பெருங்கதை/2 7 நகர்வலம் கண்டது
- பாடல் மூலம்
2 7 நகர்வலங்கொண்டது
உதயணன் செயல்
[தொகு]பரவுக்ககடன் கழிந்து விரவுப்பகை தணிந்த
தாமந் துயல்வருங் காமர் கைவினைக்
கோயின் முற்றத்து வாயில் போந்து
குன்றுகண் கூடிய குழாஅ மேய்ப்ப
ஒன்றுகண் டன்ன வோங்குநிலை வனப்பின் 5
மாட மோங்கிய மகிழ்மலி மூதூர்
யாறுகண் டன்ன வகன்கனை வீதியுட்
காற்றுறழ் செலவிற் கோற்றொழி லிளையர்
மங்கல மரபின ரல்லது மற்றையர்
கொங்கலர் நறுந்தார்க் குமரன் முன்னர் 10
நில்லன்மி னீரென நீக்குவனர் கடிய
மகளிர் செயல்
[தொகு]மல்ல லாவணத் திருபுடை மருங்கினும்
நண்ணா மாந்த ராயினுங் கண்ணுறின்
இமைத்த லுறாஅ வமைப்பின் மேலும்
புதுமணக் கோலத்துப் பொலிவொடு புணர்ந்த 15
கதிர்முடி மன்னனைக் காண்பது விரும்பி
மணியறைந் தன்ன மாவீ ழோதி
அணிபெறக் கிடந்த வம்பொற் சூட்டினர்
சூடுறு பொன்வினைச் சுவனர் புனைந்த
தோடுங் கடிப்புந் துளங்கு காதினர் 20
வெம்மை பொதிந்த பொம்மெ னிளமுலை
இடைப்படீஇப் பிறழு மேக வல்லி
அணிக்கலை புனைந்த வரசிலைப் பொன்னடர்
புன்றஃசுழி புரையும் பொலிவிற் றாகி
வனப்பமை யவ்வயிற் றணித்தகக் கிடந்த 25
உந்தி யுள்ளுற வந்துட நடுங்கி
அளைக்கிவ ரரவின் றளர்ச்சி யேய்ப்ப
முளைத்தெழு முலைக்கச் ச்சைத்தலி னசைந்த
மருங்கு னோவ விரும்புபு விரைந்து
மைவரை மீமிசை மகளிர் போலச் 30
செய்வளை மகளிர் செய்குன் றேறினர்
உணர்ந்தோர் கொண்ட வுறுநன் றேய்ப்ப
வணர்ந்தேந்துவளர்பிறை வண்ணங் கடுப்பத்
திருநுதற் கேற்ற பரிசரக் கைவினை
நீடிய பின்றைக் கூடாது தாங்கும் 35
கொற்றவற் காச்மென வெற்றவேற் றடக்கையர்
கோல வித்தகங் குயின்ற நுட்பத்துத்
தோடுங் கடிப்புந் துயல்வருங் காதினர்
வாலிழை மகளிர் வழிவழி விலக்கவும்
ஒனபது விருத்தி நனபத நுனித்த 40
ஓவவினை யாளர் பாவனை நிறீஇ
வட்டிகை வாக்கின் வண்ணக் கைவினைக்
கட்டளைப் பாவை கடுப்பத் தோன்றிக்
குறைவினைக் கோலங் கூடினர்க் கணங்காய்
நின்றமனை வரைப்பிற் சிறையெனச் செய்த 45
சுவர்சார் வாகத் துன்னுபு நிரைத்த
நகர்கா ணேணி விரைவன ரேறினர்
ஒருபுடை யல்ல துட்குவரு செங்கோல்
இருபுடைப் பெயரா வேயர் பெருமகன்
சிதைபொருள் வலியாச் செறிவுடைச் செய்தொழில் 50
உதையண குமரன் வதுவைக் கணிந்த
கோலங் கொண்ட கோல்வளை மகளிருள்
ஞாலந் திரியா நன்னிறைத் திண்கோள்
உத்தம மகளிரொழிய மற்றைக்
கன்னிய ரெல்லாங் காமன் றுரந்த 55
கணையுளங் கழியக் கவினழி வெய்தி
