பெருங்கதை/3 17 இரவு எழுந்தது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • பாடல் மூலம்

சிதைவு[தொகு]

      • ச்

செய்வது தெரியும் சிந்தையோடு இருந்துழித்

தருசகனுடைய பகைமன்னர்[தொகு]

தகைமலர்ப் பைந்தார்த் தருசகன் றன்னொடு
பகைகொண் டொழுகும் பற்றாக் கொடுந்தொழில்
விடுகணை விற்றொழில் விரிசிக னுள்ளிட்
டடலருந் தோற்றத் தரிமா னன்னவர் 5
மத்தநல் யானை மதிய வெண்குடை
வித்தக நறுந்தார் வுலங்குநடைப் புரவி
அத்தின புரத்தி னரசரு ளரிமான்
வேண்டியது முடிக்கும் வென்றித் தானை
ஈண்டிய வாற்ற லெலிச்செவி யரசனும் 10
காண்டற் காகாக் கடன்மருள் பெரும்படைத்
தீண்டற் காகாத் திருந்துமதி லணிந்த
வாரண வாசி வளந்தந் தோம்பும்
ஏரணி நெடுங்குடை யிறைமீக் கூரிய
படைநவி றடக்கைப் பைந்தார்க் கருங்கழல் 15
அடவி யரசெனு மாண்டகை யொருவனும்
மலைத்தொகை யன்ன மையணி யானை
இலைத்தார் மார்பி னேரணி தடக்கைப்
பொருந்தா மன்னரைப் புறக்குடை கண்ட
அருந்திறற் சூழ்ச்சி யடல்வேற் றானை 20
அயிர்த்துணைப் பல்படை யயோத்தி யரசனும்
மாற்றோர்த் தொலைத்த கூற்றுறழ் கொடுந்தொழில்
மிக்குயர் வென்றியொடு வேந்தரை யகப்படுத்
தக்களம் வேட்ட வடலருஞ் சீற்றத்துப்
புனைமதி லோங்கிய போதன புரத்திறை 25
மிலைச்ச னென்னு நலத்தகை யொருவனும்
சீற்றத் துப்பிற் செருவெனப் புகலும்
ஆற்றல் சான்ற வரசரு ளரிமாத்
துன்னரு நீண்மதிற் றுவரா பதிக்கிறை
மன்னரை முருக்கிய மதிய வெண்குடைப் 30
பொங்குமலர் நறுந்தார்ச் சங்கர வரசனும்
மல்ல னென்னும் வெல்போர் விடலையும்
தானை மன்னரை மானம் வாட்டிய
ஊனிவர் நெடுவே லுருவக் கழற்காற்
பொங்குமயிர் மான்றேர்த் திருநகர்க் கிறைவன் 35
வெந்திறற் செய்கை வேசா லியுமென
அடற்றகை மன்னர் படைத்தொகை கூட்டிச்

பகைமன்னர் ஆராய்தலும் போருக்கெழுதலும்[தொகு]

சங்க மாகி வெங்கணை வீக்கமொடு
பகைநமக் காகிப் பணித்துத் திறைகொளும்
மகத மன்னனை மதுகை வாட்டிப் 40
புரிபல வியைந்த வொருபெருங் கயிற்றினிற்
பெருவலி வேழம் பிசித்திசி னாஅங்
கிசைந்த பொழுதே யிடங்கெட மேற்சென்
றருந்திறன் மன்னனை நெருங்கின மாகித்
தன்னுடை யானையும் புரவியுந் தன்றுணைப் 45
பொன்னியல் பாவையும் புனைமணித் தேரும்
அணிகதிர் முத்தமு மருங்கல மாதியும்
பணிமொழிச் செவ்வாய்க் கணிகை மகளிரொடு
பிறவு மின்னவை முறைமையிற் றரினும்
இருங்கண் மாதிரத் தொருங்குகண் கூடிய 50
கருமுகில் கிழிக்குங் கடுவளி போலப்
பொருமுரண் மன்னர் புணர்ப்பிடைப் பிரிக்கும்
அறைபோக் கமைச்சின் முறைபோக் கெண்ணினும்
அங்கண் ஞாலத் தழகுவீற் றிருந்த
கொங்கலர் கோதை யெங்கையைப் பொருளொடு 55
தனக்கே தருகுவன் சினத்தி னீங்கி
ஊனங் கொள்ளாது தானவட் பெறுகெனத்
தேறு மாந்தரை வேறவண் விடுத்துத்
தனித்தர வொருவரைத் தன்பாற் றாழ்ப்பினும்
என்ன வாயினு மன்னது விழையா 60
தொடுங்கி யிருந்தே யுன்னியது முடிக்கும்
கொடுங்காற் கொக்கின் கோளின மாகிச்
சாய்ப்பிட மாகப் போர்ப்படை பரப்பி
வலிகெழு வேந்தனை வணக்குது மென்னத்
தெளிவுசெய் தெழுந்து திருமலி நன்னாட் 65
டெல்லை யிகந்து வல்லை யெழுந்து
கடுந்தொழின் மேவலொ டுடங்குவந் திறுத்தலின்

