியீடு மணிக்கொடி, 25.8.1935
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
பாடவேறுபாடு:

(1) தலைப்பு : 'சில்பியின் நரகம்'.
(2) கதையின் தொடக்கத்தில் "(இது ஒரு சரித்திரக் கதை அன்று, ஆராய்ச்சித் தவறுகளை புகுத்தி தடுமாற வேண்டாம்)" என்ற குறிப்பு நீக்கம் பெற்றுள்ளது.

(3) ப. 326: ஜூபிட்டர் பற்றிய அடிக்குறிப்பு சேர்க்கப்பெற்றுள்ளது.

56. வாழ்க்கை!

முதல் வெளியீடு : மணிக்கொடி, 10.11.1935
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
பாடவேறுபாடு;

(1) ப. 332, 1ஆம் பத்தி, இறுதி வரி, "சக்தி பூஜைக்காரனுக்கு சிவனும் சக்தியும் மாதிரி தோன்றியிருக்கும், வேட்டைக்காரனுக்கு மழை வராது என்று தோற்றுகிறது மாதிரி என அமைத்துள்ளது.

(2) ப. 333, கடைசி பத்தி, 7ஆம் வரி : "நானும் சுகம் அனுபவித்தாச்சு", என்பதற்குப் பின்பு "பெண்ணிடத்தில்," என்று ஒரு சொல் நீக்கம் பெற்றுள்ளது.

57. புதிய கூண்டு

முதல் வெளியீடு தினமணி பாரதி மவர், 1935.
புனைபெயர் : தெரியவில்லை
நூல்: காஞ்சனை (மூலபாடம்)

தினமணி மலரைப் பதிப்பாசிரியர் நேரிடையாகப் பார்க்கவில்லை. கலைமகளில் இம்மலர் பற்றி வெளியான மதிப்புரையிலிருந்து முதல் வெளியீட்டை அறிய முடிந்தது.
58. பிரம்ம ராக்ஷஸ்

முதல் வெளியீடு : மணிக்கொடி, 29.3.1936
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
பாடவேறுபாடு:

(1) தலைப்பு : 'பிர்ம ராக்ஷஸ்' (2) ப. 355, 4ஆம் பத்தி கடைசி வரிக்குப் பதிலாக, "இப்பொழுது அவனுக்கு உடல் முழுவதுமே கண். உடல் முழுவதுமே செவி. உடல் முழுவதுமே வாய்" என உள்ளது.

(3) ப. 356, 4ஆம் பத்தியில், 3ஆம் வாக்கியம், "சப்த கன்னிகைகள் நடமாடுவார்களாம். யக்ஷ கண்விகைகள் திரிவார்களாம்" என அமைந்துள்ளது.

59. விநாயக சதுர்த்தி

முதல் வெளியீடு: மணிக்கொடி, 30.9.1936
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
பாடவேறுபாடு :

(1) ப. 367,1ஆம் பத்தி, 2ஆம் வாக்கியத்திற்குப் பிறகு உள்ள பகுதி பின்வருமாறு அமைந்துள்ளது:

