பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/வாய்பிடி ஓட்டம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
21. வாய் பிடி ஓட்டம்


இந்த ஆட்டத்தில் 20 அல்லது 25 பேர் வரை கலந்து கொள்ளலாம். அதாவது இந்த ஆட்டத்திற்கு, தேவையான பொருள்கள் காலி இங்க் பாட்டிலும், பலூனும், மொத்தம் எத்தனை இருக்கின்றனவோ அத்தனை ஆட்டக்காரர்கள் பங்கு பெறலாம்.

ஆட்டக்காரர்கள் நிற்கும் முறை:

ஒவ்வொரு ஆட்டக்காரரும் தனக்கு கொடுக்கப்பட்ட ஒரு பலூன் ஒரு காலி இங்க் பாட்டிலுடன் குறிக்கப்பட்டிருக்கும்கோட்டின் முன்னால் வந்து வரிசையாக (பக்கவாட்டில் இருப்பதுபோல) நிற்க வேண்டும். அவர்களுக்கு முன்புறமாக 30 அடி துாரத்தில் ஒரு எல்லைக்கோடு குறிக்கப்பட்டிருக்கும் ஆட்டம் நடத்துபவரின் விசில் ஒலிக்குப் பிறகு ஆட்டம் ஆரம்பம் ஆகும்.

ஆடும் முறை:

ஆட்டம் நடத்துபவரின் விசில் ஒலி கேட்டவடன், ஒவ்வொரு ஆட்டக்காரரும் தன் கையிலுள்ள பலூனை இங்க் பாட்டிலுக்குள் நுழைத்துக் கொண்டு ஊத வேண்டும். ஊதிய பிறகு, பற்களினால் பலூன் வாயை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது பலூன் பிடிப்பினாலே இங்க்பாட்டில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இப்படியாக இங்க் பாட்டில் தொங்கும்படியாக வாயிலே கவ்விப்பிடித் திருப்பவர்கள், ஒடத்தொடங்கி எதிரே உள்ள எல்லைக்கோட்டை அடைந்து கடந்துவிட்டு, மீண்டும் ஒடத்தொடங்கிய கோட்டிற்கே வந்து சேரவேண்டும் என்பதுதான் ஆடும் முறையாகும்.

குறிப்பு :

1. பலூனை இங்க் பாட்டிலுக்குள் விட்டு நன்றாக ஊதி பலூன் வாயை நன்றாக சுழற்றி முடி அதை பற்களால் கவ்விக் கொண்டிருப்பவரே ஒடத் தொடங்க வேண்டும். அந்த நிலைக்கு வராதவர் ஒடவே கூடாது.

2. ஒடுகின்ற இடை வழியில் பலூனில் காற்று போய் இங்க் பாட்டில் கீழே விழுந்து விட்டால், அதே இடத்தில் நின்று மீண்டும் முன்போல செய்து விட்ட பிறகுதான் ஓடவேண்டும்.

3. விதிமுறைகளின்படி ஒடி முதலில் வருகின்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்.