தருசகன் செயல்[தொகு]

அகநகர் வரைப்பி னரச ன்றியப்
புறநக ரெல்லாம் பூசலிற் றுவன்றி
அச்ச நிலைமை யரசற் கிசைத்தலின் 70
மெச்சா மன்னரை மெலிவது நாடித்
தருசகன் றமரொடு தெருமர லெய்தி
மாணகற் கண்டிந் நிலைமை கூறென

அயிராபதி உதயணனிடம் கூறல்[தொகு]

ஆண நெஞ்சத் தயிரா பதிவந்
தனங்கத் தானம் புகுந்தவற் கண்டு 75
கூப்பிய கையினள் கோயிலுட் பட்டதும்
கோற்றொடி மாதர் கொள்கையுங் கூற

உருமண்ணுவாவின் செயல்[தொகு]

உகவை யுள்ளமொடு பகையிவ ணியைதல்
கரும நமக்கென வுருமண் ணுவாவுரைத்
தின்ன தென்னான் பொன்னேர் தோழிக் 80
கிருமதி நாளகத் திலங்கிழை மாதர்
பருவரல் வெந்நோய் பசப்பொடு நீக்குவென்
என்றன னென்பதைச் சென்றனை கூறிக்
கவற்சி நீக்கெனப் பெயர்த்தவட் போக்கிக்
கடுத்த மன்னரைக் கலங்கத் தாக்கி 85
உடைத்த பின்றை யல்லது நங்கையை
அடுத்தல் செல்லா னரச னாதலின்
அற்ற நோக்கி யவர்படை யணுகி
ஒற்றி மேல்வீழ்ந் துடைக்கு முபாயமா
வாணிக வுருவின மாகி மற்றவர் 90
ஆணத் தானை யகம்புக் காராய்ந்
திரவிடை யெறிந்து பொருபடை யோட்டிக்
கேட்போர்க் கெல்லாம் வாட்போர் வலித்தொழில்
வளமிகு தானை வத்தவர்க் கிறையைக்
கிளைமை கூறி யுளமை கொளீஇக் 95
காவினு ணிகழ்ந்தது காவலற் குரைப்பின்
மன்றல் கருதி வந்த மன்னற்
கொன்றுபு கொடாமை யுண்டு மாகும்
ஒன்றின னாயிற் பொன்றுஞ் சிளமுலைத்
தெரியிழை மாத ருரிமையி னோடாள் 100
அன்ன தாத லொருதலை யதனாற்
பின்னரு மதற்குப் பிறபிற நாடுதும்
இன்னே யெழுகென் றெழுந்தாங் கணைஇச்
சின்னச் சோலை யென்னு மலைமிசைப்
பன்னற் கேள்வி பண்வரப் பாடிட 105

தோழர் செயல்[தொகு]

எண்ணிய கருமத் திடையூ றின்மை
திண்ணிதிற் கேட்டுத் தெளிந்தன ராகி
ஆனா வன்பொடு மேனா ளன்றி
லழிவழி வந்த கழிபெருங் காதற்
பகையடு படைநரைத் தொகையவட் காண்புழி 110
நூற்றிற முற்றி யாற்றுளி பிழையா
தாற்றி ன்றிய வத்துணை யுண்மையின்
ஊறின் றினியென வுவகையிற் கழுமிக்
கரப்பில் வண்மைப் பிரச்சோ தனன்றன்
சினப்படை யழித்த செம்ம லாளர்க்குக் 115
கனப்படை காக்கைத் தொகையெனக் கருதும்
அத்திறத் தொன்றி யெத்திறத் தானும்
குவளை யுண்க ணிவளொடு புணர்ந்த
காலை யல்லது கோலக் குருசில்
புலம்பிற் றீரா னாதலிற் பொருபடை 120
கலங்கவாட் டுதலெனக் கருத்திடை வலித்து
மலையி னிழிந்து விலைவரம் பறியா
அருவிலை நன்மணி போத்தந் தவ்வழிப்
பெருவிலைப் பண்டம் பெய்வது புரிந்து
செழுமணிக் காரர் குழுவினுட் காட்டி 125
உறுவிலை கொண்டு பெறுவிலை பிழையா
வெண்பூந் துகிலுஞ் செம்பூங் கச்சும்
சுரிகையும் வாளு முருவொடு புணர்ந்த
அணியின ராகிப் பணிசெயற் குரிய
இளையரை யொற்றித் தளைபிணி யுறீஇப் 130