"அப்புறம் மாவிலைகளை அதில் தோரணமாகக் கோர்த்துக் கொண்டிருந்தேன். ஆமாம்! பட்டணத்திலே மாவிலைக்குக்கூட காசு கொடுத்துத்தான் வாங்கவேண்டும். பொருளாதார சாஸ்திரி சொவலுவான், கமாடிட்டிக்கு (commodiy பொருள்; பொருள் என்றால் அ·(ப்) பொருளாதார பதம்; நாசூக்கற்ற வார்த்தை நாலு வார்த்தை தெரித்திருக்கிறது என்றாவது காட்ட வேண்டாமா?) காஸ்ட் இல்லை; லேபர் காஸ்ட்தான் என்று விளக்குவார் - பச்சைத் தமிழில் மாவிலைக்கு விலையில்லை; மரத்தில் ஏறி பறிப்பதற்குத்தான் கூலி. உப்பு மாதிரி- உப்பிலே - நீங்க ஒத்தரும் வரப்படாது. நான்தான் செய்ய வேண்டிய வேலை என்கிறான் சாக்கார்க்காரன்; பழையகாலத்தில் செத்த மாட்டுத் தோலை உரிக்க உரிமை 'நமக்குத்தான் உண்டு' என்ற பறையன் மாதிரி; கோவிலில் பூஜை செய்ய எனக்குத்தான் குறிச்சிட்டு கடவுள் எழுதிக்கொடுத்திருக்கிறார் என்று கோவில் கதவைத் தாளிடும் பூசாரி மாதிரி. ஆமாம். ஓங்கூரிலே நீர் இருந்தால் மாவிவைக்குக்காகக் கொடுக்கவே மாட்டீர் என்பது வாஸ்தவம். உமக்கு நாலு கோட்டை விதைப் பாட்டுக்கு வழியிருந்தால் சங்கிவித் தேவனை “டேய் ரெண்டு மாங்கொளை (மாங்குழை - மாவிலைக் கொத்து) பறிச்சாடா" என்று அதட்டலாம். நிலம் இல்வை என்றால் இடுப்பில் துணியை வரிந்து கட்டிக்கொண்டு நீரோ அல்லது புத்திர பாக்கியமோ மரத்தில் ஏறி இந்த 'லேபர்' காஸ்டை மிச்சப்படுத்திவிடலாம். ஆனால் ஒன்று; நீர் ஏறுகிற மரத்துக்காரன் உம்மை மரத்தோடு கட்டிவைக்கப் பிரியப்படாமல் இருந்தால், ஆமாம். இந்த 'ரிஸ்க்' எவ்லாம் நினைத்துத்தான் பட்டணத்துவாசிகள் எல்லாப் பொருள்களையும் காசுகொடுத்தே வாங்க முயற்சிக்கிறார்கள். அதுதான் அழகு; அதுதான் நாகரிகம். பட்டணத்திலே ஆந்தைகள் மாதிரி, வீடுகள் என்று சொந்தக்காரர் கையடித்துக்கொடுக்கும் பொந்துகளில் வசிக்கும் என் போன்றவர்களுக்கும் கூட அதுதான் அழகு. நாங்கள் என்ன இந்த நாகரிகத்தில் சிறு சிறு துணுக்குகள் இல்லையா?

"நான் தோரணத்தைக் கட்டிக்கொண்டு இருந்தேன். அதாவது காசு கொடுத்து வாங்கின மாவிலைகளில் 'வேஸ்டேஜ்' (பொருள் உற்பத்தி, தொழில் ஆற்றுதல் இதில் எல்லாம் கொஞ்சம் விளளாகிப் போய்விடும் என்று பொருளாதார சாஸ்திரி சொல்லுகிறார். உம்ம வீட்டில் அரிசி மாவு தரையில் கொட்டிப்போய் விட்டதென்றால், அதை எல்லாம் திரட்டி பாத்திரத்தில் போடும்போது உமது விரல்களுக்கும் அகப்படாமல் சிறிது தங்கிவிடுகிறதல்லவா; அதுதான் இந்த 'வேஸ்டேஜ்') இல்லாமல் இருக்க எல்லாம் சேர்த்து வைத்துத் தொடுக்கிறேன். எனக்குப் பல் முளைத்தது மாதிரி 'ஒத்துக்குற்றா' தொங்குகிறது. நமது பொருளாதாரம், அதன் சாஸ்திரிகள் விதிகளுக்கும் அதீதமானது."
(2) ப. 368, 8ஆம் பத்தி, கடைசி வரி "...'அப்படி அப்படி', 'அப்படி 'அப்படி' என் மனசில் 'குத்துக்குத்தாக' முளைத்தன" என உள்ளது.
(3) ப. 369, 2ஆம் பத்தி : "கும்பினிக்காரன் வந்த புதுசு" என்று தொடங்கிய பிறகு கீழ்க்காணும் பத்தி நீக்கம் பெற்றுள்ளது:
"நம்ம ஜாதிகளுக்குள்ளே எல்லாந்தான் பாட்டன் பெயரை 'பெயரனுக்கு' இடும் வழக்கம்) ஒரு மருத வேளானும், ஒரு சுப்பு வேளானும் பெண் சந்ததி குறுக்கிடாவிட்டால் சரமாரியாக உருண்டு வந்து குடும்ப சரித்திரத்தை நிரப்புமே....."
(4) ப. 369, 2ஆம் பத்தி, கடைசிப் பகுதி பின்வருமாறு அமைத்துள்ளது! "குஷ்டந்தீர்த்த துறை என்ற பேர் வண்ணாரப்பேட்டை என்று ஆகி. கடைசியாக, கும்பினிக்காரனுக்கு அடிமைத் தொழில் ஆகுவாயாக 'தொழிலடிமைப் பெயராயிற்று' என்று இலக்கணம் சொல்லியது. "'பாதகமில்லை தம் மளசும் கொஞ்சம் இலக்கணம் ஏதோ படித்திருக்கிறது' என்று எனக்குள் ஒரு பெருமை"
(5) ப. 369, 7ஆம் பத்தி பின்வருமாறு அமைந்துள்ளது: "ஏடி, கமலா! கொஞ்சம் அந்த செல்வத்தை எடுத்துவை. எனக்கு கொஞ்சம் 'இடை வேளை' வேண்டும்" என்று கேட்டேன்.
(6) ப. 370, 3ஆம் பத்தி: கடைசி இரண்டு வாக்கியங்கள் சேர்க்கப் பெற்றுள்ளன.
(7) ப. 370, 4ஆம் பத்தி, 2ஆம் வரியில் "'ஒய்' என்ற வினியிடைச் சொல்.." என்பதிலிருந்து பத்தியின் பிற்பகுதி முழுவதும் சேர்க்கப் பெற்றுள்ளது.
(8) ப. 372, 'அடுக்களைத் தாலி' பற்றிய அடிக்குறிப்பு, "அந்தரங்கமாகச் சென்று அரைஞாண் கயிறுகொண்டு தாலிகட்டுவது; கந்தர்வ விவாகத்திற்கு சமமான பழக்கம்" என அமைந்துள்ளது.
(9) ப. 373, 5ஆம் பத்தி, 7ஆம் வரி: "அவன் வசந்த மண்டபத் தோப்புக்குள் குதித்து (அப்பொ முதலியார் குதிரை லாயம் இருந்தது} ஓடினான்" என உள்ளது.
(10) ப. 374, 2ஆம் வரி: "ஆக்கு...! என்பதற்கு அடுத்து " 'கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்குப் போனால் எத்தனை வேண்டுமானாலும் பார்க்கலாமே' என்றது என் மனசு" என்ற வரி நீக்கம் பெற்றுள்ளது.

