மருத்துவ களஞ்சியப் பேரகராதி/B

விக்கிமூலம் இலிருந்து

Bachelor of Science in Nursing : செவிலியர் படிப்பு : செவிலியற் பயிற்சிக் கல்லூரியில் நான்கு ஆண்டுப் படிப்பு.

Bachmann's bundle : பேக்மேன் கற்றை : வலது இதய மேலறையில் இருக்கும் சைனோ-ஏட்ரியல் அணுவிலிருந்து இதயத் துடிப்பை இடது இதய மேலறைக்குக் கடத்துகின்ற நரம்புக் கற்றை.

Bacillaceae : நோய் நுண்மக் குடும்பம் : மணலில் காணப்படும் நோய் நுண்மம் (எ.டு) பாக்டீரியா, கிளாஸ்ட்ரிடியம், தாய் உயிர்மக் கருவை உண்டாக்கக் கூடிய நோய் துண்மம்.

bacillaemia : இரத்த நோய்க் கிருமி : இரத்தத்தில் சிறுகோட்டுக் கிருமிகள் (நோய் நுண்மங்கள்) இருத்தல்.

bacillar: bacillary : நோய்நுண்மம் சார்ந்த : நோய் நுண்மத்தால் உண்டாகின்ற நோய் வகை, (எ-டு) சீதபேதி.

bacillary : நீள் நுண்ணுயிரிகள்.

bacillary dysentatary : நோய் நுண்மக் கழிச்சல்.

bacillicide : நோய்நுண்மக் கொல்லி.

bacilliferous : நீள் நுண்ணுயிர் கொண்ட.

bacillecallmette-guerin : தடுப்பு ஊசிமருந்து பாசில்சால்மெட்குவரின் எனப்படும் பி.சி.ஜி. தடுப்பு ஊசி மருந்து.

bacilli : நீள் நுண்மம்.

bacilliferous : நீள் நுண்ணுயிர் கொண்ட.

bacilliform : இழை நுண்கம்பி வடிவுள்ள; நீள்துண்ம வடிவான.

bacillin : பேசில்லின் : சப்டிலிஸ் நோய் நுண்மத்திலிருந்து பிரித் தெடுக்கப்படுகிற நுண்ணுயிர்க் கொல்லி மருந்து.

bacilliparous : நுண்ம வளர்ப்பு.

bacilllosis : நோய் நுண்மம் உள்ள : நோய் நுண்மத்தால் உண்டாகின்ற நோய் அல்லது நோய்த் தொற்று.

bacilluria : நுண்ம அழற்சி நீரிழிவு.

bacitracin : பேசிட்ரேசின் : சப்டிலிஸ் நோய் நுண்மத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை நுண்ணுயிர்க்கொல்லி மருந்து. ஸ்டைபைலோகாக்கஸ் நோய் நுண்ணுயிரிகளால் உண்டாகின்ற வெளித்தோல் நோய்களுக்கு இந்த மருந்தைத் தடவலாம்.

back : முதுகு; பின்புறம்; பின்னால் : உடலில் கழுத்திலிருந்து இடுப்புவரை உள்ள பின்புறப் பகுதி.

முதுகுவலி : முதுகுப்பகுதியில் உண்டாகும் வலி. முதுகுப் பலகை : படுக்கையிலோ, படுக்கை ஊர்தியிலோ நோயாளியின் முதுகுப்பகுதியைத் தாங்குவதற்காக வைக்கப்படும் பலகை.

முதுகுத் தண்டு : முதுகெலும்புகளைத் தாங்கி நிற்கும் தண்டு.

முதுகு ஓய்வுப் பலகை : நோயாளிகள் படுக்கையில் சாய்ந்த நிலையில் ஒய்வெடுப்பதற்காகப் பயன் படுத்தப்படும் பலகை.

bacilluria : சிறுநீர் நோய்க்கிருமி; நுண்ணுயிர் அழற்சி நீரிழிவு : சிறு நீரில் சிறுகோட்டு நோய்க் கிருமிகள் இருத்தல்.

bacillus : சிறுகோட்டுக் கிருமி நோய் நுண்மம்; நீள நுண்ணுயிரி : தாய் உயிர்மத்தினுள் உயிர்மக் கருக்களை உண்டாக்குகிற ஆக்சிஜன் உயிரி சார்ந்த, நீள் உருளை வடிவ உயிரணுக்கள் அடங்கிய ஒருவகை பேக்டீரியா. இவற்றில் பெரும்பாலானவை வயிற்றிலுள்ள அசையும் நுண்ணிைழை மங்கள் மூலம் அசையக் கூடியவை. இவை அழுகிய கரிமப் பொருட்களில் வாழும் உயிரிகள். இவற்றின் விதை மூலங்களை, மண்ணிலும் காற்றுத் தூசியிலும் காணலாம்.

back-ache : முதுகு வலி.

backalgia : முதுகு நோவு.

backbone : முதுகெலும்பு.

backflow : பின்னொழுக்கு; எதிர் ஒட்டம் : இயல்பற்ற ஒட்டம்; திரவங்களின் பின்னோட்டம்; எதிரொழுக்குநோய், பின்னொழுக்கு நோய் (எ.டு) மெட்ரல் தடுக்கிதழ் பின்னொழுக்கு நோய்.

back of hand : புறங்கை.

backward failure : பின்னோட்டச் செயலிழப்பு; பின்னோட்ட இதயச் செயலிழப்பு : இதயக் கீழறைகளின் மிகு அழுத்தம் காரணமாக உண்டாகின்ற இதயச் செயலிழப்பு. இந்த நிலைமை பொதுவாக ஈரிதழ்த் தடுக்கிதழ்ச் சுருக்க நோயின்போதும் மூவிதழ்த் தடுக்கிதழ்ச் சுருக்க நோயின் போதும் உண்டாகின்றது.

baclofen : தசை இசிப்புக் குறைப்பு மருந்து : தன்னியக்கத் தசையின் இசிப்புத் திறனைக் குறைக்கிற ஒரு மருந்து. இதன் பக்கவிளைவுகளாகக் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வாய்வுக் கோளாறுகள், தசைப்பிடிப்பு, உப்புக்குறைபாடு, மனக் குழப்பம், தலைச்சுற்றல், மந்தநிலை ஆகியவை தோன்றக்கூடும். இழைமக்காழ்ப்புக் கோளாறினைக் குணப்படுத்தப் பயன்படுத்தப் படுகிறது.

bacteraemia : இரத்தப் பாக்டீரியா; நுண்ணுயிர்க் குருதி : இரத்தத்தில் பாக்டீரியாக்கள் இருத்தல்.

bacteria : நோய்க்கிருமி; நோய் நுண்மங்கள்; நுண்ணுயிரிகள் : நோய்களை உண்டாக்கும் நுண் ணுயிரிகள், இவற்றை 'நுண்மப் பிளப்பின உயிரிகள்' என்றும் கூறுவர். இவை மிக நுண்ணியவை. இவற்றில், உயிர்ம ஊன்மம், அணுவியல் பொருள் அடங்கிய ஒர் உயிர்மம் அடங்கியுள்ளது. தனித்தனி உயிரணுக்கள், கோளவடிவில், நீண்ட வடிவில் சுருள் வடிலில் அல்லது வளைவுகளாக அமைந்து இருக்கும். இவை சங்கிலித் தொடர்களாக அல்லது திரள்களாக இருக்கும். சில வகைக் கிருமிகள் பூசனவலை வடிவில் அமைந்து இருக்கும். இவை, பச்சையம் உட்பட பல நிறமிகளை உற்பத்தி செய்யக் கூடியவை. சில உயிர்மக் கருக்களாக அமைந்து உள்ளன. சில சுதந்திரமாக வாழ்கின்றன, வேறு சில அழுகிய கரிமப் பொருள்களில் வாழ்கின்றன. இன்னும் சில ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. இவற்றுள் சில வகை மனிதருக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் நோய் உண்டாக்குகின்றன.

bacterial; bacterian; bacteric : நுண்ணுயிரின் நுண்ணுயிரால்; நுண்ணுயிர் சார்ந்த; நுண்மங்களைச் சார்ந்த; நுண்ணுயிர் இதய உள்ளறை அழற்சி நோய் : இதயத்தின் உள்ளுறையையும் இதயத் தடுக்கிதழ்களையும் பாதிக்கின்ற நுண்ணுயிரி நோய். நுண்ணுயிரி உடல் திசுக்களை அல்லது அணுக்களை பாதிக்கும் போது உண்டாகின்ற எதிர்வினைப் பண்பால் அழற்சி ஏற்படுதல். நுண்ணுயிரின் விளைவால் உண்டாகும் நச்சுப் பொருள்.

நுண்ணுயிர் மூளையுறை அழற்சி நோய் : மூளையுறைகளைப் பாதித்து மூளைக் காய்ச்சல் நோயை ஏற்படுத்துகின்ற ஒரு வகை நுண்ணுயிரி நோய்.

bactericidal : நுண்ணுயிர்க் கொல்லல்; நோய் நுண்மக் கொல்லல்; நோய்க் கிருமிக் கொல்லல்; நுண்மங்களை அழிக்கிற.

bactericide : நுண்ணுயிர்க் கொல்லி; நோய் நுண்மக்கொல்லி; நோய்க் கிருமிக் கொல்லி; நுண்மக் கொல்லிகள் : நோய்க் கிருமிகளைக் கொன்று அழிக்கும் தன்மையுள்ள மருந்து (எ-டு) பெனிசிலின் மருந்து.

bacterid : நுண்ணுயிர்த்தோல் கொப்புளம் : நுண்ணுயிர்க்கிருமி அல்லது அதன் நச்சுப் பொருளால் தோலில் உண்டாகின்ற கொப்புளம்.

bacterio : நோய் நுண்மத்தைச் சார்ந்த.

bacterisid; bacteroid : ஒட்டுயிர் நுண்மம்.

bacterioclasis : நுண்ம உடைவு; நுண்மக் கழிவு. bacteriological : நோய் நுண்ம ஆராய்ச்சியைச் சேர்ந்த.

bacteriological investigation : நுண்ணுயிரியலாய்வு.

bacteriologist : நுண்மவியல் வல்லுநர்; நுண்மவியலார்; நுண் ணுயிரியலாளர்; கிருமியியலாளர்; நுண்ம ஆய்வாளர்.

bacteriology : கிருமியியல்; நுண்ணுயிரியல; நுண்ம ஆய்வியல் : நோய்க் கிருமிகள் பற்றி ஆராயும் அறிவியல்.

bacterialysin : கிருமி எதிர்ப்புத் தற்காப்புப் பொருள்; நுண்ம உடைப்பி; நுண்ம உடைத்தழிப்பி : நோய்க்கிருமி அழிக்கும் உயிரின் தற்காப்புப் பொருள் நொதிமம்.

bacteriolysion : நுண்ம அழிப்புப் பொருள்; நுண்மக் கழிவு; நுண்ணுயிர் உடைத்தழிப்பி : நுண்மங்களை அழிக்கும் உயிரின தற்காப்புப் பொருள்.

bacteriolysis : கிருமி அழிவு; கிருமிச்சிதைவு : உயிரின் தற்காப்புப் பொருளால் ஏற்படும் கிருமி அழிவு.

bacteriolytic : நுண்ம அழிப்பு ஊக்கி : உயிரின் தற்காப்புப் பொருளால் உருவாகும் நுண்ம அழிவைச் சார்ந்த.

bacteriophage : கிருமித் தெவ்வு; நுண்ணுயிர் அழிக்கும் பாக்டீரியா விழுங்கி; அதி நுண்ணுயிர் : இயற்கைப் பரப்பிலும் உயிரினங்களிலும் உள்ள கிருமி அழிவுக் கூறு.

Bacteriophage typing : அதி நுண்ணுயிரி வகைப்படுத்தல் : நுண்ணுயிரிகளை அழிக்கும் அதி நுண்ணுயிரியின் வகையைக் கண்டறியும் முறை.

bacteriologist : நுண்ம ஆய்வாளர்; நுண்ணுயிரியல் வல்லுநர் : நுண் ணுயிரியல் படிப்பில் சிறப்புப் பயிற்சியும் பட்டமும் பெற்ற மருத்துவர்.

bacteriosis : நுண்ணுயிர் நோய்; நுண்ம நோய்; நுண்மத் தொற்று நோய் : பாக்டீரியா நோய் நுண்மத்தால் உண்டாகின்ற நோய்.

bacteriostasis : நுண்ணுயிர் (கிருமி) வளர்ச்சித்தடை; நுண்ணுயிர் அடக்கி; பாக்டீரியா அடக்கல் : நோய்க் கிருமிகள் வளர்வதற்கு ஏற்படும் தடை.

bacteriostat : நுண்ம வளர்ச்சித் தடுப்பி.

bacteriostatic : நுண்ம வளர்ச்சித் தடைப்பொருள்; நுண்மப் பெருக்குத் தடுப்பு : பாக்டீரியா போன்ற நுண்மங்கள் வளர்வதைத் தடுக்கும் பொட்டாசியம் குளோரேட் போன்ற பொருள்கள். bacteriotherapy : நுண்ம மருத்துவம்.

bacteriotoxemia : இரத்த நுண்ம நச்சேறல்.

bacteriotoxin : நுண்ம நச்சு.

bacterium : நுண்ம உயிரி; பாக்டீரியம் : மிக நுண்ணிய உயிரி. இவை பெரும்பாலும் ஒர் அணுவால் ஆனது. இவற்றுள் சில நகர்ந்து செல்லக்கூடியவை. இவை தாவர இனங்களில் உண்டாகும் பூஞ்சணத்தை ஒத்த உயிர் வடிவங்கள். இவற்றுள் சில சிதைவினையும்,நோய்களையும் உண்டாக்குகின்றன. எனினும், பெரும்பாலானவைபயனுடையவை சில பாக்டீரியாக்கள் மண்ணில் விழும் இறந்த உயிர்களை மட்கச் செய்து மண்ணோடு கலந்து விடச் செய்கின்றன. வேறு சில பாக்டீரியாக்கள் காற்றிலிருந்து நைட்ரஜனை நிலைப் படுத்தித் தாவரங்கள் பயன்படுத்திக் கொள்ள உதவுகின்றன. பாக்டீரியா பற்றி ஆராய்வது பாக்டீரியாவியல் எனப்படும்.

bacteriuria : சிறுநீர்க் கிருமி; நுண்ணுயிர் சிறுநீர் : சிறுநீரில் நோய்க்கிருமிகள் இருத்தல். ஒரு மில்லி லிட்டரில் 1,00,000-க்கு மேற்பட்ட நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் இருக்கும். இதனால், சிறுநீர் அடைப்பு போன்ற கோளாறுகள் ஏற்படும்.

bacteriotoxaemia : குருதி நுண்ம நச்சேற்றம் : நுண்ணுயிரிகளின் நச்சுக்கள் இரத்தத்தில் கலந்துள்ள நிலை.

bacterium : நுண்ணுயிரி; நோய் நுண்மம் : ஒருவகை நோய்க் கிருமி, நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரி. உயிரணுப் பிறப்பால் இனப்பெருக்கம் செய்யும் நுண்ணுயிரி. கோள வடிவில், நீள் வடிவில் அல்லது சுருள் வடிவில் இருக்கும். கோள வடிவில் அமைந்துள்ள நுண்ணுயிரி நகரும் தன்மையற்றது. மற்றவை நகரும் தன்மை உள்ளவை.

bacterize : நுண்மப் பண்டுவம்.

bacteroid : தீங்கிலா நுண்ணுயிரி : நுண்ணுயிரியை ஒத்தவை.ஆனால், தீங்கற்றவை. வாய் மற்றும் பெருங்குடலில் வாழக்கூடியவை.

bacteroides : தீங்கிலா நுண்ணுயிரிகள்.

badge : அடையாளச் சின்னம்; அடையாளப் பொறி; அடையாளப் பட்டை; ஊடுகதிர் அடையாளப் பட்டை :' ஊடுகதிர் படங்களை எடுப்பவரின் உடலில் புகுந்துள்ள ஊடுகதிர் அளவைக் கணிக்க உதவும் அடையாளப்பட்டை. இப்பட்டையை ஊடுகதிர் படம் எடுப்பவர் தன் சட்டையில் பொருத்திக் கொள்வார். battle : ஒழுங்குத் தகடு; நீர்மத் தகடு : ஒளிகருவியின் முகப்பில் இருக்கும் சிறுபொறி. இது காற்றில் கலந்து வரும் மாசுக்களைப் பிரித்து விடுகிறது. சுத்தமான காற்றை மட்டும் உறிஞ்ச இது உதவுகிறது.

baga : விழிக்கீழ்த்தோல் வீக்கம்; விழிக்கீழ்த்தோல் தொங்கல் : விழிகளின் கீழ்ப்பகுதியில் உள்ள தோல் அழற்சியுற்று, வீக்கமடைந்து, தொங்குதல். புகை பிடிப்பதாலும், தூக்கமின்மையாலும் அங்குள்ள இரத்த நாளங்கள் வீங்கி இவ்வாறு ஏற்படுகிறது.

bagasse : கரும்புச்சக்கை : கரும்பிலிருந்து உற்பத்தியாகும் கழிவுப்பொருள். கரும்புச்சாறு பிழிந்தெடுக்கப்பட்ட பின் உண்டாகின்ற நடுவகைக் கழிவு. பூஞ்சைக் கிருமிகள் உயிர் வாழ்வதற்கு உகந்த இடம்.

bagassosis : கரும்புச் சக்கையேற்ற நுரையீரல் அழற்சி; நுரையீரல் கரும்புச் சக்கை ஏற்றம் : இது ஒரு தொழில் சார்ந்த நுரையீரல் நோய். 'தெர்மோ ஆக்டினோமைசிஸ் சக்காரி' எனும் பூஞ்சைக் கிருமி சுவாசிக்கப்படும் காற்றின் வழியாக நுரையீரலை அடைந்து அழற்சியை ஏற்படுத்தும் நிலை. காய்ச்சல், மூச்சிளைப்பு, சோர்வு ஆகியவை இந்நோயின் சில அறிகுறிகள்.

bagging : சுவாசமேற்றம் :மூச்சுப்பை மூலம் செயற்கை முறையில், சுவாசமளிப்பது. இப்பையின் வாயை நோயாளியின் முகத்தில் குறிப்பாக வாய் மற்றும் முக்குப் பகுதியில் வைத்து, அதன் பை போன்ற பகுதியைக் கைவிரல்களால் அழுத்தினால், அப்பையிலுள்ள காற்று அந்த நோயாளி யின் நுரையீரலுக்குள் செல்லும்.

bairn : குழந்தை; குழவி.

Bainbridge's reflex : பெயின் பிரிட்ஜ் மறிவினை : இதயத்தில் தோன்றும் ஒருவகை அனிச்சை வினை. இதயத்தின் இடது மேலறையில் உள்ள விரி ஏற்பிகளைத் துண்டினால் இதயத் துடிப்பும், நாடித் துடிப்பும் அதிகரிக்கும் என்ற வினையை ஆங்கில உடலியங்கு இயல் வல்லுநர். பிரான்சிஸ் பெயின் பிரிட்ஜ் என்பவர் கண்டறிந்து கூறினார். ஆகவே, இவ்வினைக்கு அவர் பெயர் குட்டப்பட்டது.

bake : உயர் வெப்பத்தில் சுடுதல்.

baker-legged : முட்டிக்கால் உள்ள.

Baker's cyst : பேக்கர் நீர்க்கட்டி : முழங்கால் மூட்டழற்சி நோய் உள்ளவர்களுக்கு முழங்கால் மூட்டின் பின்புறம் நீரால் சூழப்பெற்ற பை போன்ற கட்டி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறுவை மருத்துவர் வில்லியம் பேக்கர் இந்த நோயை முதன்முதலில் இனம் கண்டார்.

baker's itch : மாவு அழற்சி : (1) மாவினை அல்லது சர்க்கரையைக் கையாள்வதால் உண்டாகும் தோல் அழற்சி நோய். மாவுப் பூச்சிகடிப்பதால் உண்டாகும் அரிப்புடன் கூடிய கொப்புளங்கள்.

BAL : 'பிரிட்டீஸ் ஆண்டி லூயிசைட்' எனும் சொற்றொடரின் முதல் எழுத்துச் சேர்க்கை. 'டைமெர்க்காப்ரால்' என்பது இதன் வணிகப்பெயர். உலோக நச்சுப்பொருள்களுக்கு எதிராக வினைபுரியும் ஒருவகை நச்சு முறிப்பான் குறிப்பாக பாதரசம், பிஸ்மத், ஆன்டிமனி ஆகிய உலோக நச்சுக்களை முறிக்க உதவும் மருந்து.

balance : தராசு; துலாக்கோல்; நிறைகோல் : 1 எடைநுண்ணளவைப் பொறி. 2. சமநிலை, 3. உடலை சமநிலைப்படுத்தி நிற்பது. 4. அமிலக்காரச் சமநிலை-இரத்தத்தின் அமிலக் காரத் தன்மையை சமப்படுத்துதல். 5. எடை அளவி.

balanced diet : சமச்சீர் உணவு; சமநிலை உணவு; சம ஊட்ட உணவு; சரிவிகித உணவு : மாவுச்சத்து,புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாதுச்சத்து, உயிர்ச்சத்து மற்றும் தண்ணீர் ஆகிய சத்துகள் சரியான விகிதத்திலும், உடலுக்குத் தேவையான அளவிலும் கலந்துள்ள உணவு இது உடலுக்குத் தேவையான சக்தியைத் (ஆற்றலை) தருகிறது; உடல் நலனை நிலைநாட்ட உதவுகிறது; உடலுக்கு உறுதி தருகிறது.

balanced nutrition : சமச்சீர் ஊட்டம்.

balanced ventilation : சமச்சீர்க் காற்றோட்டம்.

balanced study : ஈட்டாய்வு.

balanic : குறிமொட்டு : ஆண்குறி மொட்டு அல்லது பெண்குறி மொட்டு.

balanitis : ஆண்குறி வீக்கம்; மொட்டழல் மொட்டுத் தோலழற்சி : ஆண் குறியில் ஏற்படும் வீக்கம்.

balano : குறி மொட்டைச் சார்ந்த நோய்கள் : ஆண்குறி மொட்டு அல்லது பெண்குறி மொட்டு நோய்களைக் குறிப்பிடும் துவக்கச் சொல்.

balanoblennorrhoea : ஆண்குறி மொட்டு வெட்டை நோய்; ஆண்குறி மொட்டுத் தோலழற்சி நோய் : கோனோக்கஸ் கிருமிகளால் ஆண்குறி மொட்டுத் தோல் அழற்சி ஏற்படுதல்.

balanochlamyditis : பெண்குறி மொட்டுத் தோலழற்சி நோய் : பெண்குறி மொட்டு 'கோனோ காக்கஸ்' கிருமிகளால் பாதிக்கப்பட்டு அழற்சி அடைதல்.

balanoplasty : மொட்டு ஒட்டறுவை மருத்துவம்; குறிமொட்டு ஒட்டறுவை மருத்துவம் : ஆண்குறி மொட்டில் செய்யப்படுகின்ற ஒருவகை ஒட்டறுவைச் சிகிச்சை.

balano-posthitis : ஆண்குறிமாணி நுதி வீக்கம்; மொட்ட முன் தோலழல் : ஆண்குறியிலும், மாணி துதியிலும் ஏற்படும் வீக்கம்.

balantidiasis : பெருங்குடல் அழற்சி நோய் : 'பேலாண்டிடியம்' எனும் கிருமிகளால் பெருங்குடலில் புண் உண்டாவது. இந் நோயுற்றவருக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு உடல் எடைஇழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும். டைட்ராசைக்ளின் அல்லது மெட்ரனிடசோல் மருந்துகளால் இது குணமாகும்.

balantidium : ‘பேலாண்டிடியம்': உடலைச் சுற்றி மயிரிழைகள் கொண்ட ஓரணு உயிரி இது ஒர் ;வகையைச் சேர்ந்தது :(எ-டு) 'பேலாண்டிடியம் கோலை' பெருங்குடல் அழற்சி நோயை ஏற்படுத்தும் மிகப் பெரிய ஓரணு ஒட்டுண்ணுயிரி.

balanus : குறிமொட்டு : மொட்டு. ஆண்குறி மொட்டு அல்லது பெண்குறி மொட்டு.

balneary : நீராடுமிடம்; மருத்துவ நலச்சுனை.'

baldness : வழுக்கை; வழுக்கைத் தலை; தலை வழுக்கை : தலையில் முடி குறைந்த நிலை; தலையில் முடி அறவே இல்லாத நிலை.

bald tongue : வழுக்கை நாக்கு : நாக்கின் நுண்காம்புகள் முழுமையாக அழிந்திருத்தல் அல்லது செயல்திறன் இழந்திருத்தல். இரத்தச் சோகை மற்றும் வறட்டுத் தோல் நோய் (பெல்லெக்ரா) உள்ளவர்களுக்கு வழுக்கைநாக்கு காணப்படும்.

ball : பந்து : உருண்டை வடிவிலான ஒரு பொருள்.

