மருத்துவ களஞ்சியப் பேரகராதி/I
ஒருங்கிணைந்த தாய்-சேய் மேம்பாட்டு சேவை என்று அழைக்கப்படுகிறது.
ichneumon flies : ஒட்டுண்ணிப் பூச்சி : மற்றொரு பூச்சியின் முட்டைப் புழுக்களில் தான் முட்டையிடும் பளிங்கு போன்ற நான்கு சிறகுகளை உடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சி வகை.
ichthammol : இக்தம்மோல் : மென்களிக்கல்லைச் சிதைத்து வடித்தல் மூலம் கிடைக்கும் திண்மையான கறுப்புத் திரவம். தோல் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது. கிளிசரைனில் இதன் கரைசல் வீக்கத்தைக் குறைக்கும்.
ichthyol : இக்தியால் : இக்தம் மோல் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
ichthyoses : தோல் கெட்டியாதல் : மேல்தோல் கெட்டியாகி சுர சுரப்பாகி விடும் நோய்.
ichthosis : செதிள்நோய் : கொம்புப் பொருள் படலத்தின் மிகை வளர்ச்சி. இதனால் மீன் தோல் போன்று கனமான, உலர்ந்த, செதிள் நிறைந்த தோல் உண்டாகும்.
ICSH : ஐ.சி.எஸ்.எச் : சிறு பிளவுகள் சார்ந்த உயிரணுக்களைத் தூண்டுகிற இயக்குநீர். இது கபச்சுரப்பியின் முன்புற மட லினால் உற்பத்தி செய்யப்படுகிறது.
ictal : நாடித்துடிப்பு சார்ந்த : காக்காய் வலிப்பு நோய் போன்ற திடீர்த்தாக்குதல் தொடர்புடைய.
icterus : மஞ்சட் காமாலை; மஞ் சணம் : செந்நிறக் குருதியணுப் பொருள் அளவுக்கு அதிகமாக அழிக்கப்படுவதால் ஈரலில் ஏற்படும் மரமரப்பு நோய்.
icterus, nednatorum : மழமஞ்சனம்.
ictus : திடீர் வலிப்பு : பிறவியில் காணப்படும் பிடிப்பு, வலிப்பு, திடீர்த்தாக்குதல் அல்லது இசிப்பு.
ICU : ஐ.சி.யூ : தீவிரச் சிகிச்சைப் பிரிவு (Intensive Care Unit) என்பதன் சுருக்கம்.
ICCU : ஐ.சி.சி.யூ : தீவிர நெஞ்சுப் பைச் சிகிச்சைப் பிரிவு (intensive Coronary Care Unit) என்பதன் சுருக்கம்.
id : (1) மரபியல் மூலக்கருத்து; ஆழ் மனம் : கரு உயிர்ம இனக் கீற்றில் மரபியல் சிறப்பியல்பு களையெல்லாம் கொண்டுள்ளதாகக் கருதப்படும் மூலக்கருத்து. 2) உணர்வுந்தல் , தனிப்பட்ட ஒருவரின் உணர்வுந்தல்களின் தொகுப்பு.
idea : எண்ணம்; கருத்து.
ideation : கற்பனை செய்தல் : எண்ணப்படிவங்களை உருவாக்குதல். இதில் சிந்தனை, அறிவுத் திறன், நினைவுத் திறன் ஆகியன அடங்கும்.
ideational apraxia : அசைவு இயக்கக் குறைபாடு : ஒர் அசை வுகளின் வரிசையை ஒர் ஒழுங்கு முறையில் செயற்படுத்த இயலா திருத்தல்.
ide eruption : விரல் கொப்புளம் : விரல்கள், உள்ளங்கைப் பக்கங் களில் ஒவ்வாமைக் கொப்புள எதிர்விளைவு. இதிலிருந்து பூஞ்சணத்தைத் தனிமைப்படுத்த முடியாது.
identical twins : முழுதொத்த இரட்டையர் : சினைப்பட்ட ஒரே கருமுளையிலிருந்து வளர்ச்சியடைந்த இரட்டைக்குழவிகள்.
identification : அடையாளம்; இனமறிதல்; இனம் காண்டல் : உளவியலில், தேர்ந்தெடுத்த ஒரு வரை முன்மாதிரியாகக் கொண்டு நமது ஆளுமையை உருவாக்கிக் கொள்ளுதல்.
identity : அடையாளம்; கறி குறி.
ideogram : குறை நிரப்பு வரைபடம் : ஒர் உயிரணுவின் இனக்கீற்றுக் குறை நிரப்பின் வரை பட உருவாக்கம்.