(11) ப. 374, கதையின் கடைசி வரி, "சொந்த வீடாக இருந்தாலும்!" என்பது நீக்கம் பெற்றுள்ளது.
60. ஒரு நாள் கழிந்தது

முதல் வெளியீடு : மணிக்கொடி, 15.1.1937
புனைபெயர்: புதுமைப்பித்தன்
தூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
பாடவேறுபாடு:

(1) ப. 375, 2.ஆம் பத்தி : 2ஆம் வாக்கியத்தில், “கிழிந்து" என்ற சொல்லுக்குப் பதில் "காலைப் பரப்பிய மாதிரி" என உள்ளது.
(2) ப. 375, 5ஆம் பத்தி, "ஸ்நான அறை" என்பது "குளிப்பறை" என உள்ளது.
(3) ப.378, 2ஆம் பத்தி: "வீட்டு எதிரில் நிற்கும் மின்சார விளக்கு, அதன் துணையாக, எட்ட எட்ட நிற்கும் அதன் உடன்பிறந்தோர் இவை எல்லாவற்றின் உதவியைக் கொண்டும் பிள்ளையவர்களால் அலமுவைக் கண்டுபிடிக்க இயலவில்லை" என உள்ளது.
(4) ப. 378, கடைசி பத்தி, 6ஆம் வரியில் : ".. அதனால்தான் முதுகில் எழுதிக்கொள்ளவில்லை" என்பதற்கு அடுத்து "எப்பொழுதாவது ஒரு காலத்தில் அதை எழுதிக்கொள்ளலாம் என்று, அதை ஒருதூர இலட்சியமாகவே வைத்துக்கொண்டார்" என்பது நீக்கம் பெற்றுள்ளது.
(5) ப. 381, கீழிருந்து 3ஆம் பத்தி : "சைத்தான் நினைக்கு முன்னால்.." என்பதற்குப் பதிலாக "திங்க் ஆப் தி டெவில் இத்யாதிதான்!" என்று உள்ளது.

(6) ப. 382, 7ஆம் பத்தி : "பொருட்காட்சி" என்பதற்குப் பதில் "எக்ஸிபிஷன்" என்று உள்ளது.

