பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/தட்டுநடை

விக்கிமூலம் இலிருந்து


13. தட்டு நடை

ஆட்ட அமைப்பு : கைவசம் இருக்கின்ற தட்டுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆட்டத்தை மாற்றி அமைத்துக் கொண்டு ஆடலாம். விருந்துக்குப் பயன்படுத்துகின்ற தட்டுக்கள் கிடைக்காவிடில், கனம் அதிகம் இல்லாத செங்கல் அல்லது கட்டைகளையும் இந்த ஆட்டத்தில் பயன்படுத்திக் கொண்டு ஆடி மகிழலாம்.


16 தட்டுக்கள் தான் கைவசம் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம், அப்பொழுது நான்கு நான்கு ஆட்டக்காரர்களாகப் ’பிரித்து வைத்து, ஒரு முறை இந்தத் தட்டு நடைப் போட்டியை நடத்திக் கொள்ளலாம்.


முதலில் நடக்கத் தொடங்கும் கோடு (starting Line) ஒன்றைப் போட்டு, அதிலிருந்து 30 அல்லது 35 அடி தூரத்திற்கு அப்பால், நடந்து முடிக்கும் கோடு (Finishing Line) ஒன்றைப் போட்டு வைத்துக் கொண்டு, போட்டியைத் தொடங்கலாம்.  ஆடும் முறை: ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் இரண்டு தட்டுக்கள் தரவேண்டும். அந்தத் தட்டுக்களுடன், ஒவ்வொரு ஆட்டக்காரரும் நடக்கத் தொடங்கும் கோட்டில் வந்து நிற்க வேண்டும். ஆட்டத்தை நடத்துபவரின் சைகைக்குப் பிறகு ஆட்டக்காரர்கள் நடக்கத் தொடங்க வேண்டும்.

முதல் தட்டை தங்கள் முன்னே வைத்து. அதில் ஒரு காலை வைத்து, அடுத்த தட்டை அதற்கு முன்னால் வைத்து அடுத்துக் காலை வைத்து, பிறகு முதல் தட்டை எடுத்துக் கொண்டு அதற்கும் முன்னே வைத்து, முன்போல் முதல் காலை வைத்து இப்படியாகத் தட்டை எடுத்து எடுத்து மாற்றி மாற்றி வைத்து, முன்னேறிச் செல்ல வேண்டும். -

தட்டின்மீது கால் வைத்துத்தான் நடந்து செல்ல வேண்டும். தரையின் மீது காலை ஊன்றினாலும் அல்லது தடுமாறிப் போய் கீழே விழுந்தாலும் கூட அவர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார்

இவ்வாறு சரியான முறையில் தட்டின்மீதே, நடந்து யார் முதலில் எல்லைக் கோட்டை அடைகின்றாரோ அவரே வெற்றி பெற்றவராவார்.

குறிப்பு : போட்டியைத் தொடங்கும் பொழுது கையில் இரண்டு தட்டுக்கள் இருப்பது 

போல், கோட்டை அடைந்து முடிக்கும் பொழுதும் கையில் இரண்டு தட்டுக்கள் இருக்கவேண்டும்.

2. ஒரு தட்டின்மீது நின்று மறுதட்டை வைத்து காலை வைக்கும் பொழுதும், பிறகு எடுக்கும் பொழுதும் ஒரு காலில் நிற்கவும். அப்படியே பின் புறமாகவும் முன்புறமாகவும் குனிய நேர்வதால் உடல் சமநிலை இழந்து கீழே விழநேரிடும் என்பதால், விரைவாகச் செய்தாலும் நிதானமாகச் செய்ய வேண்டும்.

தரையில் கால் பட்டால் ஆட்டம் இழக்க நேரிடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.