ideoglossia : பேச்சுத் திறனின்மை : தெளிவாகப் பேசுவதற்கு இயலாமை.
ideokinetic apraxia : இயக்கத் தொடர்பின்மை : ஒரு எண்ணத்தின் மற்றும் இயக்கச் செயலின் தொடர்பின்மை.
ideomotor : உளவியல் கிளர்ச்சி : தசைகளின் தானியக்கத்தை உண்டுபண்ணும் கருத்துகளின் வடிவில் எழும் உளவியல் உந்து ஆற்றல். எடுத்துக்காட்டாக, உறுப்புகளின் கிளர்ச்சி இயக்கத்தை உண்டாக்கும் மனக்கிளர்ச்சி.
ideocy : மூடம்.
idiopathic : ஆதாரமில்லா முதல் நிலை நோய்; மூலமில்லா : வேறொரு நோயின் நிலையாய் அமையாமல் முதல் நிலையாக குறிப்பிட்ட காரணமின்றித் தோன்றும் நோய்.
idiosyncrasy : தனிமனப் போக்கு; இயல்புக்கு மாறாக செயல்; தனித் துவம் : தனிச்சிறப்புக்குரிய பண்பு தனிமனிதருக்குச் சிறப்பியல்பான உடலமைப்பு.
idiot : மூடன் : மொத்தமாக மனக்கோளாறுடைய ஒர் ஆள்.
idioventricular : இதயக் கீழறைத் தொடர்பறு நிலை : இதயக் கீழ றைத்துளை தொடர்புடைய நிலை. இதய வாயிலிருந்து தொடர்பற்று இருக்கும்போது உண்டாகும் நிலை. idoxuridine : ஐடோக்சுடின் : விழிவெண்படலப் படர்தேமல் சீழ்ப்புண்ணுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து.
ig : ஐ.ஜி : தடைக்காப்புப் புரதம்.
ileitis : சிறுகுடல் வீக்கம்; கடைச் சிறுகுடல் அழற்சி : சிறுகுடலின் பின்பகுதியில் ஏற்படும் வீக்கம் (அழற்சி).
ileo : அடிச் சிறுகுடல் : சிறு குடலை பெருங்குடலுடன் இணைக்கும் சிறுகுடலின் அடிப்பகுதி.
ileocolostomy : செயற்கைப் புண் புரை: சிறுகுடல் பெருங்குடல் இடைத்துளைப்பு : சிறுகுடல் பின் பகுதிக்கும் பெருங்குடலுகுமிடையில் அறுவை மருத்துவம் மூலம் ஏற்படுத்தப்படும் செயற்கைப் புண்புரை. பெருங்குடல் முற்பகுதியில் அல்லது ஏறுமுகப் பெருங்குடலில் ஏற்படும் தடையை அல்லது வீக்கத்தை அகற்ற இது செய்யப்படுகிறது.
ileocystoplasty : சிறுநீர்ப்பை விரிவாக்க மருத்துவம் : சிறுநீர்ப் பையின் வடிவளவை அதிகரிப் பதற்குச் செய்யப்படும் அறுவை மருத்துவம்.
ileoileostomy : சிறுகுடல் வாயில் அறுவை மருத்துவம் : சிறுகுடலின் இரு பகுதிகளுக்கு மிடையில் அறுவைச் சிகிச்சை மூலம் ஒரு வாயில் உருவாக்குதல்.
ileorectal : சிறுகுடல்-மலக்குடல் சார்ந்த : சிறுகுடல், மலக்குடல் தொடர்புடைய.
ileostomy : சிறுகுடல் அறுவை மருத்துவம் : அடிவயிற்றுச் சுவற்றில் ஒரு கீறல் செய்து அதன் வழியாக சிறுகுடலைக் கொண்டு வருவதற்கான ஒர் அறுவை சிகிச்சை தோலுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு பையினுள் மலம் விழுவதற்கு அனுமதிக்கும் ஒரு செயற்கை வாயில் இது.
ileum : சிறுகுடற்பின்பகுதி; கடை சிறுகுடல்; ஈர்ப்பகம்; குடலீறு :
சிறுகுடலின் கீழ்ப்பகுதியிலுள்ள ஐந்தில் மூன்று பகுதி.ileus : குடல் அடைப்பு; குடல் அசைவிழத்தல்; குடல் தொய்வு : பக்கவாதத்தின்போது ஏற்படும் குடல் அடைப்பு. இதனால் வாந்தி உண்டாகும்.
ileus, paralytic : குடல் வாதம்.