61. வேதாளம் சொன்ன கதை

முதல் வெளியீடு: மணிக்கொடி, 15.2.1937
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல்: புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)

62. மனித யந்திரம்

முதல் வெளியீடு மணிக்கொடி, 25. 4. 1937
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல்: புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
பாடவேறுபாடு:

(1) ப. 393, 1ஆம் பத்தி : "... மறுபடியும் ஒற்றைத் தெரு என்ற முனிஸிப்பல் 'கண்'கூட அற்ற சந்தில் நுழைவதைக் காணலாம்." என அமைந்துள்ளது.
(2) ப. 393,4ஆம் பத்தி : "குழத்தை மீனாட்சிகள்" என்பது "மாஸ்டர் மீனாட்சிகள்" என உள்ளது.
(3) ப. 395,3ஆம் பத்தி, கடைசி வரி : "அதற்குக் காரணம் முனிஸிபாலீட்டியல்ல; அதன் நிர்வாகப் பிரதிநிதிகள்" என்பது நீக்கம் பெற்றுள்ளது.
(4) ப. 398, 2ஆம் தேதி, "பத்தேகாவணா" என்பதற்குப் பதில் "ஐந்தேகாலணா" என உள்ளது.
(5) ப. 399, 11ஆம் பத்தி "பதினொன்றேகாலணா" என்பதற்குப் பதில் "ஆறேகாலணா" என உள்ளது.
(6) ப.4 00, 2ஆம் பத்தி : "சரி" என்பது "சதி" என உள்ளது; அதற்கு அடிக்குறிப்பான "சதி = சரி' என்பது நீக்கம் பெற்றுள்ளது.

63. காலனும் கிழவியும்

முதல் வெளியீடு: மணிக்கொடி, 15.9.1937
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)

64. நாசகாரக் கும்பல்

முதல் வெளியீடு மணிக்கொடி, 1.11.1937
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : நாசகாரக் கும்பல் (மூலபாடம்)
பாடவேறுபாடு:

(1) தலைப்பில் வல்லெழுத்து மிகவில்லை.
(2) மணிக்கொடியில் மருதப்பன் பெரும்பாலும் 'அன்' விகுதியோடு குறிக்கப்பட்டுல்ளார்.
(3) ப.408, 7ஆம் பத்தியில் "தாழ்ந்த" என்பது "தாழ்த்தப்பட்ட" என மாற்றம் பெற்றுள்ளது.
(4) ப. 409, 3ஆம் பத்தி கடைசி: "அவரது மனைவியான இசக்கியம்மாள் காலமாகி வெகுகாலமாகி விட்டது” என்பது நீக்கம் பெற்றுள்ளது.
(5) ப. 426, முதல் பத்தியில் : "மேடோர்' பண்ணியிருந்தான்" என்பது "அடமானம்" என மாற்றம் பெற்றுள்ளது.
(6) ப. 426. கடைசி வரி: "கோர்ட்டில் நடத்திப் பார்ப்போமே" என அமைந்துள்ளது.

புதுமைப்பித்தன் நாசகாரக் கும்பல் நாவின் பிரதியில் தம் கைப்படச் செய்த திருத்தங்கள் மூலபாடத்தில் நுழைக்கப்பட்டுள்ளன.

65. நினைவுப் பாதை

முதல் வெளியீடு தினமணி வருஷ மலர், 1937
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல்: புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)

66. ?

முதல் வெளியீடு : தினமணி வருஷ மலர், 1938
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல்: புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)

67. மனக்குகை ஓவியங்கள்

முதல் வெளியீடு : கலைமகள், மே 1938
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
பாடவேறுபாடு:

(1) ப. 435, 7ஆம் பத்தி : பசலைக் குழந்தையின் "உறுதி' என்பது "பக்தி" என உள்ளது.

(2) ப. 437, 10ஆம் பத்தியின் கடைசியில், "வெறியின் பார்வை" என்பது "வெறியனின் பார்வை" என உள்ளது.

68. நியாயந்தான்

முதல் வெளியீடு : ஜோதி, மே 1938
புனைபெயர்: புதுமைப்பித்தன்

நூல் : காஞ்சனை (மூலபாடம்)
பாடவேறுபாடு:
(1) கடைசி வரி சேர்க்கப்பெற்றுள்ளது.

