மதுரைக்காஞ்சி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

பத்துப்பாட்டுத் தொகைநூலுள் ஆறாவதாக விளங்கும் மதுரைக்காஞ்சி

ஆசிரியர்: மாங்குடி மருதனார்

பாட்டுடைத்தலைவன்: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

மதுரைக்காஞ்சி மூலம்[தொகு]

வரி01 முதல் 406 வரை

{பார்க்க:மதுரைக்காஞ்சி-பிற்பகுதி வரிகள் 407 முதல் பாட்டு முடிய.}

(பிழையில்லா மெய்ப்பதிப்பு)

இப்பாடலின் பெயர் பற்றிய

நச்சினார்க்கினியர் விளக்கம்:

"இப்பாட்டிற்கு மாங்குடிமருதனார் மதுரைக்காஞ்சி யென்று, துறைப் பெயரானன்றித் திணைப்பெயராற் பெயர் கூறினார். இத்திணைப் பெயர் பன்னிருபடல முதலிய நூல்களாற் கூறிய திணைப்பெயரன்று, தொல்காப்பியனார் கூறிய திணைப்பெயர்ப்பொருளே இப்பாட்டிற்குப் பொருளாகக் கோடலின். வஞ்சி மேற் செல்லலானும், காஞ்சி எஞ்சாதெதிர் சென்றூன்றலானும், "வஞ்சியுங் காஞ்சியுந் தம்முண் மாறே" எனப் பன்னிருபடலத்திற் கூறிய திணைப்பெயர் இப்பாட்டிற்குப் பொருளன்மையுணர்க. அவர்முதுமொழிக்காஞ்சி முதலியவற்றைப் பொதுவியலென்று ஒருபடலமாக்கிக் கூறலின், அவை திணைப் பெயராகாமை யுணர்க.
இனி மதுரைக்காஞ்சியென்றதற்கு மதுரையிடத்து அரசற்குக் கூறிய காஞ்சியென விரிக்க. இஃது உருபும் பொருளும் உடன்றொக்கது. "காஞ்சி தானே பெருந்திணைப் புறனே" (தொல்.புறத். சூ.22) என்பதனாற் காஞ்சி பெருந்திணைக்குப் புறனாயிற்று. அது, "பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானு, நில்லா வுலகம் புல்லிய நெறித்தே" (தொல்.புறத்.சூ.23) என்பதாம்.

இதன்பொருள்:

பாங்கு அருசிறப்பின்= தனக்குத் துணையில்லாத வீடுபேறு நிமித்தமாக; பல ஆற்றானும்= அறம் பொருள் இன்பமென்னும் பொருட்பகுதியானும், அவற்று உட்பகுதியாகிய உயிரும் யாக்கையும் செல்வமும் இளமையு முதலியவற்றானும்; நில்லா உலகம் புல்லிய நெறித்து= நிலைபேறில்லாத உலகியற்கையைப் பொருந்திய நன்னெறியினை உடைத்து அக்காஞ்சி யென்றவாறு.
எனவே, வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமை சான்றோரையுங் குறிப்பினது காஞ்சித்திணையென்பது பொருளாயிற்று.
இச்செய்யுட் புலவர் இப்பொருளே கோடலின், யாம் இப்பொருளே தர உரைகூறுகின்றோம்."

-நச்சினார்க்கினியர் உரையிலிருந்து.

நூல்[தொகு]

ஓங்குதிரை வியன்பரப்பி // 01 // ஓங்கு திரை வியன் பரப்பின்
னொலிமுந்நீர் வரம்பாகத் // 02 // ஒலி முந்நீர் வரம்பாக
தேன்றூங்கு முயர்சிமைய // 03 // தேன் தூங்கும் உயர் சிமைய
மலைநாறிய வியன்ஞாலத்து //04 // மலை நாறிய வியன் ஞாலத்து
வலமாதிரத்தான் வளிகொட்ப // 05 // வலம் மாதிரத்தான் வளி கொட்ப
வியனாண்மீ னெறியொழுகப் // 06 // வியல் நான்மீண் நெறி ஒழுக
பகற்செய்யுஞ் செஞ்ஞாயிறு // 07 // பகல் செய்யும் செ ஞாயிறு
மிரவுச்செய்யும் வெண்டிங்களு // 08 // இரவு செய்யும் வெள் திங்களும்
மைதீர்ந்து கிளர்ந்துவிளங்க // 09 // மை தீர்ந்து கிளர்ந்து விளங்க
மழைதொழி லுதவ மாதிரங் கொழுக்கத் // 10 // மழை தொழில் உதவ மாதிரம் கொழுக்க
தொடுப்பி னாயிரம் வித்தியது விளைய // 11 // தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனு மரனும் பயனெதிர்பு நந்த // 12 // நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த
நோயிகந்து நோக்குவிளங்க // 13 // நோய் இகந்து நோக்கு விளங்க
மேதக மிகப்பொலிந்த // 14 // மேதக மிக பொலிந்த
வோங்குநிலை வயக்களிறு // 15 // ஓங்கு நிலை வய களிறு
கண்டுதண்டால் கட்கின்பத் // 16 // கண்டு தண்டால் கட்கு இன்பத்து
துண்டுதண்டா மிகுவளத்தா // 17 // உண்டு தண்டா மிகு வளத்தால்
னுயர்பூரிம விழுத்தெருவிற் // 18 // உயர் பூரிம விழு தெருவின்
பொய்யறியா வாய்மொழியாற் // 19 //பொய் அறியா வாய் மொழியான்
புகழ்நிறைந்த நன்மாந்தரொடு // 20 // புகழ் நிறைந்த நல் மாந்தரொடு
நல்லூழி யடிப்படரப் // 21 // நல் ஊழி அடி படர
பல்வெள்ள மீக்கூற // 22 // பல் வெள்ளம் மீ கூற
வுலக மாண்ட வுயர்ந்தோர் மருக // 23 // உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக
பிணக்கோட்ட களிற்றுக்குழும்பி // 24 // பிணம் கோட்ட களிறு குழும்பின்
னிணம்வாய்ப்பெய்த பேய்மகளி // 25 // நிணம் வாய் பெய்த பேய் மகளிர்
ரிணையொலியிமிழ் துணங்கைச்சீர்ப் // 26 // இணை ஒலி இமிழ் துணங்கை சீர்
பிணையூப மெழுந்தாட // 27 // பிணை யூபம் எழுந்து ஆட
வஞ்சுவந்த போர்க்களத்தா // 28 // அஞ்சு வந்த போர் களத்தான்
னாண்டலை யணங்கடுப்பின் // 29 // ஆண்டலை அணங்கு அடுப்பின்
வயவேந்த ரொண்குருதி // 30 // வய வேந்தர் ஒள் குருதி
சினத்தீயிற் பெயர்புபொங்கத் // 31 // சின தீயின் பெயர்பு பொங்க
தெறலருங் கடுந்துப்பின் // 32 // தெறல் அரும் கடு துப்பின்
விறல்விளங்கிய விழுச்சூர்ப்பிற் // 33 // விறல் விளங்கிய விழு சூர்ப்பின்
றொடித்தோட்கை துடுப்பாக // 34 // தொடி தோள் கை துடுப்பாக
வாடுற்ற வூன்சோறு // 35 // வாடுற்ற ஊன் சோறு
நெறியறிந்த கடிவாலுவ // 36 // நெறி அறிந்த கடி வாலுவன்
னடியொதுங்கிப் பிற்பெயராப் // 37 // அடி ஒதுங்கி பின் பெயரா
படையோர்க்கு முருகயர // 38 // படையோர்க்கு முருகு அயர
வமர்கடக்கும் வியன்றானைத் // 39 // அமர் கடக்கும் வியன் தானை
தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற் // 40 // தென்னவன் பெயரிய துன் அரும் துப்பின்
றொன்முது கடவுட் பின்னர் மேய // 41 // தொல் முது கடவுள் பின்னர் மேய
வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந // 42 // வரை தாள் அருவி பொருப்பின் பொருந