ileoproctostomy : தசைநாளப் பிணைப்பு; சிறுகுடல் மலக்குடல் இணைப்பு : சிறுகுடல் பின் பகுதிக்கும் பெருங்குடல் அடிக்கூறுக்கும் (குதவாய்) இடையில் தசை நாளங்களில் அறுவை மருத்துவம்.
ilium : இடுப்பெலும்பு.
ill : நோயுற்ற; நலமிலா; நோய் நிலை : பிணியுற்ற கோளாறுற்ற: ஆரோக்கியமற்ற.
iliacartery : இடுப்புக்குருதி நாளம் : இடுப்புத் தமனி.
illac passion : குடலடைப்புவலி : அடிக்குடலில் அடைப்பு ஏற்ப டுவதால் உண்டாகும் நோவு.
illegitemacy : முறைக்கேடு.
illness : நோய்மை : உடல் நலமற்ற நிலை; சீக்கு.
illium : இடுப்பெலும்பு : வயது வந்தவரிடையே மூன்று எலும்பு இடுப்பெலும்புகளின் இணைவாகவுள்ள இடுப்பெலும்பின் மேற்பகுதி.
iIIumination : ஒளிரூட்டுதல்; ஒளிர்மை; ஒளிமை : நுண் ணோக்காடியில் ஒர் உறுப்பினை அல்லது பொருளை ஆய்வு செய்வதற்காக ஒளிருட்டுதல்.
illusion : விழிமாறாட்டத் தோற்றம்; திரிபுக் காட்சி; தோற்ற மயக்கம்; மருட்கை : திருவுரு பொய்த் தோற்றம், மாயத்தோற்றம். எடுத்துக் காட்டாக, ஒரு வெள்ளைத் துணியை பேய் என்று தவறாக எண்ணுதல்.
illotycin : ஐலோட்டிசின் : எரித்ரோமைசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
IM : ஐ.எம் : உள்தசை(Intramuscular) சார்ந்த என்பதன்சுருக்கம். ΙΜΑ : ஐ.எம்.ஏ : இந்திய மருத்துவச் சங்கம் (Indian Medical Association) என்பதன் சுருக்கம்.
image : தோற்றம்; மனக்காட்சி; உள உரு; வடிவமைவு; படிவம்; வடிவமைபு : மனதில் உருவம் கற்பித்துக் காணுதல்.
imagery : நினைவுக்காட்சி; மனக் காட்சி : மனத்தகத் தோற்றம்: புனைவாற்றல் கற்பனை.
imagination : கற்பனை : பொருள்கள், ஆட்கள் அல்லது நிலைமைகள் ஆகியவற்றின் முன்பு அறியப்பட்ட உருவக் காட்சிகளிலிருந்து வேறுபட்ட மன உருக்காட்சிகள்.
imaging : உருக்காட்சியகம் : உடம்புக்குள் உள்ள கட்டமைவுகளின் உருக்காட்சிகள், படங்கள் அல்லது நிழல்களை உருவாக்குதல். காந்தப் புலங்கள், ஒலி அலைகள், கதிரியக்கம் ஆகயவற்றைப் பயன்படுத்தி இவ்வாறு உருவாக்கம் செய்யப்படுகிறது. பெரும்பாலும் கணினிகள் மூலம் ஒருங்கிணைத்து இது செய்யப்படுகிறது.
imago : முழுநிறைவு நிலை : 1. பூச்சி வாழ்க்கையில் எல்லா மாறுதல்களையும் அடைந்த பிறகு இறுதியாக ஏற்படும் முழு நிறைவான நிலை, 2. கற்பனை குறிக்கோள் கவிந்திருக்கும் குழந்தைப் பருவத்தில் உருவாகும் ஒரு நினைவாற்றல்.
imbalance : சமநிலையின்மை; சமனின்மை; சீரின்மை : இரண்டுக்குமிடையே சமநிலை இல்லாதிருத்தல், தசை அல்லது சுரப்பி ஒருங்கிணைப்பு பிறழ்பட்டிருத்தல்.
imbecile : பிறவி மூளைத் தளர்ச்சி; மூளை நலிவு : பிறவியிலேயே மூளைத் தளர்ச்சியுடன் இருத்தல்; மனவளர்ச்சிக் குறைபாடு.
imbecility : மூளைத்தளர்ச்சி; மூளை நலிவுறல் : மனவளர்ச்சி குன்றிய நிலை, மனக்கோளாறு.
imbedding : பதிவாக்கம் : சுற்றியுள்ள திசுவுடன் பொருத்தி வைத்தல். கருப்பையின் உள் வரிச்சவ்வுடன் இணைந்த மனிதக் கரு ஊன்மங்களைப் பதியம் செய்தல்.