69. உபதேசம்

முதல் வெளியீடு : ஜோதி, ஜூள் 1938 (மூலபாடம்)
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல் : அவளும் அவனும்

70. புரட்சி மனப்பான்மை

முதல் வெளியீடு : ஜோதி, ஜூலை 1938; முல்லை, இதழ் 7 (1946) :(மூலபாடம்)
புனைபெவர் : புதுமைப்பித்தன்
நூல் : விபரீத ஆசை

71. அபிநவ-ஸ்நாப்

முதல் வெளியீடு : ஜோதி, அக்டோபர் 1938 (மூலபாடம்)
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல் : சித்தி

12. விபரீத ஆசை

முதல் வெளியீடு : ஜோதி, ஏப்ரல் 1939; முல்லை இதழ் 9 (1946)
(மூலபாடம்)
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : விபரீத ஆசை
பாடவேறுபாடு :

(1) ப. 453, 2ஆம் பத்தியின் தொடக்கத்தில் : "இப்படி ஒன்றும் நிறமாக நடக்கவில்லை" என்பது நீக்கம் பெற்றுள்ளது.

73. சாமியாரும் குழந்தையும் சீடையும்

முதல் வெளியீடு : சூறாவளி, 23.4.1939
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல் : புதிய ஒளி (மூலபாடம்)

திரு. பொள்ளாச்சி நசன் அவர்களிடம் உள்ள சூறாவளி தொகுப்பை 1997இல் பார்த்து மேற்படிச் செய்திகளைக் குறித்துக்கொண்டேன். இப்பதிப்புக்கென அவ்விதழைப் பார்வையிட அணுகியபோது, திரு. நசன் அனுமதி மறுத்ததால், புதிய ஒளியில் உள்ள பாடம் கொள்ளப் பட்டுள்ளது.

74. செவ்வாய் தோஷம்

முதல் வெளியீடு : சூறாவளி, 9.7. 1939; கதைக் கோவை 3 (அல்லயன்ஸ்
வெளியீடு 1943)
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல் : ஆறு கதைகள் (மூலபாடம்)

இந்தக் கதை பற்றிய வெளியீட்டு விவரங்களைத் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களிடம் உள்ள சூறாவளி தொகுப்பை 1997இல் பார்த்துக் குறிப்பெடுத்தேன். இப்பதிப்புக்கென அவ்விதழைப் பார்வையிட அணுகியபோது, அவர் அனுமதி மறுத்துவிட்டார்.

கதைக்கோவையில் வெளியான வடிவம் பிழை மலிந்ததாகவும், ஒரு உரையாடல் பகுதி இடம் மாறியும், பெயர்கள் குழம்பியும் உள்ளதால் ஆறு கதைகள் மூலபாடமாகக் கொள்ளப்பட்டது.

75. கொன்ற சிரிப்பு

முதல் வெளியீடு: தெரியவில்லை
புனைபெயர் : தெரியவில்லை
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)

புதுமைப்பித்தன் கதைகள் நூலில் இடம்பெற்றதால் 1940 பிப்ரவரிக்கு முன்பு வெளியானதென்று கொள்ளப்பட்டது.

76. பொய்க்குதிரை

முதல் வெளியீடு: தெரியவில்லை
புனைபெயர்: தெரியவில்லை
நூல்: ஆறு கதைகள் (மூலபாடம்)

ஆறு கதைகள் நூலில் இடம்பெற்றுள்ளதால் 1941க்கு முன்பு வெளியானதென்று கொள்ளப்பட்டது.

77. கருச்சிதைவு

முதல் வெளியீடு : தெரியவில்லை
புனைபெயர்: தெரியவில்லை
நூல்: ஆறு கதைகள் (மூலபாடம்)

ஆறு கதைகள் நூலில் இடம்பெற்றுள்ளதால், 1941க்கு முன்பு வெளியானதென்று கொள்ளப்பட்டது.

78. சொன்ன சொல்

முதல் வெளியீடு : தெரியவில்லை
புனைபெயர் : தெரியவில்லை
நூல் : புதிய ஒளி (மூலபாடம்)

புதிய ஒளி நூலில் உள்ள தகவலின்படி இது 1941இல் வெளியானதென்று கொள்ளப்பட்டது.