பந்து மூடி : இரைப்பையிலோ, சிறுகுடலிலோ முடியானது பந்துபோல சேர்ந்து கொள்ளுதல்.

பந்து இரத்த உறைகட்டி : இரத்த நாளத்தில் இரத்தம் உருண்டை வடிவில் உறைந்து போவது.

ball and claw foot : பந்து மற்றும் வளை நகக்கால் : ஒரு வளை நகத்தால் பற்றிக் கொள்ளப்பட்ட ஒரு பந்தினைப் போன்று செதுக்கப்பட்ட கால்.

ball and socket joint : பந்துகிண்ண மூட்டு : எலும்புகளுக்கிடை யிலான மூட்டு, இதில் ஓர் உறுப்பின்முனை உருண்டையாகவும் இன்னொரு உருப்பின்முனை கிண்ணம் போன்றும் அமைந்து, உருண்டை

பந்துகிண்ண மூட்டு
முனை கிண்ணத்திற்குள் பொருந்திக் கொள்வதாக இருக்கும். இதனால் மூட்டுகளைச் சுதந்திரமாக அசைக்க முடிகிறது.

ballismus : வல்லசைவு : சுயக்கட்டுப்பாடில்லா வலிப்பு (கோரியா) நோயில் முன்கைத் தசைகள் கடுமையாக அசைதல் அல்லது ஒட்டம் காணுதல்.

bailistocardiogram : துள்ளு இதயத்துடிப்பு வரைபடம்.

ballistocardiograph : துள்ளு இதயத்துடிப்பு வரைவி : இதய இயக்க உடல் அதிர்வு வரைவி. துள்ளு இதயத்துடிப்பு வரை படம் எடுக்க உதவும் கருவி.

ballistocardiography : துள்ளு இதயத்துடிப்பு வரைபடம் எடுத்தல் : துள்ளு இதயத்துடிப்பு வரைபடக் கருவி உதவியால் இதயத்துடிப்பின் போதும் இரத்தச் சுழற்சியின் போதும் உடலில் உண்டாகின்ற அசைவுகளை வரைபடக் கோடாகப் படமெடுத்தல்.

balloon angioplasty : இதய தமனிநாளச் சீரமைப்பு பலூன் சிகிச்சை : இதயத்தமனி நாளத்தில் அடைப்பு ஏற்படும் பொழுது, மிகச்சிறிய பலூன் ஒன்றை, வளையும் தன்மையுள்ள மெல்லிய குழாய் மூலம் இதயத்தமனியில் செலுத்தி, அங்கு அதை ஊதிப் பெருக்கச் செய்து, தமனி நாளத்தை விரிவடையச் செய்கிறார்கள். இதனால் நாளத்தில் ஏற்பட்ட அடைப்பு நீக்கப்படுகிறது. இதயவலி ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் அந்த வலி ஏற்படும் வாய்ப்பைத் தடுப்பதற்காக இச்சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

balloon catheter : பலூன் செருகுக குழாய்; பலூன் வடி குழாய் : வளையும் தன்மையுள்ள மெல்லிய ரப்பர் குழாய். இதன் நடுமுனையில் பலூன் போன்ற அமைப்பு இருக்கும். தமனியில் ஏற்படும் அடைப்புகளை நீக்க இது பயன்படுகிறது; சிறுநீர்ப்பை அடைப்பைப் போக்கவும், சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீரை வெளியேற்றவும் இக்குழாய் பயன்படுகிறது.

balloon celi : பூதி அணு; ஊத்த அணு : திசுப்பாய்மம் (சைட்டோ பிளாசம்) நிரம்பப் பெற்ற உடலணு.

ballooning : உடல் பை காற்றேற்றல்; பிதுக்கம் : எலும்பு நலிவு நோயின் போது முதுகுத்தண்டில் உள்ள முள் எலும்புகள் அதிக அழுத்தம் தருவதால் எலும்பு இடைவட்டுகள் வெளிப்பக்கமாகப் பிதுங்கி வருதல்.

balloon tamponade : காற்றுப் பை அடைப்பான் : இரைப்பை மற்றும் குடலிலிருந்து வெளிவரும் இரத்தப் பெருக்கை 'சாங்ஸ் டேக்கன்-பிளாக்மோர்' குழாயைப் பயன்படுத்தி நிறுத்துதல். அறுவை மருத்துவத்தின்போது அடைப்பானைப் பயன்படுத்தி குருதிக் கசிவை நிறுத்துதல்.

balloon valvuloplasty : தடுக்கிதழ்ச் சீரமைப்பு பலூன் மருத்துவம் : இதயத் தடுக்கிதழ் சுருக்கத்தின் போது பலூன் குழாயைச் செலுத்தி, விரிவடையச் செய்வது.

ball thrombus : பந்துஇரத்த உறைக் கட்டி; பந்துக்குருதி உறைகட்டி : இரத்த நாளத்தில் இரத்தமானது உறைந்து பந்து போன்று திரண்டு விடுவது. இந்த இரத்த உறைகட்டியானது அந்த இரத்த நாளத்தை அடைந்துவிடும். அதன் விளைவாக இரத்தச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படும்.

ballotment : மிதவைப் பொருள் சோதனை; குலுக்கல் : கருத்தரித்து இருப்பதை அறிவதற்குப் பயன் படுத்தப்படும் சோதனை முறை. இதில் டோனிக் குழாயினுள் ஒரு விரலைவிட்டு, கருப்பை முன்புறம் இழுக்கப்படுகிறது. கருத்தரிப்பு ஏற்பட்டிருக்குமானால், கருப்பை மீண்டும் தனது பழைய நிலைக்குச் சென்று. தனக்குரிய திரவத்தில் மிதக்கும்.

balm : தலைப்பு மருந்து; குளிரூட்டும் மருந்து; ஆற்றும் மருந்து.

balneotheraphy : நீராட்டு மருத்துவ முறைதடுக்கிதழ்: நீராடல் வழியாக உடல் நோய் தீர்க்கும் மருத்துவ முறை.

balsam : சாம்பிராணி தாவரப்பால் மருந்து; தாவர வடிபால் மருந்து : தாவர எண்ணெயில் தயாரிக்கப்படும் தோல் நோய் மருந்து.

balsam of peru : பெரு குங்கிலியம்; பெரு சாம்பிராணி : தென் அமெரிக்காவிலுள்ள குங்கிலிய மரங்களிலிருந்து எடுக்கப்படும் பசைத் தன்மையுள்ள நறுமணத் திரவம் கொப்புளங்களுக்குத் துத்தநாகத்துடன் கலந்து களிம்பாகப் பயன்படுகிறது.

balsam of tolu : தோலுக்குங்கிலியம்; தோலு சாம்பிராணி : பழுப்பு நிற நறுமணப்பிசின். இருமல் மருந்துகளில் பயன் படுத்தப்படுகிறது.

balvadi : மழலயர் கூடம்.

Bamberger-Marie disease : பேம்பெர்ஜெர்-மேரி நோய்.

bamboo spine : மூங்கில் முதுகெலும்பு.

Bancroftiosis : யானைக்கால் நோய் : 'உச்செரரியா பாங்க்ராஃப்டி' எனும் கிருமியால் ஏற்படுகின்ற நோய். இங்கிலாந்து மருத்துவர் ஜோசப் பாங்க்ராஃப்ட் என்பவர் இதனைக் கண்டுபிடித்ததால், இந்த நோய் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

band : இழைக்கச்சை; தளைக்கயிறு; வார்; கட்டு; இணைபட்டை : உடல் பகுதிகளை இணைக்கும் வால் போன்ற திசுக்கட்டு. உடலைச் சுற்றிக் கட்டப்படும் கட்டுக்கம்பி. கை அல்லது காலைத் தாங்கிப் பிடிக்கும் கருவி.

bandage : புண் கட்டுத் துணி; கட்டுத் துணி; கட்டு : புண்களில் மருந்திட்டுக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் துணிப் பட்டை. இவை பல்வேறு வடிவுகளில் கிடைக்கின்றன. காயமடைந்த உறுப்புகள் அசையாமலிருப்பதற்கும், உறுப்புகள் திரிபடைந்து விடாமல் இருப்பதற்கும் கூடத் துணிப் பட்டைக் கட்டுப் போடப்படுகிறது.

band cell : பட்டை அணு; கச்சை அணு : முதிர்ச்சி அடையாத பல முனைக்கரு அணு. இரத்த வெள்ளை அணுக்களில் ஒரு வகை.

band form : பட்டை வடிவம்; கச்சை வடிவம்.

bandicoot : பெருச்சாளி : இந்தியாவில் காணப்படும் ஒரு வகைச் சொறி விலங்கு.

bandy : கால்கள்; முழங்கால் பகுதியருகில் வளைந்தகன்ற.

bandy-legged : வளைகால்; கோணற்கால்.

Bang's bacillus : பாங்க் நுண்ணுணியிரி; பாங்க் நோய் நுண்மம்; பாங்க்நீள நுண்ணுயிரி : டானிஷ் மருத்துவர் பெர்னாட் பாங்க் கண்டுபிடித்த 'புருசெல்லா அபார்ட்டஷ்' கிருமி.

bank : வங்கி; வைப்பகம்; உடல் உறுப்பு வங்கி : ஒருவருடைய உடலுறுப்பையோ, திசுவையோ திரவத்தையோ பெற்று, உரியமுறையில் பாதுகாத்து, அவற்றை வேறொரு நபருக்குப் பயன் படுத்த உதவும் இடம். (எ-டு) இரத்த வங்கி, கண்வங்கி, எலும்பு வங்கி, தாய்ப்பால்வங்கி, திசுவங்கி.

Bankart's operation : தோள் பட்டை அறுவை மருத்துவம் : தோல்பட்டை எலும்புக் குழியில் ஏற்படும் கோளாறு காரணமாகத் தோள் முட்டில் அடிக்கடி ஏற்படும் எலும்பு இடப்பெயர்வைச் சீர்படுத்து வதற்காகச் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை, இதனைப் பங்கார்ட் அறுவைச் சிகிச்சை என்பர்.

Bannister's disease : பானிஸ்டர் நோய் : சிக்காகோவைச் சேர்ந்த ஹென்றி பானிஸ்டர் கண்டுபிடித்த குருதி நாள நரம்பழற்சி நோய்.

Banocide : பானோசைட் : டையெதில் கார்பாமசைட் எனப்படும் மருந்தின் வணிகப் பெயர்.

banthine : வயிற்றுப்புண் மருந்து : வயிற்றுப்புண்ணை ஆற்றவல்ல சேர்மமான மருந்துப் பொருள். banting : கொழுப்பகற்று உணவு : பருத்த உடலின் தேவையிலா கொழுப்புகளை நீக்கிய உணவு முறை.

banling : சிறு குழந்தை; மதலை; சின்னஞ்சிறு குழவி.

Banti's disease : பேன்டி நோய் : இத்தாலியைச் சேர்ந்த நோய்க் குறியியல் வல்லுநர் கைடோ பேன்டி என்பவர் கண்டுபிடித்த நோய். பிறவியிலேயே மண்ணிரல் வீக்கமும் கல்லீரல் சுருக்கமும் உள்ள நிலைமை.

Baratol : பாராட்டோல் : இண்டோராமின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

barbital barbiton : தூக்க மருந்து; தூக்க ஊக்கி; தொடர் தூக்க ஊக்கி : தூக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் வெள்ளை உருப்பளிங்குப் பொடி.

barber's chair sign : சலூன் நாற்காலித் தடயம் : கழுத்தெலும்பு நோய்களின்போது, கழுத்தை மடக்கினால் உண்டாகும் ஒர் அறிகுறி: கழுத்தை மடக்கும் போது மின்னதிர்ச்சியைப் போல இரு கைகளுக்கும் வலி பரவுதல்.

barber's itch : சலூன் அரிப்பு; முடிதிருத்த தொற்று அரிப்பு.

barbiturates : பார்பிட்டுரேட்; பார்பிட்டுரேட் அமில உப்பு : நோவகற்றும் மருந்தாகப் பெருமளவில் பயன்படுத்தப்படும் மருந்துவகை. இது, மாலோனிக் அமிலம், யூரியா இரண்டும் இணைந்த பார்பிட்டுரிக் அமி லத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாம் பயன் படுத்தினால், இந்த மருந்துப் பழக்கத்திற்கு அடிமையாக நேரிடும். இதை அளவுக்கு மீறிப்பயன்படுத்துவதால் உயிருக்கு அபாயம் ஏற்படும். இதனால் இப்போது இதற்குப் பதில் பாதுகாப்பான மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன.

barbiturism : பார்பிட்டுரேட் மருந்துப் பழக்கம் : பார்பிட்டுரேட் என்னும் மருந்துக்கு அடிமையாதல். இதனால் மனக்குழப்பம், பேச்சுக் குழறு தல், அடிக்கடி கொட்டாவியுடன் உறக்கம் வருதல், மூச்சுத் திணறல், சில சமயம், மயக்கநிலை உண்டாகிறது.

barbotage : தண்டுவட உணர்விழப்பு : முதுகந்தண்டினை உணர் விழக்கச் செய்யும் ஒரு முறை. இதில், உறுப்பெல்லை உணர்வு நீக்கி மருந்தானது நேரடியாக மூளைத் தண்டுவட நீருடன் கலக்கப்பட்டு, தண்டு வடப்பகுதியில் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.

bariatrics : கொழு உடல் மருத்துவயியல் : பெருத்த உடல் மருத்துவயியல்; உடல் ஊத்தம் மருத்துவயியல்; உடற்பருமன் மருத்துவயியல்; உடல் ஊத்தம் சார்ந்த படிப்பு, உடல் ஊத்தமும் அதோடு தொடர்பு உடைய நோய்களைப் பற்றிய படிப்பு.

baritosis : நுரையீரல் பேரியம் ஏற்றம்; பேரியம் ஏற்ற நுரையீரல் அழற்சி : நுரையீரல்களில் பேரியம் துகள்கள் சென்று தங்குவதால் உண்டாகின்ற ஒரு தொழில் சார்ந்த நுரையீரல் அழற்சிநோய்.

barium enema : பேரியம் வழி குடல் கழுவுதல்; மலக் குடல் பேரியக் கழுவல் : பேரியம் சல்ஃபேட்டை குதவாய் வழியாகச் செலுத்தி குடலினைத் துப்பரவு செய்தல்.

barium meal : பேரிய உணவு.

barium sulphate : பேரியம் சல்ஃபேட் : கரையக்கூடிய கனமான தூள். உணவுக் குழாயை ஊடு கதிர் (எக்ஸ்-ரே) படம் எடுப்பதற்கு இது பயன்படுகிறது. வெள்ளை நிறமான இந்தப் பேரியம் சோறு உணவுக் குழாய் வழியாக இறங்குவதை ஊடுகதிர் மூலம் தெளிவாகக் காணலாம்.

barium sulphide : பேரியம் சல்ஃபைடு : மயிர் நீக்கும் குணமுள்ள ஒப்பனைக் களிம்பேட்டில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள்.

barium X-ray examination : செரிப்பு வழி பேரியப் போக்குக் கதிர்ப்படப் பரிசோதனை; பேரியத்துடன் இரைப்பைக் குடல் கதிர்ப்படப் பரிசோதனை; உணவுப் பாதை பேரியப்போக்குக் கதிர்ப்படப் பரிசோதனை : உணவுப் பாதையில் உள்ள நோய்த் தடயங்களைக் கண்டறிவதற்காக நோயாளியை பேரியம் சல்பேட்டைக் குடிக்கசெய்து, உணவுப் பாதையை பல இடை வேளைகளில் ஊடுகதிர்ப்படம் எடுப்பது.

barlow's disease : பார்லோ நோய் : குழந்தைகளுக்கு ஏற்படும் கதிர்வீச்சு நோய்.

Barlow's syndrome : பார்லோ நோயியம் : தொங்கல் மைட்ரல் தடுக்கிதழ் காணப்படும் நோய். தொய்வான மைட்ரல் தடுக்கிதழ் காணப்படும் நோய்.

barognosis : எடை உணர்வு; எடை உணர்வு ஆற்றல் : எடையை உணரக்கூடிய தன்மை.

baroreceptor : அழுத்த உணர்விகள்; அழுத்த ஏற்பிகள்.

baroreflexes : அழுத்த வினைகள் : அழுத்த உணர்விகள் ஏற் படுத்தும் அனிச்சை வினைகள். அழுத்த ஏற்பிகளால் ஏற்படுகின்ற அல்லது கடத்தப்படு கின்ற அனிச்சை வினைகள்.

barotrauma : அழுத்த மாறுபாட்டு நோய்; அழுந்து புண்; அழுத்த உணர்வி; அழுத்தத் தாக்கு : வாயு மண்டல அழுத்தம் அல்லது நீர் அழுத்தம் மாறுபடுவதால் உண்டாகும் காயம். செவிப்பறை கிழிந்து போதல் இதற்கு எடுத்துக்காட்டு.

barrier nursing : தொற்றுத் தடை முறை; ஒதுக்குச் செவிலியம்; தடைச் செவிலியம் : ஒரு தொற்று நோயாளியிடமிருந்து இன்னொருவருக்கு நோய் தொற்றுவதைத் தடுப்பதற்கான ஒருமுறை. நோயாளியைத் தனிமைப் படுத்தி நோய் தொற்றுவதைத் தடுப்பதுதன் மூலம் இது செய்யப்படுகிறது.

Bar's incision : பார் வகுடல் : சிசேரியன் கருப்பை அறுவைச் சிகிச்சையின் போது வயிற்றின் மத்தியப்பகுதியைக் கிழித்தல் அல்லது கீறுதல். ஃபிரான்சு நாட்டின் 'பேற்றியல்' மருத்துவர் பால்பார் இதனை முதன் முதலில் விவரித்தார். எனவே, அவர் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

bartholinitis : பார்த்தோலின் சுரப்பி வீக்கம் : பெண்ணின் கருப்பை வாய்க்குழாயின் (யோனிக் குழாய்) புறத்துளையின் இருபுறமும் அமைந்துள்ள பார்த்தோலின் சுரப்பிகள் எனப்படும் வீக்கம்.

Bartholin's duct : பார்த்தோலின் நாளம் : நாவடி உமிழ்நீர்ச் சுரப்பிலிருந்து உமிழ்நீரை வாய்க்குக் கொண்டு வரும் உமிழ்நீர் நாளம். டானிக்ஷ் உடலியல் மருத்துவர் காஸ்பர் பார்த்தோலின் முதன் முதலில் இதனை விவரித்தார். ஆகையால் இந்த நாளம் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

Bartholinitis : பார்த்தோலின் சுரப்பி வீக்கம்; பார்த்தோலின் சுரப்பி அழற்சி : பெண்ணின் யோனிக்குழாயின் புறத்துளை யின் இருபுறமுள்ள பார்த்தோலின் சுரப்பி அழற்சியுற்று வீங்குதல்.

bartholin's glands : பார்த்தோலின் சுரப்பி : பெண்ணின் கருப்பை வாய்க்குழாயின் (யோனிக் குழாய்) புறத்துளையின் இருபுறமும் அமைந்துள்ள இரு சிறிய சுரப்பிகள். இவற்றின் இழைம நாளங்கள், கன்னிமைத் திரைச் சவ்வுக்கு வெளியே திறந்து இருக்கும்.

bartonella : பார்ட்டோனெல்லா : மனிதனிடமும் பூச்சி இனத்திலும் காணப்படும் 'ரிக்கெட்சியா' வகைக் கிருமி. பெருநாட்டின் மருத்துவர் ஆல்பெர்ட்டோ பார்ட்டன் இதனை விவரித்ததால், இது அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

bartonellosis : பார்ட்டோனெல்லா நோய் : பார்ட்டோனெல்லா கிருமியால் ஏற்படும் நோய். இது சேற்று ஈயால் பிறருக்குப் பரவுகிறது. இந்த நோயின் அறிகுறிகளாவன : காய்ச்சல், இரத்த அழிவுச் சோகைநோய், தோலிலும் சீதப்படலத்திலும் பரவலாகக் கொப்புளங்கள் தோன்றுதல், குளோராம்பெனிகால் எனும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்து இதனைக் குணப்படுத்தக் கூடியது.

Bartter's syndrome : பார்ட்டர் நோயியம் : சிறு நீரகத்தில் வடி முடிச்சுக்கு அருகில் அமைந்துள்ள அணுக்கள் பெருக்கமடைதல், பொட்டாசியம் குறைபாடு, காரத் தேக்கம், ஆல்டோஸ்டீரோன் மிகைப்பு, மிகை இரத்த அழுத்தமில்லா நிலை ஆகிய அறிகுறிகள் அடங்கிய நோயியம். 'பிரெ டெரிக் பார்ட்டர்' எனும் அமெரிக்க மருத்துவர் இதனை முதன்முதலில் இனம் கண்டறிந்தார். எனவே, இந்த நோயியம் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

baruria : மிகை அடர்வுச் சிறுநீர் : சிறுநீரின் ஒப்படர்வு மிகைப்படுதல். மிகை அடர்வுள்ள சிறுநீர் கழித்தல்.

baryglossia : குறைவேக நாக்கு இயக்கம்; குறைவேக நாவியக்கம் : பேச்சில் வேகக்குறைவு.

barylatia : தடித்த சொல் பேச்சு : தெளிவில்லாத, தடித்த பேச்சு. பேச்சுறுப்புகள் சரியாக இணைந்து செயல்படாத்தால் ஏற்படும் நிலைமை.

basal anesthesia : அடிப்படை உணர்வகற்றல்.

basal carcinoma : தரச செல்புற்று.

basal ganglia : பெர்உ மூளை உயிரணுக்கள்; அடிமூளை முடிச்சு; அடிமூளைத் திரள்; தளமுடிச்சுக்கள் : தன்னியக்கத் தசைகளை ஒருங்கு இணைக்கும் பெருமூளைப் பகுதியில் உள்ள பழுப்புநிற உயிரணுக்கள். இந்தப் பகுதி சிதைவுறுவதால் பார்க்கின்சன் நோய் உண்டாகிறது.

basal metabolism : அடித்தள ஆக்கச் சிதைவு.

basal narcosis : உறக்கம் தூண்டும் மருந்து; அடிப்படைகள் மயக்கி; முன்னோடி மயக்கம் : அறுவைச் சிகிச்சைக்கு முன்பு மயக்க மருந்து கொடுப்பதற்கு முன்னர், அச்சத்தையும் பீதியையும் குறைத்து, உறக்கம் உண்டாக்குவதற்காகக் கொடுக்கப்படும் மயக்க மருந்துகள். இது அறுவைச் சிகிச்சைக்குப் பிந்திய அதிர்ச்சியைக் குறைக்கிறது.

base : ஆதாரப் பொருள்; அடித் தளம்; மூலச்சேர்மம்; தளம் : 1. ஒரு கூட்டுப் பொருளின் முக்கியப் பகுதி 2. ஒர் அமிலத்துடன் இணைந்து ஒர் உப்பாக மாறும் ஒரு வேதியியற்பொருள்.