imbibition : உள்ளீர்ப்பு : ஒரு திரவத்தை ஈர்த்துக் கொள்ளுதல்.
imferon : இம்ஃபெரோன் : அயன் டெக்ஸ்ட்ரான் தொகுப்பின் வணிகப் பெயர். அயச்சத்துக் குறைபாட்டுக்குக் கொடுக்கப்படும் மருந்து.
imipemem : இமிப்பெனம் : சிறுநீரகச் செரிமானப் பொருளினால் ஒரளவு செயலிழக்கப்பட்ட ஆக்சிஜன் உள்ள, ஆக்சிஜன் இல்லாத, கிராம் எதிர்படி, கிராம் நேர்படி உயிரிகள். இதனால் இது அந்தச் செரிமானப் பொருளின் சைலாஸ்டாட்டின் என்ற தனிப்பிகளுடன் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது.
imipramine : இமிப்பிராமின் : மனச்சோர்வினைப் போக்கக் கொடுக்கப்படும் மருந்து.
imitation : பிரதிபலிப்பு; போலமை; பின்பற்று.
immature : முதிராநிலை; முதிரா : முழுமையாக வளர்ச்சியடையாத நிலை.
immedicable : தீராத நோய் : குணப்படுத்த முடியாத (நோய்).
immersion : உள்தோய்வு : உடலை நீருக்கடியில் அல்லது வேறு திரவத்தினடியில் வைத்தல்.
immigration : இடம் பெயர்தல்.
immobilization : அசைவிலாமை.
immovable : அசைவுறா.
immune : நோய்த்தடை : தற்காப்பு மூலங்கள் பெருக்கமடைவதால் ஏற்படும் நோய் எதிர்ப்புத் திறன்.
immune reaction response : ஏம மறுவினை விளைவு : உடலில் பொருத்தப்படும் மாற்று உறுப்பினை உடல் ஏற்றுக் கொள்ள மறுத்தல்.
immunity : தடைக்காப்பு; தடைக் காப்பு நிலை; நோய் எதிர்ப்புச் சக்தி; ஏமம் : உடலில் புகும் நோய்க்கிருமிகளை எதிர்த்து நோய் உண்டாவதைத் தடுக்கும் தடைக்காப்பு நிலை
immunization : ஏமளிப்பு; தொற்றுத்தடை; ஏமளித்தல் : தொற்று நோய்களிலிருந்து தடை காப்பு அளித்தல்.
immunoadsorbent : ஏமக்காப்பு உறிஞ்சுறு பொருள் : ஒரு கரை சலிலிருந்து காப்பு மூலங்களை உறிஞ்சிக் கொள்வதற்காக அல்லது துய்மைப் படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் கூழ் அல்லது செயலற்ற திடப் பொருள் போன்ற பொருள் எதுவும்.
immunoassay : ஏமக்காப்பு மதிப்பீடு : ஒருவரின் குருதியில் அல்லது திசுவிலுள்ள தற்காப்பு மூலங்களையும் காப்பு மூலங்களையும் அளவிடுவதற்கான ஆய்வுக் கூட முறைகள். இது தொற்று நோய்களைக் கண்டறியப் பயன்படுகிறது.
immunocompetence : ஏமக்காப்புத் திறம்பாடு : ஏமக்காப்புத் துலங்கலை வளர்த்துக் கொள்வதற்கான உடலின் திறன்.
immunocompromised : ஏமக்காப்பு இன்மை : இயல்பான நோய்த்தடை அமைப்பு இல்லாதிருக்கும் நிலை. immuno compromised patients : தடைகாப்பு ஒடுங்கிய நோயாளிகள் : தடைகாப்பு நிலை ஒடுக்கப்பட்ட நோயாளிகள். மருந்துகளினால் குறைபா டான நோய்த்தடை காப்பு எற்படுதல்.
immunodeficency : தடைகாப்புக் குறைபாடு : நோய்த் தடைக்காப்பு நிலை குறைவாக இருத்தல். இதனால் நோய்கள் எளிதில் பீடிக்கின்றன.
immuno deficiency diseases : தடைக்காப்புக் குறைபாட்டு நோய்கள் : நோய்த்தடை காப்பு நிலையில் ஏற்படும் கோளாறுகளினால் வரும் அல்லது வந்தடையும் நோய்.
immunodiagnosis : ஏமக்காப்பு நோய் நாடல் : காப்பு மூலங்களைப் பொறுத்து தற்காப்பு மூலங்கள் மிகுதியாக இருப்பதை அடிப்படையாகக் கொண்ட நோய் அறிதல்.