79. மகாமசானம்

முதல் வெளியீடு : கலைமகள், டிசம்பர் 1941
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல்: காஞ்சனை (மூலபாடம்)
பாடவேறுபாடு:

(1) ப. 494, 3ஆம் பத்திக்குப் பிறகு "அவசரமயம் ஜகத்' என்ற தனி வரி நீக்கம் பெற்றுள்ளது.

(2) ப. 497, 2ஆம் பத்தி: "தன்னுடைய கையில் உள்ள கற்பனை டம்ளரைப் பிடித்தபடி" என்ற தொடர் "'மெதுவா, மெதுவா' என்றது" என்பதற்கு முன்பு நீக்கம் பெற்றுள்ளது.

80. காஞ்சனை

முதல் வெளியீடு : கலைமகள், ஜனவரி 1943

புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல் : காஞ்சனை (மூலபாடம்)

81. செல்லம்மாள்

முதல் வெளியீடு : கலைமகள், மார்ச் 1943
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல்: காஞ்சனை (மூலபாடம்)

82. சாப விமோசனம்

முதல் வெளியீடு: கலைமகள், மே 1943
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல் : காஞ்சனை (மூலபாடம்)
பாடவேறுபாடு:

(1) ப. 537, கடைசிப் பத்தி : "பதினெட்டு மணி நேரம்" என்பது நாற்பது நாழிகை" என மாற்றம் பெற்றுள்ளது.

83. கட்டிலை விட்டிறங்காக் கதை

முதல் வெனியீடு: கலைமகள், ஜூலை 1943
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : காஞ்சனை (மூலபாடம்)

84. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்

முதல் வெளியீடு : கலைமகள், அக்டோபர்; நவம்பர் 1943; முதல் :பிரிவு அக்டோபர் இதழிலும், அடுத்த இரு பிரிவுகள் நவம்பர் :இதழிலுமாக இரு பகுதிகனாக வெளிவந்துள்ளது.
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல்: காஞ்சனை (மூலபாடம்)
பாடவேறுபாடு:

(1) ப. 554,9ஆம் பத்தி: இண்டனா" என்பது "மூன்றணா"வாக மாற்றம் பெற்றுள்ளது.
(2) ப. 554, 11ஆம் பத்தி : தொண்ணூற்று ஒன்பது ரூபாய், "பதினாலணா" என்பது "பதின்மூன்று" என மாற்றம் பெற்றுள்ளது.
(3) ப. 555, 2ஆம் பத்தி :...பாப்பான் குடுமியைப் பிடித்து மாற்றிக்

கொண்டு வந்திருப்பேனே!" என்பதில் "பாப்பான்" என்ற சொல் சேர்க்கப்பெற்றுள்ளது.

85. சுப்பையா பிள்ளையின் காதல்கள்

முதல் வெளியீடு: தெரியவில்லை
புனைபெயர்: தெரியவில்லை
நூல் : காஞ்சனை (மூலபாடம்)

காஞ்சனையில் வெளிவந்ததால் 1943க்கு முன்பு வெளியானதென்று கொள்ளப்பட்டது.

86. சித்தி

முதல் வெளியீடு : கலைமகள், ஜனவரி 1944 (மூலபாடம்)
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல்: கபாடபுரம்

87. சிவசிதம்பர சேவுகம்

முதல் வெளியீடு: தமிழ்மணி பொங்கல் மலர் 1944 (மூலபாடம்)
புனைபெயர்: சொ. வி.
நூல்: விபரீத ஆசை

88. நிர்விகற்ப சமாதி

முதல் வெளியீடு நவசக்தி ஆண்டு மலர், டிசம்பர் 1944-ஜனவரி :1945 (மூலபாடம்)
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல் : அன்னை இட்ட தீ (காலச்சுவடு பதிப்பகம், 1998)

89. நிசமும் நினைப்பும்

முதல் வெளியீடு : கலைமகள், ஏப்ரில் 1945 (மூலபாடம்)
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல்: விபரீத ஆசை

90. எப்போதும் முடிவிலே இன்பம்

முதல் வெளியீடு : கலைமகன். ஜூன் 1945 (மூலபாடம்)
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல் : விபரீத ஆசை

91. கபாடபுரம்

முதல் வெளியீடு : சந்திரோதயம், 30.6. 1945; 10.7, 1945; 20.7.1945

(மூலபாடம்) மூன்று பிரிவுகளும் ஒவ்வொன்றாக மூன்று இதழ்களில் வெளிவந்துள்ளன.

