பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/எறிபிடி பந்தாட்டம்
8. எறிபிடி பந்தாட்டம்
விளையாட விரும்புகின்ற அனைவரையும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம். விரும்பி வந்திருப்பவர்களின் மொத்த எண்ணிக்கையைக் கணக்கிட்டுக் கொண்டு, சமமான எண்ணிக்கையில் இருப்பது போல, இரண்டு குழுவினராகப் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின், ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பெயரைத் தந்து கொள்ளலாம். அப்பொழுதுதான் அவர்களை அழைப்பதற்கு வசதியாக இருக்கும்.
பிறகு, 5 அல்லது 10 அடி விட்டம் உள்ள ஒரு வட்டம் போட வேண்டும். அதன்பின், அந்த வட்டத்திலிருந்து 10 அடி தூரத்திற்கு அப்பால் இதைப் போலவே இன்னெரு பெரிய வட்டம் ஒன்றையும் போட வேண்டும்.
முதல் குழுவினரை உள்வட்டத்தின் கோட்டைச் சுற்றி பரவலாக நிற்க வைக்க வேண்டும். இரண்டாவது குழுவினர் வெளிப்புறம் போடப்பட்டி
ருக்கும் பெரிய வட்டத்தைச் சுற்றிப் பரவலாக சிறு சிறு இடைவெளி விட்டு நிற்குமாறு நிறுத்தி வைத்திருக்க வேண்டும். இரண்டாவது குழுவைச் சேர்ந்த ஒருவரை உள்வட்டத்தின் மத்தியிலே போய் நிறுத்தி வைக்க வேண்டும். -
இரண்டாம் குழுவில் உள்ள ஒருவரிடம் ஒரு பந்து இருக்க, ஆட்டம் ஆரம்பமாகிறது.
ஆடும் முறை : பந்தைத் தன் கையில் வைத்திருக்கும் இரண்டாவது குழுவைச் சேர்ந்தவர், தன் குழுவைச் சேர்ந்த ஒருவர் உள்வட்டத்தின் மத்தியில் நிறுத்தப்பட்டிருக்கிறா, அவரை நோக்கிப் பந்தை எறிய வேண்டும்.
உள்வட்டத்தின் நடுவில் நிற்பவர், தன்னை நோக்கி எறியும் பந்தைக் கீழே தவற விட்டுவிடாமல் பிடித்துக் கொண்டுவிட வேண்டும். அவ்வாறு பந்தைப் பிடித்துவிட்டால், இரண்டாம் குழுவினருக்கு வெற்றி எண் (Port) கொடுக்கப்படும். தவற விட்டுவிட்டால் வெற்றி எண் கிடைக்காது. மீண்டும் தொடர்ந்து பந்தை எறிய ஆட்டம் தொடங்கும். + - -
ஆனால் உள்வட்டத்தைச் சுற்றிப் பரவலாக நிற்கின்ற முதல் குழுவினர், தங்கள் பாதுகாப்பிற்குள்ளே தங்கள் வட்டத்திற்குள்ளே நிற்கும் எதிர்க்குழுஆட்டக்காரர் பந்தைப் பிடித்துவிடாமல்
தாங்கள் நிற்கும் இடத்திலிருந்தே தடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். -
முதல் குழுவினர் தடுத்திட, இரண்டாம் குழுவினர் எறிந்து, பந்தை பிடிக்கும் ஆட்டம் ஏற்கனவே குறிப்பிட்டுக் கொண்டது போல, 5 அல்லது 10 நிமிடம் வரை தொடர்ந்து ஆடப்படும். இந்த காலக் கட்டத்திற்குள், இரண்டாம் குழு எத்தனை முறை பந்தைப் பிடித்து, எத்தனை வெற்றி எண்கள் பெற்றது என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, தடுத்தாடிய முதற் குழுவினா முன் போல ஆடத் தொடங்குவார்கள்.
அவர்களுக்கும் அதே கால அளவைக் கொடுத்து இறுதியில் எந்தக் குழு அதிக வெற்றி எண்களைப் பெற்றிருக்கிறது என்று கண்டுபிடித்து, அந்தக் குழுவே வென்றது என்று அறிவிக்க வேண்டும்.
குறிப்பு: 1. பந்தை மேலாகத் தன் பாங்கருக்கு எறியும் பொழுது, எட்டாத உயரத்தில் எறியக் கூடாது. ஆட்டக்காரர்கள் நிற்பதற்கு இடை இடையே (இடைவெளியில்) எறிய வேண்டும். இல்லாவிடில் நிற்பவர்களின் கால்களு க்கிடையே அல்லது இடைவெளியில் போவதுபோல உருட்டிவிடச் செய்யலாம்.
2. தடுத்தாடும் முதல் குழுவைச் சேர்ந்தவர்கள், பந்தை கையால் பிடிக்கக்கூடாது. ஆனல் தட்டிவிடலாம். காலால் உதைத்துத் தள்ளலாம். அவ்வாறு கையால் தட்டிவிடுகிற, உதைத்துத் தள்ளுகிற பந்து இரண்டாவது குழுவினரிடம் செல்வதுபோல அமைய வேண்டும். அவர்களைக் கடந்து அதிக தூரம் போவது போல் குத்தவோ, உதைக்கவோ கூடாது.
3. முதல் வட்டத்தில் நிற்கும் தடுப்பாளர்கள், தாங்கள் நிற்கும் கோட்டைக் கடந்து வட்டத்திற் குள்ளே போய் பந்தைத் தடுக்கக்கூடாது.
இவ்வாறு விதிகளைக் கடைப்பிடித்து ஆடினால், ஆட்டம் இனிமையானதாக அமையும். பொழுதும் இன்பமாகக் கழியும்.