உள்ளடக்கத்துக்குச் செல்

பெற்றோர் கொடுத்த பெருங்கொடை/பரிணாமம்

விக்கிமூலம் இலிருந்து

12. பரிணாமம்

ஜீன் மாறுபாட்டால் புதிய வர்க்கங்கள் தோன்றுகின்றன. அதுவே உலகத்தில் சிறிய உயிரிலிருந்து பலவகையான உயிரினங்கள் தோன்றி மனிதன் வரை வந்த பரிணாமத்திற்குக் (Evolution) காரணமாக இருக்கின்றது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரையில் இப்படித்தான் ஏற்பட்டனவாம்.

பரிணாமத்தைப் பற்றிய ஆராய்ச்சியும் மிகவும் சுவையுடையது. ஆனால் இங்கே பாரம்பரியத்தையும் சூழ்நிலையையும் பற்றியே முக்கியமாக நாம் ஆராய்ந்தோம். பாரம்பரியத்தால் கிடைத்த திறமைகளும் சூழ்நிலையின் உதவியாலேயே நன்கு மலர்கின்றது என்றும் ஆதலால் இரண்டும் முக்கியமானவை என்றும் தெரிந்து கொண்டோம்.