புனைபெயர்: புதுமைப்பித்தன்

நூல்: கபாடபுரம்

92. அன்று இரவு

முதல் வெளியீடு : கலைமகள், ஜனவரி; பிப்ரவரி 1946 (மூலபாடம்);
முதல் பிரிவு ஜனவரி இதழிலும், அடுத்த மூன்று பிரிவுகள் பிப்ரவரி இதழிலுமாக இரு பகுதிகளாக வெளிவந்துள்ளது.
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல்: விபரீத ஆசை

93. படபடப்பு

முதல் வெளியீடு : கவிக்குயில், முதல் மலர் (1948)
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : விபரீத ஆசை

மூலபாடம்: புதுமைப்பித்தனின் கையெழுத்துப் படி. அதில் தலைப்பைப் 'பரபரப்பு' என எழுதிப் பிள 'படபடப்பு' என்று திருத்தியுள்ளார். வெளியீட்டு விவரங்களையும், கையெழுத்துப்படியின் ஒளிநகலையும் வழங்கியவர் தொ. மு. சி. ரகுநாதன். கவிக்குயில் முதல் மலர், பதிப்பாசிரியர் பார்வைக்குக் கிடைக்கவில்லை.

94. அவதாரம்

முதல் வெளியீடு : முல்லை, தை மலர் (1947) (மூலபாடம்)

புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதிய ஒளி

95. கயிற்றரவு

முதல் வெளியீடு : காதம்பரி, ஏப்ரல் 1948
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல்: கபாடபுரம் (மூலபாடம்)

திரு. பொள்ளாச்சி நசன் அவர்களிடம் உள்ள காதம்பரி தொகுப்பை 1997இல் பார்த்து மேற்படிச் செய்திகளைக் குறித்துக்கொண்டேன். இப்பதிப்புக்கென அதைப் பார்வையிட அணுகியபோது, திரு. நசன் அனுமதி மறுத்ததால் கபாடபுரம் நூலில் உள்ள பாடம் கொள்ளப்பட்டது.

96. 'இந்தப் பாவி'

முதல் வெளியீடு: தெரியவில்லை
புனைபெயர்: தெரியவில்லை
நூல்: சித்தி, ஸ்டார் பிரசுரம், 1955 (மூலபாடம்)

97. இலக்கிய மம்ம நாயனார் புராணம்

முதல் வெளியீடு: தெரியவில்லை
புனைபெயர்: தெரியவில்லை
நூல் : சித்தி, ஸ்டார் பிரசுரம், 1955 (மூலபாடம்)

98. சிற்றன்னை

முதல் வெளியீடு : காதம்பரி, ஏப்ரல்-மே 1949
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல்: சிற்றன்னை (மூலபாடம்)

