பெருங்கதை/3 16 பதுமாபதியைப் பிரிந்தது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • பாடல் மூலம்

3 16 பதுமாபதியைப் பிரிந்தது

அச்சுவப் பெருமகன் வரவு[தொகு]

ஒழுகா நின்ற வொருமதி எல்லையுள்
வழிநா ணிகழ்வின் வண்ணங் கூறுவேன்
கலக்கமி றானைக் காசியர் கோமான்
நலத்தகு தேவி நன்னாட் பெற்ற
மின்னுறழ் சாயற் பொன்னுறழ் சுணங்கிற் 5
பண்ணுறு மின்சொற் பதுமா நங்கை
ஆகந் தோய்தற் கவாஅ நெஞ்சமொடு
பாசிழை நன்கலம் பரிசு முந்துறீஇக்
கேழ்கினர் மணிமுடிக் கேகயத் தரசன்
அளவி லாற்ற லச்சுவப் பெருமகன் 10
மகதம் புகுந்து மன்னிய செங்கோற்
றகைவெந் துப்பிற் றருசகற் கிசைப்ப
ஏற்றெதிர் கொள்ளு மின்பக் கம்பலை
கூற்றெதிர் கொள்ளாக் கொள்கைத் தாகப்
புரவியும் யானையும் பூங்கொடித் தேரும் 15
விரவிய படையொடு தருசகன் போதரப்
போதுபிணைத் தன்ன மாதர் மழைக்கண்
நன்றொடு புணர்ந்த நங்கை மணமகன்
இன்றிவண் வருமென வில்லந் தோறும்
எடுத்த பூங்கொடி யிருங்கண் விசும்பகம் 20
துடைப்ப போல நடுக்கமொடு நுடங்கத்
தேர்செலத் தேய்ந்த தெருவுக ளெல்லாம்
நீர்செல் பேரியாறு நிரந்திழிந் தாங்குப்
பல்லோர் மொய்த்துச் செல்லிடம் பெறாஅ
தொல்லென் மாக்கட் லுவாவுற் றன்ன 25
கல்லெ நகரங் காண்பது விரும்பி
மழைநிரைத் தன்ன மாடந் தோறும்
இழைநிரைத் திலங்க வேறி யிறைகொள
மலைத்தொகை யன்ன மாட மாநகர்
தலைத்தலைப் போந்து தலைப்பெய் தீண்டி 30
இடுமணி யானை யிரீஇ யிழிந்துதன்
தொடியணி தடக்கை தோன்ற வோச்சித்
தாக்கருந் தானைத் தருசகன் கழலடி
கூப்புபு பணிந்த கொடும்பூட்குருசிலை

சிதைவு[தொகு]

எடுத்தவன் * * * 35

        • சிதைவு ****