வாசனைப் பொருள்கள்[தொகு]

பல்லுறைப் பையி னுள்ளுறை தோறும்
நாகத் தல்லியு நயந்ததக் கோலமும்
வாசப் பளிதமுஞ் சோணப் பூவும்
குங்குமக் குற்றியுங் கொழுங்காற் கொட்டமும்
ஒண்காழ்த் துருக்கமு மொளிநா குணமும் 135
காழகி னூறுங் கட்சா லேகமும்
கோழிரு வேரியும் பேரில வங்கமும்
அந்தண் டகரமு மரக்கு மகிலும்
சந்தனக் குறையொடு சாந்திற் குரியவை
பிறவு மொருவா நிறைய வடக்கி 140

உண்பொருள்கள்[தொகு]

மிதிர்பழ மிளகு மெதிர்வது திகழ்ந்த
மஞ்சளு மிஞ்சியுஞ் செஞ்சிறு கடுகும்
தலைப்பெருங் காயமு நலத்தகு சிறப்பின்
சீரகத் தரிசியு மேலமு மேனைக்
காயமு மெல்லா மாய்வன ரடக்கி 145

மருந்திற்குரியவை[தொகு]

அஞ்சன மனோசிலை யணியரி தாரம்
துத்த மாஞ்சி யத்தவத் திரதம்
திப்பிலி யிந்துப் பொப்புமுறை யமைத்துத்
தாழி மேதை தவாத துவர்ச்சிகை
வண்ணிகை வங்கப் பாவையோ டின்ன 150
மருத்துறுப் பெல்லா மொருப்படுத் தடக்கி
இலைச்சினை யொற்றிய தலைச்சுமைச் சரக்கினர்
நான மண்ணிய நீனிறக் குஞ்சியர்
மணிநிறக் குவளை யணிமலர் செரீஇ
யாப்புற வடக்கிய வாக்கமை சிகையினர் 155
மல்லிகை யிரீஇ வல்லோர் புணர்ந்த
செம்பொன் மாத்திரை செரீஇய காதினர்
அங்கதிர்ச் சுடர்மணி யணிபெற விரீஇ
மாசின் றிலங்கு மோதிர விரலினர்
வாச நறும்பொடி திமிர்ந்த மார்பினர் 160

மகளிர்க்குரியவை[தொகு]

மகரிகை நிறைய வெகிர்முக மாக்கிப்
பாடி மகளிர் விழையுஞ் சேடொளிப்
பத்திக் கடிப்பும் பவழத் திரியும்
முத்து வடமு முழுமணிக் காசும்
பன்மணித் தாலியு மென்முலைக் கச்சும் 165
உத்திப் பூணு முளப்படப் பிறவும்
சித்திரக் கிழியின் வித்தக மாகத்
தோன்றத் தூக்கி யாங்கவை யமைத்து
நாற்றிய கைய ரேற்றிய கோலமொடு
நுரைவிரித் தன்ன நுண்ணூற் கலிங்கம் 170
அரைவிரித் தசைத்த வம்பூங் கச்சொடு
போர்ப்புறு மீக்கோள் யாப்புறுத் தசைஇப்
பொற்றொடி நிறைக்கோல் பற்றிய கையினர்
கழலுங் கச்சுங் கலிங்கமு மற்றவர்
விழைவன வறிந்து வேறுவே றடக்கிக் 175
காட்சிமுந் துறுத்த மாட்சிய ராகிப்
படைத்திற மன்னர் பாடி சார்ந்து
விடைப்பே ரமைச்சன் மேனாட் போக்கிய
அறிவொடு புணர்ந்த விசைச்சனு மவ்வழிக்
குறிவயிற் பிழையாது குதிரையொடு தோன்றலும் 180
அதிராத் தோழனை யவணே யொழித்துக்
குதிரை யாவன கொண்டுவிலை பகரிய
வழவில் சூழ்ச்சி வயந்தக குமரனைக்
குழுவினோர் கட்குத் தலையெனக் கூறி
வெம்முரண் வென்றியொடு மேல்வந் திறுத்த 185
ஒன்னா ராடற் கொருப்பா டெய்தி
வழக்கொடு புணர்ந்த வாசி வாணிகம்
உழப்பே மற்றிவ னொன்பதிற் றியாட்டையன்
மண்டமர்த் தானை மகத மன்னனும்
பண்டையன் போலா னாதலிற் படையொடு 190
தொன்னகர் வரைப்பக மெந்நக ராக்க
இருந்தனம் வலித்தனம் யாமெனப் பலவும்
பொக்க முடையவை பொருந்தக் கூறிப்
பகைகொண் மன்ன னகநகர் வரைப்பின்
யாவ ராயினு மறிந்துவந் தடைவது 195
காணுங் காலைக் கரும நமக்கெனக்
கணங்கொண் மன்னரு மிணங்குவன ராகிப்

