உள்ளடக்கத்துக்குச் செல்

பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/யாராக இருக்கும்?

விக்கிமூலம் இலிருந்து


4. யாராக இருக்கும்?


ஆட்டத்தில் பங்கு பெற விரும்பும் அனைவரும் இதில் பங்கு பெற்று ஆடி மகிழலாம். இந்த விளையாட்டானது ஒடி ஆடும் ஆட்டமல்ல, உட்கார்ந்த இடத்திலேயே சிந்தனைக்கு வேலை கொடுத்து, உரிய ஆளைக் கண்டுபிடித்து, தங்கள் ஆற்றலை அறிந்து மகிழ்ந்திட உதவும் விளையாட்டும் ஆகும்.

கூட்டத்தில் உள்ளவர்களில் ஒருவரை முதலில் தேர்ந்தெடுத்துக் கொண்டு, பிறகு அனைவரிடமும் ஆட்டம் எவ்வாறு நடைபெறப் போகிறது என்பதையும் தெளிவாக விளக்கி விடவேண்டும். அதன் பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர், அவர்கள் கண்ணில் படாமல் மறைவிடம் செல்ல அனுமதிக்கப்படுவார். -

மறைவிடம் சென்ற நபர், தனக்கு அதிகமாகத் தெரிந்த அல்லது பழக்கப்பட்ட ஒருவரைப் பற்றி சிந்தித்து ஒரு முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு முடிவுக்கு வருகிற பொழுது, தான் குறிப் 

பிடப் போகின்ற நபரைப் பற்றியும், கூட்டித்தில் உள்ள அத்தனை ஆட்டக்காரர்களுக்கும் தெரிந்தவராகவும் இருக்க வேண்டியது மிக மிக முக்கியமான கருத்தாகும்.

இவர் சிந்தனைக்கு வருகின்றவர், அக்கூட்டத்திற்குத் தலைவராகவும் இருக்கலாம். அல்லது புகழ் பெற்ற நடிக நடிகையாகராகவோ அல்லது அரசியல் தலைவராகவோ இருக்கலாம்.

அவரது நினைவு வரும் வகையில், அங்க அசைவுகளால், நடந்து செல்லும் முறையால் அல்லது தன்னையறியாமல் அடிக்கடி செய்யும் செயல் முறை யால் (Aamerism) நடித்துக் காட்ட வேண்டியதுதான் ஆட்டத்தின் முக்கியமான கட்டமாகும்.

அவ்வாறு அவர் நடித்துக் காட்டிய பிறகு, அந்த ஆட்டத்தை நடத்துகின்றவர், வரிசைக்கிரமமாக, ஒவ்வொருவராகக் கேட்டுக் கொண்டே வரவேண்டும்

கண்டவற்றைக் கொண்டு, சரியாகக் கண்டு பிடித்துச் சொல்பவர், சைகை செய்து நடித்துக் காட்டுபவராக மாற, தனி இடத்திற்குச் செல்ல வேண்டும். இவ்வாறு ஆட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

குறிப்பு: 1. குறிப்பிட்டுக் காட்டுகின்ற நபர் அந்தக் கூட்டத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் 

தெரிந்தவராக இருப்பது நல்லது. அப்போழுது தான் எல்லோரும் உற்சாகமாக இதில் கலந்து கொள்ள முடியும்.

2. பளிச்சென்று ஆளைப் புரிந்துகொள்ளும் வகையில், சைகையால் பல குறிப்புக்களையும் காட்டாமல், ஒருசில அசைவுகள், ஜாடையால் கூறினால்தான், மற்றவர்கள் சிந்திக்கவும், யூகிக்க முயலவும் வாய்ப்பளிக்கும் வகையில் ஆட்டம் அமையும்.

3. கூட்டத்தில் உள்ளவர்கள், யாரென்று உடனே தெரிந்து கொண்டாலும், தனக்குத் தெரியும் என்று கத்திக் கூச்சல் போடக் கூடாது. ஒவ் வொருவருக்கும் வரிசை வரிசையாக வாய்ப்பு வரும் என்பதால், தங்களுக்குரிய வாய்ப்பு வரும் வரை காத்திருந்து ஆடினால்தான், ஆட்டம் இன்னும் ஆனந்தமாக அமையும்.

4. சைகை செய்பவர்கள் சுறுசுறுப்பாகவும்: பரபரப்பாகவும், ஆட்டம் அமையும் வகையில் நடித்துக் காட்டவேண்டும்.