immunodiffusion : ஏமக்காப்பு பரவல் : பல்வேறு பகுதிகளிலிருந்து காப்பு மூலமும் தற்காப்பு மூலமும் பரவுதல்.
immunoelectrophoresis : ஏமக்காப்பு மின் விலக்கு : மின் விலக்கு, இரட்டைப் பரவல் சார்ந்த ஒரு முறை. மின் விலக்கு நகர்திறன், காப்பு மூலப் பண்புகள் அடிப்படையிலான புரதங்களை அடையாளங் காண்பதற்கான முறை.
immunoen hancement : ஏமக்காப்பு அதிகரிப்பு : ஏமக்காப்புத் துலங்கல் அளவை அதிகரிப்பதற்கான செய்முறை.
immunofluorescence : ஏமக்காப்பு இடமாற்றம் : திசுவிலுள்ள காப்பு மூலம் அல்லது தற்காப்பு மூலம் இருக்கும் இடத்தை ஒளிர்வு மூலம் அறுதியிடல்.
immunogen : ஏமக்காப்பு தூண்டுபொருள் : ஒரு ஏமக்காப்புத் துலங்கலைத் தூண்டக்கூடிய பொருள் எதுவும்.
immunogenesis : தடைகாப்பு உருவாக்கம் : உடம்பில் நோய்த் தடைகாப்பு நிலையை உருவாக்கும் முறை ஏமவாக்கம்.
immunogenetics : ஏமக்காப்பு மரபணுவியல் : ஏமக்காப்புத் துலங்கலைப் பாதிக்கக்கூடிய மரபணுக்காரணிகளை ஆராய்தல்.
immunogenicity : தடைகாப்பு தூண்டுதிறன் : உடலில் நோய்த் தடைகாப்பு நிலையைத் தூண்டும் திறம்பாடு ஏமத்துண்டு திறன்.
immunoglobulins (Igs) : தடைகாப்புப் புரதங்கள் : அதிக அளவு மூலக்காற்று எடையுள்ள புரதங்கள். இதனை நிணநீர் உற்பத்தி செய்கிறது. இது பாக்டீரியா, போன்ற மூலங்களுடன் இணைந்து நோய்த் தடைக்காப்பினை உண்டாக்ககிறது.
immunologist : ஏமாக்காப்பியலறிஞர் : ஏமக்காப்பில் துறை போகிய வல்லுநர்.
immunology : நோய்த்தடைக் காப்பியல்; நோய்த் திசுப்பாற்றியல்; ஏமவியல் : உடம்பிலுள்ள நோய்த் தடைக்காப்பு தூண்டு திறன் பற்றிய ஆய்வியல்.
immuno modulation : ஏமக்காப்பு மாற்றமைப்பு : குறிப்பிட்ட உயிரியல் திரிபாக்கிகள் அல்லாத திரிபாக்கிகள் மூலம் ஏமக்காப்பு முறையை மாற்றி யமைத்தல், நிணநீர்ப் பொருள்கள், அல்லது நோயாளியின் தன் உயிரணுக்களுக்கு எதிராக உற்பத்தியாகும் குறிப்பிட்ட மூலக் கூறுகளை இதற்கு உதவுகின்றன.
immunopathology : தடுப்பாற்று நோயியல்; திசுக்காய ஆய்வியல் : நோய்த் தடைக்காப்பு அமைப்புத் தொடர்பான திசுக் காயம் குறித்து ஆராய்தல்.
immunophenotyping : ஏமக்காப்பு வடிவமைப்பு : ஒற்றைப் பால்படு நோய் எதிர்ப் பொருள்கள் போன்ற ஏமக்காப்புக் குறியீடுகளுடன் உயிரணுக்களை வடிவமைத்தல்.
immunoprecipitation : ஏமக்காப்பு வீழ்படிவு : காப்பு மூலம் தற்காப்பு மூலம் வினையின் விளைவாக ஏற்படும் வீழ்படிவு.
immuno proliferative small intestinal disease (IPSTD) : ஏமக்காப்பு பரவல் சிறுகுடல் நோய் (IPSTD) : சிறுகுடலில் நோய் பரவல். இது குறிப்பாக நிணநீர் ஊடுருவல் காரணமாக உண்டாகிறது. இதனால், ஈர்ப்புச் சக்தி குறைபாடு, பசியின்மை, இளவயதினரிடம் காய்ச்சல் உண்டாகிறது. இதனை ஆல்ஃபா கனச்சங்கிலி நோய் என்றும் அழைப்பர்.
immunosorbent : ஏமக்காப்பு ஈர்ப்புப் பொருள் : ஒரு கலவையிலிருந்து ஒத்திசைவான தற்காப்பு முலத்தை ஈர்த்துக் கொள்ளும் தற்காப்பு மூலம்.
