மகாவம்சம்/தாடகாதா பயணம்
முன்பு ஒரு காலத்தில் சம்புத்த தீபம்கர என்பவரை புத்தர் சந்தித்து இந்த உலகை தீமைகளில் இருந்து காப்பாற்றுவேன் என உறுதி பூண்டார். அத்துடன் அவர் கோதன்னா முனிவர் மங்கலா, சுமன்னா, புத்த ரேவதா, முனிவர் சோபிதா, சம்புத்த அனொமதாசி, பதுமா, நாராதா, சம்புத்த பதுமுத்தரா, தாதகாத சுமேதா, சுஜாதா, பியதாசி, அட்டதாசி, தம்மதாசி, சித்தத்தா, திசா, வெற்றி வீரன் புசா, விபாசி, சம்புத்த சிக்கி, சம்புத்த விசப்பு, சம்புத்தா போன்றோரையும் போற்றி வணங்கினார். அத்துடன் காகுசந்தா, கோனகாமன்னா மற்றும் புனித காசியப்பா போன்ற இருபத்தி நான்கு சம்புத்தர்கள் மூலம் எதிர்காலத்தில் தான் புத்தராகப் போகும் உண்மையை அறிந்துக் கொண்டவர் தனது அனைத்து கடமைகளையும் முழுமையான செய்து முடித்தப்பின்னர் ஞானம் அடைந்து உலகின் துயரங்களை துடைக்க கௌதமராக உலா வந்தார்.
இந்தியாவில் மகத நாட்டில் உருவெலா எனும் இடத்திற்குச் சென்று ஒரு அரச மரத்தடியில் அமர்ந்து, ஏழு வாரங்கள் தனது அனைத்து புலன்களையும் அடக்கி தவம் இருந்து, ஒரு விசாக மாத பௌரணமி நாளில் ஞானம் பெற்றார்.
தனக்கு கிடைக்கப் போகும் ஞானம் குறித்து அவர் முன்னரே அறிந்து இருந்ததனால், அவரால் தனது இன்ப துன்ப உணர்ச்சிகள் அனைத்தையும் கூட கட்டுப்படுத்தி வைக்க முடிந்தது. அதன் பின்னர் புத்தர் வாரணாசிக்குச் சென்று வெயில் மழை என எதனையும் பொருட்படுத்தாது, நீதி நேர்மை போன்றவற்றை எடுத்துரைத்து தனது போதனைகளை பரப்பத் தொடங்கினார். அத்துடன் அங்கு அறுபது சீடர்களை உருவாக்கினார். அதன் பின்னர் பாதா எனும் பிரிவில் மேலும் முப்பது சீடர்களை உருவாக்கினார். கடும் குளிர் காலத்தையும் பொருட்படுத்தாமல் உருவெலாவில் இருந்து கொண்டு காசப்பாவிடம் இருந்த ஆயிரம் ஜட்டில்லாக்கள் என்போரையும் தனது மார்க்கத்தில் இணைத்துக்கொண்டார்.