[தொகு]

விழுச்சூழிய விளங்கோடைய // 43 // விழு சூழிய விளங்கு ஓடைய
கடுஞ்சினத்த கமழ்கடாஅத் // 44 // கடும் சினத்த கமழ் கடாஅத்து
தளறுபட்ட நறுஞ்சென்னிய // 45 // அளறு பட்ட நறும் சென்னிய
வரைமருளு முயர்தோன்றல // 46 // வரை மருளும் உயர் தோன்றல
வினைநவின்ற பேர்யானை // 47 // வினை நவின்ற் பேர்? யானை
சினஞ்சிறந்து களனுழக்கவு // 48 // சினம் சிறந்து களன் உழக்குவும்
மாவெடுத்த மலிகுரூஉத்துக // 49 // மா எடுத்த மலி குரூஉ துகள்
ளகல்வானத்து வெயில்கரப்பவும் // 50 // அகல் வானத்து வெயில் கரப்பவும்
வாம்பரிய கடுந்திண்டேர் // 51 // வாம் பரிய் கடும் திண் தேர்
காற்றென்னக் கடிதுகொட்பவும் // 52 // காற்று என்ன கடிது கொட்பவும்
வாண்மிகு மறமைந்தர் // 53 // வாள் மிகு மறம் மைந்தர்
தோண்முறையான் வீறுமுற்றவு // 54 // தோள் முறையான் வீறு முற்றவும்
மிருபெரு வேந்தரொடு வேளிர் சாயப் // 55 // இரு பெரு வேந்தரொடு வேளிர் சாய
பொருதவரைச் செருவென்று // 56 // பொருதவரை செரு வென்று
மிலங்கருவிய வரைநீந்திச் // 57 // இலங்கு அருவிய வரை நீந்தி
சுரம்போழ்ந்த விகலாற்ற // 58 // சுரம் போழ்ந்து இகல் ஆற்ற
லுயர்ந்தோங்கிய விழுச்சிறப்பி // 59 // உயர்ந்து ஓங்கிய விழு சிறப்பின்
னிலந்தந்த பேருதவிப் // 60 // நிலம் தந்த பேர் உதவி
பொலந்தார் மார்பி னெடியோ னும்பன் // 61 // பொலம் தார் மார்பின் நெடியோன் உம்பல்
மரந்தின்னூஉ வரையுதிர்க்கு // 62 // மரம் தின்னூஉ வரை உதிர்க்கும்
நரையுருமி னேறனையை // 63 // நரை உருமின் ஏறு அனையை
யருங்குழுமிளைக் குண்டுகிடங்கி // 64 // அரும் குழு மிளை குண்டு கிடங்கின்
னுயர்ந்தோங்கிய நிரைப்புதவி // 65 // உயர்ந்து ஓங்கிய நிரை புதவின்
னெடுமதி னிரைஞாயி // 66 // நெடு மதில் நிரை ஞாயில்
லம்புமி ழயிலருப்பந் // 67 // அம்பு உமிழ் அயில் அருப்பம்
தண்டாது தலைச்சென்று// 68 // தண்டாது தலை சென்று
கொண்டுநீங்கிய விழுச்சிறப்பிற் // 69 // கொண்டு நீங்கிய விழு சிறப்பின்
றென்குமரி வடபெருங்கல் // 70 // தென் குமரி வட பெருங்கல்
குணகுடகட லாவெல்லைத் // 71 // குண குட கடலா எல்லை
தொன்றுமொழிந்து தொழில்கேட்ப // 72 // தொன்று மொழிந்து தொழில் கேட்ப
வேற்றமொடு வெறுத்தொழுகிய // 73 // வேற்றமொடு வெறுத்து ஒழுகிய
கொற்றவர்தங் கோனாகுவை // 74 // கொற்றவர் தம் கோன் ஆகுவை

[தொகு]