பகைமன்னர் செயல்[தொகு]

பெரும்பரி சார மொருங்குட னருளி
அற்ற மவர்மாட் டொற்றின ராகி
அருத்த மருங்கல நிரைத்தனர் தந்திட் 100
டின்றைக் கொண்டு மிவணி ராமினென்
றொன்றிய காதலோ டுண்ணெகிழ்ந் துரைப்ப

உதயணன் முதலியோர் செயல்[தொகு]

வத்தவ ரிறைவனொடு மொய்த்திறை கொண்டு
பாடியுட் டமக்கிடம் பாற்படுத் தமைத்து
வீட்டின தளவும் விறற்படை வீரமும் 105
கூட்ட மன்னர் குறித்தவும் பிறவும்
இருளும் பகலு மருவின ராராய்ந்
தருந்திற லான ரொருங்குயி ருண்ணும்
கூற்றத் தன்ன வாற்றல ராகி

உதயணனுடைய வீரர் இரவிற் போர்புரிதல்[தொகு]

மண்டில மறைந்த மயங்கிருள் யாமத் 210
தெண்டிசை மருங்கினு மின்னுழி யெறிதுமென்
றறியச் சூழ்ந்த குறியின ராகி
நூலிற் பரந்த கோல வீதியுட்
படைநகர் வரைப்பகம் பறைக்க ணெருக்கிப்
பாடி காவல ரோடியாண் டெறிந்து 215
புறக்காப் பமைத்துத் தலைக்காப் பிருக்கும்
வல்வில் லிளையர்க் கெல்லை தோறும்
காப்புநன் கிகழன்மின் கண்படை யுறந்தென்
றியாப்புறக் கூறி யடங்கிய பொழுதிற்
கலிங்கத் தாக்கலின் மெலிந்த தாகி 220
உடையினு முடையா தாயினும் யாவரும்
அடையுந் தான மறியக் கூறி
நாற்பால் வகுத்து மேற்பா லமைத்துக்
காவலன் றன்னையுங் காவலு ணிறீஇப்
பொற்படைப் புரவி பொலிய வேறி 225
நற்படை நலியா நன்மையொடு பொலிந்த
சாலிசைக் கவயங் கோல மாகப்
புக்க மெய்யினர் பூந்தார் மார்பிற்
றாளாண் கடுந் திறல் விரிசிகன் வாழ்கென
மேலாண் மல்லன் பாடி காத்த 230
நீலக் கச்சை நிரைகழன் மறவரை
வேலிற் சாய்த்துங் கோல மான்றேர்
அடவி வாழ்கென வார்த்தன ருராஅய்த்
தடவரை மார்பிற் றளராச் செங்கோல்
மிலைச்சன் வாழ்கெனத் தலைக்காப் பிருந்த 235
தண்ட மள்ளரைத் தபுத்துயி ருண்டும்
கொண்ட வார்ப்பொடு கூட வெலிச்செவி
பண்டரும் பல்லியம் பாற்படத் துவைத்தும்
விறல்வே சாலி பாடி குறுகி
அடலருஞ் சீற்றத் தரசுபல கடந்த 240
விடலரும் பைந்தார் வேந்தருள் வேந்தன்
சங்கரன் வாழ்கெனத் தங்கல ரெறிந்தும்
வத்தவன் கொண்ட மாமுர சியக்கி
அயிலிற் புனைந்த வெயில்புரை யொள்வாள்
உரீஇய கைய ராகி யொரீஇக் 245
காவன் மறவரைக் கண்படை யகத்தே
வீழ நூறி வேழந் தொலைச்சி
மலையெனக் கவிழ மாமறித் திடாஅக்
கொலைவினைப் படைமாக் கொடியணி நெடுந்தேர்
வத்தவன் மறவர் மொய்த்தன ரெறியக் 250
கடுவளி யுற்ற கடலி னுராஅய்
அடலரும் பெரும்படை யார்ப்பொடு தொடங்கித்
தம்முட் டாக்கிக் கைமயக் கெய்தி
மதக்களி யானை வத்தவன் வாழ்கவென்
றுரைப்ப மற்றவ ரறிந்தன ராகி 255
எம்வயி னெம்வயி னெண்ணினர் கோளெனத்
தம்வயிற் றம்முளுந் தெளியா ராகிப்
பாடி யருங்கலம் பட்டுழிக் கிடப்ப
நீடிரு ளகத்து நீங்குதல் பொருளெனச்
செவிசெவி யறியாச் செயலின ராகித் 260
தவிர்வில் வேகமொடு தலைவந் திறுத்த
கடுந்தொழின் மன்ன ருடைந்தன ரோடி
அடைந்தனர் மாதோ வரணமை மலையென்.

3 17 இரவெழுந்தது முற்றிற்று.