பேச்சு:புதிய ஆத்திசூடி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

தலைப்பில் ஆத்திசூடி என்று இருக்கிறது. பாடலிலும் அப்படியே இருக்கிறது. பக்கத்தின் கீழ்ப்புறத்தில் இவற்றையும் பார்க்கவும் என்ற குறிப்புக்கு அடியில் ஆத்திச்சூடி என்று இருக்கிறது. ஆத்திசூடி என்று ஒற்றில்லாம் இருப்பதுவே சரியானது. பரம்பொருள் வாழ்த்தில்

ஆத்திசூடி, இளம்பிறை அணிந்து மோனத் திருக்கும்மெழுவெண் மேனியான்

என்றிருக்கிறது. இது ‘மோனத் திருக்கும் முழுவெண் மேனியன்’ என்றிருக்க வேண்டும். எண் 38 திஸ்கியில் இருக்கிறது. யுனிகோடுக்கு மாற்றப்பட வேண்டும். எண் 98, லாவகம் பயிற்சி செய் என்பது தவறான பாடம். லாகவம் பயிற்சி செய் என்றிருக்க வேண்டும்.

உரிய திருத்தங்களைச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். --ஹரி கிருஷ்ணன்.

உரிய மாற்றங்களைச் செய்துள்ளேன். நன்றி.--Kanags 23:50, 13 ஜனவரி 2010 (UTC)
பிழைகளைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி. மேலே குறிப்பிட்ட பிழைகளையும், வேறு சில

பிழைகளையும் திருத்தியுள்ளேன். வேறு திருத்தமான படியை ஒப்பிட்டு மீண்டும் சர்ரிபார்க்க வேண்டும்.. --செல்வா 14:58, 7 செப்டெம்பர் 2010 (UTC)

நான் செய்த பிற திருத்தங்கள் சரியானதா எனத் தெரியாது, ஆனால் சரியானஓர் படியைப் பார்த்து மீண்டும் திருத்தப்படு. செய்த திருத்தங்களை இங்கே] பார்க்கவும். பிழைகள் இருந்தால் அருள்கூர்ந்து சுட்டவும். மிக்க நன்றி.--செல்வா 15:02, 7 செப்டெம்பர் 2010 (UTC)