வானியைந்த விருமுந்நீர்ப் // 75 // வான் இயைந்த இரு முந்நீர்
பேஎநிலைஇய விரும்பௌவத்துக் // 76 // பேஎ நிலைஇய இரும் பௌவத்து
கொடும்புணரி விலங்குபோழக் // 77 // கொடு புணரி விலங்கு போழ
கடுங்காலொடு கரைசேர // 78 // கடும் காலொடு கரை சேர
நெடுங்கொடிமிசை யிதையெடுத் // 79 // நெடு கொடி மிசை இதை எடுத்து
தின்னிசைய முரசமுழங்கப் // 80 // இன் இசைய முரசம் முழங்க
பொன்மலிந்த விழுப்பண்ட // 81 // பொன் மலிந்த விழு பண்டம்
நாடார நன்கிழிதரு // 82 // நாடு ஆர நன்கு இழிதரும்
மாடியற் பெருநாவாய் // 83 // ஆடு இயல் பெரு நாவாய்
மழைமுற்றிய மலைபுரையத் // 84 // மழை முற்றிய மலை புரைய
துறைமுற்றிய துளங்கிருக்கைத் // 85 // துறை முற்றிய துளங்கு இருக்கை
தெண்கடற் குண்டகழிச் // 86 // தெள் கடல் குண்டு அகழி
சீர்சான்ற வுயர்நெல்லி // 87 // சீர் சான்ற உயர் நெல்லின்
னூர்கொண்ட வுயர்கொற்றவ // 88 // ஊர் கொண்ட உயர் கொற்றவ
நீர்த்தெவ்வு நிரைத்தொழுவர் // 89 //நீர் தெவ்வு நிரை தொழுவர்
பாடுசிலம்பு மிசையேற்றத் // 90 // பாடு சிலம்பு மிசை ஏற்றத்து?
தோடுவழங்கு மகலாம்பியிற் // 91 // தோடு வழங்கும் அகல் ஆம்பியின்?
கயனகைய வயனிறைக்கு // 92 // கயல் நகைய வயல் நிறைக்கு?
மென்றொடை வன்கிழாஅ // 93 // மென் தொடை வல் கிழாஅர்
ரதரி கொள்பவர் பகடுபூண் டெண்மணி// 94 // அதரி கொள்பவர் பகடு பூண் தெள் மணி
யிரும்பு ளோப்பு மிசையே யென்று // 95 // இரும் புள் ஓப்பும் இசையே என்று
மணிப்பூ முண்டகத்து மணன்மலி கானற் // 96 // மணி பூ முண்டகத்து மணல் மலி கானல்
பரதவர் மகளிர் குரவையொ டொலிப்ப // 97 // பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப
ஒருசார், விழவுநின்ற வியலாங்கண் // 98 // ஒருசார், விழவு நின்ற வியல் ஆங்கண்
முழவுத்தோண் முரட்பொருநர்க் // 99 // முழவு தோ் முரண் பொருநர்க்கு
குருகெழு பெருஞ்சிறப்பி // 100 // உரு கெழு பெரும் சிறப்பின்
னிருபெயர்ப் பேராயமொ // 101 // இரு பெயர் பேர் ஆயமொடு
டிலங்குமருப்பிற் களிறுகொடுத்தும் // 102 // இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும்
பொலந்தாமரைப் பூச்சூட்டியு // 103 // பொலம் தாமரை பூ சூட்டியும்
நலஞ்சான்ற கலஞ்சிதறும் // 104 // நலம் சான்ற கலம் சிதறும்
பல்குட்டுவர் வெல்கோவே // 105 // பல் குட்டுவர் வெல் கோவே

[தொகு]

கல்காயுங் கடுவேனிலொ // 106 // கல் காயும் கடு வேனிலோடு
டிருவானம் பெயலொளிப்பினும் // 107 // இரு வானம் பெயல் ஒளிப்பினும்
வரும்வைகன் மீன்பிறழினும் // 108 // வரும் வைகல் மீன் பிறழினும்
வெள்ளமா றாது விளையுள் பெருக // 109 // வெள்ளம் மாறாது விளையுள் பெருக
நெல்லி னோதை யரிநர் கம்பலை // 110 // நெல்லின் ஓதை அரிநர் கம்பலை
புள்ளிமிழ்ந் தொலிக்கு மிசையே யென்றுஞ் // 11// புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே? என்றும்
சலம்புகன்று சுறவுக்கலித்த //112 // சலம் புகன்று சுறவு கலித்த
புலவுநீர் வியன்பௌவத்து // 113 // புலவு நீர் வியன் பௌவத்து
நிலவுகானன் முழவுத்தாழைக் // 114 // நிலவு கானல் முழவு தாழை
குளிர்ப்பொதும்பர் நளித்தூவ // 115 // குளிர் பொதும்பர் நளி தூவ
னிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை // 116 // நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை
யிருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொ // 117 // இரு கழி செறுவின் வெள் உப்பு பகர்நரொடு
டொலியோவாக் கலியாணர் // 118 // ஒலி ஓவா கலி யாணர்
முதுவெள்ளிலை மீக்கூறும் // 119 // முது வெள் இலை மீ கூறும்
வியன்மேவல் விழுச்செல்வத் // 120 // வியன் மேவல் விழு செல்வத்து
திருவகையா னிசைசான்ற // 121 // இரு வகையான் இசை சான்ற
சிறுகுடிப் பெருந்தொழுவர் // 122 // சிறு குடி பெரு தொழுவர்
குடிகெழீஇய நானிலவரொடு // 123 // குடி கெழீஇய நால் நிலவரொடு
தொன்றுமொழிந்து தொழில்கேட்பக் // 124 // தொன்று மொழிந்து தொழில் கேட்ப
காலென்னக் கடிதுராஅய் // 125 // கால் என்ன கடிது உராஅய்
நாடுகெட வெரிபரப்பி // 126 // நாடு கெட எரி பரப்பி
யாலங்கானத் தஞ்சுவரவிறுத் // 127 // ஆலம் கானத்து அஞ்சுவர இறுத்து
தரசுபட வமருழக்கி // 128 // அரசுபட அமர் உழக்கி
முரசுகொண்டு களம்வேட்ட // 129 // முரசு கொண்டு களம் வேட்ட
வடுதிறலுயர் புகழ்வேந்தே // 130 // அடு திறல் உயர் புகழ் வேந்தே

[தொகு]