Basedow's disease : பெசிடோ நோய் : கண்விழிப் பிதுக்கக் கேடயச் சுரப்பிக் கழலை, 'ஜெர்மன் மருத்துவர் கார்ல்வான் பெசிடோ இதனைக் கண்டறிந்தார். ஆகவே அவரது பெயரால் இந்த நோய் அழைக்கப்படுகிறது.

baseline : ஆதாரவரி; அடிவரி : அடுத்தடுத்து அளக்கப்படும் அளவுகளை ஒப்பிட்டு நோக்க உதவும் துவக்க வரி அல்லது துவக்க அளவு.

basilic : அடித்தளமான : இரத்த நாளங்களில் முழங்கையிலிருந்து தொடங்கி அக்குள் நாளத்தில் முடிகிறது.

basic health care : அடிப்படை நல்வாழ்வுப் பராமரிப்பு.

basophil : நீலவெள்ளணு; தளமேற்பி : (1) அடிப்படைச் சாயங்களுடன் நெருங்கிய தொடர்புடைய ஒர் உயிரணு. (2) நீல நிறம் ஏற்கும் வெள்ளணுக்கள். இது ஒரு குறிப்பிட்ட சாயத்தை ஏற்கிறது.

basophilia : இரத்தத்தில் நீல வெள்ளணுப்பெருக்கம்;தளமேற்பியல் : இரத்தத்தில் நீல நிறம் ஏற்கும் வெள்ளணுக்கள் அதிகரித்தல்.

batch : கூறு.

bath : குளிப்பு முறை மருத்துவம்; குளிப்பு நீர்மம் : உடம்பினை நீரில் அல்லது ஏதேனும் திரவத்தில் முழுக்காட்டி நோய் நீக்கும் முறை. உடலில் திரவத்தைத் தெளிப்பதும் அத்திரவத்தின் ஆவித்தாரையைப் பாய்ச்சுவதும் இதில் அடங்கும். சேறு, தணல், நீர் மெழுகு ஆகியவற்றுடன் பொட்டாசியம் பெர் மாங்கனேட்டு, உப்புநீர், கந்தகம் ஆகியவற்றைக் கலந்து இதற்குப் பயன்படுத்து வதுண்டு. நீரியல் மருத்துவமும் இந்த வகையைச் சேரும்.

bathyesthesia : ஆழ் உணர்வு : ஆழ்ந்த உணர்வுடைய, ஆழ் உணர்வு நயம்.

bathypnoea : ஆழ் மூச்சு; ஆழ் சுவாசம், நீண்ட சுவாசம் : ஆழமாக சுவாசித்தல், நெடுநேரம் சுவாசித்தல்.

battered baby syndrome : குழந்தை உருக்குலைவு நோய் : காயமுற்றதன் விளைவாக குழந்தைகளிடம் காணப்படும் நோய்க் குறிகள். பெற்றோரின் உணர்ச்சிச் சிக்கல்கள் அல்லாமல் குழந்தைக்கு ஏற்படும் உடல் காயத்தை இது குறிக்கிறது.

battaring : உருக்குலைத்தல் : ஒருவரைத் திரும்பத்திரும்ப அடித்துக் காயப்படுத்தி உருக்குலையுமாறு செய்தல். முக்கியமாக, குழந்தைகள், மனைவிமார்கள் (மகளிர்), பாட்டிமார்கள் ஆகிய மூன்று பிரிவினரும் இதற்கு உள்ளாகிறார்கள். இதனால் அவர்களுக்கு உளவியல் சேதங்களும் ஏற்படுவதுண்டு.

bat wing distribution : வௌவால் இறைக்கைப் பரவல் : நுரையீரல் நீர்த்தேக்கத்தின்போது எடுக்கப்படும் ஊடுகதிர்ப் படத்தில் காணப்படுகின்ற ஒருவித நோய் நிலை; நுரையீரல்களில் இரு புறமும் வெளவால் இறக்கை விரித்தாற் போன்று நுரையீரல் திசுக்கள் அரிக்கப்பட்டிருக்கும்.

battered woman syndrome : பெண் உருக்குலைவு நோயியம்: கணவன் தன்னுடைய மனைவியைத் திரும்பத் திரும்ப அடித்துக் காயப்படுத்தி உருக்குலையுமாறு செய்தல். இதனால் மனைவிக்கு உடல் காயங்கள் மட்டுமின்றி உளவியல் பாதிப்புகளும் ஏற்படுவது உண்டு.

battarism : திக்கல்; திக்கல் பேச்சு.

battery : (1) மின்கலம்; மின்பொறி அடுக்கு : மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒரு சிறு பொறி.

அடுக்குச் சோதனை : நோயாளியிடம் காணப்படும் ஒரு குறிப்பிட்ட நோயின் காரணத்தைக் கண்டு அறிவதற்காக அடுக்கடுக்காகச் செய்யப்படும் பரிசோதனை முறைகள்.

Battle's sign : பேட்டில் தடயம் : மண்டையோட்டின் பின்பக்க எலும்பு உடையும்போது எலும்புச் சவ்வுக்கு அடியில் இரத்தம் சேர்ந்து, உறைந்து, கட்டியாவது, இதனால் பொட்டு எலும்புக் கூம்புப்பகுதியில் தோலில் நிற மாற்றம் ஏற்படும். இந்தத் தடயத்தை இங்கிலாந்து அறுவைச் சிகிச்சை வல்லுநர் வில்லியம்பேட்டில் கண்டுபிடித்ததால், இது அவர் பெயரால் அழைக்கப் படுகிறது.

Battey bacillus : பேட்டி நுண்ணுயிரி : ஒருவகைக் காசநோய்க் கிருமி. பேட்டி எனும் ஊரில் உள்ள காசநோய் மருத்துவமனையில் இக்கிருமி முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

Baudelocque's method : பாடிலாக் முறை : கருவிலிருக்கும் குழந்தையின் முடிப்பிறப்புத் தோற்றத்தை தலையுச்சிப் பிறப்புத் தோற்றமாக மாற்றி அமைக்கும் முறை. ஃபிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லீன்பாடிலாக் எனும் மகப்பேறு மருத்துவ வல்லுநர் இதனை முதன்முதலில் கண்டறிந்து கூறினார்.

Baypen : பேய்ப்பன் : மெஸ்லோசிலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Bazette's formula : பேசெட் சூத்திரம் : இதயமின்னலை வரைபடத்திலுள்ள QT இடை வெளியானது மின்பொறியுள்ள இதயச் சுருக்கத்தின் மொத்த அளவைக் குறிப்பதாகும். இதுவே 'பேசெட் சூத்திரம்' எனப்படுகிறது. இதயத்துடிப்பு அதிகரித்தால் இதன் அளவு குறையும்; இதயத்துடிப்பு குறைந்தால் இதன் அளவு அதிகரிக்கும்.

Bazin's disease : பாசின் நோய் : பெண்களின் கால்களின் தோலில் அடிக்கடி ஏற்படும் ஒரு வகை சீழ்புண் நோய். தோலில் முதலில் ஆழமான கரணைகள் (திரளைகள்) உண்டாகும். இவை பின்னர், சீழ்ப்புண்களாக மாறும்.

BBB : பிபிபி : 'பண்டில் பிரான்ச் பிளாக்' மற்றும் பிளட்பிரெய்ன் பேரியர் என்ற சொற்றொடர்களின் முதல் எழுத்துச் சேர்க்கை.

B-cell : பி-அணு : இது ஒருவகை நிண அணு, இரத்தம், நிணநீர் மற்றும் இணைப்புத் திசுக்களில் காணப்படும்; நோய் நுண்மங்களை எதிர்த்துப் போராட நோய் எதிர் அங்கங்களை இரத்தத்தில் உருவாக்குவது இதன் பணி.

B C G : Bacille-Celmette-Guerin : பி.சி.ஜி. (பாசில்-கால்மெட்-குவரின்) : வீரியம் குறைந்த காசநோய்க் கிருமி. இதற்குக் காசநோய் உண்டாக்குவதற்கான ஆற்றல் குறைந்திருந்தாலும், உயிர்த் தற்காப்புப் பொருள் உண்டு பண்ணும் தன்மை இருக்கிறது. காசநோய்க்கு எதிராக நோய்த் தடைக்காப்புச் செய்வதற்குப் பயன்படும் ஒர் அம்மைப்பால் மருந்துக்கு ஆதாரமாகப் பயன்படுகிறது.

beaked pelvis : அலகு இடுப்புக் கூடு; முன் வளைவு இடுப்புக் கூடு : எலும்பு நலிவு நோயின் போது இரண்டு பக்கமுள்ள தொடை எலும்புகளின் தலைப்பகுதிகள் மிகு அழுத்தம் தருவதால் இடுப்புக் கூட்டின் நடுங்கிணைவு எலும்பு முன் பக்கமாக வளையும் நிலைமை.

beam alignment : ஒளிக்கற்றை ஒழுங்கு : ஊடுகதிர்ப்படம் எடுக்கப் படும்போது ஊடுகதிர் உமிழ்குழலின் தலைப்பகுதியை ஊடுகதிர்த் திரையை நோக்கி ஒழுங்குபடுத்துதல்.

beam collimation : ஒளிக்கற்றை நேர்வரிப்பாடு : ஊடுகதிர்களின் ஒளிக்கற்றையை குறிப்பிட்ட பகுதியில் மட்டும் படும்படி ஒழுங்குபடுத்துதல்.

beam quality : ஒளிக்கற்றைப் பண்பு; ஒளிக்கற்றைப் பண்புக் கூறு; ஒளிஉமிழ்வு குணம்; ஒளிக் கதிர் தன்னியல்பு : ஊடுகதிர்களின் சக்தியைக் குறிப்பது.

bearing down : அழுத்தித் தள்ளுதல் : 1. பிள்ளைப்பேற்றின் இரண்டாம்கட்ட இடுப்புவலியின் போது குழந்தையை வெளியே நெருக்கித் தள்ளுவதற்காக உண்டாகும் வலி, 2. கருப்பை நெகிழ்ச்சியில், இடுப்பெலும்பு கனமடைந்து இறங்குவது போன்று ஏற்படும் உணர்வு.

beat : நாடித்துடிப்பு; துடிப்பு : இதயத்திலும், இரத்த நாளங்களிலும் இரத்தம் துடித்தல்.

Beau's lines : பியூ கோடுகள்; பியூவரிகள் : கைவிரல் நகங்களில் காணப்படும் மேடிட்ட கோடுகள் அல்லது வரிகள். இது ஒரு மண்டல நோயின் தடயம். ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உடலியங்கு வல்லுநர் ஜோசப் பியூ என்பவர் கண்டறிந்த தடயம்.

Becker's muscular dystrophy : பெக்கரின் தசை வளப்பக்கேடு : குழந்தைகளிடம் காணப்படும் ஒரு பரம்பரை நோய். தசைகளுக்குத் தவறான ஊட்டச்சத்து செல்வதால் தசைகள் சூம்பிப்போவதுடன் வயதாக ஆக நோய்த்தாக்கம் சிறிது சிறிதாக அதிகரிக்கும்.

Beck's triad : பெக்கின் மும்மை : இதயத்தில் காணப்படும் மூன்று வகை நோய்க்குறித் தொகுதி. மிகுசிரைநாள அழுத்தம், தமனி நாளக் குறை அழுத்தம் மற்றும் சிற்றிதயமும் மூன்று அறிகுறிகள் அடங்கிய ஒரு நோய்க்குறித் தொகுதி, அமெரிக்க உடலியங்கு இயல் மருத்துவர் கிளாட்பெக் என்பவர் இதனை விவரித்ததால், இது அவர் பெயரால் அழைக்கப் படுகிறது.

beclamide : வலிப்புத் தடுப்பு மருந்து : காக்காய் வலிப்பு நோயைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சையில் வலிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கான மருந்து.

becomethasone : பெக்ளோமெத்தாசோன் : மூளை நோய்க்காக உள்ளிழுப்பதற்காகத் தயாரிக்கப்படும் மருந்து.

beclonmethasone dipropionate : பெக்லோமீதசோன் டிப்ரோபியோனேட் : ஆஸ்துமா நோய்க்குத் தரப்படும் ஒருவகை இயக்குநீர் மருந்து. உள் இழுப்பான்களில் இம்மருந்து பயன்படுத்தப்படும்.

Becosym : பெக்கோசிம் : வைட்டமின்-B குறைபாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் மாத்திரை. இதில் நரம்பூட்டச்சத்து (அனூரின்), ரிபோபிளேவின், நிக்கோட்டினாமைடு, பைரிடாக்சின் ஆகியவை அடங்கியுள்ளன.

becotide : பெக்கோட்டைடு : பெக்ளோமெத்தாசோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

bed : படுக்கை; கட்டில்; உடல் தாங்கி; உறுப்புத்தாங்கி; திசுத்தாங்கி :

bed bath : ஒற்றிக் குழிப்பு .

bedbug : மூட்டைப்பூச்சி; மூட்டுப் பூச்சி : இரத்தம் உறிஞ்சும் பூச்சி. மிதவெப்ப மண்டலங்களில் இது பெருமளவில் வாழ்கிறது.

bed occupancy : படுக்கை நோயாளி; உள் நோயாளி : நாள் முழுவதும் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை மேற்கொள்ளுதல்.

bedpan : படுக்கை மலத்தட்டு; நோயாளி கழிகலன் : படுக்கையி லிருந்து எழுந்து நடக்க இயலாத நோயாளியின் மலத்தையும், சிறு நீரையும் பெறுவதற்குப் பயன் படுத்தப்படும் ஒரு பாத்திரம். இது உலோகத்தாலும், பிளாஸ்டிக் கிலும் தயாரிக்கப்படுகிறது. நோயாளியின் இடுப்புக்கு கீழே இது வைக்கப்படுகிறது.

bedrest : படுக்கை ஓய்வு நோயாளியானவர் படுத்திருந்து ஒய்வு எடுத்தல் நோயின் காரணமாக படுக்கையிலேயே கிடத்தல்.

bedsore : படுக்கைப்புண்; அழுந்துப் புண்; அழுத்தல் புண்; கிடைப்புண் :உடலின் அழுத்தம் காரணமாக புண் உண்டாவது. நெடுங்காலம் படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிக்கு எலும்பு அழுத்தம் காரணமாகத் தோல் சிதைந்து, திசுக்கள் உருக்குலைந்து, புண் ஏற்படும் நிலைமை. இப்புண்ணுக்கு இரத்த ஒட்டம் தடைப்பட்டு போவதால் குணமாவது கடினம்.

bee : வண்டு; சுரும்பு; தும்பி; தேனி : தேனீகடித்தல், தேனீயின் விஷத்தால் (நச்சால்) உடலில் பாதிப்பு உண்டாவது. தேனி கடித்த உடல்பகுதியில் வலி, செந்தடிப்பு, வீக்கம் ஆகியவை ஏற்படுதல்.

beeturia : செங்கிழங்குச் சிறுநீர் : செங்கிழங்கைச் சாப்பிடுவதால் சிறுநீர் சிவப்பாகப் போவது.

Beevor's sign : பீவரின் தடயம். behaviour : நடத்தை முறை; நடத்தை இயல்புத் தன்மை; நடத்தை : அக அல்லது புறத்தூண்டுதல் காரணமாக ஒருவர் நடந்து கொள்ளும் முறை. இது வாழ்க்கையின் ஓர் இன்றியமையாத அம்சம். தூண்டுதலின் தன்மையைப் பொறுத்து நடத்தை முறையானது எதிர்மறையாக அல்லது ஆக்க முறையாக அமைந்திருக்கும். சில கல்வி முறைகளில் நடத்தைமுறையைச் சீராக உருவாக்குவதற்குக் கல்வியறிவூட்டப்படுகிறது. திரிபான நடத்தை முறையை முறைப் படுத்துவதற்குச் சிலருக்கு உளவியல் சிகிச்சையளிக்கப் படுகிறது.

behaviourism : ஒழுக்க முறை; நடத்தையம் : அகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக்கூறுகளே காரணம் என்ற கோட்பாடு. புறக் கூறு பாடுகளைக் கொண்டும் ஒழுக்கத்தைக் கொண்டும் ஒருவரைப் பற்றி ஆராயும் முறை.

Behcet's disease : பெஹ்செட் நோய்.

behcet syndrome : பெஹ்செட் நோய் : 1937இல் பெஹ்செட் என்பவர் கண்டுபிடித்துக் கூறிய ஒரு நோய். இதில் வாயிலும் பிறப்புறுப்பிலும் புண் உண்டாகும். கண்களில் வெண் விழிப்படல அழற்சி போன்ற மாறுதல்கள் ஏற்படும். ஒருகண் பார்வை பாதிக்கப்படும். சில மாதங்களுக்கு அல்லது ஆண்டுகளுக்குப்பின் மறுகண் பார்வை பாதிக்கும். தோலில் கொப்புளங்கள் தோன்றும். இந்நோய் உண்டாவதற்கான காரணம் தெரியவில்லை. இதற்கு முறையான சிகிச்சையும் இல்லை. இந் நோயினால் இறுதியில் கண் பார்வை இழப்பு ஏற்படும்.

bejel : பெஜல் : மேக நோய் சாராத ஒருவகை வெட்டை நோய். இது நீண்ட காலம் நீடிக்கும். இது முக்கியமாக மத்திய கிழக்கிலும் ஆஃப்ரிக் காவிலும் குழந்தைகளைப் பீடிக்கிறது. இது முதலில் வாயில் தோன்றி, பின்னர் தோலில் பரவுகிறது. இதனால் இது எளிதில் பரவுகிறது. இதனால் அரிதாகவே மரணம் விளைகிறது. இதனை பெனிசிலின் மருந்து மூலம் குணமாக்கலாம்.

belching : ஏப்பம் : உணவுக் குழாய்க்குள்ளும், இரைப்பைக்குள்ளும் செல்லும் காற்று (வாயு) உரத்த சத்தத்துடன் வாய்வழியே வெளியேறுதல்.

belladonna : பெல்லாடோன்னா : இரவில் மலரும் பெல்லாடோன்னா என்னும் கொடிய நச்சுப்பூண்டு வகையிலிருந்து எடுக்கப்படும் மருந்து.

bell-lottomed : கணுக்கால் நோக்கி விரிவடையும்.

belied : தொந்தி விழுந்த; தொப்பை சரிந்த; பெரு வயிறுடைய.

Bell's nerve : பெல் நரம்பு.

bell's palsy : முக முடக்குவாதம்; முகத்தசை வாதம்; கடைவாய்க் கோணல் : மண்டையோட்டுநரம்பின் இழைமங்களிலிருந்து உண்டாகும் முக முடக்குவாதம். இதற்கான காரணம் தெரியவில்லை.

Bell's phenomenon : பெல் நிகழ்வு.

belly : தொப்பை; தொந்தி; வயிற்றுப் புடைப்பு; வயிற்றுத் தசைப் புடைப்பு.

belly-god : பெருந்தீனிக்காரர்; வயிற்றாளி.

belt : அரைக்கச்சை; நிலப்பகுதி : குறிப்பிட்டதொரு நோய் அதிகமாகப் பரவியுள்ள நிலப்பகுதி.

bemegride : பெமிகிரைடு : சுவாசத்தைத் தூண்டும் மருந்து. இது நரம்பு வழி செலுத்தப் படுகிறது.

benactyzine : பெனாக்டைசின் : ஒரு சில குறிப்பிட்ட வினை புரியக்கூடிய நோவகற்றும் மருந்து. இது சுற்றுச் சூழலிலிருந்து விடுபட்ட உணர்வைக் கொடுக்கிறது. மனக்கவலை, உளஅலைவு நரம்புக்கோளாறு போன்ற நிலைகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

benadry : பெனாட்ரில் : டைபன் ஹைட்ராமின் எனப்படும் இருமல் மருந்தின் வணிகப் பெயர். bence jones protein : பென்ஸ்-ஜோன்ஸ் புரதம் : எலும்பு மச்சை அழற்சியுடைய நோயாளிகள் சிலரின் சிறுநீரில் காணப்படும் புரதங்கள். இவர்களின் சிறுநீரைச் சூடாக்கும்போது, 50'c-60'c வெப்பநிலையில், இந்தப் புரதங்கள் வீழ்படிவாகி மேலும் கொதி நிலைக்குச் சூடாக்கும்போது மீண்டும் கரைந்துவிடும். மறுபடியும் குளிர்விக்கும்போது மீண்டும் வீழ்படிவாகும்.

bendrofluazide : பெண்ட்ரோஃபுளுசைடு : தையாசைட் குழுமத்தைச் சேர்ந்த சிறுநீர்க் கழிவினைத் தூண்டும் மருந்து. இது வாய்வழி உட்கொள்ளப் படுகிறது. இது சிறுநீரகக் குழாய்களில் சோடியம் குளோரைடு மீண்டும் ஈர்க்கப்படுவதைக் குறைக்கிறது. இது செயற்படும் கால அளவு 20-24 மணிநேரம். கல்லீரல் அல்லது சிறுநீரகம் செயலிழக்கும்போது இது பயன்படுத்தப்படுகிற்து.

benemid : பெனிமிட் : புரோபினெசிட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

benign : ஏதமில் நோய்; தீங்கற்ற; வலியற்ற; ஆறக்கூடிய; தீதிலா : நோய் வகையில் கடுமையாக இராத பெருந்தீங்கு விளைவிக்காத நோய்.

benign tertain fever : தீதிலா மூன்றாம் நாள் காய்ச்சல்.

Bennett's fracture : பென்னெட் எலும்பு முறிவு : உள்ளங்கை எலும்புகளின் மூட்டுப்பகுதிகளின், உடலின் மையம் நோக்கிய முனைகளில் ஏற்படும் முறிவு.

Benoral : பெனோரால் : பெனோரிலேட் என்னும் மருந்தின் வணிகப் பெயர்.

benorylate : பெனோரிலேட் : ஆஸ்பிரின், பாராசிட்ட மோல் இரண்டும் கலந்த ஒரு வேதியியல் கூட்டுப்பொருள்; இது வீக்கத்தைக் குறைக்கக் கூடியது. நோவகற்றத் தக்கது; காய்ச்சல் வராமல் தடுக்கக்கூடியது; நெடிது செயற்படக்கூடியது. இது உள் இரத்தப்போக்கு ஏற்படாமல் தடுக்கத்தக்கது.

bentonite : பென்டோநைட் : நீரேற்றம் செய்யப்பட்ட அலுமினியம் சிலிகேட் வேதிப்பொருள்.

benzalkonium : பென்சால் கோனியம் : நோய்க்கிருமிகளைத் தடுக்கும் மருந்து. துப்பரவு செய்யும் தன்மையுடையது. தோலுக்காக இதன் 1% கரைசல் (1:20000) பயன்படுத்தப்படுகிறது. காயங்களைத் துப்பரவு செய்ய 1:40000 கரைசல் பயன்படுகிறது.

benzathine penicillin : பென்சாத்தின் பென்சிலின் : இது நோய்க் கிருமிகளைத் தடுக்கும் மருந்து. இதனை வாய்வழியாகவோ, ஊசி மூலமாகவோ செலுத்தலாம். இது நீண்ட காலம் செயலாற்றக் கூடியது. பெரும்பாலான கிராம் சாயம் எடுக்கும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது.

benzene : சாம்பிராணி எண்ணெய் : கரியெண்ணெயிலிருந்து (கீல்) எடுக்கப்படும் ஒருவகை எண்ணெய். இது நிறமற்றது; எளிதில் தீப் பற்றக்கூடியது. தொழில்துறை நச்சியலில் மருத்துவ முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து எதிர்கொள்வதால் வெள்ளணுக் குறைவு, இரத்த சோகை, தோலில் ஊதா நிறப்புள்ளிகள் தோன்றுதல் அரிதாக வெண்குட்டம் ஏற்படும்.

benzhexol : பென்செக்சால் : பார்க்கின்சன் நோயில் தசைச் சுரிப்பு ஏற்படாமல் தடுக்கப் பயன்படும் மருந்து. இதன் பக்க விளைவுகளாக வாய் உலர்வு, தலை சுற்றல் ஏற்படும்.

benzidine : பென்சிடின் : மலத்தில் இரத்தம் அல்லது இரத்த அணுக்கள் காணப்படுகின்றனவா என்பதைக் கண்டறிய உதவும் வேதிப்பொருள்.

benzocaine : பென்சோகெய்ன் : அமினோ பென்சாயிக் அமிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை பகுதி உணர்வகற்றி.

benzoic acid : பென்சாயிக் அமிலம்.

benzoin : சாம்பிராணி : மர நறுமணப் பிசின் வகை. இது காப்புப் பொருளாகவும், கபம் வெளிக் கொணரும் மருந்தாகவும் பயன்படுகிறது.

benzphetamine : பென்ஸ்ஃபிட்டாமின் : உடல் பருமனைக் குறைப் பதற்காக வாய்வழி உட் கொள்ளப்படும் ஒரு மருந்து. இது ஆஃபிட்டாமின் மருந்தினைப் போன்றது.

benztropine : பென்ஸ்டிராபின் : அட்ராப்பின் போன்ற ஒரு மருந்து. உயிர்த்தசைமங்களின் திரிபினைத் தடுக்கக்கூடியது; உறுப்பெல்லை உணர்வு நீக்கியாகவும், நோவகற்றும் மருந்தாகவும் பயன்படுகிறது. பார்க்கின்சன் நோயில் தசை விறைப்பினையும், முடக்கத்தையும் குறைக்கிறது.

benzyl benzoate : பென்சைல் பென்சோயேட் : நறுமணத் திரவம். சிரங்குகளைக் குணப்படுத்த முக்கியமாகப் பயன்படுத்தப் படுகிறது.

benzyl penicillin : பெனிசிலின்.

bephenium hydroxynapthoate : பெஃபினியம் ஹைட்ராக்சினா ஃபோயேட் :கொக்கிப்புழு, வட்டப் புழு ஆகியவற்றுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் மருந்து. இது உணவு உண்பதற்குக் குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக வெறும் வயிற்றில் கொடுக்கப்படுகிறது.

Berger's disease : பெர்ஜர் நோய்.

beriberi : தவிட்டான் நோய் (பெரி பெரி) betelnut chewing: வைட்டமின்-B என்ற ஊட்டச்சத்துக் குறைவினால் உண்டாகும் நோய். தீட்டிய அரிசியை முக்கிய உணவாகக் கொள்ளும் நாடுகளில் இந்நோய் முக்கியமாக உண்டாகிறது. நரம்புக் கோளாறு, முடக்கு வாதம், தசை நலிவு, இழைம அழற்சி, மனச்சோர்வு, இறுதியில் மாரடைப்பு உண்டாகும்.

