மதுர கவிராயர் தனிப்பாடல்கள்

விக்கிமூலம் இலிருந்து
மதுர கவிராயர் தனிப்பாடல்கள்

பாடல் 5 தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 128

பாடலுக்குக் குறிப்புரை – செங்கைப் பொதுவன்

பாடல் 1[தொகு]

வெண்பா

துங்கவரை மார்பா துரைரங்க பூபதியே
இங்கோர் புதுமை யியம்பக்கேள்- பங்கயக்கை
ஆயிழைக்கு நான்குநுதல் ஐந்துகுழை யாறுமுலை
மாயவிழி யேழா மதி. (1)

பாடல் 2[தொகு]

அந்தி வெடிமுல்லை அரும்பெடுத்து நான்வந்தேன்
விந்தையதா நாயகற்கு மெல்லியலே- சுந்தரஞ்சேர்
செண்டுகட்ட வேண்டுந் திருவிளக்கிலே திரியைக்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து. (2)

பாடல் 3[தொகு]

சித்திர மாமண்டபங்கள் தென்றல்வரு சாளரங்கள்
பத்தி யுலாவும் பளிக்கறைகள்- இத்தனைவிட்
டிக்குச் சிலையான் இருப்பிடமென்றார் சொன்னா
ரிக்குச் சிலையானுக் கின்று. (3)

பாடல் 4[தொகு]

நீளத்திரிந்து உழன்றாய் நீங்கா நிழல்போலே
நாளைக்கு இருப்பாயோ நல்குரவே- காளத்தி
நின்றைக்கே சென்றக்கானீ யெங்கே நானெங்கே
இன்றைக்கே சற்றே யிரு. (4)

பாடல் 5[தொகு]

விருத்தம்

உலங்கொண்ட மணிப்புயனே பிரம்பூரான் அந்தரங்கா உன்பாற் செல்ல
வலங்கொண்ட கருடனையாம் இடங்கண்டோம் எழினரையான் வனத்தே கண்டோம்
பொலங்கொண்ட மணிமாட மீமிசையில் புயறவரும் புதுமை யென்னும்
தலங்கண்டோ நினதுநகை முகங்கண்டோம் இனிவேண்டுந் தனங்கண்டோமே. (5)