பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/கொண்டோடி வா!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


9. கொண்டோடி வா!

பலுானைப் பிய்த்து எடுத்துக்கொண்டு தன் இடம் நோக்கி ஓடி வருகிற ஆட்டத்தைத் தான் கொண்டோடி வரும் ஆட்டம் என்று இங்கே குறிப்பிட்டிருக்கிருேம்.

இந்த விளையாட்டைக் குழந்தைகளும் ஆடலாம். பெரியவர்களும் ஆடலாம். பெரியவர்கள் இந்த ஆட்டத்தில் பங்குபெறும் பொழுது தங்கள் வயதை மறந்துவிட்டு, இது பொழுதுபோக்கும் ஒரு ஆட்டம்தான் என்று விரும்பி ஆடினால், ஆட்டம் மிக இனிமையாகவே அமையும். பங்கு பெற்றவர்களுக்கு நல்ல உடற்பயிற்சியும் ஆனந்த மகிழ்ச்சியில் திளைக்கும் வாய்ப்பும், கிடைக்கும் அவ்வளவே.

முதலில் 15 அல்லது 20 அடி விட்டம் உள்ள வட்டம் ஒன்றைப் போட்டுக்கொள்ள வேண்டும், வட்டத்தின் மத்தியில் நிற்பதற்காக ஒருவரையும் 

தேர்ந்தெடுத்து அவரை நடுவிலே நிற்கச் செய்தி. வேண்டும்.


நடுவிலே நிற்பவர் இடுப்பைச் சுற்றி பலூன்கள் தொங்குவது போல அதாவது ஒரு நீண்ட நூலில் சிறுசிறு இடைவெளி வைத்து. காற்றடைத்த பலூன்களைக் கட்டி, பலூன் மாலையாக மாற்றி, அவரது இடுப்பில் கட்டிவிட்டிருக்க வேண்டும். அந்த பலூன் மாலையை இடுப்பில் சுற்றியவாறு வட்டத்தின் நடுவில் அவர் நிற்க, வட்டத்தைச் சுற்றி வெளியே, பரவலாக மற்ற ஆட்டக்காரர்கள் நின்று கொண்டிருக்க வேண்டும்.

ஆடும் முறை : ஆட்டத்தை நடத்துபவர் ஆடத் தொடங்கலாம் என்று சைகை கொடுத்த பிறகு, வட்டத்திற்கு வெளியே நிற்கின்ற ஆட்டக்காரர்கள் விளையாடத் தொடங்கிட வேண்டும்.

அவர்கள் நோக்கமானது நடுவில் உள்ளவர் இடுப்பில் கட்டப்பட்டுத் தொங்கும் பலூன்களில் ஒன்றை அறுத்துக் கொண்டு வட்டத்திற்கு வெளியே அவரால் தொடப்படாமல், தப்பி வந்துவிட வேண்டும். அவ்வாறு முதலில் வந்தவர் வெற்றி பெற்றவராவார். 

தொடப்பட்டு விட்டால், அவர் அந்த இடத்தில் 5 தோப்புகரணங்கள் போட்டு, நடுவில் நிற்பவராக மாற ஆட்டம் மீண்டும் தொடரும்.


குறிப்பு : 1. பலூனுடன் நிற்பவர், பலூன்களைப் பறிக்க வருபவரிடம் இருந்து பலூனைக் காப்பாற்ற முயற்சிப்பார். அதற்காக அவர்களைத் தொட முயற்சிப்பதுதான் ஆட்டம். வட்டத்திற்குள் நிற்பவர்களையும் அவர் ஒடித் தொடலாம்.

2. தொடப்படாமல், ஒருவரே பல பலூன்களை எடுக்கவும் முயலலாம். ஆனால், யாரேனும் தொடப்பட்டால், அவர் பலூன்காரராக மாறிவிட வேண் டும். யாராவது ஒருவரைத் தொடும்வரை, ஆட்டம் தொடரும்.

3. நடுவில் நிற்பவர் எக்காரணத்தைக் கொண்டும் வட்டத்தை விட்டு வெளியே வரக் கூடாது.