Berkozide : பெர்கோசைடு : பெண்ட்ரோஃப்ளுவாசைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Berry's sign : பெர்ரி தடயம் : கேடயச் சுரப்பி வீக்கமடைந்துக் கழுத்துத் தமனியைப் பின்பக்கமாகவும் வெளிப்பக்கமாகவும் ஒதுக்கி விடுதல். கேடயக்கழலை நோயின் போது கழுத்துத் தமனியின் நாடித்துடிப்பு கழலையின் பின்பக்கமாக உணரப்படும். கேடயச் சுரப்பி புற்று நோயின்போது கழுத்துத் தமனி காண்பது அரிது. இத்தடயத்தை இங்கிலாந்து அறுவைச் சிகிச்சை வல்லுநர் சர். ஜேம்ஸ் பெர்ரி கண்டுபிடித்தார்.

berylliosis : பெரிலியம் நோய் : பெரிலியம் என்ற கெட்டியான வெள்ளை உலோகத் தனிமத்தைச் சுவாசிப்பதால் உண்டாகும் நுரையீரல் கோளாறு. இது தொழிற்சாலைத் தொழிலாளர்களுக்குப் பெரும்பாலும் ஏற்படுகிறது.

beryllium : பெரில்லியம் : கெட்டியான வெள்ளை உலோகத் தனிமம். வான ஊர்திகள், அணு இயக்கக் கருவிகள், ஊடுகதிர் உற்பத்திக் கருவிகள் மற்றும் வெப்பம் தாங்கும் பாண்டங்கள் தயாரிப்பதற்குப் பயன்படும் ஒர் உலோகம்.

Besnier's prurigo : அரிப்புக் கொப்புளம் : குழந்தைகளுக்குப் பரம்பரையாக உண்டாகும் ஒரு வகைத் தோல் அழற்சி நோய். குருதிச்சுற்றோட்டம் பாதிக்கப்பட்டு, மேல்தோல் உலர்ந்து கெட்டியாகி, கரப்பான் புண் உண்டாகிறது.

bestiality : விலங்கோடு புணர்வு; விலங்குப் புணர்வு : விலங்கைப் புணரும் ஒரு வித மனநோய். வன்செயல், வக்கிரமான, வெறி பிடித்தவரின் செயல்.

beta : பீட்டா : கிரேக்க மொழியின் இரண்டாம் எழுத்து.

Beta-loc : பீட்டா-லாக் : மெட்டோப்ரோலோல் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

betamethasone : பீட்டாமெத்தசோன் : அழற்சி எதிர்ப்பியாகப் பயன்படும் இயக்குநீர் மருந்து.

betelnut chewing : வெற்றிலை மெல்லுதல்; வெற்றிலை பாக்கு போடுதல் :வெற்றிலையில் பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை இவற்றை வைத்துச் சுருட்டி, வாயில் வைத்து மெல்லுதல். இது வாய்ப் புற்றுநோய்க்கு பாதை அமைக்கும்.

bethanecol : பெத்தனிக்கால் : செயல் முறையில் கார்பக்காலை ஒத்திருக்கும் ஒரு கூட்டுப்பொருள். நச்சுத்தன்மை இல்லாதது. சிறு நீர்த்தேக்கம், அடி வயிறு விரிவடைதல் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

Betnesoil : பெட்னசால் : பீட்டா மெத்தாசோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Betnovate : பெட்னோவாட் : பீட்டா மெத்தாசோன் அடங்கிய ஒரு களிம்பு மருந்தின் வணிகப்பெயர்.

Betz's cell : பெட்ஷ் அணு : பெருமூளையின் இயக்கப்புறணியில் காணப்படும் மிகப்பெரிய அணு வகை. ரஷ்யா நாட்டின் உடலியல் மருத்துவர் விலாடிமிர் பெட்ஷ் இந்த அணுவைக் கண்டு பிடித்ததால், இது அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

bevel : சரிவு : முனைச்சாய்வு சரிந்த பகுதி, சரிவான பகுதி, பற்குழிச் சரிவு.

bewilderment : திகைப்பு; திகைத்தல்.

bezoar : இரைப்பையில் முடிச்சுருள் : இரைப்பை மற்றும் சிறு குடலில் முடி பந்து போன்று சுருண்டு இருத்தல். அல்லது பழம் மற்றும் காய்கறிச் சக்கைகள் திரண்டு கொள்ளுதல். சமயங்களில் உணவு கூட பந்து போல் உருண்டு, திரண்டு இரைப்பையை அடைக்கலாம்.

Bezold'd mastoiditis : பெஷால்ட் பொட்டெலும்பு அழற்சி; பெஷால்ட் பொட்டெலும்பு வீக்கம் : பின் தலையில் பொட்டெலும்புக் கூம்புமுனை அழற்சியுற்று, வீங்குதல், சீழ்ப்பிடித்தல். மூனிச் நகரைச் சேர்ந்த காது நோய் வல்லுநர் ஃபிரெட்ரிக் பெஷால்ட் இதனைக் கண்டறிந்த காரணத் தால், இது அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

Bhopal gas tragedy : போபால் நச்சுவாயு விபத்து; போபால் விஷவிபத்து சோகம் : 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் நாளில் இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் 'மெதில்ஐசோசியனேட்' எனும் நச்சுவாயு கசிந்து, காற்றில் கலந்து, சுற்றுச்சூழல் மாசுபட்டதால், சுமார் 2,500 பேர் இறந்தனர்.

bibliomania : நூல் சேர்ப்பு வெறியர்; புத்தகச் சேர்ப்புப் பிரியர் : நூல்களைச் சேர்ப்பதில் அடங்காத ஆர்வமுள்ளவர். bibliotherapy : முதுகு மருத்துவம்; படிப்பு மருத்துவம் : முதிய நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் மருத்துவமுறை. அவர்கள் தங்கள் தேவைகளைத் தாங்களே நிறைவு செய்துகொள்வதற்கு உதவுவதற்காக இந்தச் சிகிச்சை அளிக்கப் படுகிறது.

bicarbonate : பைக்கார்போனேட் : கார்போனிக் அமிலத்தின் ஓர் உப்பு. இரத்தத்தில் பைக்கார்போனேட் இருந்தால், அது காரப் பொருள் சேர்ந்திருப்பதைக் குறிக்கும். இதனை நிணநீர்ப் பைக்கார்போனேட் என்றும் கூறுவர்.

bicellular : ஈரணு உயிர்; இரட்டை அணு; இருசெல் : இரு உயிரணுக்களை உடைய உயிர்.

biceps : இருதலை; கை இரு தலைத்தசை : கையில் உள்ள ஒரு தசை. இது முன்கையை மடக்குவதற்கும், மேற்கையை மடக்குவதற்கும் உதவுகிறது. தொண்டை இருதலைத்தசை : தொடையில் உள்ள ஒரு தசை, பின்பக்க வாட்டுப் பகுதியில் உள்ளது. முழங்கால் முட்டை மடக்குவதற்கும் வெளிப்பக்கமாகக் காலைச் சுழற்றுவதற்கும் இது தேவைப்படுகிறது.

Bicillin : பைசிலின் : பென்சாத்தின் பெனிசிலின் மருந்தின் வணிகப் பெயர்.

bicipital : இருதலை : இருதலை கொண்ட கை இருதலைத் தசை.

இருதலைத்தசை வரிப்பள்ளம் : இருதலைத்தசை நாண் மேற்கை எலும்பில் செல்வதற்குண்டான வரிப் பள்ளம்.

biconcave : இருபுற உட்குழிவு; இருபுறக்குழிவு : இருபரப்புகளும் உட்குழிவாக அல்லது உட்புழையுடன் இருத்தல்.

biconvex : இருபுறக் குவியம்; இருபுறக் குவிவு : ஈரிணைக் குவி இருபரப்புகளும் குவிந்திருத்தல்.

bicornuate : இரு கொம்புடைய; இரட்டைக் கொம்பு : இரட்டைக் கருப்பையை அல்லது இரு கொம்புகளுடைய ஒரே கருப்பையுடைய.

bicuspid : இரட்டைக் கதுப்பு: ஈரிதழ் : இரண்டு இதழ்களைக் கொண்ட தடுக்கிதழ். இதயத்தின் இடது மேலறைக்கும் இடது கீழறைக்கும் இடையில் உள்ள ஈரிதழ்த் தடுக்கிதழ் (மைட்ரல் தடுக்கிதழ்). முன் கடவாய்ப் பற்களின் வெட்டுப் பகுதியில் காணப்படும் இரண்டு கதுப்புகள்.

B.I.D (Bis In Die) : இருவேளை; இருவேளை மருந்து : ஒரு நாளைக்கு இருவேளை மருந்து தரப்பட வேண்டும் என்று பொருள்தரும் லத்தீன் மொழிச் சொல்.

bidet : துப்பரவுத் தொட்டி : தண்ணிர்த் தொட்டி போன்ற தொரு வட்டில். இதில், கருவாய்க்கும் பெண் உறுப்புக்கும் இடைப்பட்ட பகுதி மூழ்கியிருக்கு மாறும் அதே சமயம் கால்கள் வெளியிலும், பாதங்கள் தரையிலும் இருக்குமாறும், அமரலாம். யோனிக் குழாயை அல்லது குதவாயைத்துப்பரவு செய்வதற்கான இணைப்புறுப்புகளும் உண்டு.

bifid : இரு பிளவு; பிளவு biliary: வெடிப்பாக அல்லது கவர்முள் வடிவாக இரு பகுதிகளாக பிளவுபட்டிருத்தல்.

bifocal : இருபார்வைக் கண்ணாடி; இரட்டைப்பார்வைக் கண்ணாடி; இரு குவியம் : இருவெவ்வேறு குவியாற்றலை பெற்று உள்ள ஒரு கண்ணாடி.

bifurcation : பிளவீடு; இரண்டாய் பிரித்தல் : இரு கிளைகளாகப் பிரித்தல்.

biguanides : பைகுவானைடஸ் : வாய்வழி உட்கொள்ளப்படும் நீரிழிவு மருந்து. இது நீரிழிவு நோயாளிகளின் தசைத் திசுக்கள் அதிகச் சர்க்கரையை (குளுக்கோஸ்) ஈர்த்துக் கொள்ளும்படி செய்கிறது. இதனால், பாலில் அளவுக்கு அதிகமாகக் காடிப் பொருள் சேரும் பக்கவிளைவு ஏற்படுகிறது.

bilateral : இருபுறமும் : இருபக்க; இரண்டு பக்கங்கள் கொண்ட, இருபுறமும் தெரிகின்ற.

bilateral symmetry : இருபக்கச்சீர்மை.

bilayer : ஈரடுக்கு : இரண்டு அடுக்குகளைக் கொண்டு இருக்கிறது.

bile : பித்தநீர் : பித்தம் நுரையீரலில் சுரந்து, பித்தப் பையில் சேர்த்து வைக்கப்படும் கசப்பான, காரத்தன்மையுள்ள ஒட்டும் இயல்புடைய, பசும் மஞ்சள் நிறமான திரவம். இதில் நீர், மியூசின், லெசித்தின், கொலஸ் டிரால், பித்த உப்புகள், பிலிரூபின், பிலிவெர்டின் என்ற நிறமிகள் அடங்கியுள்ளன.

bile ducts : பித்த நாளம்; பித்த நீர்க் குழாய்.

bile pigment : பித்த வண்ணம்.

Bilharzia : பில்ஹார்சியா : ஒரு வகை ஒட்டுண்ணிப் புழு. இரத்தத்தில் காணப்படுவது. (எ-டு) சிஸ்டோ சோமா. ஜெர்மனி நாட்டின் மருத்துவர் தியோடர் பில்ஹார்ஷ் இதனைக் கண்டுபிடித்தார்.

bilharziasis : ஒட்டுயிர்ப் புழு நோய் : இரத்தத்திலுள்ள தட்டை வடிவ ஒட்டுயிர் புழு வகையால் ஏற்படும் நாட்பட்ட நோய் வகை.

biliary ; பித்தநீர் சார்ந்த : பித்த நீர் தொடர்புடைய நோய்கள். பித்த வயிற்று வலியினால், அடி வயிறு வீக்கத்துடன் கூடிய குடல் நோவு உண்டாகும். இந்த வலி உணவு உண்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தோன்றி, பல மணிநேரம் நீடித்திருக்கும். வாந்தியும் ஏற்படலாம்.

biliary calculus : பித்தக்கல்.

biliary tract : பித்தப் பாதை.

biloleate : இருவளைவு.

biloleate : இரு நுண் வளைவு.

bilious : பித்தத்துக்குரிய : பித்த நீர் தொடர்புடைய நோய்கள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள்.

Bilious vomiting : பித்த வாந்தி; பித்தநீர் வாந்தி : வாந்தி எடுக்கும் போது பித்தநீர் வாந்திப் பொருளாக வெளிவருதல்.

biliousness : பித்தநீர் மயக்கம்; பித்தநீர் மிகைப்பு : கல்லீரல் நோயால் அல்லது கல்லீரல் செயல் குறைபாடால் ஏற்படுகின்ற நிலை. குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, இரைப்பைக் கோளாறு, தலைவலி, மலச்சிக்கல் போன்ற நோய் அறிகுறிகள் தோன்றும்.

bilirubin : பிலிரூபின் : இரத்தச் சிவப்பணுக்கள் மண்ணிரலில் அழிவுறுவதால் குருதி உருண்டைப் புரதம் (ஹிமோக்ளோபின்) உடைந்து உண்டாகும் ஒரு நிறமி. இது கொழுப்பில் கரையச் கூடியது. இது உடம்பிலுள்ள தீவிர வளர்சிதை மாற்றத் திசுக்களுக்குத் தீங்கு விளைவிக்கும்.

bilirubinaemia : பிலிரூபின் நோய் : இரத்தத்தில் பிலிரூபின் என்ற நிறமி இருத்தல். சில சமயம் இரத்தத்தில் பிலிரூபின் அளவுக்கு அதிகமாக இருப்பதை இச்சொல்லால் தவறாகக் குறிப்பிடுகிறார்கள்.

Bilirubinuria : சிறுநீரில் பிலிரூபின் : சிறுநீரில் பிலிரூபின் நிறமிப் பொருள் மிகையாக இருக்கும் நிலை.

bilis : பித்தநீர்.

bilitherapy : பித்தநீர் மருத்துவம்.

biliuria : சிறுநீர்; பித்தநீர் நிறமி; பித்தச் சிறுநீர் : சிறுநீரில் பித்த நீர் நிறமிகள் இருத்தல்.

biliverdin : பிலிவெர்டின் : பிலிரூபின் என்ற நிறமி ஆக்சி கரணமாவதால் உண்டாகும் பச்சை நிற பித்தநீர் நிறமி.

Billroth's operation : பில்ரோத் அறுவை மருத்துவம் : அடிவயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கான ஒரு முறை. இதில் இருவகை உண்டு: (1) முன் சிறுகுடலுடன் வயிற்றின் எஞ்சிய பகுதியை இணைக்கும் வயிற்றின் அடிப் பகுதியில் அறுவை மருத்துவம் செய்தல்; (2) வயிற்றின் புறக் கோடி முனையைச் சிறிது நறுக்கி அறுவைச் சிகிச்சை செய்தல். bilobate : ஈரிதழ் உறுப்பு : இரு மடல்கள் கொண்ட உறுப்பு.

bilobular : இருமடல் உறுப்பு : இரு சிறிய இதழ்கள் அல்லது மடல்கள் கொண்ட உறுப்பு.

biluria : பித்த நீரிழிவு.

bimanual : இருகைச் சோதனை : இருகைகளாலும் செய்யப்படும் செயல்முறை. பெண் நோயியலில், அடிவயிற்றில் ஒருகையை வைத்தும், இன்னொரு கையை யோனிக் குழாயினுள் நுழைத்தும் உள் பிறப்புறுப்புகளைச் சோதனை செய்யும் முறை.

binary : இரட்டை; இரண்டிரண்டாக : சமஅளவுள்ள இரு பகுதிகள், இரண்டு கிளைகள்.

Binary fission : இரட்டைப்பிளவு; இரட்டைப் பிளப்பு : உடல்அணுக்கள் அல்லது அணுக்களில் உள்ள உட்கருக்கள் இரு சம பாகங்களாகப் பிரிதல்.

binaural : இருசெவி சார்ந்த; இரு செவிக்குரிய; இரு செவி : இரு செவிகளையும் பயன்படுத்துகிற இதயத் துடிப்புமானி போன்ற வகையைச் சார்ந்த கருவி.

binder : அடிவயிற்றுக் கட்டு : மகப்பேற்றுக்குப் பின்பு அடிவயிறு கருங்குவதற்காக வெளிப்புறமாக அழுத்தம் கொடுப்பதற்காகப் போடப்படும் துணிப்பட்டைக்கட்டு.

Binet's test : பைனட் சோதனை : ஒருவரின் அறிவுத்திறனை அவரது மன வயதுக்கேற்ப கணித்தறியும் சோதனை. இது முதலில் 1905 இல் பயன்படுத்தப்பட்டது. அறிவுத்திறன் அளவெண் (IQ) சோதனைக்கு இது முன்னோடி.

binocular vision : தொலை நோக்காடிப் பார்வை; இருவிழிப் பார்வை :ஒரே சமயத்தில் ஒரு பொருளின் ஒரு பிம்பம் மட்டுமே கண்ணுக்குப் புலனாகும் வகையில் இருகண்களின் பார்வையினையும் அந்தப் பொருளின் மீது ஒரு முகப்படுத்துதல். இது பிறவிலேயே அமைந்த திறம்பாடு அன்று. வாழ்க்கையின் முதல் சில மாதங்களில் இத்திறன் உருவாகிறது.

binocular : தனியணு இரட்டையர் : புது உயிராக உருவாகும் பெண் கரு உயிரணுக்களின் இரு தனி உயிரணுக்களிலிருந்து உருவான இரட்டைப் பிள்ளைகள். இந்த இரட்டையர் வெவ்வேறு பாலினம் சார்ந்தவராக இருக்கலாம்.

bioassay : உயிரியல் மருத்துவ ஆய்வு : உயிருள்ள விலங்கின் உடலில் அல்லது அதன் உடலில் குறிப்பிட்ட உறுப்பில் ஒரு மருந்தின் விளைவை, வீரியத்தை, பயனை, பாதிப்பைக் கண்டறியும் முறை.

bioavailability : உடலின் மருந்து இருப்பு : ஒர் இலக்கு உறுப்பில் மருந்து இருக்கும் அளவு மருந்து செலுத்தப்படும் வழி, மருந்து வளர்சிதையும் அளவு, கொழுப்பில் மருந்து கரையும் தன்மை, மற்றும் புரதங்களோடு இணையும் பண்பு ஆகியவற்றைப் பொறுத்து உடலில் மருந்து இருக்கும் அளவு வேறுபடும்.

biochemical : உயிர் வேதிப்பொருள் : உயிர் வேதியியலைச் சார்ந்த பொருள். நோயை நிர்ணயிப்பதற்கு உதவும் உடற்காப்பு ஊக்கி, உடற்காப்புப் பொருள், நொதி, இயக்குநீர் போன்ற உயிர்வேதியியல் பொருள்கள். நோய் நிலைகளில் இப்பொருள்களின் அளவு, அமைப்பு சுரப்பு ஆகியவை மாறுபடலாம்.

biochemist : உயிரிய வேதியியலார்.

bio-chemistry : உயிரியவேதியியல் : உயிரினங்களின் உடலில் ஏற்படும் வேதியியல் இயக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி ஆராயும் அறிவியல் துறை.

biodynamics : உயிரியக்கவியல் : உயிரியலில் உயிரின் ஊக்காற்றலைப் பற்றிய பகுதி.

bioengineering : உயிரிய பொறியியல் : நோயாளிகளின் உடம்பினுள்ளும், வெளியேயும் பயன்படுத்துவதற்குரிய நுட்பமான மின்னணுவியல் அல்லது எந்திரவியல் கருவிகளை வடிவமைத்தல்.

bio-ethics : உயிரிய அறவியல் : உயிரியல் சிக்கல்களுக்குத் தீர்வு காண அறவியலைப் பயன்படுத்துதல்.

biofeedback : உடல் உயங்கல் மாற்றக் குறிப்பு; உடலியங்கல் மறுதகவல் ; உயிர் மறுதகவல் : இரத்த அழுத்தம், நாடித் துடிப்பு வீதம், தசை விறைப்பு போன்ற உடலின் தன்னியக்கப் பணிகள் பற்றிய ஒளி அல்லது ஒலித் தகவல்களை வழங்குதல். இத்தகவல்களிலிருந்து உடல் இயங்குவதற்கான இயல்பான நிலைமைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

Bio-gastrone : பயோ-காஸ்டிரோன் : கார்பினோக்சோலோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

biogen : உயிர் உயிர்ப்பு : உயிர்த் தசையில் இருப்பதாகக் கருதப் படும் உயிர்க்கூறு.

biogenesis : உயிரின இயல்; உயிர் மரபு; உயிர் பிறப்பியல் : உயிரிலிருந்து உயிர் பிறக்கிறது என்ற கருத்தை வலியுறுத்தும் கோட்பாடு.

biogenetic : உயிர் மரபான; மூல உயிர்க் கூறுக்குரிய; உயிர் மரபுக் கோட்பாட்டுக்குரிய.

biogenic : உயிர்பிறப்பால்; உயிர் பிறப்பு : உயிருள்ள பொருளிலிருந்து உருவானது. biogenist : உயிர் மரபுக் அணுவியல் எந்திரங்களில் கோட்பாட்டாளர்.

biogenze : உயிர் மரபு.

biohazard : உயிரியல் இடர்பாடு; உயிர் இடர்பாடு : உயிருக்கு இடர் உண்டாக்கும் எந்தப் பொருளையும் இது குறிக்கும். மனிதனுக்கும் அவனுடைய சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கின்ற பொருள்.

biological : உயிரினக் கட்டுப்பாடு : உயிரியல் தொடர்புடைய உயிரினப் பொருள்கள்; உயிர்ப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் ஊநீர், தடுப்பூசி, எதிர்நச்சு போன்றவை.

biological age : உயிரியல் வயது : ஒருவரின் தோற்றம், நடத்தை முறையிலிருந்து கணித்தறியப்படும் வயது. இதன்படி, சிலர் 40 வயதில் முதுமையாகவும், சிலர் 60 வயதில் இளமையுடனும் தோன்றுவார்கள்.

biological control : உயிரியல் கட்டுப்பாடு : தீங்கிழைக்கும் நுண்மங்களின் எதிர் நுண்மங்களைப் பெருக்குவதன் மூலம் இயற்கைக் கோளாறுகளைக் கட்டுப்படுத்தும்முறை. (எ-டு) களைகளைக் கட்டுப்படுத்த பூச்சிகளைப் பயன்படுத்துதல்.

biological shield : உயிரியல் காப்பு : அணு உலை போன்ற அணுவியல் எந்திரங்களில் பணியாற்றும் ஆட்களை அணுக் கதிர் ஆதாரமுடைய ஒரு வட்டப் பாதுகாப்புச் சுவரை அமைத்தல்.

biological valve : உயிரிய மதிப்பு.

biological warfare : உரியல் போர்முறை : நோய்களை உண்டாக்கும் நுண்மங்களைப் பயன்படுத்தும் போர்முறை.

bionics : ஒப்பு உயிரியல் : உயிர் மண்டலங்களைப் போன்று.

biologist : உயிரியல் வல்லுநர் : உயிரியலில் தேர்ச்சி பெற்றவர்.

biology : உயிரியல் : உயிரினங்கள் அனைத்தின் கட்டமைப்பு, செயல்முறை, அமைப்புமுறை குறித்து ஆராயும் அறிவியல் துறை.

biomass : உயிரின எடை : ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து உயிரினங்களின் மொத்த உடல்எடை.

biomechanics : உயிர் எந்திரவியல் : உயிரினங்களின் உடலில் ஏற்படும் எந்திர ஆற்றல்களின் இயக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி ஆராயும் அறிவியல்துறை.

biomicroscopy : உயிரணு நுண்ணோக்கல் : நுண்ணோக்கியின் உதவியுடன் உயிருள்ள அணுவைப் பரிசோதித்தல்.

biomedical : உயிரிய மருத்துவ இயல் : உயிர்களில் மருத்துவ ஆய்வு செய்தல், இயற்கை அறிவியலைப் பயன்படுத்தி மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளும் அறிவியல் கலை.

'biometry : உயிரிய காலக் குறிப்பியல்; உயிரின வாழ்நாள் குறிப்பு : உயிரினங்களின் உண்மை நிலவரங்களுக்குப் புள்ளியியலைப் பயன்படுத்தி விளக்கம் கொடுத்தல் அல்லது ஒப்பிடுதல்.

biopharmaceutics : உயிரிய மருந்தியல் : ஒரு மருந்தின் இயற்பியல் மற்றும் வேதியல் குணங்களைக் கற்பிக்கும் அறிவியல் கலை.

biophysics : உயிரிய இயற்பியல் : உயிருள்ள பொருள்களின் இயற்பியல் பண்புகளைக் கற்பிக்கும் அறிவியல் கலை.

bioplasm : 3ஊன்மம்.

bioplast : ஊன்ம நுண்கூறு; உயிர்த் தாது.

biopsy : உயிர்ப்பொருள் ஆய்வு; உடல்திசு ஆய்வு : உடலின் பிணியுற்ற பகுதியிலிருந்து திசுக்களை எடுத்த, நுண்ணோக் காடியில் வைத்துச் சோதனை செய்து, பீடித்துள்ள நோய் என்ன என்று கண்டறிதல்.

