உள்ளடக்கத்துக்குச் செல்

பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் பாடல்கள்

விக்கிமூலம் இலிருந்து
பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான்
21 பாடல்கள்
நூலில் பக்கம் 63 முதல் 66
குறிப்புரை - செங்கைப் பொதுவன்
அட கெடுவாய் பலதொழிலும் இருக்கக் கல்வி, அதிகமென்றே கற்றுவிட்டோம் அறிவில்லாமல்
திடமுள மோகனமாடக் கழைக்கூத்தாடச், செப்பிடு வித்தைகளாடத் தெரிந்தோமில்லைச்
தடமுலை வேசையராகப் பிறந்தோ மில்லைச், சனியான தமிழைவிட்டுத் தையலார்தம்
இடமிருந்து தூதுசென்று பிழைத்தோ மில்லை, என்ன செனம்மெடுத் துலகில் இரக்கின்றோமே. (1)
பெற்றாளொரு பிள்ளையென் மனையாட்டி யப்பிள்ளைக்குப் பால்
பற்றாது கஞ்சிகுடிக்கந் தரமல்ல பாலிரக்கச்
சிற்றாளு மில்லை யிவ்வெல்லா வருத்தமுந் தீரவொரு
கற்றாதர வல்லையோ வல்லை மாநகர்க் காளத்தியே. (2)
வழிமேல் விழிவைத்து வாடாமலென் மனையாளு மற்றோர்
பழியாமற் பிள்ளையும் பாலென்று அழாமற் பகிரெனுஞ் சொல்
மொழியாம லென்னைவர விட்டபாவி முசித்துச்சதை
சுழியாமல் ஆவளித்தாய் வல்லமாநகர் காளத்தியே. (3)

சீதக்காதி பேரில்

ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்குங்
கார்தட்டிய பஞ்சகாலத்திலே தங்கள் காரியப்பேர
ஆர்தட்டினுந் தட்டு வாராமலே யன்ன தானத்துக்கு
மார்தட்டிய துரைமால் சீதக்காதி வரோதயனே. (4)
நேசித்து வந்த கவிராயர் தங்கட்கு நித்தநித்தம்
பூசிக்கு நின்கைப் பொருளொன்றுமே மற்றப் புல்லர்பொருள்
வேசிக்குஞ் சந்து நடப்பார்க்கும் வேசிக்கு வேலைசெய்யுந்
தாசிக்கு மாகுங் கண்டாய் சீதக்காதி தயாநிதியே. (5)


         ஈயாத புல்ல ரிருந்தென்ன போயென்ன வெட்டிமரம்
         காயா திருந்தென்ன காய்த்துப் பலனென்ன கைவிரித்துப்
         போயா சகமென் றுரைப்போர்க்குச் செம்பொன் பிடிபிடியாய்
         ஓயாம லீபவன் வேள்சீ தக் காதி யொருவனுமே.