99. அன்னை இட்ட தீ

மூலபாடம்: புதுமைப்பித்தனின் கையெழுத்துப் படி
நூல் : அன்னை இட்ட தீ
இதன் கையெழுத்துப் படியை ஒளிநகலெடுக்கக் கொடுத்த தொ.மு.சி. ரகுநாதன் வழங்கிய குறிப்பு (அன்னை இட்ட தீ, காலச்சுவடு பதிப்பகம், 1998, ப. 25-26):
1944-ஆம் ஆண்டில் புதுமைப்பித்தன் 'தினசரி'யிலிருந்து விலகி சினிமாத் துறையில் ஈடுபடுவதற்கு முன் எனக்கு அவரோடு நெருங்கிய நட்பு ஏற்பட்ட காலத்தில் நாவல்கள் எழுதத் தமக்கிருந்த வேட்கையையும் எண்ணங்களையும் பலமுறை என்னிடம் வெளியிட்டிருக்கிறார். அப்போது பட்டினத்தாரைப் பற்றித் தத்துவ விசாரம் மிக்க ஒரு நாவலை எழுத விரும்புவதாக ஒரு முறை தெரிவித்தார். பட்டினத்தார் துறவு மனப்பான்மையை மேற்கொண்ட போதிலும், மனைவி, மகன், தாய் ஆகியோர்மீது கொண்ட பாசத்தின் கயிறுகள் அவருக்கு லகுவில் அறுபடவில்லை. முதலில் மகன் மறைகிறான்; பின்னர் மனைவியை விட்டுப் பிரிகிறார். என்றாலும் இந்தப் பாசக் கயிறுகள் அறுபடாமையினால்தான் அவர் மனைவி மக்களைப் பழித்தும் இழித்தும் கசப்போடு பாடி அவற்றை அறுக்க முயல்கிறார். என்றாலும் அவர் தாயின் மீது கொண்ட பாசம் மட்டும் அறுபடவே இல்லை. அது அவளைச் சிதையில் ஏற்றிய காலத்தில் புலம்பித் தீர்த்துப் பாடிய பாடல்களுக்குப் பிறகே அறுபடுகிறது. இந்தப் பாசக் கயிறுகள் அறுந்து அவரது மளம் விடுதலை பெற்ற பிறகுதான், அவருக்குக் கசப்பு ருசி கொண்ட பேய்க் கரும்பும் இனிக்கிறது. வாழ்க்கையின் இனிமையைப் புரிந்துகொண்ட பட்டினத்தார் அதற்கு மேல் உயிர் வாழ விரும்பாமல் சமாதியாகி விடுகிறார். இதுதான் பட்டினத்தாரைப் பற்றி அவர் எழுத விரும்பிய நாவலின் கரு.

இதேபோல், பட்டினத்தார் இறந்துபோன தன் தாயின் சிதைக்குத் தீ மூட்டிய காலத்தில் பாடியதாகக் கூறப்படும்

முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென்னிலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூன்சு மூள்கவே

என்ற பாடலில் காணப்படும் 'அன்னை இட்ட தீ' என்ற சொற்றொடரைத் தலைப்பாகக் கொண்டு, தாம் ஒரு நாவல் எழுதத் திட்டமிட்டிருந்ததையும் அவர் என்னிடம் கூறினார். ஆனால் இது பட்டினத்தாரைப் பற்றிய நாவல் அல்ல. மாறாக, தேசிய இயக்கத்தைப் பின்னணியாகக் கொண்ட, தேசிய மணமும் சிந்தனையாழமும், அற்புதமான கதாபாத்திரங்களும் நிறைந்த சிறந்ததொரு நாவலாக அதனை எழுத வேண்டும் என்பதே அவரது திட்டம் இந்தியத் தேசிய இயக்கம் வெகுஜன இயக்கமாக மாறத் தொடங்கிய காலத்திலிருந்து, இரண்டாவது உலக யுத்தமும் 1942 ஆகஸ்டு விடுதலைப் போராட்டமும் நிகழ்ந்த காலம் வரையிலும், அதாவது ஒரு தலைமுறைக் காலம் முழுவதையும் தமது நாவலுக்குரிய கால வரம்பாக அவர் கணித்திருந்தார். இந்தக் கால கட்டத்தில் தென்பாண்டி மக்களைப் பாத்திரங்களாகக் கொண்டு, அவர் தம் நாவலை எழுதத் திட்டமிட்டுச் செயலிலும் இறங்கிவிட்டார். அவர் அந்த நாவலின் முதல் இரண்டு அத்தியாயங்களை எழுதி முடிப்பதற்குள்ளாகவே, பல்வேறு வாழ்க்கைத் தொல்லைகள் அவரது கையையும் கருத்தையும் வேறுவகையில் செயலாற்றச் செய்துவிட்டன. இதன்பின் அவர் 1948இல் காலமாகும் வரையிலும், அந்த நாவல் எழுதி முடிக்கப் பெறாத தொட்ட குறைப் பிறவியாகவே நின்றுவிட்டது.

இந்த நாவலைப் புதுமைப்பித்தன் டெம்மி 1x8 புத்தக அளவில், ஒவ்வொன்றும் 32 பக்கங்களைக் கொண்ட 5 சிறு நோட்டுப் புத்தகங்களில் எழுதியிருந்தார். கையெழுத்துப் பிரதியில் அவர் நாவலின் தலைப்பு என்னவென்றும் எழுதவில்லை. எழுதிமுடித்த நோட்டுப் புத்தகங்களின் வரிசை எண்ணிக்கையையும் குறிப்பிட்டிருக்கவில்லை.