Bioral : பயோரல் : கார்பினோக் சோலோஸ் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

biorhythm : உயிரியல் ஒழுங்கு இயல்பு: உயரிலயம் : உடலியல், உணர்வியல், அறிவார்ந்த நடவடிக்கைகள் ஒருவித ஒழுங்கியல்புடன் சுழற்சியாக மீண்டும் மீண்டும் நடைபெறுதல். இது மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடியது.

bioscience : உயிர் அறிவியல் : உயிருள்ளவற்றின் அறிவியல் பண்புகளைக் கற்பிக்கும் அறிவியல் கலை.

biosensors : உயிரியல் உணர்விகள் : தோல் வெப்பநிலை, புற அழுத்தத்தினால் ஏற்படும் ஈரப்பதன் அல்லது உயிரியல் மாறுபாடுகள் போன்ற உயிரியல் செயல்முறைகளின் விளைவினை அளவிடுவதற்கான நுண்கருவிகள்.

biosis : உயிர்; உயிருள்ள : இணைப்புச்சொல். உயிரினம் வாழும் முறையைக் குறிப்பிட உதவும் சொற்பதம்.

biosphere : உயிர்மண்டலம்.

biostatistics : உயிர்புள்ளியியல் : புள்ளியியல் கோட்பாடுகளை உயிரினங்களின் ஆய்வுக் குறிப்புகளோடு ஒப்பிட்டு நோக்குதல்.

biosynthesis : உயிரியல் சேர்க்கை : உயிரினங்கள் உருவாக்கும் வேதியியல் பொருள்.

biosystem : உயிர்மண்டல முறை.

biotechnology : உயிரியநுட்பவியல் : தொழில் நுட்பம் பற்றிய அறிவியல் ஆய்வில் உயிரியல் அறிவினைப் பயன்படுத்துவதும், உயிரியல் ஆய்வில் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்துவதும் உயிர்த் தொழில் நுட்பம் எனப்படும்.

biotics : உயிர் : உயிர் தொடர்பான அறிவியல்.

biotin : ஊட்டச்சத்து : பி-இரண்டு (B-2) எனப்படும் ஊட்டச்சத்துக் கலவைக் கூட்டில் அடங்கியுள்ள "வைட்டமின் H" எனப்படும் ஊட்டச்சத்துக் கூறு. இந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டினால், தோல் அழற்சி நோய் உண்டாகும்.

biotoxin : உயிர்நச்சு : உயிருள்ள திசுக்களில் உற்பத்தியாகும் நச்சுப்பொருள்.

biotransformation : உடல் மருந்து மாற்றம்; உயிரியக்க வேதியியல்; உயிரிய மாற்றம்.

biotype : ஓரினக் கூட்டம்.

biparous : இரட்டை ஈற்று : ஒரே தடவையில் இரட்டையாகப் பெறுதல்.

biperiden : பைபெரிடன் : தனியங்கும் நரம்பு மண்டலத்தின் மீது செயற்படும் ஒருவகை மருந்து. பார்க்கின்சன் நோய்க்கு இது பயன்படுகிறது.

Bipp : எலும்பழற்சிக் கட்டு மருந்து : பிஸ்மத் (நிமிளை) சப்னுட்ரேட் அயோடாஃபார்ம், திரவ பாரஃபின் கலந்தஒரு குழம்பு. கடுமையான எலும்பழற்சியில் நோய்க்கிருமித் தடைக்காகக் கட்டுப்போடுவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

birth : பிறத்தல்; பிறப்பு : தாயின் உடலிலிருந்து குழந்தை பிறக்கும் செயல். தாய்க்கு இடுப்பு வலி காணும்போது குழந்தை தாயின் இடுப்பெலும்பு உட்குழிவின் வழியாக வெளியே வருகிறது.

birth control : கருத்தடை; பேற்றுக் கட்டுப்பாடு.

birth-mark : பிறவிக்குறி : பிறக்கும்போது உடலில் காணப்படும் தனிப்பட்ட அடையாளம்.

birth rate : பிறப்பு விதம்.

bisacodyl : பிசாக்கோடில் : ஒரு செயற்கைப் பேதி மருந்து. இதனை வாய்வழி உட்கொள்ளும்போது, ஈர்த்துக்கொள்ளப் படுவதில்லை. ஆனால், இரைப்பையின் உட்சுவரைச் செயலாற்றத் தூண்டுகிறது. இது மலக்குடல் சிறுநீர்த் துளையினுள் நுழைத்து அங்கேயே கரைய விட்டுவிடப்படும் குளி கைகளாகவும் கிடைக்கிறது.

bisexual : இருபால் கூறினம்; இருபாலிய இருபாலினம் : இருபால் உறுப்புகளையும் ஒருங்கேயுடைய உயிரினம். ஒருவரிடமே ஆண் பெண் கருப்பை இரண்டுக்கும் பொதுவான திசு இருக்குமானால், அவர் உண்மையில் இருபால் கூறு உடையவராவார். ஆண் பெண் இருபாலாரிடமும் பாலுறவு கொள்ள விழைபவரையும் இது குறிக்கும்.

bismuth meal : நிமிளை உணவு : சீரண உறுப்புகளின் ஊடுகதிர் (எக்ஸ்-ரே) படங்களை எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் உணவுடன் கலந்த நிமிளை உப்பு.

Bisolvin : பைசால்வின் : புரோம்ஹெக்சைன் எனும் மருந்தின் வணிகப் பெயர்.

bistoury : கூர்ங்கத்தி : ஒடுங்கிய நீண்ட அறுவைக் கத்தி. இது நீளமாகவோ வளைந்தோ இருக்கும். இதைக்கொண்டு உள்ளிருந்து வெளியே அறுவை செய்யலாம். குடலிறக்க உட்பை, கழலை, பிளவை, புண்புரை ஆகியவற்றை அறுப்பதற்கு இது பயன்படுகிறது.

bitolterol : பிட்டால்ட்டிரால் : மூச்சுக்குழாய்களைத் தளர்த்தும் பண்புடைய இயக்க ஊக்கி மருந்து.

Bitot's spots : பிட்டோட் புள்ளிகள் : விழிவெண்படலத்தின் பக்கங்களில் காணப்படும் புற அடர்படலம், சிம்புத்துணுக்குகள், நுண்ணுயிரிகள் ஆகியவை. வைட்டமின்-A குறைபாட்டினால் இது உண்டாகிறது.

bitters : கைப்பான் மருந்து : கசப்புப் பூண்டு வகைகளிலிருந்து வடிக்கப்பட்டுச் செரிமானத்திற்குப் பயன்படுத்தப்படும் மருந்து நீர்.

biuret : பையூரெட் : யூரியாவின் சிதைவுப் பொருள். பையூரட் பரிசோதனை யூரியா மற்றும் இரத்த ஊநீரில் உள்ள கரையும் புரதங்களைக் கண்டறியும் பரிசோதனை.

biventer : இருதலைத்தசை : இரு புடைப்புகள் உடைய தசை.

biventricular : இதயக்கீழறைகளைச் சார்ந்த : இதயக் கீழறைகள் இரண்டையும் பாதிக்கின்ற.

Bjerrum's screen : பிஜெரம் திரை : ஒர் இலக்குத்திரை டானிஷ் நாட்டின் கண் மருத்துவர் ஜானிக் பிஜெர்ம் கண்டுபிடித்த காரணத்தால், இது அவர் பெயரால் அழைக்கப் படுகிறது. இது விழித்திரையில் உள்ள குருட்டுக் பொட்டைக் காண்பதற்கு உதவுகிறது.

black : கருமை; ஒளியற்ற; இருண்ட; கறுத்த; கறுப்பு.

black head : முகப்பரு; கருமுள் : கருமை நிறத்தில் காணப்படும் தோலடிச் சுரப்பு நீர் உருண்டு திரண்டு மயிர்க்காம்புத் துளையை அடைத்துக் கொள்வதால் இது ஏற்படுகிறது.

black eye : கறுப்புக்கண்; கறுங்கண் : கறுப்பு நிறத்தில் காணப்படும் கண் விழிவெண்படலத்தில் இரத்தக் கசிவு ஏற்படுவதால் கண் கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் நிலைமை.

black lung : கறுப்பு நுரையீரல்; கறுப்பு சுவாசப்பை : இது ஒரு தொழில் சார்ந்த நோய். நிலக்கரிச் சுரங்கங்களில் பணிபுரிவோரின் நுரையீரல்களில் கரித்துக தொடர்ந்து படிவதால் அவர்களுடைய நுரை யீரல்கள் கறுப்பாக இருக்கும்.

blackout : இருட்டடிப்பு : சிறிது சிறிதாக சுயநினைவை இழக்கும் நிலைமை.

black tongue : கருநாவு;கருப்பு நாக்கு : நாக்கின் மேற்பரப்பு கறுப்பு நிறத்திற்கு மாறிவிடுதல். முடிநாக்கு.

blackwater fever : கருநீர்க் காய்ச்சல் : வெப்ப மண்டலங்களில், குறிப்பாக ஆஃப்ரிக்காவில், உண்டாகும் ஒருவகைக் கடுமையான முறைக்காய்ச்சல் (மலேரியா). இந்நோய் பிடித்தவர்களுக்கு இரத்தச் சிவப்பணுக்கள் பெருமளவில் அழிகின்றன. இதனால் சிறுநீர் அடர்ந்த கருநிறத்தில் போகும்.

bladder : சவ்வுப்பை; தேங்குபை; நீர்ப்பை : மெல்லிய தாள் போன்ற தோற்பை. இதில் திரவம் அல்லது வாயு அடங்கி யிருக்கும். பித்தநீர்ப்பை, சிறு நீர்ப்பை ஆகியவை இவ்வகையைச் சேர்ந்தவை.

blade-bone : பின்புறத் தோள் எலும்பு.

Blalock's operation : பிளாலாக் அறுவை மருத்துவம் : நுரையீரலில் இருந்து இரத்தம் பாய்வதை அதிகரிப்பதற்காக துரையீரல் தமனியின் நாளங்களை பெருந்தமனியின் ஒரு கிளையுடன் இணைக்கும் அறுவை மருத்துவ முறை.

bland : நோவாற்றி; இதமான; எரிச்சலிலா : நோவினை ஆற்றக்கூடியது: வேதனையைத் தணிக்கவல்லது; எரிச்சலூட்டாதது; மென்மையானது.

blast : வெடித்தல்.

Bastomyces : கருஊன்மங்கள் : நோய் உண்டாக்குகின்ற, நொதி (ஈஸ்ட்) போன்ற உயிரிகள்.

blastocyst : சினை நீர்க்கோளம்; சினை நீர்ப்பை; கருத்திசு நீர்ப்பை : துவக்க நிலைக்கருவில் உருவாகும் நீர்ப்பை.

blastoma : சினைக்கட்டி, கருத்திசுக்கட்டி : கருவில் உருவான உறுப்புகளில் உண்டாகும் கட்டி. Blastomere : சினைக்காரணி.

Blastoomycosis : கரணை : கரு ஊன்மங்கள் எனப்படும் நொதி (ஈஸ்ட்) போன்ற அரும்பு உயிரிகளினால் உண்டாகும் சொரசொரப்பு நிலைமை. இது தோல், உள்ளுறுப்புகள், எலும்புகள் ஆகியவற்றைப் பாதிக்கும்.

blastula : கருக்கோளகை : முதிர்ச்சியடைந்த சூல்முட்டையின் தொடக்க நிலை.

BLB mask : பி.எல்.பி. முகமறைப்பு : உயரமான இடங்களில் உள்ளவர் களுக்கு பிராணவாயு செலுத்துவதற்குப் பயன்படும் முகமூடி. பூத்பை, லவ்லேஷ், புல்புலியன் எனும் மூவர் சேர்ந்து இந்த முகமறைப்பைக் கண்டுப் பிடித்ததால் இது இப்பெயரால் அழைக்கப்படுகிறது.

bleaching : வெளிர்த்தல்; வெளுத்தல் : துணி மற்றும் சில பொருள் களில் உள்ள கரையை வேதிப்பொருள் கொண்டு அகற்றுதல்.

சலவைத்துள் : 'கால்சியம் ஹைப்போ குளோரைட்' எனும் வேதிப்பொருளின் வியாபாரப் பெயர். (வணிகப் பெயர்).

bleb : கொப்புளம்; பெருங்கொப்புளம்; நீர்க் கொப்புளம் : தோலின் மேல் பகுதி வீக்கம் அடைதல் அல்லது புடைத்தல்.

bleeder : குருதி சிந்துபவர்; குருதியளிப்போர் : சிறுகாயத்திலிருந்தும் குருதிப்பெருக்கிடும் பரம்பரை நோயினால், அடிக்கடி குருதியிழப்பு ஏற்பட்டு அவதிப்படும் நோயாளி.

bleeding : குருதி ஒழுக்கு; இரத்த ஒழுக்கு; குருதியோட்டம்; குருதி வடிப்பு; குருதிக் கசிவு : காயம்பட்ட அல்லது வெட்டுப்பட்ட இரத்த நாளத்திலிருந்து இரத்தம் வெளியேறுதல்.

தமனி இரத்த ஒழுக்கு : தமனி இரத்த நாளத்திலிருந்து வெளியேறும் இரத்தம். இது சிவப்பு நிறத்தில் காணப்படும்.

மாதவிலக்கு; மாதஇடைஒழுக்கு : பெண்களுக்கு மாதவிலக்கின் இடைப்பட்ட காலத்தில் இரத்த ஒழுக்கு ஏற்படுதல்.

சிரை இரத்த ஒழுக்கு : சிரை இரத்த நாளத்திலிருந்து இரத்த ஒழுக்கு ஏற்படுதல் இந்த இரத்தம் கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும்.

குருதியொழுக்குக் காலம்; இரத்த ஒழுக்கு நேரம்; இரத்தம் வடியும் காலம் : இரத்த நாளத்தைக் குத்தும்போது இரத்தம் வடியத் துவங்கியது முதல் அது உறைந்து இரத்தம் வடிதல் நிற்கும் வரையுள்ள நேரம் (காலம்). மறை குருதி தெரியா குருதி : சிறு குடலிலிருந்து வெளிப்படும் குருதி மறைந்த நிலையில் இருக்கும்; கண்ணுக்குத் தெரியாது நுண்ஊக்கியில் காண இயலும்.

bleeding time : குருதிக் கசிவு நேரம்; குருதியொழுக்கு நேரம் : தோல் காயத்திலிருந்து இரத்தம் வெளியேறுவது தானாகவே நின்று விடுவதற்கு ஆகும் நேரம். இது ஒரு மருத்துவச் சோதனையுமாகும்.

blennorrhagia : மேக நோய்; குய்யக் கசிவு : பெண்ணின் கருப்பை வாய்க் குழாயிலிருந்து அல்லது ஆணின் சிறுநீர் ஒழுக்குக் குழாயிலிருந்து சளிச்சவ்வு (சிலேட்டுமப் படலம்) பெருமளவில் வெளியேறுதல்.

blennorrhoea : சீதச் சிறுநீர்; புணர் புழைச் சீதநீர் : வெட்டை நோயுள்ள அணுக்குச் சிறுநீரில் சீழ் கலந்து வரும் நிலைமை. வெட்டை நோயுள்ள பெண்ணுக்குப் புணர்புழைத் திரவத்திலும் சிறுநீரிலும் சீழ் கலந்து வரும் நிலைமை.

bleomycin : பிளியோமைசின் : உயிர் வாழ்வுக்கு ஊறு செய்யும் ஒரு பொருள்.

blepharon : இமை.

blepharitis : இமைவீக்கம்; இமை அழற்சி : முக்கியமாகக் கண் விழிம்புகள் வீக்கமடைதல்; இமை மயிர்க்கால் நோய்.

blepharon : கண்ணிமை.

blepharoptosis : இமை வாதம் : தசையின் பக்கவாதத்தினால் கண்ணின் மேலிமை கீழ் நோக்கித் தொங்குதல்.

blepharospasm : இமை இசிப்பு; இமைச்சுருக்கம் : கண்ணிமைகையில் தசைச் கரிப்பு ஏற்பட்டு, கண்ணிமை அளவுக்கு அதிகமாகத் துடித்தல்.

blepheroplasty : இமை சீரமைப்பு : இமைச் சுருக்கங்களை அல்லது இமை பாதிப்புகளை அறுவை மருத்துவம் முலம் சீரமைத்தல்.

blepharotomy : இமை வெட்டு; கண்ணிமைவெட்டு : அறுவைக் கத்தியின் உதவி கொண்டு கண்ணிமையைக் கிழித்தல்.

blighted ovum : வளரா முட்டை : கருத்தரித்த சினைமுட்டை தொடர்ந்து வளர இயலாத நிலைமையில் இருத்தல்.

blind : குருடர்; பார்வையற்றவர்; பார்வை உணர்வின்மை : மருந் தில் உள்ள ஆக்கக் கூறுகளை அறியாதிருத்தல்.

குருட்டுப்பொட்டு : விழித்திரை யில் ஒளி உணர இயலாத பகுதி.

blindgut : குடல்வால் குடல்முளை. blind loop syndrome : குடலடைப்பு நோய் : குடலில் ஏற்படும் தடை அல்லது அறுவைச் சிகிச்கையினால் குருதி நாளங்கள் தடைபடுதல் காரணமாக ஏற்படும் நோய். சிறுகுடலில் குருதியோட்டம் நின்றுபோய் பாக்டீரியா வளர்ச்சி ஊக்குவிக்கப் படுகிறது. இதனால், வயிற்றுப் போக்கும், செரிமானமின்மையும் ஏற்படுகிறது.

blindness : குருடு; பார்வையற்ற தன்மை; குருட்டுத்தன்மை; பார்க்க இயலாமை : கண்புரை நோய், கண்மிகை அழுத்த நோய், நிறமிழி இழைம நோய், கண் விபத்து பாதிப்புகள் ஆகியவற்றால் பார்வை பறிபோவது அல்லது பார்வை இல்லாத நிலைமை.

blind sight : குருட்டுப் பார்வை : பார்வைக்குரிய புறணி சேத மடைவதால், சில நோயாளிகள், வழக்கமான சோதனைகளுக்குப் பிறகு, பார்வையிழந்தவர்கள் என அறிவிக்கப்படுகின்றனர். எனினும், எஞ்சியுள்ள பார்வையைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அவர்களுக்குப் பயிற்சியளிக்கலாம்.

blind spot : குருட்டுப் பகுதி; குருட்டுப் பொட்டு, குருட்டுப் புள்ளி : விழித்திரையின் குருட்டுப் பகுதி. இங்கு பார்வை நரம்பானது, விழித்திரையில் இருந்து விலகிவிடுகிறது. இதனால், இப்பகுதியினால் ஒளியை உணர இயலாது.

blink : மிகை இமையசை; மிகை இமை அசைப்பு : கண் இமைகள் இயல்புக்கு மீறி அடிக்கடி அசையும் நிலை.

blister : எரிகொப்புளம்; கொப்புளம் : குருதி ஊனிர் அல்லது குருதி சேர்வதால், உள்தோலிலிருந்து வெளித்தோல் பிரிந்து விடுதல்.

Blistering fluid : கொப்புள நீர்மம்.

Blocadren : பிளாக்காட்ரன் : டிமோலால்மாலியேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

bloating : உப்புசம்; வயிறு உப்புசம்; வயிறு ஊத்தம் : அஜீரணம் மற்றும் குடல் அசைவுகளின் இயல்பற்றத் தன்மையால் வயிறு உப்பிக் கொள்ளுதல்.

block : அடைப்பு: தடை.

blockade : மருந்துத் தடை : ஒரு மருந்தின் விளையை மற்றொரு மருந்தால் தடுப்பது.

blocker : அடைப்பான்; முட்டுக் கட்டை; தடுப்பான் : உடலியக்கத் தின் இயல்புத் தன்மையைத் தடுக்கின்ற மருந்து.

blocking : உணர்வு தடுத்தல்.

blood : இரத்தம்; குருதி : இதயத்திலும் இரத்தநாளங்களிலும் நிறைந்திருக்கும் செந்நிற நெய்ப்புத் தன்மையுடைய திரவம். இதில், குருதிநீர் (பிளாஸ்மா) எனப்படும் உயிர்மப் பொருள் அடங்கியுள்ளது. இதில் இரத்தச் சிவப்பணுக்கள், இரத்த வெள்ளணுக்கள், தகட்டு அணுக்கள் மிதக்கின்றன. குருதி நீரில், இரத்தம் கட்டிக்கொள்ள உதவும் பொருள்கள் உட்படப் பல்வேறு பொருள்கள் கரை சலாக அடங்கியுள்ளன.

blood bank : இரத்த வங்கி; குருதி வங்கி : இரத்த தானம் கொடுப் போரிடமிருந்து இரத்தத்தை எடுத்து, அதனைத் தேவையானவர்களுக்குச் செலுத்தவது வரையில் பாதுகாப்பாகக் குளிர்பதனப் பெட்டியில் சேமித்து வைக்கும் நிலையம்.

bloodbrain barrier : இரத்த மூளை வேலி : சுற்றோட்ட இரத்தத்திற்கும் மூளைக்குமிடையிலான சவ்வுப் படலவேலி. சில மருந்துகள் இரத்தத்தில் இருந்து இந்தத் தடையின் வழியாக மூளைத் தண்டுவட நீருக்குச் செல்ல முடியும். மற்றவற்றால் முடியாது. எடுத்துக்காட்டு: ஸ்டிரப்டோ மைசின்.

blood casts : இரத்தத்துணுக்குகள் : உறைந்துபோன இரத்தச் சிவப்பணுக்களின் துணுக்குகள். இவை, சிறுநீர்க் குழாய்களில் உருவாகி, சிறுநீரில் காணப்படும்.

blood clotting : இரத்தக்கட்டு; குருதி உறைதல் : இரத்த நாளங் களில் அடைப்பு ஏற்பட்டு இரத்த ஒட்டம் தடைபடுகிறது. நுண்ணிய தட்டணுக்களின் துகள் திரண்டு இரத்த நாளச் சுவர்களில் உள்ள 'கோலேஜன்' என்ற பொருளில் ஒட்டிக் கொண்டு, இடைவெளியை அடைத்துவிடுகின்றன . பொதுவாக நாளச்சுவர்களில் படிந்துள்ள மெல்லிய உயிரணுப் படலத்தினால் பாயும் இரத்தத்தில் இருந்து 'கோலேஜன்' பிரிக்கப்படுகிறது. இந்தப் படலத்தில் ஒரு பிளவு ஏற்படும் போதுதான், கோலேஜனுடன் இரத்தத்திற்குத் தொடர்பு உண்டாகிறது. அதனால் தட்டணுக் கள் அதில் ஒட்டிக் கொள்கின்றன. சுருங்குதலும், அடைப்பும் குருதிப் போக்குகளில் ஏற்படுகின்றன.

blood culture : குருதி வளர்ப்பு; குருதி வரைமை : ஒரு நாளத்தில் இருந்து இரத்தம் வெளியேற்றப்பட்டதும், பெரிதும் உகந்ததொரு வெப்பநிலையில் பொருத்தமானதொரு ஊடகத்தில் இரத்தம் பெருக்கமடையுமாறு செய்யப்படுகிறது. இதனால் உள்ளடங்கிய உயிரிகள் பெருக்கமடைய முடிகிறது. இந்த உயிரிகளைத் தனிமைப்படுத்தி நுண் ணோக்காடி மூலம் அடையாளங் காணலாம். blood count : குருதியணு எண்ணிக்கை : குருதியணு அளவை மானியைப் பயன்படுத்தி, இரத்தத்தில் ஒரு மில்லி மீட்டரில் எத்தனை சிவப்பணுக்கள் அல்லது வெள்ளை அணுக்கள் இருக்கின்றன என்பதைக் கணக்கிடுதல். இதன் மூலம், இரத்தத்தில் சிவப்பு வெள்ளை அணுக்களின் வீத அளவு கணக்கிடப் படுகிறது. பாலிமார்ஃபஸ்: 65%-70%; லிம்ப்போசைட்ஸ்: 20%-25% மானோசைட்ஸ்: 5%; ஈசினோஃபில் :0%-3%; பாசோஃபில்ஸ்-0%- 0.5% குழந்தைப் பருவத்தில் லிம்போசைட்டுகளின் வீத அளவு அதிகமாக இருக்கும்.

blood-dust : குருதியிலுள்ள நிறமிலா சிறு துகள்.

blooded : குருதியுடைய.

