பெருங்கதை/5 9 மதனமஞ்சிகை பிரிவு
- பாடல் மூலம்
5 9 மதனமஞ்சிகை பிரிவு
திருவிழா
[தொகு]பதன றிந்து நுகரும் பருவத் தொருநாட்
கோல நீண்மதிற் கொடிக்கோ சம்பி
ஞால மெல்லா நயந்துடன் காண
மு.வொடு பல்லிய முன்றிற் றதும்ப
விழவொடு பொலிந்த வழகிற் றாகித் 5
திசைதிசை தோறுந் திருக்கண் கூடிய
வசையறு திருநகர் வந்துடன் றுவன்றிப்
பொன்றா வேட்கைப் புலங்களை நெருக்கி
வென்றா ராயினும் விழையும் விழவணி
காணும் வேட்கையொடு சேணுய ருலகிற் 10
றேவ கணமும் மேவர விழிதர
விறல்கெழு சிறப்பின் விச்சா தரரும்
இறைகொண் டிழிதர விப்பாற் சேடியின்
மானசவேகன் வருதல்
[தொகு]நுணங்குவினை விச்சையொடு நூற்பொரு ணுனித்த
மணங்கமழ் நறுந்தார் மானச வேகனென் 15
றாற்றல் சான்ற நூற்றொரு பதின்மர்
அரைச ருள்ளு முரைசெல விளங்கிய
மின்னார் மணிமுடி மன்னனு மிழிந்து
மானசவேகன் கண்ட காட்சி
[தொகு]பத்திப் படாகையும் பல்பூங் கொடியும்
சித்திரித் தெழுதிய வித்தக விமானமும் 20
இருநிலத் தியங்கு மியந்திரப் பாவையும்
அருவினை நுட்பத் தியவனப் புணர்ப்பும்
பொத்தகை யானையும் பொங்குமயிர்ப் புரவியும்
சித்திர மாலையு மக்கடந் தொட்டிலும்
வெண்டா ரொழுக்கும் விளக்குறு பூதமும் 25
தெரிவுற லரிய பலகலக் குப்பையும்
கைந்நிமிர் விளக்கு ம்
எண்ணரும் பல்பொறி யெந்திரப் பொருப்பும்
வண்ண ….. களும்
கண்ணு ளாளர் கைபுனை கிடுகும் 30
நாடு நகரமு மாடுநர் பாடுநர்
ஆடலும் பாடலு மன்னவை பிறவும்
கூடுக் காணா மாடத் தோங்கிய
தண்கோ சம்பிப் பெண்சன நோக்கி
விண்மிசை யவரும் விழையுங் காரிகை 35
மண்ணியன் மகளிரு ளுளள்கொன் மற்றெனச்
சேணெடுந் தெருவுஞ் சிற்றங் காடியும்
நாணொடு புணர்ந்த நலம்புணர் மகளிர்
நெரியுந் தெருவு நிரம்பிய மறுகும்
மன்றமுங் கோணமுஞ் சென்றுசென் றுலாஅய் 40
யாறுகிடந் தன்ன வீறுசால் வீதிதொறும்
ஆனாது திரிதரு மானச வேகன்
மானசவேகன் மதனமஞ்சிகையைக் காணல்
[தொகு]கோலக் கோயிலு நால்வகை நிலனும்
புடைசூழ் நடுவட் பொன்மலர்க் காவின்
இடைசூ ழருவி யேந்துவரைச் சென்னி 45
ஆய்மயி லகவு மணிச்சுதைக் குன்றின்
மீமிசை மருங்கின் மின்னென நுடங்கிப்
பழவிறன் மூதூர் விழவணி நோக்கி
மும்மணிக் காசும் பன்மணித் தாலியும்
பொன்மணிக் கொடியும் பூணுஞ் சுடர 50
மதன மஞ்சிகை நின்றோட் கண்டு
சென்றன னணுகி நின்றினிது நோக்கி
வெள்ளி விமானம் விதித்விதிர்த் தேறி