இறைவளை நில்லார் நிறைவரை நெகிழ
நாண்மீ தூர்ந்து நன்னெஞ்சு நடப்பத்
தோண்மீ தூர்ந்து தொலைவிட நோக்கி
அற்றம் பார்க்குஞ் செற்றச் செய்தொழிற் 60
பற்றா மாந்தரிற் பசலை பாய்ந்த
மருங்கண் புலம்ப வருந்தின ரதனாற்
காட்சி விரும்பன்மின் மாட்சி யின்றென
ஈனாத் தாய ரானாது விலக்கும்
ஆணை மறுத்தியா மாண முடைமையின் 65
இந்நகர் காண்கவெம் மன்னை மாரெனக்
கண்ணின் வேட்கை பின்னின்று துரப்ப
வாயின் மாடத்து மருங்கணி பெற்ற
வரிச்சா லேகம் விரித்தன ரகற்றித்
ததும்புங் கிண்கிணித் தகைமலர்ச் சேவடிப் 70
பெதும்பை மகளிர் விதும்பி நோக்கினர்
நேரியர் சாய னிகர்தமக் கில்லாக்
காரிகை கடுநுனைத் தூண்டி லாக
உட்கு நாணு மூரா ணொழுக்கும்
கட்கின் கோலமுங் கட்டிரை யாக 75
இருங்கண் ஞாலத் திளையோ ரீட்டிய
அருங்கல வெறுக்கை யவைமீ னாக
வாங்குபு கொள்ளும் வழக்கியல் வழாஅப்
பூங்குழை மகளிர் புனைமணிப் பைம்பூண்
ஒளிபெற் றிலங்கு முதயண குமரன் 80
அளிபெற் றமர்ந்த வம்பூஞ் சேக்கையுள்
உவக்கும் வாயறிந் தூடி மற்றவன்
நயக்கும் வாயு ணகைச்சுவைப் புலவியுள்
நோக்கமை கடவுட் கூப்பினுங் கதுமெனப்
பூம்போ தன்ன தேங்குவளைத் தடக்கை 85
வள்ளுகிர் வருட்டி னுள்குளிர்ப் புறீஇப்
பஞ்சி யணிந்த வஞ்செஞ் சீறடிப்
பொன்னணி கிண்கிணிப் போழ்வாய் நிறையச்
சென்னித் தாமத்துப் பன்மலர்த் தாதுக
இரந்துபின் னெய்து மின்சுவை யமிர்தம் 90
புணரக் கூடிற் போகமு மினிதென
மீட்டல் செல்லா வேட்ட விருப்பொடு
கோடுகொண் மயிலின் குழாஅ மேய்ப்ப
மாடந் தோறு மலிந்திறை கொண்டனர்
சுவல்பொதி கூழையர் சுடர்பொற் றோட்டினர் 95
பெயலிடைப் பிறழு மின்னேர் சாயலர்
பாப்பெயிற் றன்ன பன்னிரைத் தாலி
கோப்புமுறை கொண்ட கோலக் கழுத்தினர்
மணிநில மருங்கின் முனிவில ராடும்
பந்துங் கழங்கும் பட்டுழிக் கிடப்ப 100
அந்தண் மஞ்ஞை யாடிட மேய்ப்பக்
கோதையுங் குழலுந் துள்ளுபு விரியப்
பேதை மகளிர் வீதி முன்னினர்
வெண்முகி னடுவண் மீன்முகத் தெழுதரும்
திருமதி யென்னத் திலக வாண்முகம் 105
அருமணி மாடத் தகவயிற் சுடர
வாட்கெழு மழைக்கண் வாசவ தத்தை
தோட்குத் தக்க தொடுகழற் குருசிலைக்
கண்டீர் நீங்கிக் காணிடந் தம்மென
விண்டீர் மகளிரின் வியப்பத் தோன்றி 110
அரிமதர் நெடுங்க ணளவிகந் தகல
இருமுலைப் பொற்பூ ணிடவயிற் றிருத்தாத்
தெரிவை மகளிர் தேமொழிக் கிளவிக்
குழித்தலைப் புதல்வ ரெழிற்புறம் வரித்த