நட்டவர் குடியுயர்க்குவை // 131 // நட்டவர் குடி உயர்க்குவை
செற்றவ ரரசுபெயர்க்குவை // 132 // செற்றவர் அரசு பெயர்க்குவை
பேருலகத்து மேஎந்தோன்றிச் // 133 // பேர் உலகத்து மேஎ தோன்றி
சீருடைய விழுச்சிறப்பின் // 134 //சீர் உடைய விழு சிறப்பின்
விளைந்துமுதிர்ந்த விழுமுத்தி // 135 // விளைந்து முதிர்ந்த விழு முத்தின்
னிலங்குவளை யிருஞ்சேரிக் // 136 // இலங்கு வளை இரும் சேரி
கட்கொண்டிக் குடிப்பாக்கத்து // 137 // கள் கொண்டி குடி பாக்கத்து
நற்கொற்கையோர் நசைப்பொருந // 138 // நல் கொற்கையோர் நசை பொருந
செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென் // 139 // செற்ற தெவ்வர் கலங்க தலைச்சென்று
றஞ்சுவரத் தட்கு மணங்குடைத் துப்பிற் //140 // அஞ்சுவர தட்கும் அணங்கு உடை துப்பின்
கோழூஉன்குறைக் கொழுவல்சிப் // 141 // கோழ் ஊஉன் குறை கொழு வல்சி
புலவுவிற் பொலிகூவை // 142 // புலவு வில்? பொலி கூவை
யொன்றுமொழி யொலியிருப்பிற் // 143 // ஒன்று மொழி ஒலி இருப்பின்
றென்பரதவர் போரேறே // 144 // தென் பரதவர் போர் ஏறே
யரியவெல்லா மெளிதினிற்கொண் // 145 // அரிய எல்லாம் எளிதினில் கொண்டு
டுரிய வெல்லா மோம்பாது வீசி // 146 // உரிய எல்லாம் ஓம்பாது வீசி
நனிபுகன் றுறைது மென்னா தேற்றெழுந்து // 147 // நனி புகன்பறு உறைதும் என்னாது ஏற்று எழுந்து
பனிவார் சிமையக் கானம் போகி // 148 // பனி வார் சிமைய கானம் போகி
யகநாடு புக்கவ ரருப்பம் வௌவி // 149 // அக நாடு புக்கவர் அருப்பம் வௌவி
யாண்டுபல கழிய வேண்டுபுலத் திறுத்து //150 // யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து
மேம்பட மரீஇய வெல்போர்க் குருசி // 151 // மேம்பட மரீஇய வெல் போர் குருசில்
லுறுசெறுநர் புலம்புக்கவர் // 152 // உறு செறுநர் புலம் புக்குஅவர்
கடிகாவி னிலைதொலைச்சி // 153 // கடி காவின் நிலை தொலைச்சி
யிழிபறியாப் பெருந்தண்பணை // 154 // இழிபு அறியா பெரு தண் பணை
குரூக்கொடிய வெரிமேய // 155 // குரூஉ கொடிய எரி மேய
நாடெனும்பேர் காடாக // 154 // நாடு எனும் பெயர் காடு ஆக
வாசேந்தவழி மாசேப்ப // 155 // ஆ சேந்த வழி மா சேப்ப
வூரிருந்தவழி பாழாக // 156 // ஊர் இருந்த வழி பாழாக
விலங்குவளை மடமங்கையர் // இலங்கு வளை மட மங்கையர்
துணங்கையஞ்சீர்த் தழூஉமறப்ப // 160 // துணங்கை அம்சீர் தழூஉ மறப்ப
வவையிருந்த பெரும்பொதியிற் // 161 // அவை இருந்த பெரு பொதியில்
கவையடிக் கடுநோக்கத்துப் // 162 // கவை அடி கடு நோக்கத்து
பேய்மகளிர் பெயர்பாட // 163 // பேய் மகளிர் பெயர் பாட
வணங்குவழங்கு மகலாங்க // 164 // அணங்கு வழங்கும் அகல் ஆங்கண்
ணிலத்தாற்றுங் குழூஉப்புதவி // 165 // நிலத்து ஆற்றும் குழூஉ புதவின்
னரந்தைப் பெண்டி ரினைந்தன ரகவக் // 166 // அரந்தை பெண்டிர் இனைந்தனர் அகவ
கொழும்பதிய குடிதேம்பிச் // 167 // கொழும் பதிய குடி தேம்பி
செழுங்கேளிர் நிழல்சேர // 168 //செழு கேளிர் நிழல்சேர
நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளிக் // 169 // நெடு நகர் வீழ்ந்த கரி குதிர் பள்ளி
குடுமிக் கூகை குராலொடு முரலக் // 170 // குடுமி கூகை குராலொடு முரல
கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கைக் // 171 // கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கை
களிறுமாய் செருந்தியொடு கண்பமன் றூர்தர // 172 // களிறு மாய் செருந்தியொடு கண்பு?அமன்று ஊர்தர
நல்லேர் நடந்த நசைசால் விளைவயற் // 173 // நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல்
பன்மயிர்ப் பிணவொடு கேழ லுகள // 174 // பன் மயிர் பிணவொடு கேழல் உகள
வாழா மையின் வழிதவக் கெட்டுப் // 175 // வாழாமையின் வழி தவ கெட்டு
பாழா யினநின் பகைவர் தேஎ // 176 // பாழாயின் நின் பகைவர் தேஎம்

[தொகு]

மெழாஅத்தோ ளிமிழ்முழக்கின் // 177 // எழாஅ தோள் இமிழ் முழக்கின்
மாஅத்தா ளுயர்மருப்பிற் // 178 // மாஅ தாள் உயர் மருப்பின்
கடுஞ்சினத்த களிறுபரப்பி // 179 // கடும் சினத்த களிறு பரப்பி
விரிகடல் வியன்றானையொடு // 180 // விரிகடல் வியன் தானையொடு
முருகுறழப் பகைத்தலைச்சென் // 181 // முருகு உறழ பகை தலைச்சென்று
றகல்விசும்பி னார்ப்பிமிழப் // 182 // அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ
பெயலுறழக் கணைசிதறிப் // 183 // பெயல் உறழ கணை சிதறி
பலபுரவி நீறுகைப்ப // 184 // பல புரவி நீறு உகைப்ப
வளைநரல வயிரார்ப்பப்// 185 // வளை நரல வயிர் ஆர்ப்ப
பீடழியக் கடந்தட்டவர் // 186 // பீடு அழிய கடந்து அட்டவர்
நாடழிய வெயில்வௌவிச் // 187 // நாடு அழிய எயில் வௌவி
சுற்றமொடு தூவறுத்தலிற் // 188 // சுற்றமொடு தூ அறுத்திலின்
செற்ற தெவ்வர் நின்வழி நடப்ப // 189 // செற்ற தெவ்வர் நின் வழி நடப்ப
வியன்கண் முதுபொழின் மண்டில முற்றி // 190 // வியன் கண் முது பொழில் மண்டிலம் முற்றி
யரசியல் பிழையா தறநெறி காட்டிப் // 191 // அரசியல் பிழையாது அறம் நெறி காட்டி
பெரியோர் சென்ற வடிவழிப் பிழையாது // 192 // பெரியோர் சென்ற அடி வழி பிழையாது
குடமுதற் றோன்றிய தொன்றுதொழு பிறையின் // 193 // குட முதல் தோன்றிய தொன்று தொழு பிறையின்
வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றங் // 194 // வழி வழி சிறக்க நின் வலம்படு கொற்றம்
குணமுதற் றோன்றிய வாரிருண் மதியிற் //195 // குண முதல் தோன்றிய ஆர் இருள் மதியின்
றேய்வன கெடுகநின் றெவ்வ ராக்க // 196 // தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம்
முயர்நிலை யுலக மமிழ்தொடு பெறினும் // 197 // உயர் நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
பொய்சே ணீங்கிய வாய்நட் பினையே // 198 // பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே
முழங்குகட லேணி மலர்தலை யுலகமொ // 199 // முழங்கு கடல் ஏணி மலர்தலை உலகமொடு
டுயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் // 200 // உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும்
பகைவர்க் கஞ்சிப் பணிந்தொழு கலையே // 201 // பகைவர்க்கு அஞ்சி பணிபு ஒழுகலையே
தென்புல மருங்கின் விண்டு நிறைய // 202 // தென் புலம் மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும் // 203 // வாணன் வைத்த விழு நிதி பெறினும்
பழிநமக் கெழுக வென்னாய் விழுநிதி // 204 // பழி நமக்கு எழுக என்னாய் விழு நிதி
யீத லுள்ளமொ டிசைவேட் குவையே***** // 205 // ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே

[தொகு]

யன்னாய் நின்னொடு முன்னிலை யெவனோ // 206 // அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ
கொன்னொன்று கிளக்குவ லடுபோ ரண்ணல் // 207 // கொன் ஒன்று கிளக்குவல் அடு போர் அண்ணல்
கேட்டிசின் வாழி கெடுகநின் னவலங் // 208 // கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம்
கெடாது நிலைஇயர்நின் சேண்விளக்கு நல்லிசை // 209 // கெடாது நிலைஇயர் நின் சேண் விளங்கு நல் இசை
தவாப்பெருக்கத் தறாயாண // 210 // தவா பெருக்கத்து அறா யாணர்
ரழித்தானாக் கொழுந்திற்றி // 211 // அழித்தானா கொழும் திற்றி
யிழித்தானாப் பலசொன்றி // 212 // இழித்தானா பல சொன்றி
யுண்டானாக் கூர்நறவிற் // 213 // உண்டானா கூர் நறவில்?
றின்றானா வினவைக // 214 // தின்றானா இன வைகல்
னிலனெடுக் கல்லா வொண்பல் வெறுக்கைப் // 215 // நிலன் நெடுக்கல்லா ஒள் பல் வெறுக்கை
பயனற வறியா வளங்கெழு திருநகர் // 216 // பயன் அற? அறியா வளம் கெழு திரு நகர்
நரம்பின் முரலு நயம்வரு முரற்சி // 217 // நரம்பின் முரரும் நயம் வரு முரற்சி
விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்பப் // 218 // விறலியர் வறு கை குறு தொடி செறிப்ப
பாண ருவப்பக் களிறுபல தரீஇக் // 219 // பாணர் உவப்ப களிறு பல தரீஇ
கலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ // 220 // கலந்தோர் உவப்ப எயில் பல கடைஇ
மறங்கலங்கத் தலைச்சென்று // 221 // மறம் கலங்க தலைச்சென்று
வாளுழந்ததன் றாள்வாழ்த்தி // 224 // வாள் உழந்த தன் தாள் வாழ்த்தி
நாளீண்டிய நல்லகவர்க்குத் // 225 // நாள் ஈண்டிய நல் அகவர்க்கு
தேரோடு மாசிதறிச் // 226 // தேரோடு மா சிதறி
சூடுற்ற சுடர்ப்பூவின் // 225 // சூடு உற்ற சுடர் பூவின்
பாடுபுலர்ந்த நறுஞ்சாந்தின் // 226 // பாடு புலர்ந்த நறும் சாந்தின்
விழுமிய பெரியோர் சுற்ற மாகக் // 227 // விழுமிய பெரியோர் சுற்றம் ஆக
கள்ளி னிரும்பைக் கலஞ்செல வுண்டு // 228 // கள்ளின் இரும்பை கலம் செல் உண்டு
பணிந்தோர் தேஎந் தம்வழி நடப்பப் // 229 // பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப
பணியார் தேஎம் பணித்துத்திறை கொண்மார் // 230 // பணியார் தேஎம் பணித்து திறை கொண்மார்
பருந்துபறக் கல்லாப் பார்வற் பாசறைப் // 231 // பருந்து பறக்கல்லா பார்வல் பாசறை
படுகண் முரசங் காலை யியம்ப // 232 // படு கண் முரசம் காலை இயம்ப
வெடிபடக் கடந்து வேண்டுபுலத் திறுத்த // 233 // வெடி பட கடந்து வேண்டு புலத்து இறுத்த
பணைகெழு பெருந்திறற் பல்வேன் மன்னர் // 234 // பணை கெழு பெரும் திறல் பல் வேல் மன்னர்
கரைபொரு திரங்குங் கனையிரு முந்நீர்த் // 235 // கரை பொருது இரங்கும் கனை இரு முந்நீர்
திரையிடு மணலினும் பலரே யுரைசெல // 236 // திரை இடு மணலினும் பலரே உரை செல
மலர்தலை யுலக மாண்டுகழிந் தோரே // 237 // மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரே

[தொகு]

அதனால், குணகடல் கொண்டு குடகடன் முற்றி // 238 // அதனால்,குண கடல் கொண்டு குட கடல் மு்ற்றி
யிரவு மெல்லையும் விளிவிட னறியா // 239 // இரவும் எல்லையும் விளிவிடன் அறியாது
தவலு மிசையு நீர்த்திரள் பீண்டிக் // 240 // அவலும் மிசைநும் நீர் திரள்பு ஈண்டி
கவலையங் குழும்பி னருவி யொலிப்பக் // 241 // கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப
கழைவளர் சாரற் களிற்றின நடுங்க // 242 // கழை வளர் சாரல் களிறு இனம் நடுங்க
வரைமுத லிரங்கு மேறோடு வான்ஞெமிர்ந்து // 243 // வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து
சிதரற் பெரும்பெயல் திறத்திலிற் றாங்காது // 244 //சிதரல் பெரும் பெயல் திறத்திலின் தங்காது
குணகடற் கிவர்தருங் குரூஉப்புன லுந்தி // 245 // குண கடற்கு இவர்தரும் குரூஉபுனல் உந்தி
நிவந்துசெ னீத்தங் குளங்கொளச் சாற்றிக் // 246 // நிவந்து செல் நீத்தம் குளம் கொள சாற்றி
களிறுமாய்க்குங் கதிர்க்கழனி // 247 // களிறு மாய்க்கும் கதிர் கழனி
யொளிறிலஞ்சி யடைநிவந்த // 248 // ஒளிறு இலஞ்சி அடை நிவந்த
முட்டாள சுடர்த்தாமரை // 249 // முள் தாள சுடர் தாமரை
கட்கமழு நறுநெய்தல் // 250 // கள் கமழும் நறு நெய்தல்
வள்ளித ழவிழ்நீல // 251 // வள் இதழ் அவிழ் நீலம்
மெல்லிலை யரியாம்பலொடு // 252 // மெல் இலை அரி ஆம்பலொடு
வண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கைக் // 253 // வண்டு இறை கொண்ட கமழ் பூ பொய்கை
கம்புட் சேவ லின்றுயி லிரிய // 254 // கம்புள் சேவல் இன் துயில் இரிய
வள்ளை நீக்கி வயமீன் முகந்து // 255 // வள்ளை நீக்கி வய மீன் முகந்து
கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர் // 256 // கொள்ளை சாற்றிய கொடு முடி வலைஞர்
வேழப் பழனத்து நூழி லாட்டுக் // 257 // வேழம் பழனத்து நூழில் ஆட்டு
கரும்பி னெந்திரங் கட்பி னோதை // 258 // கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை
யள்ளற் றங்கிய பகடுறு விழுமங் // 259 // அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம்
கள்ளார் களமர் பெயர்க்கு மார்ப்பே // 260 // கள்ளார் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே
யொலிந்த பகன்றை விளைந்த கழனி // 261 // ஒலிந்த? பகன்றை விளைந்த கழனி
வன்கை வினைஞ ரரிபறை யின்குரற் // 262 // வன் கை வினைஞர் அரி பறை இன் குரல்
றளிமழை பொழியுந் தண்பரங் குன்றிற் // 263 // தளி மழை பொழியும் தண் பரம் குன்றில்
கலிகொள் சும்மை யொலிகொ ளாயந் // 264 // கலி கொள் சும்மை ஒலி கொள் ஆயம்
ததைந்த கோதை தாரொடு பொலியப் // 265 // ததைந்த கோதை தாரொடு பொலிய
புணர்ந்துட னாடு மிசையே யனைத்து // 266 // புணர்ந்து உடன் ஆடும் இசையே? அனைத்தும்
மகலிரு வானத் திமிழ்ந்தினி திசைப்பக் // 267 // அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப
குருகுநரல மனைமரத்தான் // 268 // குருகு நரல மனை மரத்தான்
மீன்சீ்வும் பாண்சேரியொடு // 268 // மீன் சீவும் பாண் சேரியொடு
மருதஞ் சான்ற தண்பணை சுற்றி, யொருசார்ச் // 270 // மருதம் சான்ற தண் பணை சுற்றி,ஒருசார்