blood glucose profiles : குருதி சர்க்கரை அளவு : நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் வீத அளவைக் கண்டறிதல். இது நீரிழிவு நோயாளிகளுக்குரிய சிகிச்சை அளிப்பதற்கு உதவுகிறது. நீரிழிவு நோயாளியின் இரத்த மாதிரிகள் காலை உணவுக்கு முன்பும், காலை உணவுக்கு 2 மணி நேரம் பின்பும், நண்பகல் உணவுக்கு 2 மணி நேரம் பின்பும், மாலை உணவுக்கு முன்பும், இரவு படுக்கைக்குப் போகும் நேரத்திலும் சில நோயாளிகளுக்கு இரவு நேரத்திலும் எடுக்கப்பட்டுச் சர்க்கரை அளவு கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில் நோயாளிக்குரிய மருத்துவ முறை தீர்மானிக்கப்படுகிறது.

blood group : குருதி பகுப்பினம்; குருதி வகை; குருதி வகையறிதல் : குருதியின் நால் வகைப் பகுப்பினங்கள். இவை A, B, AB, O என்னும் இனங்களாகும். இந்தப் பகுப்பினங்களில், '0' இனம் தவிர மற்ற மூன்று இனங்களின் உயிரணுக்களில் நேரிணையான காப்பு மூலங்களைக் (ஆன்டிஜன்) கொண்டிருக்கின்றன. '0' இனத்தின் உயிரணுக்களில், 'A' காப்பு மூலமோ, 'B' காப்பு மூலமோ அடங்கியிருக்கவில்லை. இதனா லேயே, 'O' இரத்தத்தை உடையவர்களுக்குச் செலுத்தலாம். இதனால் 'O' இனம், பொது இனம் எனப்படுகிறது. ஒருவர் எந்த இன இரத்தத்தைக் கொண்டிருக்கிறாரோ அந்த இன இரத்தம் மட்டுமே அவருக்குச் செலுத்தப்படுதல் வேண்டும்.

blood-heat : குருதி வெப்பளவு.

bloodless : குருதியற்ற.

blood letting : குருதி வடித்தல்; குருதி விடுப்பு : மருத்துவ முறைப்படி குருதியை வடித்தல். blood-money : குருதிக் கூலி.

blood-poisoning : குருதி நச்சுத் தன்மை.

blood pressure : குருதி அழுத்தம்; இரத்த அழுத்தம் : இரத்த நாளங்களின் சுவர்களில் இரத்தம் உண்டாக்கும் அழுத்தத்தின் அளவு, பொதுவாக இது இதயத்தில் இருந்து குருதி கொண்டு செல்லும் நாளங் களாகிய தமனிகளில் ஏற்படும் அழுத்தத்தைக் குறிக்கிறது. குருதி அழுத்தமானி எனப்படும் கருவியைப் பயன்படுத்தி, அதிலுள்ள பாதரச அளவினை மில்லி மீட்டரில் கணக்கிட்டு இரத்த அழுத்தம் அளவிடப் படுகிறது. ஒவ்வொரு இதயத் துடிப்பின் போதும் தமனி இரத்த அழுத்தம் ஏறி இறங்குகிறது. இதயத்திலிருந்து தமனிகளுக்கு இரத்தம் பாயும் அளவைப் பொறுத்து இதயச் சுருக்க அழுத்தம் மிக உயர்ந்த அளவில் இருக்கும். தமனி மற்றும் நுரையீரல் தமனியில் தடுக்கிதழ்கள் (வால்வு) முடப் பட்டு, இதயம் தளர்ச்சியடையும் போது, இதயச்சுருக்க அழுத்தம் மிகக் குறைவாக இருக்கும். இந்த மிக உயர்ந்த மிகக் குறைந்த அழுத்த அளவுகள் பதிவு செய்யப்படுகின்றன (எடுத்துக்காட்டு : 120/70).

blood serum : குருதி நிணநீர்(குருதி ஊனீர்/குருதி வடிநீர்); குருதி ஊனீர்; குருதி தெளிநீர் : குருதி உறையும்போது வெளிப்படும் திரவம். இது, உறையவைக்கும் பொருள் இல்லாத உயிரியற் பொருள் (பிளாஸ்மா) ஆகும்.

blood sinus : குருதிப் புர்அஇ.

blood-sprent : குருதிதெறித்த.

blood stain : குருதிக்கறை.

blood sugar : குருதிச் சர்க்கரை : சுற்றோட்டமாகச் செல்லும் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு, இது இயல்பான வரம்பளவுகளுக்குள் மாறுபடுகிறது. இதன் அளவினை பல்வேறு செரிமானப் பொருள்களுள் (என்சைம்) இயக்குநீர்களும் (ஹார்மோன்), கட்டுப்படுத்துகின்றன. இவற்றில் முக்கியமானது இன்சுலின் என்ற கணையச் சுரப்பு நீர் ஆகும்.

blood transfusion : மாற்றுக் குருதியேத்தம் : ஒருவர் இரத்தத்தை இன்னொருவர் இரத்த நாடிக்கு மாற்றுதல்.

blood urea : இரத்த மூத்திரை : இரத்தத்தில் புரத வளர்சிதை மாற்றத்தின் காரணமாக இறுதியாக உண்டாகும் பொருள் (யூரியா). இதன் அளவு, இயல்பான வரம்புக்குள் மாறுபடும். இந்தப் பொருளை முக்கியமாக வெளியேற்றுகிற சிறுநீரகங்கள் இயல்பாக இயங்கும்போது, உணவிலுள்ள புரதத்தின் அளவினால் இது பாதிக்கப்படுவதில்லை. சிறுநீரகங்கள் நோயுறும்போது, இரத்த மூத்திரையின் அளவு விரைவாக அதிகமாகிறது.

blood vessel : இரத்த நாளம்; குருதி நரம்பு.

bloody-sweat : இரத்தம் கலந்த வியர்வை காணும் நோய்வகை.

Bloom syndrome : புளூம் நோயியம் : நோய்த்தடுப்பாற்றல் குறைவு நோய். தடுப்பாற்றல் புரதம் குறைவாகவுள்ள நிலைமை.

blotch : கொப்புளம்; கட்டி; தழும்பு.

blotched : தழும்பு தழும்பான.

blotchy : கொப்புளமுள்ள.

blowing test : ஊதல் பரிசோதனை.

blue baby : நீலக் குழந்தை : பிறப்பிலேயே தோலில் நீலம் படரும் நோய் வகையுடைய குழந்தை. பிறவியிலேயே ஏற்படும் சிலவகை இதயக்கோளாறுகளினால் இது தோன்றுகிறது.

blue belly : நீல நிறவயிறு : வயிற்றின் உள்தோலில் இரத்தக் கசிவு ஏற்படும்பொழுது தொப்புளைச் சுற்றின வயிறு நீல நிறத்தில் காணப்படும் நிலைமை.

bluxism : பல் இறுக்கம் : பற்கள் அழுத்தமாக முடிக்கொள்ளுதல். இதனால் தசைச்சோர்வு ஏற்பட்டு தலைவலி உண்டாகும்.

body : உடல்.

body image : உடல் உருக்காட்சி; உடல்பிம்பம் : ஒருவரின் சொந்த உடல் பற்றி அவரது மனதில் தோன்றும் உருக்காட்சி. உணவு உண்ண விருப்பமில்லாதபோது, இது போன்ற மனத்திரிபுகள் ஏற்படும்.

body language : உடல் மொழி : ஒருவரின் தற்போதைய உடல் நிலையினையும், மன நிலையினையும் குறிக்கும், வாய் மொழியற்ற உடற் குறியீடுகள். நிற்கும் தோரணைகள், முக பாவங்கள், இடஞ்சார்ந்த நிலை கள், ஆடையணிகள் ஆகியவை இதில் அடங்கும்.

Boeck's disease : போயக் நோய் : தசைநார் தொடர்பான ஒருவகை நோய்.

Bohn's nodules : போஹ்ன் திரளை : பிறந்த குழந்தையின் அண்ணத்தில் உள்ள நுண்ணிய வெண்ணிற நரம்புக் கணுக்கள்.

boil : கழலை; பரு; கொப்புளம்; கட்டி.

boil (syn furuncle) : கொப்புளம் : (குருதிக்கட்டி) : ஒரு மயிர் மூட்டுப் பையைச்சுற்றி ஏற்படும் கடுமையான வீக்கம் அல்லது கட்டி. இதில் பொதுவாகச் சீழ் கட்டும். அரச பிளவை போலன்றி, இதில் சீழ் வடிவதற்கு ஒரு வாய் இருக்கும்.

bolus : கவளம் : உணவுக்கவளம் விழுங்குவதற்கு எளிதாக உள்ள வகையில் உருண்டை வடிவில் தயாரிக்கப்பட்ட ஒரு மருந்துப் பொருள். உடலில் மருந்தானது துரிதமாகச் செயல்படுவதற்காக, சிரை நாளம் வழியாக மிக வேகமாக மருந்தைச் செலுத்தும் முறை.

Boividon : போல்விடான் : மியான்ஸ்கிரின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

bonding : பிணைப்பு : ஒருவர் மற்றொருவருடன் கொள்ளும் உணர்வுபூர்வமான பிணைப்பு. இது நீண்டகால உணர்ச்சி மயமான உறவுநிலைக்கு இன்றியமையாதது. பிறந்த குழந்தைகள், தீவிர மருத்துவப் பிரிவில் கவனிக்கப்பட வேண்டிய பிரிவில் கவனிக்கப்பட வேண்டிய சம யத்தில் குழந்தைக்கும் பெற்றோர்களுக்கும், முக்கியமாகத் தாய்க்குமிடையே இந்தப்பிணைப்பு உயிரியல் முறையில் இன்றியமையாதது. பிறந்த குழந்தைக்கும் அவற்றின் பெற்றோருக்கும் இடையே அன்பு இணைப்பை வளர்ப்பதற்குத் தனி முயற்சிகள் தேவை.

bone : எலும்பு : ஒருவகை இணைப்புத் திசு கால்சியம் கார்போனேட்,கால்சியம்பாஸ்ஃபேட போன்ற உப்புப்பொருள்கள் இதில் படிந்து இதனைக் கடினமாக்கி அடர்த்தியாக்குகிறது. தனித்தனி எலும்புகள் சேர்ந்து எலும்புக்கூடாக அமைகின்றன.

bone graft : எலும்பு ஒட்டு மருத்துவம் : உடம்பின் ஒரு பகுதி யிலிருந்து ஒர் எலும்புத்துண்டை எடுத்து இன்னொரு பகுதியில் பொருத்துதல் அல்லது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்றிப் பொருத்துதல். எலும்புக் கோளாறுகளைச் சீர்படுத்துவதற்கு அல்லது எலும்பு உருவாக்கத் திசுக்களை அளிப்பதற்கு இந்த மருத்துவம் பயன்படுகிறது.

bone marrow : எலும்பு மச்சை; எலும்புச் சோறு; எலும்பு நாளக் கூழ் : எலும்பு உட்புழையிலுள்ள சோறு போன்ற பொருள். பிறக்கும்போது இந்த உட்புழையினுள், சிவப்புச் சோறு போல் அமைந்த, இரத்தம் நிறைந்தி ருக்கும். பின்னர், நீண்ட எலும்புகளினுள் கொழுப்புப் பொருள் படிந்து சிவப்புச்சோறு, மஞ்சள் எலும்புச்சோறாக மாறுகிறது.

bone-marrous cancer (multiple myeloma) : எலும்பு மச்சைப்புற்று : எலும்புச் சோறு எனப்படும் எலும்பு மச்சையில் உள்ள ஒரு வகை இரத்த வெள்ளை அணுக்களில் படிப்படியாக ஏற்படும் புற்றுநோய். இதில் தொடக்க நிலையில், காரணமின்றி எலும்பு வலி, அடிக்கடித் தொற்று நோய்கள், சிறு நீரகம் செயலிழத்தல் போன்ற நோய்க்குறிகள் தோன்றும். இந்த நோய் பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உண்டாகிறது. இந்த நோயைக் குணப்படுத்துவதற்கான ஒரே வழி எலும்பு மச்சை மாற்று அறுவைச் சிகிச்சையேயாகும். இந்த அறுவைச் சிகிச்சையில், நோயுற்ற மச்சை நீக்கப்பட்டு, மாற்றாக ஆரோக்கியமான எலும்பு மச்சை வைக்கப்படு கிறது.

bone-marrow transplant : எலும்பு மச்சை மாற்று அறுவை மருத்துவம் பெரும்பாலான எலும்புகளின் மையப்பகுதியில் எலும்புச் சோறு அல்லது எலும்பு மச்சை என்னும் மென்மையான திசு உள்ளன. இதுதான், உடம்பி லுள்ள நோயைத் தீர்ப்பதற்கான இரத்த வெள்ளணுக்களை உற்பத்தி செய்து, முதிர்ச்சியடையச் செய்கிறது. எலும்பு மச்சையின் இந்தச் செயல்முறை சேத மடையும்போது நோயாளி இறந்துவிடுகிறார். இதைத் தடுப்பதற்கு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் நோயுற்ற எலும்பு மச்சை உயிரணுக்களை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக ஆரோக்கியமான உயிரணுக்களை மச்சையில் வைக்கிறார்கள். இந்த ஆரோக்கியமான உயிரணுக்களை நோயாளியிடமிருந்த எடுக்கலாம்; இல்லையெனில் இந்த உயிரணுக்களைப் பெரும்பாலும் மார்பெலும்பிலிருந்து அல்லது இடுப்பெலும்பு வரை, முகட்டிலிருந்து எடுக்கிறார்கள். எலும்பில் பல துளைகளிட்டு ஊசிகள் மூலம் மச்சை எடுக்கப்படுகிறது. இது நோயாளிக்கு நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிறது. நோயை எதிர்க்கும் உயிரணுக் கற்றைகளின் முன்னோடிகளான நடுத்தண்டு உயிரணுக்களையும் நோயுற்ற உயிரணுக்களுக்குப் பதிலாக வைக்கலாம். நடுத்தண்டு உயிர் அணுக்களை, எலும்பு மச்சை இரத்தம், தொப்புள்கொடி இரத்தம் அல்லது கருப்பைச் சிசுவின் நுரையீரலிலிருந்து எடுக்கலாம்.

bonesetter : எலும்பு பொருத்துநர்.

bony : எலும்பு சார்ந்த.

bony landmark : எலும்பு அடையாளம் : உடல் உறுப்புகளின் இருப்பிடங்களை அடையாளம் காண உதவும் எலும்புப் பெருக்கம்.

Boop : பூப் : பிராங்கியோலைட்டிஸ் ஆப்லிடொரன்ஸ் ஆர்கனைசிங் நிமோனியா என்னும் நோயின் ஆங்கிலச் சொற்றொடரின் முதல் எழுத்துச் சேர்க்கை. மூச்சுநுண் குழாய் கள் அழற்சியுற்று முற்றிலுமாக அழிந்து போவதால் ஏற்படுகின்ற நுரையீரல் அழற்சி நோயைக் குறிப்பது.

booster : செயலூக்கி; ஊக்குவிப்பு ஊசி : ஒருவருக்கு ஏற்கனவே தரப்பட்ட தடுப்பு ஊசியின் செயலை ஊக்குவிப்பதற்காகப் போடப்படும் மற்றொரு தடுப்பூசி. (எ-டு) குழந்தைகளுக்கு 1 1/2, 2 1/2, 3 1/2 மாதங்களில் முத்தடுப்பூசி போடப்படும். இதன் ஊக்குவிப்பு ஊசிகள் முறையே ஒன்றரை, நான்கரை வயதுகளில் போடப்படும்.

borax : வெண்காரம் : போரிக் அமிலம் போன்றதொரு மென்மையான நோய்க்கிருமித் தடைப் பொருள். போரக்ஸ் கிளிசரைனும் எலும்பு நிரம்பிய போரக் கம் தொண்டைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது. எனினும் இதனை அரிதாகவே பயன்படுத்துதல் வேண்டும்.

borborygmi : வயிற்றுப் பொருமல் : குடலில் வாயுக்கள் அசைவதால் உண்டாகும் குமுறல் சத்தம்.

borderline : எல்லைக்கோடு; இடைப்பட்ட விளிம்பு; எல்லை; நிலையற்ற : எந்த நிலையிலும் உறுதியில்லாத இரண்டு நிலைகளுக்கு இடைப்பட்ட. மிகு இரத்த அழுத்த எல்லை : இயல்பான இரத்த அழுத்தத்திற்கும் மிகு இரத்த அழுத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் ஒருவரின் இரத்த அழுத்த அளவு இருப்பது.

நிலையற்றத் தொழுநோய் : இவ்வகைத் தொழுநோயின் தோல் படைகள் பார்ப்பதற்கு டியூபர் குலாய்டு வகையைப் போலவே இருக்கும். நாள்கள் ஆக ஆக இப்படைகள் லெப்ரோமேட்டஸ் வகைக்கு மாறிவிடும்.

இடைப்பட்ட கட்டி : புற்றுநோய்க் கட்டியாக மாறும் தன்மையுள்ள கட்டி.

bordeteila : கக்குவான் கிருமி : கக்குவான் இருமல் நோய் உண் டாக்கும் 'புருசெல்லான்சியே’ என்ற நோய்க்கிருமி (பாக்டீரியா).

bonedom : அலுப்பு.

boric acid : போரிக் அமிலம் : மென்மையான நோய்க் கிருமித் தடைப்பொருள். கண் சொட்டு மருந்தாகவும், காதுச்சொட்டு மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் துளையும் கரைசலையும் உடலின் வெற்றுப் பகுதி யில் தடவுதலாகாது. அதனால், போரிக் நச்சு உண்டாகலாம்.

Bornholm disease : பார்ன்ஹால்ம் நோய் : டென்மார்க்கைச் சேர்ந்த பார்ன்ஹால்ம் என்ற தீவில் அதிகம் பரவியிருந்த இந்த நோயை சில்வெஸ்டரின் 1934 இல் கண்டறிந்து விளக்கினார். ஒருவகை நோய்க் கிருமியினால் இந்நோய் உண்டாகிறது. இந்நோய்க்கிருமி பீடித்த 14 நாட்களில் நோய்க்குறிகள் தோன்றுகின்றன. நெஞ்சின் அடிப்பகுதி அல்லது அடிவயிறு அல்லது முதுகெலும்புத் தசைகளில் திடீரெனக் கடும் வலி தோன்றி, மூச்சுவிடுவது கடினமாகிறது. வலி காரணமாக, காய்ச்சலும் தோன்றுகிறது. இந்நோய் ஒரு வாரம் நீடிக்கும். இதற்குச் சிகிச்சை எதுவுமில்லை.

Borrelia : பொரிலியா : இது ஒரு சுருளுயிரிக் கிருமி.மீள் காய்ச்சலை உண்டாக்கும். ஃபிரான்ஸ் நாட்டின் நுண்ணுயிரியல் வல்லுநர் அமெடீபொரெல் இக்கிருமியைக் கண்டுபிடித்தார்.

பொரிலியா பர்ஜிடோர்பெரி : லைம் நோயை உருவாக்கும் கிருமி.

பொரிலியா டுட்டோனி : உண்ணிகளால் பரவும் மீள் காய்ச்சலை உண்டாக்கும் கிருமி.

பொரிலியா ரெக்கரிண்டிஸ் : பேன்களால் பரவும் மீள் காய்ச்சலை உண்டாக்கும் கிருமி.

பொரிலியா வின்சென்டை : வாய் அழுகல் புண்ணை ஏற்படுத்தும் கிருமி.

bossing : வட்டமேடு; உருண்டை மேடு : பிறந்த குழந்தையின் மண்டையோட்டில் காணப்படும் மேடு முன் மண்டையோட்டிலும் பக்கவாட்டு மண்டையோட்டிலும் வட்டவடிவில் உருண்டையாகத் திரண்டு காணப்படும் மேடு இது.

Botallo's duct : பொட்டல்லோ நாளம்; ஒருவகைத் தமனி நாளம் : இத்தாலி நாட்டின் அறுவைச் சிகிச்சை வல்லுநர் லியோநார்டோ பொட்டல்லோ இனம் கண்ட இரத்த நாளம்.

bottle feeding : புட்டிப்பால் ஊட்டல்; புட்டிப்பால் கொடுத்தல் : தாய்ப்பால் இல்லாத நேரங்களில் மாட்டுப்பாலை புட்டிகளில் அடைத்து, அதன் முனையில் இருக்கும் ரப்பர் காம்பின் வழியாகக் குழந்தைக்குப் பால் ஊட்டுதல். தாய்ப்பாலுக்கு மாற்றுணவு.

botulin : பொட்டிலின் : மிகக் கொடிய நரம்பு நச்சு.

botulism : தகர நச்சு : தகர கலங்களில் அடைத்து வைக்கப்படும் உணவுகளில் கிருமிகளால் விளையும் நச்சுப்பாடு. இதனால், வாந்தி, மலச்சிக்கல், வாய் மற்றும் தொண்டை வாதம் ஏற்படும். சில சமயம் இந்த நஞ்சுணவு உண்ட 24-72 மணி நேரத்திற்குள் குரலிழப்பும் ஏற்படக்கூடும். எனவே, தகரக் கலங்களில் இடப்பட்ட காய்கறிகள், உணவுப் பொருள்களைத் தவிர்த்தல் வேண்டும். bougie : வளைவுக் கத்தி; புகுத்தி : வளையும் இயல்புடைய மென் மையான அறுவைக் கத்தி. இது நீள் உருளை வடிவுடையது. இது பிசின் நெகிழ்வு உலோகத் தினாலானது. இறுக்கங்களை விரிவடையச் செய்வதற்கு இது பயன்படுகிறது.

bounding pulse : எழும்பு நாடி.

Bourneville's disease : பார்ன் வில்லி நோய் : நரம்புத் தோல் தடிப்பு நோய். இது ஒரு பரம்பரை நோய். இந்த நோயுள்ளோருக்கு வலிப்பு நோய், மனநோய், மூளையில் கட்டி, தோலில் தடிப்புகள் மற்றும் கட்டிகள் காணப்படும். இந் நோய்க்கு முறையாக சிகிச்சை இதுவரைக் கடைபிடிக்கப்பட வில்லை. ஃபிரான்ஸ் நாட்டின் நர்ம்பியல் வல்லுநர் டெய்சரி மேக்லோயர் பார்ன்வில்லி என்பவர் இந்த நோயைக் கண்டுபிடித்தார்.

boutonniere deformity : பௌட்டனியர் ஊனம் : முதுமை மூட்டழற்சி நோயின்போது கை, கால்விரல் அசைவுகளில் உண்டாகும் ஊனம்.

bovine : கால்நடை சார்ந்த; மாட்டினம் : பசு மாடு, எருது போன்ற கால்நடை சார்ந்த.

bowel : குடல்; சிறுகுடல்; பெருங்குடல்; குடல் அசைவு; குடல் இயக்கம் : உணவு செரிப்பதற்காகவும், மலம் வெளியேற்றுவதற்காகவும், குடல் இயங்குதல், அசைதல்.

குடல் ஒலிகள் : குடல் இயங்கும் போது உண்டாகும் ஒலிகள். இந்த ஒலிகளைக் கேட்டு சில நோய்களை மருத்துவர்கள் கணிப்பர்.

bow legs : கால் வளைவு; பக்க வளைவுக்கால் : முழங்காலுக்குக் கீழே உள்ள கால் பக்கவாட்டில் வளைந்திருத்தல் முழுங்காலுக்குக் கீழே உள்ள பகுதி வெளிப்புறமாக வளைந்திருப்பது.

Bowman's capsule : பௌமண் கிண்ணம் : சிறுநீரக வடிப்பியில் காணப்படும் கிண்ணம் போன்ற அமைப்பு. சிறுநீரக வடி முடிச்சுகளை உள்ளடக்கி உள்ளது. ஆங்கில உடலியங்கு இயலாளர் சர் வில்லியம் பெளமண் இதைக் கண்டறிந்தார்.

Bowman's membrane : பெளமண் ஆய்வு : கரு விழிப்படலத்தையும் கருவிழிப் பொருளையும் பிரிக்கின்ற மெல்லிய சவ்வு அல்லது இழை.

Boyle's anaeasthetic machine : பாயில் மயக்கமருந்து எந்திரம் : குளோரோஃபார்ம், ஈதர், நைட்ரஸ் ஆக்சைடு வாயு, ஆக்சிஜன் போன்ற மயக்க மருந்துகள் கொடுப்பதற்கான எந்திரம்.

Boyle's apparatus : பாயிலின் கருவி; பாயிலின் உணர்வகற்றிக் கருவி : இங்கிலாந்து நாட்டில் மயக்கவியல் வல்லுநர் 'பாயில்' என்பவர் வடிவமைத்த கருவி. அறுவைச் சிகிச்சையின்போது நோயாளிக்கு உணர்வு இல்லா நிலையை உண்டாக்குவதற்கும், அவருக்குத் தேவையான பிராண வாயுவைத் தருவதற்கும் பயன்படும் கருவி.

Boyle's law : பாயிலின் விதி : “ஒரு வாயுவின் கன அளவு அதிகரித்தால் அதன் அழுத்தம் குறையும். வாயுவின் அழுத்தம் அதிகரித்தால் அதன் கனஅளவு குறையும்" என்பது பாயிலின் விதி. இங்கிலாந்து இயற்பியலாளர் ராபர்ட் பாயில் என்பவர் இந்த விதியைக் கண்டுபிடித்தார்.