அஞ்சாந் தழிய வாகத் தடக்கி 115
நுண்சா லேகத் தெம்பரு நோக்கினர்
மகளிர் மைந்தராகியவர் செயல்
[தொகு]அறம்புரி செங்கோ லவந்தியர் பெருமகன்
மறம்புரி தானை மறமாச் சேனன்
பாவைய ருள்ளு மோவா வாழ்க்கை
ஏசுவ தில்லா வாசவ தத்தையும் 120
காம னன்ன கண்வாங் குருவிற்
றாமந் தாழ்ந்த வேம வெண்குடை
வத்தவ ரிறைவனு முற்பான் முயன்ற
அத்தவ மறியி னெத்திறத் தாயினும்
நோற்று மென்னுங் கூற்றின ராகி 125
மணிநிற மஞ்ஞையுஞ் சிங்கமு மயங்கி
அணிமலை யிருந்த தோற்றம் போல
மகளிரு மைந்தருந் தொகைகொண் டீண்டி
மாடந் தோறு மலர்மழை பொழிய
நகரத்திலுள்ளார் செயல்
[தொகு]ஆடம் பலமு மாவண மறுகும் 130
கீத சாலையுங் கேள்விப் பந்தரும்
ஓது சாலையுஞ் சூதாடு கழகமும்
ஐவே றமைந்த வடிசிற் பள்ளியும்
தங்கோ ளொழிந்த தனமைய ராகி
மண்கா முறூஉம் வத்தவ மன்னனைக் 135
கண்கா முற்ற கருத்தின ராகி
விண்மே லுறையுநர் விழையுங் கோலமொடு
மென்மெல நெருங்கி வேண்டிடம் பெறாஅர்
அரும்பதி யுறைநர் விரும்புபு புகழ
உதயணன் செயல்
[தொகு]அருந்தவங் கொடுக்குஞ் சுருங்காச் செல்வத் 140
துத்தர குருவ மொத்த சும்மை
முத்துமணல் வீதி முற்றுவலம் போகித்
தெய்வ மாடமுந் தேர்நிலைக் கொட்டிலும்
ஐயர் தானமு மன்னவை பிறவும்
புண்ணியப் பெயரிடங் கண்ணி னோக்கி 145
நாட்டகம் புகழ்ந்த நன்னகர் புகல
உதயணனும் வாசவதத்தையும் நீராடல்
[தொகு]மீட்டகம் புக்கு மேவரு செல்வமொடு
மங்கல மண்ணுநீர் மரபி னாடக்
கொங்கலர் கோதையைப் பண்டுமுன் பயின்ற
தோழி தானே தாழாது விரும்பிக் 150
கைந்நவில் கம்மத்துக் கம்மியன் புனைந்த
செய்கலத் துள்ளுஞ் சிறந்தவை நோக்கி
ஏற்குந் தானத்துப் பாற்பட வணிந்து
பானீர் நெடுங்கடற் பனிநா ளெழுந்த
மேனீ ராவியின் மெல்லி தாகிய 155
கழுமடிக் கலிங்கம் வழுவில வாங்கி
ஒண்மணிக் காசிற் பன்மணிப் பாவை
கண்ணிய காத லுண்ணெகிழ்ந்து விரும்பி
ஆடற் கவாவு மமிழ்தஞ் சோர
ஊடுபோந் துறழ வொளிபெற வுடீஇ 160
மாலையுஞ் சாந்து மங்கல மரபின்
நூலிற் றிரியாது நுண்ணெழில் புரியப்
புதுவது புனைந்த பூங்கொடி புரையும்
வதுவைக் கோலத்துவாசவ தத்தை
புதுமைக் காரிகை புதுநாண் டிளைப்பக் 165
கதிர்விளங் காகத்துக் காமங் கழுமி
அன்னத் தன்ன வன்புகொள் காதலொடு
பொன்னகர்க் கியன்ற புகரில் புகழ்நகர்
வரைவில் வண்மை வத்தவ மன்னற்குப்
பொருவில் போகம் புணர்ந்தன்றா லினிதென். 170
2 7 நகர்வலங் கொண்டது முற்றிற்று.