[தொகு]

சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்பக் // 271 // சிறு தினை கொய்ய கவ்வை கறுப்ப
கருங்கால் வரகி னிருங்குரல் புலர // 272 // கரு கால் வரகின் இரு குரல் புலர
வாழ்ந்த குழும்பிற் றிருமணி கிளர // 273 // வாழ்ந்த குழும்பின் திருமணி கிளர
வெழுந்த கடற்றி னன்பொன் கொழிப்பப் // 274 // எழுந்த கடற்றின் நல் பொன் கொழிப்ப
பெருங்கவின் பெற்ற சிறுதலை நௌவி // 275 //பெரு கவின் பெற்ற சிறுதலை நௌவி
மடக்கட் பிணையொடு மறுகுவன வுகளச் // 276 // மட கண் பிணையொணு மறுகுவன உகள
சுடர்ப்பூங் கொன்றை தாஅய நீழற் // 277 // சுடர் பூ கொன்றை தாஅய நீழல்
பாஅ யன்ன பாறை யணிந்து // 278 // பாஅய் அன்ன பாறை அணிந்து
நீலத் தன்ன பைம்பயிர் மிசைதொறும் // 279 // நீலத்து அன்ன பைம் பயிர் மிசைதொறும்
வெள்ளி யன்ன வொள்வீ யுதிர்ந்து // 280 // வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து
சுரிமுகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய் // 281 // சுரி முகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய்
மணிமரு ணெய்த லுறழக் காமர் // 282 // மணி மருள் நெய்தல் உறழ காமர்
துணிநீர் மெல்லவற் றொய்யிலொடு மலர // 283 // துணிநீர் மெல் அவல் தொய்யிலொடு மலர
வல்லோன் றைஇய வெறிக்களங் கடுப்ப // 284 // வல்லோன் தைஇய வெறி களம் கடுப்ப
முல்லை சான்ற புறவணிந் தொருசார் //285 // முல்லை சான்ற புறவுஅணிந்து ஒரு சார்
நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய // 286 // நறு காழ் கொன்று கோட்டின் வித்திய
குறுங்கதிர்த் தோரை நெடுங்கா லையவி // 287 // குறு கதிர் தோரை நெடு கால் ஐயவி
யைவன வெண்ணெலொ டரில்கொள்பு நீடி // 288 // ஐவனம் வெண் நெல்லொடு அரில் கொள்பு நீடி
யிஞ்சி மஞ்சட் பைங்கறி பிறவும் // 289 // இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும்
பல்வேறு தாரமொடு கல்லகத் தீண்டித் // 290 // பல் வேறு தாரமொடு கல்லகத்து ஈண்டி
தினைவிளை சாரற் கிளிகடி பூசன் // 291 // தினை விளை சாரல் கிளி கடி பூசல்
மணிப்பூ வவரைக் குரூஉத்தளிர் மேயு // 292 // மணி பூ அவரை குரூஉ தளிர் மேயும்
மாமா கடியுங் கானவர் பூசல் // 293 // ஆ மா கடியும் கானவர் பூசல்
சேணோ னகழ்ந்த மடிவாய்ப் பயம்பின் // 294 // சேணோன் அகழ்ந்து மடி வாய் பயம்பின்
வீழ்முகக் கேழ லட்ட பூசல் // 295 // வீழ் முக கேழல் அட்ட பூசல்
கருங்கால் வேங்கை யிருஞ்சினைப் பொங்கர் // 296 // கரு கால் வேங்கை இருசினை பொங்கர்
நறும்பூக் கொய்யும் பூச லிருங்கே // 297 // நறு பூ கொய்யும் பூசல் இரு கேழ்
ழேறடு வயப்புலிப் பூசலொ டனைத்து // 298 // ஏறு அடு வய புலி பூசலொடு அனைத்தும்
மிலங்குவெள் ளருவியொடு சிலம்பகத் திரட்டக் // 299 // இலங்கு வெள் அருவியொடு சிலம்பு அகத்து இரட்ட
கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணிந் // 300 //கரும் கால் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து
தருங்கடி மாமலை தழீஇ யொருசா // 301 // அரு கடி மா மலை தழீஇ ஒருசார்

[தொகு]