immunos uppressant : ஏமக்காப்புக் குறைப்புப் பொருள் : ஏமக்காப்புத் துலங்கலைக் குறைக்கிற ஒரு பொருள்.
immunosuppression : நோய்த் தடைக்காப்புக் குறைப்பு மருத்துவம்; தடுப்பாற்றலடக்கு : நோய்த் தடைக் காப்புத் தூண்டு திறனை மட்டுப்படுத்துவதற்கான மருத்துவம்.
immunotherapy : தடுப்பியம்; ஏமக்காப்பு மருத்துவம்; ஏமப் பண்டுவம்; தடுப்பு மருத்துவம் : ஒருவரிடம் நோய்த் தடைக் காப்பினை உருவாக்குவதற்கு முன் உருவாக்கிய தற்காப்பு மூலங்கள் மூலம் நடைபெறும் தானியக்க ஏமக்காப்பு உருவாக்கம்.
imodium : இம்மோடியம் : ஐயோபெராமிட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
impacted tooth : தெற்றுப்பல் : மற்றொரு பல்லுக்கு அடியில் வளரும் பல். இது மேல் நோக்கி வளர முடிவதில்லை.
impaction : நெரிப்பு.
impairment : இயல்பு திரிபு : ஒரு கட்டமைப்பின் அல்லது செயற்பாட்டின் இழப்பு அல்லது இயல்பு திரிபு.
impalpable : தொட்டுணர முடியாத : தொட்டுணர முடியாத அளவுக்கு மிக மெல்லியதான மிக நுண்ணியதான.
impaludism : மண்ணீரல் அழற்சி காய்ச்சல் : சதுப்பு நிலத்தில் வாழ்வோரிடையே காணப்படும் இடையிடையிட்ட மண்ணீரல் அழற்சியும் காய்ச்சலும் வாய்ந்த நோய்.
impassable : செல்லமுடியா.
impediment in speech : தெற்றுவாய் : திக்கித் திக்கிப் பேசுதல்.
inperforate : துளையில்லா; மாத விடாய் வழியடைப்பு; இயல்பு மாறிய அடைப்பு : பெண்ணின் கருப்பை வாய்க்குழியில் (யோனிக்குழாய்) மாதவிடாய் திரவம் வெளியேறுவதற்கு இயற்கையான திறப்பு வழி இல்லாதிருத்தல். இது பிறவிலேயே ஏற்படுகிறது.
impervious : புகா.
impetiginization : கொப்புளத் தொற்று : வேறொரு தோல் நோயின் இருப்பிடத்தில் கொப்புளங்கள் தோன்றுதல்.
impetigo : கொப்புளத் தொற்று நோய்; செஞ்சொறி; தொற்றுச் சிரங்கு :கொப்புளத்தில் உண்டாகும் ஒருவகைத் தோல் வீக்க நோய். இது கடுமையாகத் தொற்றக் கூடியது.
implant : செயற்கைப் பொருள் செலுத்தம்; இழுவை : உடலினுள் அறுவைச் சிகிச்சை மூலம் ஒர் இயற்கையான அல்லது செயற்கையான பொருளைப் பொருத்துதல் அல்லது செருகுதல். implantation : உயிரணு பொருத்துதல்; உயிரணுப் பதியம்; உள் வைத்தல் இடுகை : திசுக்களில் உயிருள்ள உயிரணுக்களை அல்லது திடப்பொருள்களை உள்ளே புகுத்தல். எடுத்துக்காட்ட ரேடியம் அல்லது திட மருந்துகளை உட்புகுத்தல். கருப்பையின் உள்வரிச் சவ்வில் கருவுற்ற சினையைப் புகுத்துதல் வேறு திசுவை ஒட்டுதல்.
implants : செலுத்துத் திசுக்கள்; உள்வைப்பு : திசுக்களில் அறுவை மருத்துவம் மூலம் புகுத்தப்படும் ஒட்டுத் திசுக்கள்.
impotence : ஆண்மைக்குறை; ஆண்மையின்மை : ஆணிடம் பாலுறவுக்கான ஆண்மைத் தன்மை இல்லாதிருத்தல்.
impregnate : சினைப்படுத்துதல்; கருவுறச் செய்தல்.
impregnation : சினையூட்டம்; சூலமை : ஒரு சினை முட்டையைக் கருவுறச் செய்தல்.