Brace : உறுப்புக் கவ்வி; பல்கல்வி; பல்பிடிப்பி : சிதைந்த எலும்பு களையும் நார் பிணையங்களையும் தாங்கும் உலோகக் கருவி.

brachial : மேற்கை சார்ந்த : மேற்கை மண்டலத்திலுள்ள நாளங்கள் கழுத்தின் அடியிலுள்ள நரம்புப் பின்னல் ஆகியவற்றை இது குறிக்கிறது.

brachialis : மேற்கைக்கீழ்த் தசை : மேற்கை இருதலைத் தசைக்குக் கீழ்ப்புறம் அமைந்துள்ள தசை.

brachial artery : மேற்கைத்தமனி : மேற்கைக் குருதி நாளம்.

brachiocephalic : கைத் தலைத் தொடர்பு : கைக்கும் தலைக்கும் தொடர்புடைய.

brachial artery : மேற்புயத்தமனி.

brachioradialis : முன்கைப் பக்க தசை : முன்கையின் பக்க வாட்டில் அமைந்துள்ள தசை.

brachium : மேற்கை; மேலங்கம்; புயம் : தோள்முதல் முழங்கை வரையுள்ள கையின் பகுதி, கை போன்ற ஒர் இணைப்புறுப்பு.

brachycephalic : சைப்பைத் தலை : குட்டையாகவும் அகலமாகவும் காணப்படும் தலை.

brachydactyly : குட்டை விரல்; சிறு விரல் : கை, கால் விரல்கள் குட்டையாக இருப்பது.

brachygnathia : மிகக் குருந்தாடை : முகத்தில் உள்ள கீழ்த் தாடை இயல்பில்லாமல் மிகவும் குட்டையாக இருப்பது.

bracket : அடைப்பு; வளைவு; நெருக்குக் கம்பி : மரத்தால் அல்லது உலோகத்தால் ஆன ஒரு கருவி. பல் சிகிச்சையில் பயன்படும் கருவி.

Bradford frame : பிராட்ஃபோர்ட் படுக்கை : நோயாளிகளைத் தூக்கிச் செல்லப்பயன்படும் தூக்குப் படுக்கை (ஸ்டிரச்சர்) போன்ற அமைப்புடைய ஒரு படுக்கை இது முதுகுத் தண்டு அசையாமலிருப்பதற்கும், உடலும், முதுகுத் தசையும் படிந்திருப்பதற்கும், உருத்திரிபு ஏற்படுவதைத் தடுப்பதற்கும் பயன்படுகிறது. Bradosol : பிராடோசல் : டோமிஃபென் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

brady : வேகக்குறை; மெதுவாக குறைவு; குறைந்த : இது ஒர் இணைப்புச் சொல்.

bradyarrhythmia : சீரிலாகுறை இதயத் துடிப்பு; சீரற்ற குறை இதயத் துடிப்பு : இதயத் துடிப்பு சீரற்றும், எண்ணிக்கையில் குறைந்தும் இருக்கும் நிலை.

bradycardia : தவர் நெஞ்சுப்பைத் துடிப்பு; குறை இதயத் துடிப்பு; இதயக் குறைத் துடிப்பு : இதயம் பொதுவான வீதத்தில் சுருங்குவதால் உண்டாகும் மெதுவான நாடித்துடிப்பு. காய்ச்சல் இருக்கும்போது, உடல்வெப்பநிலையில் ஏற்படும் ஒருபாகை உயர்வுக்கும் நாடித்துடிப்பு நிமிடத்திற்கு 10 துடிப்புகள் வீதம் அதிகரிக்க வேண்டும். அவ்வாறு அதிகரிக்க வில்லையானால் அது தளர் நெஞ்சுத் துடிப்பு எனப்படும்.

bradykinesia : வேகக்குறை இயக்கம் : வேகம் குறைந்த அசைவுகள்.

bradypnoea : சுவாசக் குறை; குறைமூச்சு; மூச்சு வேகக்குறை : வேகம் குறைந்த சுவாசம். சுவாச எண்ணிக்கைக் குறைவாக இருத்தல். சராசரி மனிதனின் இயல்பான சுவாச எண்ணிக்கை நிமிடத்திற்கு 18 முறை. இந்த அளவிற்குக் குறைவாக மூச்சு எண்ணிக்கை இருந்தால் அதை 'குறைமூச்சு' என அழைப்பர்.

braille : பிரெய்லி முறை; பார்வை அற்றோர் படிப்பு : ஃபிரான்ஸ் நாட்டின் பார்வையிழந்த கல்வியாளர் லூயிஸ் பிரெய்லி என்பவர், பார்வையற்றவர்கள் வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் கண்டுபிடித்த ஒரு படிப்பு முறை.

brain : மூளை : அறிவின் இருப்பிடம். இது மையநரம்பு மண்ட லத்தின் மிகப்பெரிய பகுதி. இது மண்டை ஓட்டின் உட்குழிவினுள் அமைந்துள்ளது. இதனை, மூளை வெளியுறை எனப்படும் மூன்று சவ்வுப் படலங்கள் சூழ்ந்திருக்கின்றன. மூளையினுள் இருக்கும் திரவம், நுட்பமான நரம்புத் திசுக்கள் அதிர்ச்சியைத் தாங்குவதற்கு உதவுகின்றன.

brain-case : மண்டையோடு.

brain-tag : மூளைத்தளர்ச்சி.

brain-fever : மூளைக் காய்ச்சல்.

brain-pan : கபாலம்.

brain tumour : மூளைக் கட்டி; மூளைக் கழலைக் கட்டி.

bran : தவிடு : தானியங்களில் புறப்பகுதியாக அமைந்துள்ள குத்துமி. குறிப்பாகக் கோதுமையிலுள்ள தவிடு, இழைமச்சத்து நிறைந்தது; வைட்டமின் -B தொகுதியும் இதில் நிறைந்துள்ளது. branchial : செவுள் சார்ந்த : மனிதக்கருவிகள் கழுத்தின் இரு பக்கங்களிலும் உண்டாகும் பிளவுகள் அல்லது வெடிப்புகள். இவை முக்கு, காதுகள், வாயு ஆகிய உறுப்புகளாக உருவாகின்றன. செவுள் வெடிப்புகள் இயல்புக்கு மீறுதலாக ஏற்படும் கழுத்தில் செவுள் நீர்க்கட்டி உண்டாகிறது.

Brandt andrews technique : பிராண்ட் ஆண்ட்ரூஸ் உத்தி : மகப்பேற்றுக்கான ஒருவகை உத்தி. இதில் அடிவயிற்றில், தொப்பூள் கொடியினைப் பிடித்துக் கொண்டு கருப்பையை மேலே தூக்குகிறார்கள். அவ்வாறு தூக்கும்போது நஞ்சுக் கொடியானது கருப்பையின் அல்லது யோனிக் குழாயின் மேற்பகுதியில் இருக்கும். பின்னர், மேலே தூக்கப்பட்ட கருப்பையின் உச்சிப் பரப்பின் கீழே அழுத்தம் கொடுக்கும் போது நஞ்சுத் திசு உறுப்பு வெளியே வருகிறது.

brash : பித்த வாந்தி.

brassy cough : முழக்க இருமல்; வெண்கல ஒலி இருமல் : சிறுவர் சிறுமிகளுக்கு ஏற்படும் ஒரு வகை வரட்டு இருமல். குரல்வளை மூச்சுக் குழாய் அழற்சி நோயின்போது இவ்வகை இருமல் ஏற்படும்.

Braun's frame : உலோகக்கட்டுப் பட்டை : புண்களுக்குக் கட்டுப் போடுவதற்காகப் பயன்படும் ஒர் உலோகப்பட்டை கூண்டு. முறிவேற்பட்ட முன்கால் எலும்புகளில் கட்டுப்போடுவதற்கு இது பயன்படுகிறது.

brawn : தசை நார் : கொழுந்தசை.

brawned : தசையுள்ள.

brawny : தசைப் பற்றுள்ள.

brawny induration : பிராணி தடித்தல்; கடினமாதல் : நோயின் காரணமாக உடல் திசுக்கள் தடித்தல்; கடினமாதல் இறுகுதல்.

Braxton Hicks contractions : பிராக்ச்டன் ஹிக்ஸ் சுருக்கங்கள் : பெண்கள் கருவுற்றிருக்கும் போது, பிரசவ நேரத்தை நெருங்கும் காலத்தில், கருப்பைச் சுவர்கள் வலி கொடுக்காமல் சுருங்கும் நிலை. இங்கிலாந்து நாட்டின் பேற்றியலாளர் பிராக்ச்டன் ஹிக்ஸ் என்பவர் இதனைக் கண்டறிந்து கூறியதால் இது அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

breast : மார்பகம்; முலை; நகில் : (1)பெண்களுக்குத் தாய்ப்பால் சுரக்கும் உறுப்பு. (2) மார்புக் கூட்டின் புற மேற்பகுதி.

மார்பகம்
breast cancer : முலைப் புற்று; முலைப் புற்றுநோய்; மார்பகப் புற்றுநோய்.

breast-girdle : மார்பு எலும்பு வளையம்.

breath : மூச்சு; மூச்சோட்டம்; உயிர்ப்பு.

breathing : மூச்சியக்கம்.

breath H2 (hydrogen) test : ஹைட்ரஜன் சோதனை : சர்க்கரைக் குறைபாட்டினைக் கண்டு அறிவதற்கான ஒரு மறைமுகமான முறை.

breech : பிட்டம் : உடலின் கீழ்புறப் பின் பகுதி.

breech birth presentation : பிட்டப் பிறப்பு நிலை : கருப்பையில் இருந்து குழந்தை பிறப்பதற்கு இயல்பாக அதன் தலை முன்னோக்கி அமைந்திருக்க வேண்டும். சில சமயம், கருப்பையில் குழந்தையின் பிட்டப் பகுதி முன்னோக்கி அமைந்திருக்கும். இதனை 'பிட்டப் பிறப்பு நிலை' என்பர்.

breech : பிட்டம்; குண்டி : பிரசவத்தின்போது குழந்தையின் தலை முதலில் வெளிவருவதற்குப் பதிலாக பாதம், கால் அல்லது பிட்டம் முதலில் வெளிவருதல். இதனைப் 'பிட்டப் பிறப்பு நிலை' என்பர். பிரசவத்திற்கு சில காலம் முன்பு கருப்பையில் இயல்பாக குழந்தையின் தலை முன்னோக்கி அமைந்திருக்கும். சில சமயம், குழந்தையின் பிட்டம் முன்னோக்கி அமைந்திருக்கும்.

bregma : முன்னிணைவிலா எலும்பு முன் உச்சி; முன் உச்சி : மண்டை ஒட்டின் முன்னிணை விலாப் பகுதி விலா எலும்பு.

Brenner's tumour : பிரன்னர் கட்டி : கருப்பையில் வளரும் தீங்கற்ற கட்டிவகை. ஜெர்மன் நோய்க் குறியியல் வல்லுநர் பிரிட்டிஷ் பிரன்னர் கண்டுபிடித்த கட்டி.

Brevidil : பிரவிடில் : சுக்சாமெத் தோனியம் என்னும் மருந்தின் வணிகப் பெயர்.

Bricanyl : பிரிக்கானில் : டெர்புட்டாலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

bridge : பாலம்; குறுகிய திசுக்கற்றை :இரண்டு பற்களுக் கிடையிலுள்ள வெற்றிடத்தை அடைக்கப் பயன்படும் ஒரு வகைப் பல்லிடைக் கருவி. பல் விழுந்த இடத்தில் பொருத்தப் படும் சிறு பொருள். மூக்கெலும்புப் பாலம், மூக்கின் மேற்பகுதி இரண்டு மூக்கெலும்பு இணைப்பால் அமைந்துள்ள விதம். brightness : ஒளிர்வு.

'Brietal : பிரைட்டல் : மெத்தோ ஹெக்சிட்டோன் சோடியம் என்னும் மருந்தின் வணிகப்பெயர்.

Bright's disease : பிரைட் நோய் : சிறுநீரகத்தில் வீக்கம் ஏற்படும் நோய் வகை.

brilliant green : பிரில்லியன்ட் கிரீன் : நோய்க் கிருமியை ஒழிக்கும் திறனுள்ள அவுரியிலிருந்து எடுக்கப்படும் சாயப் பொருள். கழுவு நீர்மமாகப் (1:1000) பயன்படுகிறது.

brim : விளிம்பு.

Brinaldix : பிரினால்டிக்ஸ் : கிளாப் பாமைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

brittle bone syndrome : நொறுங்கெலும்பு நோயியம்; உடையும் எலும்பு நோயியம் : எலும்பு வலுவிழத்தலால் எளிதில் உடையக் கூடிய அல்லது நொறுங்கக் கூடிய நிலைமை.

broach : பற்கூழ் நீக்கிக் கருவி : பற்சிதைவு நோயின்போது பற்கூழையும் அதைச் சார்ந்த சிதைவுத் திசுக்களையும் அகற்ற உதவும் ஊசிமுனைக் கருவி. broad bandage : அகலக்கட்டு.

broad ligament : அகல நாண்பிணையம் : இடுப்புக் குழிக்குள் கருப்பையைப் பிணைத்திருக்கும் நாற்பட்டை வயிற்றில் உதரவிதானம், கல்லீரல் மற்றும் வயிற்று முன் சுவர்த்தசைகளைப் பிணைக்கும் நாற்பட்டை.

broad-spectrum : பல்முனை; பல ஆற்றல்; பல்வகை; வீரியம் நிறைந்த :பல்வேறு நுண்ணுயிரிகளை அழிக்கும் திறனுள்ள, வீரியம் நிறைந்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்து.

Brocadopa : பிரோக்காடோப்பா : லெவோடோப்பா என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Broca's area : புரோக்கா மையப்பகுதி : பெருமூளையின் இடக் கோளார்த்தத்திலுள்ள பிளவின் தொடக்கத்தில் அமைந்துள்ள பேச்சு இயக்க மையம். இந்த மையம் காயமுற்றால், பேச இயலாது போதல் உட்பட மொழிக் குறைபாடு உண்டாகும்.

Broca index : பிராக்கா குறியீடு; பிராக்கா சுட்டு எண் : ஒரு வருடைய வயதிற்கும் உயரத்திற்குமேற்ப இருக்க வேண்டிய இயல்பான உடல் எடையைவிட 20 சதவிகிதம் அதிகமிருத்தல்.

Brock's syndrome : புருக் நோயியம் : இங்கிலாந்து அறுவைச் சிகிச்சை வல்லுநர் ருசெல் புரூக் இனம்கண்டு அறிந்த நோயியம். இது ஒருவகை நுரையீரல் அழற்சி அடைப்பு நோய். காசநோய் நிணநீர்க் கட்டிகளால் நுரையீரலின் மத்திய மடல் அடைத்துக் கொள்ளல்.

Brodie's abscess : புருடீ சீழ்க்கட்டி : நாட்பட்ட எலும்பு மச்சை அழற்சி நோயின்போது எலும்பில் சீழ்க்கட்டுதல். சர் பெஞ்சமின் புருடீ எனும் அறுவைச் சிகிச்சையாளர் இதனை இனம் கண்டறிந்தார்.

Brodmann's areas : புருட்மேன் பகுதி : மூளையின் பெரு மூளைப் பகுதி 47 பகுதிகளாகப் பிரிக்கப் படுதல். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த உடலியல் மருத்துவர் 'கார்பினியன் புருட்மேன்' என்பவர் மூளையின் நரம்பு செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து இவ்வாறு பல்வேறு பகுதிகளாகப் பிரித்துள்ளார்.

broiling : அனல் வாட்டல்.

bromhexine : புரோம்ஹெக்சின் : சளியை இளக்கும் மருந்து. இது வாய்வழி உட்கொள்ளப்படுகிறது. இது இருமலுக்கு முன்பு சளியை இளக்குகிறது. ஈளை நோய் (ஆஸ்துமா) உடையவர்களுக்கு நரம்பு வழியாகச் செலுத்தும் மருந்தாகவும் கிடைக்கிறது.

bromhidrosis : நாற்ற வியர்வை; அழுகல் நாற்ற வியர்வை : தோலில் அமைந்துள்ள நுண்ணுயிரிகளின் அழுகல் சிதைவால் வியர்வை நாற்றமெடுத்தல்.

bromism : புரோமை நச்சு : சோரிகை எனப்படும் புரோமைடுகளைத் தொடர்ந்து அல்லது அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் உண்டாகும் கடுமையான நச்சுத்தன்மை.

bromocriptin : புரோமோகிரிப்டின் : புரோலேக்டின் மிகு இரத்தம், பார்க்கின்சன் நோய் (அசையா நடுக்கம்) ஆகியவற்றுக்குத் தரப்படும் டோபமின் ஏற்பித் தூண்டல் மருந்து.

bromosulphthalein test : புரோமோசல்ஃப்தாலைன் சோதனை : நுரையீரல் செயற்படுவதைக் கணித்தறிவதற்காகப் பயன்படும் சோதனை. உடல் எடையின் ஒரு கிலோ கிராமுக்கு 5 மில்லி கிராம் என்ற வீதத்தில் நீலச் சாயம் ஊசி மூலம் நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிறது. அவ்வாறு செலுத்தப்பட்ட 45 நிமிடத்திற்குப் பின்னரும் இரத்தத்தில் 5%-க்கு மேல் சாயம் சுற்றோட்டத்தில் இருக்குமானால் அப்போது கல்லீரலின் செயற்பாடு பழுதுபட்டிருக்கிறது என்று அறியப்படுகிறது.

Brompton mixture : புரோம்ப்டன் கலவை : ஆல்கஹால், அபினி (மார்ஃபின்), கோக்கைன் அடங்கிய ஒரு மருந்துக் கலவை. கடைக்கணு மூட்டு வலிவைக் குறைக்க இது பயன்படுகிறது. brom-valetone : புரோம்வாலெட்டோன் : ஒரு மென்மையான மயக்க மருந்து. கார்புரோமால் மருந்தினைப் போன்றது.

bronchi : மூச்சுக்குழாய்கள் : மூச்சுக் குழாயின் இரு பிரிவுகள்.

மூச்சுக் குழாய்கள்

bron-chial asthma : மூச்சுக் குழாய் ஈளை நோய் : ஒவ்வாமைப் பொருள்களை உட்கொள்ளுதல், நோய்த் தொற்று, உடற்பயிற்சி, உணர்ச்சி வயப்படுதல் காரணமாக மூச்சுக் குழாயில் காற்றுத்தடை உண்டாகி ஏற்படும் ஈளை நோய்.

bronchial tubes : மூச்சு நுண்குழாய்கள் : மூச்சுக்குழாய்கள் சுவாசப் பைகளுள் நுழைந்த பிறகு பல பிரிவுகளாகப் பிரியும் நுண்குழாய்கள்.

bronchiectasis : மூச்சுக்குழாய் தளர்வு; சுவாசக் குழல் விரிவு : நுரையீரலில் மூச்சுக்குழல்கள் இயல்புக்கு மீறி விரிந்திருத்தல். இந்த விரிவுநிலை எப்போதும் நிலைபெற்றதாக இருக்கும். மூச்சுக்குழல் சுவர்களில் அணுக்கள் சிதைவுற்றிருக்கும். இது மெல்ல மெல்ல வளர்ச்சி பெறும். மூச்சுக் குழல் விரிவடைந்துள்ள அளவு அதில் ஏற்படும் நோய்த்தொற்று அளவு மற்றும் அங்கு உண்டாகும் சுரப்பு நீர் அளவு இவற்றைப் பொறுத்து நோயின் அறிகுறிகள் வெளிப்படும். இதனால் பாதிக்கப்படும் நபருக்குத் தொடர்ச்சியாக சளியும் இருமலும் வந்து கொண்டிருக்கும். படுக்கும் போது இருமல் அதிகரிக்கும்.

மூச்சுக்குழாய் தளர்வு உலர்ந்த நிலை : இந்த நிலைமையின் போது மூச்சுக் குழல்களில் நோய்த்தொற்று இருப்பதில்லை. ஆனால், வறட்டு இருமல் தொல்லை தரும் சமயங்களில் இருமலோடு சளியில் இரத்தமும் வெளியேறும்.

bronchiole : மூச்சு நுண்குழாய்; மூச்சுக் குழாய் நுண்பிரிவு; சுவாச நுண்குழல்; மூச்சு நுண்குழாய் : மூச்சுக் கிளைக் குழல் பல முறை பிளந்து, மூச்சுச் சிறு குழல்களாகச் சிறுத்து, மீண்டும் பலமுறை பிரிந்து சிறுத்து, இறுதியில் மூச்சு நுண்குழாய்களாக உருப்பெறுகின்றன. இவை சவ்வுப் படலமாகக் காணப்படுகின்றன. இவை மென் தசைகளால் ஆனவை. இவை மேலும் பிரிந்து பிராண வாயுவைப் பகிரும் மூச்சு நுண்மக் குழல்களாக அமை கின்றன. வேற்றைச் சுற்றி நுரையீரல் கட்டமைப்பின் கடைத்தளமான மூச்சு நுண்ணறைகள் அமைந்து உள்ளன.

bronchiolectasis : மூச்சு நுண் குழாய் தளர்வு; சுவாச நுண் குழாய் விரிவு : மூச்சு நுண் குழல்கள் விரிந்த நிலையில் இருத்தல்.

bronchiolitis : மூச்சு குழாய் நுண்பிரிவு வீக்கம்; மூச்சு நுண் குழாய் அழற்சி : மூச்சுக்குழாய் நுண் பிரிவுகள் வீக்கமடைதல். பொதுவாக, குழந்தைகளுக்கு ஒரு வயதுக்குள் ஏற்படும்.

bronchioloalveolar carcinoma : மூச்சு நுண்ணறைப் புற்றுநோய் : அடினே வகைப்புற்றின் ஒரு கிளை வகை. மூச்சுக் குழலின் வெளிப்புறமாகத் துவங்கும் இப்புற்று, மூச்சு நுண்ணறைகளையும் பாதிக்கக்கூடியது. சளி இல்லாத இருமல், எடை இழப்பு, ஆற்றல் இழப்பு, களைப்பு, மூச்சுத் திணறல், இருமலில் இரத்தம் வெளியேறுதல் ஆகிய அறிகுறிகள் நோயாளியிடம் காணப்படும்.

bron chitic : மூச்சுக் குழாய் அழுற்சி உள்ள; சுவாசக் குழல் அழற்சி உள்ள.

bronchium : மூச்சுக் குழாய்.

bronchitis : மார்புச்சளி நோய்; மூச்சுக்குழாய் அழற்சி : பொதுவாகக் குழந்தைகளுக்கு நோய்க் கிருமிகளினால் உண்டாகும் தடுமன், நச்சுக்காய்ச்சல், கக்குவான் இருமல், தட்டம்மை போன்ற நோய்களின்போது மார்புச் சளி உண்டாகிறது. பெரியவர்களுக்கு கிருமிகளினாலும், சில சமயம் காற்று தூய்மைக் கேட்டினாலும் இந்தச் சளி ஏற்படுகிறது. கடுமையான சளிப்பிடிப்பினால், மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இளைப்பும், மூச்சு அடைப்பும் உண்டாகலாம்.

bronchocele : மூச்சுச் சிறுகுழாய் வீக்கம் : மூச்சுக்குழாயின் ஒரு பகுதித் தளர்வால் விரிவடைதல்.

bronchoconstrictor : மூச்சுக்குழாய்ச் சுருக்க மருந்து : மூச்சுக் குழாய்களைச் சுருங்கச் செய்கிற மருந்து.

bronchoconstriction : மூச்சுக்குழாய் ஒடுக்கம்; மூச்சுக் குழாய் சுருக்கம் : மூச்சுக்குழாய்கள் உள் அளவில் சுருங்குதல்.

bronchodilator : மூச்சுக்குழாய் விரிவாக்க மருந்து; மூச்சுக் குழாய் தளர்த்தி : மூச்சுக் குழாய்களை விரிவடையச் செய்வதற்கான மருந்து.

bronchodilatation : சுவாசக் குழல் தளர்ச்சி; மூச்சுக்குழாய் தளர்ச்சி : சுவாசக் குழல்களின் உள்விட்டம் அதிகரித்தல். bronchogenic : மூச்சுக்குழாய் சார்ந்த; மூச்சுக்குழல் தொடர்பு உள்ள; மூச்சுக்குழல் நுரையீரல் புற்றுநோய் : மூச்சுக் குழலிலிருந்து துவங்கும் புற்றுநோய். இது சிற்றணுவகைப் புற்று நோய், சிற்றணு இல்லாத வகைப் புற்றுநோய், ஸ்குவாமஸ் அணுவகைப் புற்றுநோய், அடினோ அணுவகைப் புற்று நோய், சிதைந்த வகைப் புற்று நோய் என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. நுரையீரல் புற்று நோய்க் கழலைகள் மூச்சுக் குழல்கணுக் குழியை ஒட்டியோ, நுரையீரல் உறைக்கு அருகிலோ அல்லது மேற்கூறிய இரண்டிற்கும் மத்தியிலோ அமையலாம்.