வள்ளி மருங்கி னொள்ளிழை யேழையைக்
கச்சார் வனமுலை விச்சா தரியே 55
ஆவளென்னு மையமோ டயலதோர்
தேவ மாடஞ் சேர்ந்தன னிருந்து
மதனமஞ்சிகை பூதவடிவமொன்றைக் கண்டு அஞ்சுதல்
[தொகு]வருவோர்ப் பற்றி வாங்குபு விழுங்கும்
இனைய நுட்பத் தியவன ரியற்றிய
பெருவலிப் பூதத் துருவுகண் டுணரார் 60
இன்னுயி ருண்ணுங் கூற்ற மிதுவெனப்
பொன்னிழை சுடரப் பொம்மென வுராஅய்
மைகொள் கண்ணியர் வெய்துயிர்த் திரிய
மாவீ ழோதி மதனமஞ் சிகையும்
ஏயென வஞ்சுஞ் சாய னோக்கி 65
மானசவேகன் எண்ணுதல்
[தொகு]விச்சை மன்ன னச்சுவன னாகி
விறல்கெழு விஞ்சையர் வெள்ளியம் பெருமலை
இறைகொண் டிருந்த வெழிலுடை மகளிருள்
யாவரு மில்லைமற் றிவளோ ரனையார்
யாவ ளாயினு மெய்துவென் யானென 70
ஒருதலை வேட்கை யுண்ணின்று நலியப்
பெருவினை விச்சையிற் றெரிய நோக்கி
நரவாணதத்தனும் மதனமஞ்சிகையும் இன்புறுதல்
[தொகு]உயர்நிலை யுலகத் தவரும் பிறரும்
மேனிலை யுயர்ச்சியின் மெய்யா மதிக்க
வளமை நன்னிலத் திளமுளை போந்து 75
கல்வி நீரிற் கண்விட்டுக் கவினிச்
செல்வப் பல்கதிர் செறிந்துவனப் பேறி
இன்பம் விளைந்த நன்பெரு நெல்லின்
ஆண மடையிற் காண்வரப் பற்றித்
துப்புர வடிவி .. தோயினும் 80
வேட்கை நாவின் விருப்பொடு சுவைக்கும்
மாற்ற லில்லா மனத்தின ராகி
வலியும் வளமையு… க்கு … யும்
பொலிவும் புகழும் பொருந்திய சிறப்பிற்
குவம மாகு முதயண னொருமகன் 85
அவமில் சூழ்ச்சி யாய்தா ரண்ணலும்
ஆணு முட்கு மச்சமும் பயிர்ப்பும்
பேணுங் கோலமுங் பெருந்தகைக் கற்பும்
வாணுதன் மகளிர் மற்றுப்பிறர்க் கின்றித்
தானே வவ்விய தவளையங் கிண்கிணி 90
மானேர் நோக்கின் மதனமஞ் சிகையும்
ஆனாக் காதலோ டமர்ந்துவிளை யாடிக்
காமர் பள்ளியுட் கட்டளை பிழையாத்
தாமரை நெடுங்கண் டந்தொழி றொடங்கப்
பள்ளி கொண்ட பொழுதிற் பையென 95
மானசவேகன் மதனமஞ்சிகையை எடுத்துச் செல்லல்
[தொகு]ஒள்வினை மாட முள்குவன னாகி
விச்சை மறைவி னச்சமொன் றின்றி
இகன்மிகு குமரனைத் துயின்மிசைப் பெருக்குக்
கயன்மிகு கண்ணியைக் கவவுப்பிணி நீக்கிப்
புகலு முள்ளமோ டகலத் தடக்கி 100
இகல்கொள் வீரிய னிகழ்தல் செல்லா
மண்மிசை வந்தனென் மயக்கற வின்று
விண்மிசை யுலகிற்கு விழுப்பொருள் பெற்றேன்
என்னு முவகையின் மின்னேர் நுடங்கிட
மிளிருங் கச்சையோ டொளிவிசும் பெழுந்து 105
பொ………..
5 9 மதனமஞ்சிகை பிரிவு முற்றிற்று.