ரிருவெதிர்ப் பைந்தூறு கூரெரி நைப்ப // 302 // இரு வெதிர் பை தூறு கூர் எரி நைப்ப
நிழத்த யானை மேய்புலம் படரக் // 303 // நிழத்த யானை மேய் புலம் படர
கலித்த வியவ ரியந்தொட் டன்ன // 304 // கலித்த இயவர் இயம் தொட்டு அன்ன
கண்விடு புடையூஇத் தட்டை கவினழிந் //305 // கண் விடு புடையூஉ தட்டை கவின் அழிந்து
தருவியான்ற வணியின் மாமலை // 306 // அருவி ஆன்ற அணியின் மா மலை
வைகண் டன்ன புன்முளி யங்காட்டுக் // 307 // வை கண்டு அன்ன புல் முளி அம் காட்டு
கமஞ்சூழ் கோடை விடரக முகந்து // 308 //கமம் சூழ் கோடை விடர்அகம் முகந்து
காலுறு கடலி னொலிக்குஞ் சும்மை // 309 // காலுறு கடலின் ஒலிக்கும் சும்மை
யிலைவேய் குரம்பை யுழையதட் பள்ளி // 310 // இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி
யுவலைக் கண்ணி வன்சொ லிளைஞர் // 311 // உவலைகண்ணி வன் சொல் இளைஞர்
சிலையுடைக் கையர் கவலை காப்ப // 312 // சிலை உடை கையர் கவலை காப்ப
நிழலுரு விழந்த வேனிற் குன்றத்துப் // 313 // நிழல் உரு இழந்த வேனில் குன்றத்து
பாலை சான்ற சுரஞ்சேர்ந் தொருசார் // 314 // பாலை சான்ற சுரம் சேர்ந்து ஒருசார்
முழங்குகட றந்த விளங்குகதிர் முத்த // 315 // முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம்
மரம்போழ்ந் தறுத்த கண்ணே ரிலங்குவளை // 316 // மரம் போழ்ந்து அறுத்த கண்ணேர்? இலங்கு வளை
பரதர் தந்த பல்வேறு கூல // 317 // பரதர் தந்த பல் வேறு கூலம்
மிருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப் // 318 // இரும் கழி செறுவில் தீம் புளி வெள் உப்பு
பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர் // 319 // பரந்து ஓங்கு வரைப்பின் வன் கை திமிலர்
கொழுமீன் குறைஇய துடிக்கட் டுணியல் // 320 // கொழு மீன் குறைஇய துடி கண் துணியல்
விழுமிய நாவாய் பெருநீ ரோச்சுநர் // 321 // விழுமிய நாவாய் பெரு நீர் ஓச்சுநர்
நனந்தலைத் தேஎத்து நன்கல னுய்ம்மார் // 322 // நன தலை தேஎத்து நல் கலம் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொ டனைத்தும் // 323 //புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும்
வைக றோறும் வழிவழிச் சிறப்ப // 324 // வைகல் தொறும் வழி வழி சிறப்ப
நெய்தல் சான்ற வளம்பல பயின்றாங் // 325 // நெய்தல் சான்ற வளம் பல பயின்றாங்கு
கைம்பாற் றிணையுங் கவினி யமைவர // 326 // ஐம்பால் திணையும் கவினி அமைவர

[தொகு]

முழவிமிழு மகலாங்கண் // 327 // முழவு இமிழும் அகல் ஆங்கண்
விழவுநின்ற வியன்மறுகிற் // 328 // விழவு நின்ற வியன் மறுகில்
றுணங்கையந் தழூஉவின் மணங்கமழ் சேரி //துணங்கையம் தழூஉவின் மணம் கமழ் சேரி
யின்கலி யாணர்க் குழூஉப்பல பயின்றாங்குப் // 330 // இன் கலியாணர் குழூஉ பல பயின்றாங்கு
பாடல் சான்ற நன்னாட்டு நடுவட் // 331 // பாடல் சான்று நல் நாட்டு நடுவண்
கலைதாய வுயர்சிமையத்து // 332 // கலை தாய உயர் சிமையத்து
மயிலகவு மலிபொங்கர் // 333 // மயில் அகவு மலி பொங்கர்
மந்தி யாட மாவிசும் புகந்து // 334 // மந்தி ஆட மா விசும்பு உகந்து
முழங்குகால் பொருத மரம்பயில் காவி // 335 // முழங்கு கால் பொருத மரம் பயில் காவின்
னியங்குபுனல் கொழித்த வெண்டலைக் குவவுமணற் // 336 // இயங்கு புனல் கொழித்த வெள் தலை குவவு மணல்
கான்பொழி றழீஇய வடைகரை தோறுந் // 337 // கான் பொழில் தழீஇய அடை கரை தோறும்
தாதுசூழ் கோங்கின் பூமலர் தாஅய்க் // 338 // தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய்
கோதையி னொழுகும் விரிநீர் நல்வர // 339 // கோதையின் ஒழுகும் விரி நீர் நல் வரல்
லவிரறல் வையைத் துறைதுறை தோறும் // 340 // அவிர் அறல் வையை துறை துறை தோறும்
பல்வேறு பூத்திரட் டண்டலை சுற்றி // 341 // பல் வேறு பூ திரள் தண்டலை சுற்றி
யழுந்துபட் டிருந்த பெரும்பா ணிருக்கையு // 343 // அழுந்து பட்டு இருந்த பெரும் பாண் இருக்கையும்
நிலனும் வளனுங் கண்டமை கல்லா // 344 // நிலனும் வளனும் கண்டு அமைகல்லா
விளங்குபெருந் திருவின் மான விறல்வே // 345 // விளங்கு பெரும் திருவின் மான விறல் வேள்
ளழும்பி லன்ன நாடிழந் தனருங் // 345 // அழும்பில் அன்ன நாடு இழந்தனரும்
கொழும்பல் பதிய குடியிழந் தனருந் // 346 // கொழு பல் பதிய குடி இழந்தனரும்
தொன்றுகறுத் துறையுந் துப்புத் தரவந்த // 347 // தொன்று கறுத்து உறையும் துப்பு தரவந்த
வண்ணல் யானை யடுபோர் வேந்த // 348 // அண்ணல் யானை அடு போர் வேந்தர்
ரின்னிசை முரச மிடைப்புலத் தொழியப் // 349 // இன் இசை முரசம் இடை புலத்து ஒழிய
பன்மா றோட்டிப் பெயர்புறம் பெற்று // 350 // பன் மாறு ஓட்டி பெயர் புறம் பெற்று
மண்ணுற வாழ்ந்த மணிநீர்க் கிடங்கின் // 351 // மண் உற ஆழ்ந்த மணி நீர் கிடங்கின்
விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத் // 352 // விண் உற ஓங்கிய பல் படை புரிசை
தொல்வலி நிலைஇய வணங்குடை நெடுநிலை // 353 //தொல் வலி நிலைஇய அணங்கு உடை நெடு நிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின் // 354 // நெய பட கரிந்த திண் போர் கதவின்
மழையாடு மலையி னிவந்த மாடமொடு // 355 // மழை ஆடு மலையின் நிவந்த மாடமொடு
வையை யன்ன வழக்குடை வாயில் // 356 // வையை அன்ன வழக்கு உடை வாயில்
வகைபெற வெழுந்து வான மூழ்கிச் // 357 // வகை பெற எழுந்து வானம் மூழ்கி
சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில் // 358 // சில் காற்று இசைக்கும் பல் புழை நல் இல்
யாறுகிடந் தன்ன வகனெடுந் தெருவிற் // 359 // யாறு கிடந்து அன்ன அகல் நெடு தெருவில்
பல்வேறு குழாஅத் திசையெழுந் தொலிப்ப // 360 // பல்வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப

[தொகு]