impression : பதிவாதல்; சுவடு; பதிவு; சுவடு, படுதல் : 1. ஒரு மேற்பரப்பில் ஏற்படும் பதிவு. 2. மனதில் ஏற்படும் ஒர் எண்ணப் பதிவு. 3. உரிய பற்பொருள்களைப் பயன்படுத்தி பல்வளைவு அல்லது பற்கள் முழுவதன் அல்லது அதன் பகுதியின் பதிவுருவை எடுத்தல்,
imprint : முத்திரை; படிவுறுதல் : அழுத்த மூலம் ஏற்படுத்தும் ஒரு குறியீடு; ஒரு மேற்பரப்பில் உண்டாகும் பதிவுரு.
impulse : திடீர் உணர்ச்சி; உளத் தூண்டல்; உணர்ச்சி வயப்படுதல்; துடிதுடிப்பு; உட்தூண்டு : நாடி நரம்புகளில் திடீரென அலையெழுப்பும் புறத் துண்டுதல்.
impulse, cardiac : இதயத்துடிப்பு.
impulse, merve : நரம்புத் துடிப்பு : நரம்பு அலை.
impure : மாசுற்ற தூய்மையற்ற.
impurity : மாசு.
inaction : செயலின்மை : தூண்டுதல் செய்வதற்குத் துலங்கல் ஏற்படாமல் போதல்.
imuran : இமுரான் : அசாத்தி யோப்பிரின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
inaccessibility : அணுக முடியாமை; எட்டாமை : உளவியல் மருத்துவத்தில் நோயாளியிடம் எவ்விதப் பதில் செயலும் எழாதிருத்தல்.
inactivation : செயலிழக்கை.
inactive : செயலிழப்பு.
inanimate : சடப் பொருள்.
inanition : உடல் எடைகுறைதல்; ஊட்டக் குறை : உடல் எடை கணிசமாகக் குறைதல், உடல் பலவீனமடைதல்.
inarticulate : இணைப்பு இன்மை : இணைக்கப்படாத நிலை, இணைப்புறுப்புகள் இல்லாத நிலை பேச முடியாத நிலை; கோர்வையாக பேச இயலாத நிலை.
inassimilable : செரிக்க முடியாத; அகக்துறிஞ்சாத : செரிமானம் செய்து கொள்ள இயலாதிருக்கிற.
inaudible : செவிப்புலன் இன்மை : கேட்க முடியாதிருத்தல்.
inborn : கருவில் உருவான; உட் பிறந்த : கருவிலிருக்கும் போதே உருவான பண்பு இயல்பாக அமைந்த அல்லது உள்ளார்ந்த இயல்பு.
inbreathe : மூச்சு உள்வாங்கல்.
inbreeding : குருதியுறவு மண முறை; உறவு இணைவு : மிக நெருங்கிய உறவினர்களிடையிலான திருமண உறவு.
INC : ஐ.என்.சி : இந்தியச் செவிலியர் பேரவை (Indian Nursing Council)
incarcerated hernia : அடைப்பட்ட குடலிறக்கம் : குடலின் ஒரு வளையம் மார்புப் பையினுள் பிதுங்கியிருத்தல். இதனை அறுவைச் சிகிச்சையின்றி பழைய நிலைக்குக் கொண்டு வர இயலாது.
incept : வாங்கல்; சினை உள்ளடக்கல்.
inception : தொடக்கம் : 1. தொடக்க நிலை 2. உணவை வயிற்றுக்குள் கொண்டு செல்லுதல். 3. அகத் தாய்வு.
incest : முறை தகாப் புணர்ச்சி; கூடா பாலறவு; கூடாக்கலவி : தடை விதிக்கப்பட்ட அணுக்க உறவினரிடையிலான கலவி. எடுத்துக்காட்ட தந்தை மகளுக்கிடையில், தாய் மகனுக்கிடையில் புணர்ச்சி தடை செய்யப் பட்டதாகும்.
incidence : நிகழ்வு; நிகழ்தகவு; நிகர் வளவு : ஒரு கால அளவின் போது ஒரு நிகழ்வு அல்லது நிலை நிகழும் எண்ணிக்கை; ஒரு குறிப்பிட்ட கால அளவின் போது பொதுவாக ஒராண்டில் ஒரு நோய் புதிதாகத் தோன்று நேர்வுகளின் எண்ணிக்கை.
incidentaloma : தற்செயல் கட்டி : உருக்காட்சி நடைமுறைகள் அல்லது பிற முறைகளில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப் பட்ட கட்டித் திரட்சி.
incineration : நீறாக்கல்.
incinerator : நீற்றுலை : திடக்கழிவுப் பொருள்களை எரிப்பதற்கான நீர் உலை.
incipient : தொடக்க;ஆரம்ப. incised wond : வெட்டுக்காயம் : கூரிய கத்தி போன்ற ஆயுதங் களால் வெட்டிய காயம்.