bronchogram : நிறமற்ற மூச்சுக் குழல் ஊடுகதிர்ப்படம் : மூச்சுக் குழலில் கதிர்புகா சாயப் பொருளைச் செலுத்தி எடுத்த ஊடுகதிர்ப் படம்.

bronchography : மூச்சுக்குழாய் வரைபடம்; நிறமேற்ற நுரையீரல் கதிர்ப்படம் : ஒரு சிறிதளவு திரவத்தைச் செலுத்தி மூச்சுக் குழாய்களின் பிரிவுளை ஊடு கதிர்மூலம் வரைபடம் எடுத்தல்.

broncholith : மூச்சுக்குழல் கல்; சுவாசக் குழல் கல் : சுவாசப் பாதையில் காணப்படும் சுண்ணாம் பேற்ற பொருள்.

broncholithiasis : மூச்சுக்குழல் கல்லேற்றம்; சுவாசக் குழல் கல் லேற்றம் : மூச்சுப் பாதையில் கல்போன்று தோற்றமளிக்கும் சுண்ணாம்பேற்ற பொருள்கள் காணப்படுதல். மூச்சுப்பாதையில் இருக்கும் சுண்ணாம்பேற்ற நிணநீர் முடிச்சுகள் மூச்சுக் குழாயை அமுக்குதல் அல்லது அழுத்துதல்.

bronchology : மூச்சுக்குழாய் மருத்துவவியல்; சுவாசக் குழல் மருத்துவவியல் : மூச்சுப் பாதையில் உள்ள உறுப்புகள், அவற்றில் உண்டாகும் நோய்கள் மற்றும் அவற்றுக்குரிய தீர்வுகள் குறித்த படிப்பு.

bronchomalacia : மூச்சுக்குழாய் நலிவு ; சுவாசக் குழல் நலிவு : மூச்சுப்பெருங்குழல் அல்லது மூச்சுச்சிறுகுழல் சுவர்கள் நலிவடைதல்.

bronchomycosis : நுரையீரல் நோய் : மூச்சுக் குழாய்களையும், நுரையீரல்களையும் பாதிக்கும் பலவகைக் காளான் சார்ந்த நோய்கள்.

bronchophony : மூச்சுக்குழாய் ஒலி; சுவாச ஒலி; சுவாசக்குழல் ஒலி : சுவாசத்தின்போது சுவாசப் பைகளில் உண்டாகும் ஒலி. மார்பு ஒலிமானி (ஸ்டெத் தாஸ்கோப்) மூலம் சுவாச ஒலிகளைக் கேட்டல்.

bronchopleural : மூச்சுக்குழாய் நுரையீரல் சவ்வு : மூச்சுக் குழலையும் நுரையீரல் உறையை யும் சார்ந்த, bronchopneumonia : மூச்சுக்குழாய் சீதசன்னி; நுரையீரல் அழற்சி; குழல் நிமோனியா : மூச்சுக் குழாயின் சுற்றுப் பகுதிகளில் ஏற்படும் ஒருவகைச் சீத சன்னி (நிமோனியா).

bronchopulmonary : நுரையீரலும் மூச்சுக் குழலும் இணைந்த : முச்சுப்பெருங்குழல் துவங்கி மூச்சுக்காற்று அறைகள் வரை துரையீரலில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் குறிப்பது. ஒரு பகுதி நுரையீரலுக்குப் பிரான வாயுவை அளிக்கின்ற மூச்சுக் குழல் பகுதி.

branchorrhoea : மூச்சுக்குழாய் சளிப்பிடிப்பு : மூச்சுக்குழாய் சளிச்சவ்வுப் படலத்திலிருந்து அளவுக்கு அதிகமாகச் சளி வெளியேறுதல். -

bronchoscope : மூச்சுக்குழாய் நோக்கி; சுவாசக் குழல் நோக்கி : துரையீரலின் உள்பகுதிகளைக் காண்பதற்குப் பயன்படும் கருவி. இதன் உதவியால் நுரையீரலிலும் மூச்சுக்குழாய்களிலும் உள்ள சுரப்பு நீர்களையும் அந்நியப் பொருள்களையும் வெளியேற்ற இயலும், நுரையீரலிலும் மூச்சுக் குழாய்களிலும் உள்ள நோய்களை உறுதி செய்வதற்கு அங்குள்ள திசுக்களை சிறிதளவு வெட்டி எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்பவும் இக்கருவி பயன்படுகிறது.

bronchoscopy : மூச்சுக்குழல் உள்நோக்கல்; சுவாசக் குழல் உள்நோக்கல் :வளையும் தன்மை உள்ள மூச்சுக்குழல் நோக்கியின் உதவியால் நுரையீரலின் உள் பகுதிகளைக் காணல்.

bronchosinusitis : மூச்சுக் காற்றறை அழற்சி : கீழ் சுவாசப் பாதையிலும் மூச்சுக் காற்றறைகளிலும் அழற்சியுள்ள நிலைமை.

bronchospasm : மூச்சுக்குழாய் சுருக்கம் : மூச்சுக் குழாய்ச் சுவர்களில் உள்ள இயங்கு தசைகள் சுருங்குவதன் காரணமாக மூச்சு நுண் குழாய்கள் திடீரெனச் சுருக்கமடைதல்.

bronchospirometer : மூச்சுமானி.

bronchospirometry : மூச்சுக்குழாய் அளவி சோதனை; சுவாச அளவி சோதனை : ஒரு நபரின் சுவாச ஆற்றலை அல்லது அவருடைய துரையீரல் மற்றும் மூச்சுக் குழல்களின் சுவாச ஆற்றலை 'சுவாச அளவி' எனும் கருவி மூலம் கண்டறியும் சோதனை.

bronchostaxis : மூச்சுக்குழாய் குருதிக் கசிவு : மூச்சுக்குழாயிலிருந்து இரத்தம் வெளியேறுதல் அல்லது கசிதல்.

bronchostenosis : மூச்சுக் குழாய் சுருக்கம்; மூச்சுக்குழாய் ஒடுக்கம்; மூச்சுக்குழாய் இறுக்கம்; மூச்சுக் குழாய் நெருக்கம் : மூச்சுக் குழலின் உள்விட்டம் சுருங்குதல். bronchotomy : தொண்டை துளைப்பு; மூச்சுக் குழல் துளைப்பு; மூச்சுப் பெருங்குழலில் துளைஇடுதல் : தொண்டையைத் துளைத்து மூச்சுப் பெருங்குழலில் துளையிடுதல்.

bronchovesicular : மூச்சுக் காற்றறை சார்ந்த : மூச்சுக் காற்றறை களில் சுவாசித்தல் ஒலி.

brow : புருவம்; நெற்றி; தலைப் புருவம்; முகப்புருவம் : கண்குழிக்கு மேலேயுள்ள பகுதி.

brow ague : ஒற்றைத் தலை மண்டையிடி.

Broxil : பிராக்சில் : ஃபெனத்திசிலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Brudzinski's sign : உறுப்பு வளைவு : தலையணையிலிருந்து தலையைத் தூக்கும்போது முழங்கால் மூட்டுகளும், இடுப்பும் மூளைவெளியுறை அழற்சியில் ஏற்படுவது போன்று வளைதல்.

bruise : கன்றிய காயம்; நசுக்கு; கீறல் : கன்றிப் போன காயம்; இரத்தம் கட்டிய நோவிடம்.

Burnner's glands : புருனர் சுரப்பிகள் : முன் சிறுகுடலின் முதல் பகுதியிலுள்ள சீதப் படலத்தின் அடியில் காணப்படும் காரச் சுரப்பிகள். அமிலத்தின் தூண்டுதலால் காரத்தன்மை உள்ள சுரப்புநீரைச் சுரக்கின்றன. சுவிட்சர்லாந்து உடலியல் வல்லுநர் ஜோகன் புருனர் இதனைக் கண்டுபிடித்தார்.

bruxism : பல் அமைப்பு; பல் கடித்தல் : பற்களை இயல்புகளை மீறுதலாகக் கடித்து அரைத்தல். இதனால், பல் தேய்ந்து வலுவிழந்து விடுகிறது.

bubo : அரையாப்பு; அக்குக்கட்டு; நிணநீர்க்கட்டியற்சி; நெறிக்கட்டு; நிணசீழ்க்கட்டியழற்சி : நிணநீர்ச் சுரப்பிகள் விரிவடைவதால், அக்குளிலோ, தொடை மடிப்பிடத்திலோ ஏற்படும் வீக்கம்.

bubonic : நெறிக்கட்டு சார்ந்த; அக்குள் கட்டு அல்லது அரையாப்பு சார்ந்த.

bubonocele : இடுப்பு வாதநோய்; தொடைப் பிதுக்கம் : வயிறும் இடுப்பும் சேருமிடத்தில் அண்ட வாதம் ஏற்படுதல்.

buccal : கன்னம் சார்ந்த; வாய்க் குரிய; வாய்சார்ந்த : கன்னம் அல்லது வாய்சார்ந்த.

buccal cavity : கன்னப் பொந்து.

buccinator : கன்னத்தசை : கன்னத்தில் காணப்படும் முக்கிய தசை.

Budd-Chiari syndrome : பட்சியாரி நோயியம் : கல்லீரல் சிரை அடைப்பு காரணமாக சிரை இரத்தம் கல்லீரலிலிருந்து வெளியேற இயலாத நிலைமை. ஆஸ்ட்ரியா நாட்டைச் சார்ந்த நோய்க்குறியியல் மருத்துவர்கள் ஜார்ஜ் பட் மற்றும் ஹென்ஸ் சியாரி என்பவர்கள் இதனைக் கண்டுபிடித்தனர்.

budding : மொட்டு விடுதல்.

budesonide : புட்சோனைடு : ஆஸ்துமா நோயாளிகள் பயன் படுத்தும் இயக்க ஊக்கி மருந்து.

Buerger's disease : குருதி உறைவு நோய் : வெளிநாளங்களில் நோய் ஏற்படுவதால் உண்டாகும் குருதியுறைவு நோய். இதனால் அடிக்கடி நொண்டுதல் உண்டாகிறது.

buffer : சமநிலைப்படுத்திகள்; செறிவு மாறா; விளைவெதிர்; தாங்கி : ஹைட்ரஜனையும் ஹைட்ராக்சில் அயனிகளையும் பிணைக்கும் திறனுள்ள ஒரு கலவைப் பொருட் கரைசல், அமிலங்களை அல்லது காரங்களைச் சேர்க்கும் போது நிலை மாற்றத்தை எதிர்க்கும் தன்மை யுடையது.

bulbar : தொண்டை முடக்குவாதம் : மூளையின் பின் கூறாகிய முகுளத்தில் ஏற்படும் முடக்கு வாதம் அல்லது உதடு- நாக்கு தொண்டைப்பகுதி வாதம். இது முகுளத்திலுள்ள இயக்கு உட்கரு சிதைவுறுவதால் உண்டாகிறது. இந்நோயினால் இயல்பான காப்பு நரம்பியக்கங்களை நோயாளி இழந்துவிடுகிறார். மூச்சடைப்பு, சுவாசச் சீதசன்னி போன்ற நோய்கள் ஏற்படும் அபாயமும் உண்டாகிறது. மிகவும் ஊனமுற்ற குழந்தைகள் உணவு உண்ண மிகவும் சிரமப்படுவார்கள்.

bulbar paralysis : முருள வாதம்.

bulbitis: புணர்புழை மொட்டழற்சி : பெண்ணின் சிறுநீர்ப் புறத் துளைக்கு அருகில் அழற்சி ஏற்படுதல்.

bulbourethral : துணர் சுரப்பிகள் : இரண்டு துணர் சுரப்பிகள். இந்தச் சுரப்பிகள், ஆணின் சிறுநீர்ப் புறவழியின் குமிழுக்குள் திறப்புடையதாக இருக்கும். இவற்றின் கரப்புநீர், விந்து நீரின் ஒரு பகுதியாக அமைந் திருக்கும்.

bulge : புடைப்பு வீக்கம்.

bulginess : புடைத்த நிலை.

bulgy : வீங்கிய; புடைத்த.

bulimia : தீராப்பசி நோய் (ஆனைப் பசி); பெரும்பசி; பசி நோய் : குறுகிய காலத்தில் பெருமளவு உணவைக் கட்டுப்பாடின்றி உண்ண வேண்டும் என்ற பேரூண் வேட்கை.

bulk : சக்கை உணவு : நார்ச்சத்துணவு.

bulla : நீர்க் கொப்புளம்; பெருங் கொப்புளம்; வலியக் குமிழ் : பெரிய நீர்க் கொப்புளம். சரும இயலில் தோலில் உண்டாகும் நீர்க்கோப்பு நோய் வகைகளை இது குறிக்கிறது. எனினும், தோல் அழற்சி போன்ற வேறு தோல் நோய்களின் போது இவ்வகைக் கொப்புளங்கள் உண்டாகின்றன.

bumetanide : பூமொட்டானைடு : வீரியச் சிறுநீர் பெருக்கி மருந்து,

bunion : கால்வீக்கம்; பெருவிரல் முண்டு : கால் .பெருவிரலின் முதற்கணுவின் வீக்கம். இந்தப் பகுதியில் காலனி உராய்வதால் ஒரு வகை மசகு நீர் சுரக்கிறது. முனைப்பாகவுள்ள எலும்பும் அதன் மசகு நீரும் சேர்ந்து கால் வீக்கம் எனப்படுகிறது.

பெருவிரல் முண்டு

bunionelle : கட்டைவிரல் வீக்க நோய்; கால்சிறுவிரல் வீக்க நோய் : காலில் உள்ள கட்டை விரலில் (சிறுவிரல்) மசகுநீர்ப் பை அழற்சியுறுவ தால் உண்டாகும் வீக்கம்.

Bunsen burner : புன்சன் அடுப்பு : ஜெர்மன் வேதியியலாளர் ராபர்ட் புன்சன் வடிவமைத்த அடுப்பு. மாட்டுச் சாண வாயுவால் எரியக் கூடியது. எரி தழலை அதிகப்படுத்தவும், குறைத்துக் கொள்ளவும் வசதி கொண்டது. தேவைப்படும் போது அடுப்பை எரித்துக் கொள்ளவும், தேவையில்லாத போது அடுப்பை அணைத்து விடவும் வசதி உள்ளது.

bunyavirus : புனியா வைரஸ் : "ரைபோ நூக்ளிக் அமிலம்' வைரஸ் வகையைச் சார்ந்த ஒரு வகை வைரஸ் இனம். ஆர்பேர் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது.

bupthalmos : கண்விழி புடைப்பு நோய்; மாட்டுவிழி : பிறவியிலேயே ஏற்படும் கண்விழி விறைப்பு நோய்.

bupivacaine : பூபிவாக்கைன் : நீண்டநேரம் செயற்படக்கூடிய உறுப்பெல்லை உணர்வு நீக்கி மருந்துகளில் ஒன்று. இது நரம்பு மண்டலத்திற்கு ஏற்புடையது. கோக்கைனை விட நச்சுத்தன்மை குறைந்தது.

buprenorphine : பூப்பிரினோர்ஃபின் : ஒருவகை நோவகற்றும் மருந்து. இது மார்ஃபினைவிட நீண்ட நேரம் செயல்படக் கூடியது.

bur : கணையம் : வயிற்றுச் சுரப்பி வகை.

burette : உறிஞ்சுகுழல்; உறிஞ்சளவி : திரவங்களை உறிஞ்சி எடுப்பதற்குப் பயன்படும் சிறு குழல். இது கண்ணாடியால் ஆனது. இதன் ஒரு முனையில் ரப்பரால் ஆன முடி இருக்கும்.

burinex : பூரினெக்ஸ் : பூமெட்டானைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.

burkitts lymphoma : பர்கிட் நிணநீர்ச் சுரப்பி நோய் : தாடையில் அடிக்கடி ஏற்படும் உக்கிரமான நிணநீர்ச்சுரப்பி நோய். மற்றப் பகுதிகளிலும் உண்டாகும். முக்கியமாகக் குழந்தைகளைப் பாதிக்கிறது. மலேரியா நோய் கொள்ளை நோயாகப் பரவும் ஆஃப்ரிக்கப் பகுதியிலும் நியூகினியிலும் தென்படும் புற்று நோய் வகை

burn : வெந்தபுண்; தீக்கொப்புளம்; தீப்புண்; சுடு புண்; எரிகாயம் : வேதியல் பொருள்கள், கடும் வெப்பம், மின் பிழம்பு, உராய்வு, கதிர் வீச்சு காரணமாக தோலில் உண்டாகும் நைவுப் புண். எரிந்துள்ள தோலின் ஆழத்தைப் பொறுத்து, இந்தப் புண் முழுமையானது அல்லது பகுதியானது என வகைப்படுத் தப்படுகிறது. புண் ஆழமாக இருந்தால், தோல் மாற்றுச் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். இதைக் குணப்படுத்துவதில் அதிர்ச்சியைத் தடுப்பதும், ஊட்டச்சத்துக் குறைவும் முக்கியமானதாகும்.

burntout syndrome : மனவெதும்பல் : மற்றவர்களின் சிக்கல்களினால் ஒருவர் மனம் வெதும்பித் தனது சக்தியை இழந்துவிடும் நிலை. இத்தகையவர்கள், ஒரு குழுமத்தின் உறுப்பினராகச் செயலற்றுப் போய் ஒதுங்கி விடுகிறார்கள்.

bursa : மசகு நீர்ச்சுரப்பி; குழிப்பை இழைமப் பை; பசை நீர்ப்பை : உராய்வைத் தடுப்பதற்குரிய பசை நீர் சுரக்கும் பை போன்ற அமைப்பு. மசகு நீர்ச்சுரப்பிகள், தசை நானுக்கும் எலும்புக்கு மிடையிலும், தசைக்கும் தசைக்கு மிடையிலும் காணப்படும் இந்தப் பரப்புகளிடையே உராய்வு ஏற்படாமல் அசைவுகள் இயங்குவதற்கு உதவுவது இதன் பணியாகும்.

மசகு நீர்ச் சுரப்பி

bursities : பசை நீர்ச்சுரப்பி வீக்கம்; குழிப்பை அழற்சி : மசகு நீர்ச்சுரப்பி பையில் ஏற்படும் வீக்கம். burst : திடீர் உணர்வுத் தாக்கம்; குபீர்ப்பாய்ச்சல்; வெடித்தல்; உடைவு; தகர்வு; தெறிப்பு; அணு வெடிப்பு : நச்சுயிரிகளைப் பெற்றிருக்கும் அணு வெடித்துச் சிதறும்போது, அதிலிருந்து நச்சுயிரிகள் வெளியேறுதல்.

திடீரியங்கு மருத்துவம் : இயக்க ஊக்கி மருந்தினை மிக அதிக அளவில் நோயாளிக்குத் தரப்படும் மருத்துவ முறை.

bursting fracture : வெடித்துச் சிதறும் முறிவு : எலும்பு முறிவு அடைந்து சிதறுதல்; முறிவு அடைந்த எலும்பு தூள்தூளாக சிதறுதல்.

Burul ulcer : தோலடித்தி மரிப்புப் புண் : 'மைக்கோ பேக்டீரியம் அல்சரன்ஸ்' எனும் நுண்ணுயிரியால் தோலடித் திசுக்களில் ஏற்படும் தோல் அழிவுப்புண்.

buscopan : பஸ்கோப்பான் : ஹயோசின் எனப்படும் வழிப் பொருளின் வணிகப் பெயர் உணவுப்பாதைப் புண்ணின் போது தசையைச் சமனப் படுத்துவதற்குப் பயன்படுகிறது. இதனை ஊசி மூலம் செலுத்தினால், மிகவும் பயனளிக்கும்.

busulphan : புசல்ஃபான் : உயிர்ம நச்சினைக் காரப்பொருளாக்கும் மருந்து. இது எலும்பு மச்சையை (எலும்புச் சோறு) நலிவுறுத்தக் கூடியதாகையால், இரத்தத்தில் சீரான வெள்ளை சிவப்பு அணுக்களின் எண்ணிக்கைத் தரம் இன்றியமையாததாகும்.

butacaine : பூட்டாக்கைன் : கோக்கைன் போன்ற உறுப்பெல்லை உணர்வு நீக்கக்கூடிய ஒரு செயற்கை மருந்து. இது கண் நோயியலில் 2% கரைசலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது, கோக்கைன் போல் கண்ணின் மணியை விரிவடையச் செய்வது இல்லை.

butment : மூட்டிணைவு மூட்டு.

butobarbitone : பூட்டோபார் பிட்டோன் : விரைவில் துயிலுட்டக் கூடிய ஒருவகை மருந்து.

butterfly bandage : வண்ணத்துப் பூச்சிக் கட்டு; வண்ணத்துப்பூச்சி கட்டுத்துணி : காயங்களை மறைப் பதற்காக சுட்டப்படும் துணிக் கட்டு.

butterfly fragment : வண்ணத்துப் பூச்சி முறிதுண்டு : பெரிய எலும்பு முறிந்து சிதறும்போது வண்ணத்துப் பூச்சி வடிவத்தில் பிரிந்து வந்து விட்ட முறிந்த துண்டு. பல கூறுகளாக முறிந்த எலும்பில் மீந்த பகுதி. ஆப்பு வடிவத்தில் முறிந்து பிரிந்து வந்துவிட்ட துண்டுப் பகுதி.

butterfly needle : வண்ணத்துப் பூச்சி ஊசி : வண்ணத்துப்பூச்சி வடிவில் அமைக்கப்பட்ட ஊசி. சிறு குழந்தைகளுக்குச் சிரை வழி ஊசி மருந்துகள் மற்றும் சிரைவழி நீர்மங்களைச் செலுத்த இது பயன்படுகிறது. இதன் ஊசி முனையை சிரை நாளத்தில் புகுத்தி பிளாஸ்டிக் பகுதியை வெளித்தோலில் ஒட்டுத்துணி கொண்டு ஒட்டி விடுவார்கள்.

butterfly pattern : வண்ணத்துப் பூச்சி வடிவம் : நுரையீரல் மூச்சு நுண்ணறை அழற்சி நோயுள்ள நோயாளிக்கு எடுக்கப்படும் மார்பு ஊடுகதிர் படத்தில் நோய்த் தடயமானது வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் காணப்படும்.

butterfly rash : வண்ணத்துப் பூச்சித் தடிப்பு; பூச்சித் தடிப்பு : முகத்தில் காணப்படும் செந்தடிப்பு. மூக்கின் மேற்பகுதியில் வண்ணத்துப்பூச்சி வடிவில் ஏற்படும் சிவப்பு நிறத்தடிப்பு.

buttock : பிட்டம்; குண்டி மேடு : உடலின் பின்புறத்தில் இடுப்பிற்குக் கீழ்க் புடைப்பாகவுள்ள பகுதி.

button : பொத்தான்; குமிழ்மாட்டி; குமிழ்க் கொளுவி : சட்டை மாட்டுவதற்கான குமிழ்.

பொத்தான் துளை : குறுகிய துளை, சிறு கீரல் போன்ற தோற்ற முடைய துளை.

பொத்தான் சுறுக்கம்; குமிழ் சுறுக்கம் : இதயத்திலுள்ள ஈரிதழ்த் தடுக்கிதழ் சுறுக்கம் இவ்வாறு காணப்படும்.

button-scurvy : தோல்சார் கொள்ளை நோய் : வெப்பமண்டலத்துக் குரிய தோல் சார்ந்த தொற்றும் தன்மை கொண்ட கொள்ளை நோய் வகை

butylamino benzoate : பியூட்டைல் அமினோ பென்சோயேட் : உறுப் பெல்லை உணர்வு நீக்கியாகப் பயன்படுத்தப்படும் ஒரு களிம்பு மருந்து.

butyn : பூட்டின் : பூட்டாக்கைன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Butyrophenones : பூட்டிரோபீனோன்கள் : மனநோய்க்குத் தரப்படும் மருந்து வகை. டோபமின் எதிர்ப்பு மருந்து. (எ-டு) ஹலோபெரிடால்.

bypass : மாற்றுவழி; மாற்றுத் தடம்; தடமாற்றம்; வழிதிருப்புதல்; திருப்பிவிடல் : (எ-டு) இதயவலி வந்த நபருக்கு இதயத் தமனி நாள மாற்றுவழிச் சீரமைப்பு அறுவை மருத்துவம் மேற்கொள்ளப்படுதல்.

byssinosis : நுரையீரல் நோய்; தூசியேற்ற நுரையீரல் நோய், நுரையீரல் பஞ்சு நோய் : ஆலைத் தொழிலாளர்கள் பஞ்சுத் தூசியைச் சுவாசிப்பதால் உண்டாகும் நுரையீரல் நோய் வகை. நச்சினைக் காரப்பொருளாக்கும் மருந்து. இது எலும்பு மச்சையை (எலும்புச் சோறு) நலிவுறுத்தக் கூடியதாகையால், இரத்தத்தில் சீரான வெள்ளை சிவப்பு அணுக்களின் எண்ணிக்கைத் தரம் இன்றியமையாததாகும்.