மாகா லெடுத்த முந்நீர் போல // 361 // மா கால் எடுத்த முந்நீர் போல
முழங்கிசை நன்பணை யறைவனர் நுவலக் // 362 // முழங்கு இசை நன் பணை அறைவனர் நுவல
கயங்குடைந் தன்ன வியந்தொட் டிமிழிசை // 363 // கயம் குடைந்து அன்ன இயம் தொட்டு இமிழ் இசை
மகிழ்ந்தோ ராடுங் கலிகொள் சும்மை // 364 // மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை
யோவுக்கண் டன்ன விருபெரு நியமத்துச் // 365 // ஓவு கண்டன்ன இரு பெரு நியமத்து
சாறயர்ந் தெடுத்த வுருவப் பல்கொடி // 366 // சாறு அயர்ந்து எடுத்த உருவம் பல் கொடி
வேறுபல் பெயர வாரெயில் கொளக்கொள // 367 // வேறு பல் பெயர ஆர் எயில் கொள கொள
நாடோ றெடுத்த நலம்பெறு புனைகொடி // 368 // நாள் தோறும் ? எடுத்த நலம் பெறு புனைகொடி
நீரொலித் தன்ன நிலவுவேற் றானையொடு // 369 // நீர் ஒலித்தன்ன நிலவு வேல் தானையொடு
புலவுப்படக் கொன்று மிடைதோ லோட்டிப் // 370 // புலவு பட கொன்று மிடை? தோல் ஓட்டி
புகழ்செய் தெடுத்த விறல்சா னன்கொடி // 371 // புகழ் செய்து எடுத்த விறல் சால் நன் கொடி
கள்ளின் களிநவில் கொடியொடு நன்பல // 372 // கள்ளின் களி நவில் கொடியொடு நன் பல
பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇப் // 373 // பல் வேறு குழூஉ கொடி பதாகை நிலைஇ
பெருவரை மருங்கி னருவியி னுடங்கப் // 374 // பெரு வரை மருங்கின் அருவியின் நுடங்க
பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின் // 375 // பனை மீன் வழங்கும் வளை மேய் பரப்பின்
வீங்குபிணி நோன்கயி றரீஇ யிதைபுடையூக் // 376 // வீங்கு பிணி நோன் கயிறு இரீஇ? இதை புடையூஉ
கூம்புமுதன் முருங்க வெற்றிக் காய்ந்துடன் // 377 // கூம்பு முதல் முருங்க எற்றி காய்ந்து உடன்
கடுங்காற் றெடுப்பக் கல்பொரு துரைஇ // 378 // கடும் காற்று எடுப்ப கல் பொருது உரைஇ
நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல // 379 // நெடும் சுழி பட்ட நாவாய் போல
யிருதலைப் பணில மார்ப்பச் சினஞ்சிறந்து // 380 // இரு தலை பணிலம் ஆர்ப்ப சினம் சிறந்து
கோலோர்க் கொன்று மேலோர் வீசி // 381 // கோலோர் கொன்று மேலோர் வீசி
மென்பிணி வன்றொடர் பேணாது காழ்சாய்த்துக் // 382 // மென் பிணி வன் தொடர் பேணாது காழ் சாய்த்து
கந்துநீத் துழிதருங் கடாஅ யானையு // 383 // கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும்
மங்கண்மால் விசும்பு புகைய வளிபோழ்ந் // 384 // அம் கண் மால் விசும்பு புகைய வளி போழ்ந்து
தொண்கதிர் ஞாயிற் றூறளவாத் திரிதருஞ் // 385 // ஒண் கதிர் ஞாயிறு ஊறு அளவா? திரிதரும்

[தொகு]

செங்கா லன்னத்துச் சேவ லன்ன // 386 // செம் கால் அன்னத்து சேவல் அன்னஅ
குரூஉமயிர்ப் புரவி யுராலிற் பரிநிமிர்ந்து // 387 // குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்து
காலெனக் கடுக்குங் கவின்பெறு தேருங் // 388 // கால் என கடுக்கும் கவின்பெறு தேரும்
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலி // 389 //கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்
னடிபடு மண்டிலத் தாதி போகிய // 390 // அடி படு மண்டிலத்து ஆதி போகிய
கொடிபடு சுவல விடுமயிர்ப் புரவியும் // 391 // கொடி படு சுவல விடு மயிர் புரவியும்
வேழத் தன்ன வெருவரு செலவிற் // 392 // வேழத்து அன்ன வெருவரு செலவின்
கள்ளார் களம ரிருஞ்செரு மயக்கமு // 393 // கள்ளார் களமர் இரும் செரு மயக்கமும்
மரியவும் பெரியவும் வருவன பெயர்தலிற் // 394 // அரியவும் பெரியவும் வருவன பெயர்தலின்
றீம்புழல் வல்சிக் கழற்கான் மழவர் // 395 // தீம்புழல் வல்சி கழல் கால் மழவர்
பூந்தலை முழவி னோன்றலை கடுப்பப் // 396 // பூ தலை முழவின் நோன் தலை கடுப்ப
பிடகைப் பெய்த கமழ்நறும் பூவினர் // 397 // பிடகை பெய்த கமழ் நறும் பூவினர்
பலவகை விரித்த வெதிர்பூங் கோதையர் // 398 // பல வகை விரித்த வெதிர் பூ கோதையர்
பலர்தொகு பிடித்த தாதுகு சுண்ணத்தர் // 399 // பலர் தொகு பிடித்த தாது உகு சுண்ணத்தர்
தகைசெய் தீஞ்சேற் றின்னீர்ப் பசுங்காய் // 400 // தகைசெய் தீ சேறு இன் நீர் பசும் காய்
நீடுகொடி யிலையினர் கோடுசுடு நூற்றின // 401 // நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர்
ரிருதலை வந்த பகைமுனை கடுப்ப // 402 // இரு தலை வந்த பகை முனை கடுப்ப
வின்னுயி ரஞ்சி யின்னா வெய்துயிர்த் // 403 // இன் உயிர் அஞ்சி இன்ன வெய்து உயிர்த்து
தேங்குவன ரிருந்தவை நீங்கிய பின்றைப் // 404 // ஏங்குவனர் இருந்தவை நீங்கிய பின்றை
பல்வேறு பண்ணியந் தழீஇத்தரி விலைஞர் // 405 // பல் வேறு பண்ணியம் தழீஇ தரி? விலைஞர்
மலைபுரை மாடத்துக் கொழுநிழ லிருத்தர // 406 // மலை புரை மாடத்து கொழு நிழல் இருத்தர
"https://ta.wikisource.org/w/index.php?title=மதுரைக்காஞ்சி&oldid=1395359" இருந்து மீள்விக்கப்பட்டது