incision : வெட்டுதல் (கீறுதல்); கிழித்தல்; கீறல் : கூர்மையான கருவியினால் உடல் திசுவில் வெட்டுதல்.
incisor : உளிப்பல்; வெட்டுப் பல் : முன் வாய்ப்பல், உணவை அரைத்து உண்ணப் பயன்படுகிறது.
incitant : தூண்டு பொருள் : ஒரு வினையை, நோயை அல்லது நிகழ்வைத் தூண்டி விடுகிற பொருள்.
inclusion : சேர்ப்பு.
inclusion bodies : உள் துகள்கள் : நோய்க் குணத் திசுக்கள், இயல் பான திசுக்களின் சில உயிரணுக்களில் காணப்படும் நுண்ணிய துகள்கள்.
incoherence : தொடர்பின்றிப் பேசுதல் : ஒன்றுக் கொன்று தொடர்பில்லாமல் பேசுதல்.
incoherent : தொடர்பற்ற : தருக்க முறையில் தொடர்பில்லாத, புரிந்து கொள்ள முடியாத அசைவில்லாத.
incompatability : ஒற்றாமை.
incombatibility : ஒவ்வாமை; பொருந்தாமை; ஒன்றாமை : இரத்த தானமளிக்கப்பட்ட இரத்தத்தை நோயாளிக்குச் செலுத்தும் போது அந்த இரத்தம் ஒத்திசையாமல் போதல்.
incompatible : முரண்பட்ட; ஒன்றா : மாறுபாடான, உடலியல் முறையில் ஒன்றுக்கொன்று முரண்பாடாகச் செயற்படும் உடலியல் பொருள்கள், உடலியல் முறையில் ஒன்றுக்கொன்று மாறுபட்டுச் செயல் புரியும் மருந்து.
incompetence : திறைமைக் குறை; தகுதியற்ற; உடல் இயலாமை; தகாமை : சில இயல்பான பணிகளைச் செய்திட இயலாதிருத்தல் எ-டு நெஞ்சுப் பைச் சவ்வடைப்பு இயங்காதிருத்தல்.
incongruity : முரண்மை.
incontinence : தன்னடக்க மின்மை; கட்டுப்பாடிழந்த; அடக்காமை ஒழுகை : சிறுநீர்கழித்தல் போன்ற இயற்கை முனைப்புகளை அடக்க இயலாதிருத்தல்.
incoordination : இணக்கமின்மை; தசை ஒத்தியங்காமை; இணை; ஒழுங்கின்மை; ஒருங்கிணையாமை : தசை இயக்கங்களை ஒரு முகப்படுத்த இயலாதிருத்தல்.
incubation : அடைகாப்பு; அடைவுக் காலம்; அடைநிலை : நோய் குறி தோன்றும் முன்பு நோய்க் கிருமிகள் பெருக்கமடையும் கால அளவு.
incubation period : அடைக்காலம்; நோய்க்கிருமி பெருக்க காலம் : உடலில் பாக்டீரியா நுழைவதற்கும் நோய்க்கிருமிகள் தோன்றுவதற்குமிடையிலான காலம்.
incubator: கரு முதிர்ச்சிக் கருவி; சீர் வெப்பப் பெட்டி; அடைக் காப்பு : 1. முழுவளர்ச்சியுறாமல் உரிய காலத்திற்கு முன்னரே பிறந்த குழந்தைகளை வளர்க்கும் கருவி. 2. மருத்துவ முறைகளுக்கான நோய்க்கிருமிப் பெருக்க அமைவு.
incudectomy : காதெலும்பு அறுவை மருத்துவம் : காதெலும்பின் பகுதிகள் அனைத்தையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.
incudostapedial : காதெலும்பு சார்ந்த : காதின் மையப் பகுதியிலுள்ள காதெலும்பு, அங்கவடி, செவிச்சிற்றெலும்பு சாாநத.
incurable : குணமாகாத; தீர்விலி; தீராத :குணப்படுத்த முடியாத.
incus : காதெலும்பு : சுத்தி எலும்பிலிருந்து ஒலியலை அதிர்வுகளை வாங்குங்கும் காது எலும்பு.
indapamide : இண்டாப்பாமைடு : தாழ்ந்த குருதியழுத்தத்தை எதிர்க்கும் சிறுநீர்க் கழிவினைத் தூண்டும் மருத்துவம்.indema : இண்டிமா : ஃபெனிண்டியோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
indentation : குழிவு; சிறுவளைவு.
Inderal : இண்டெரால் : புரோப்ரானோலால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
inderetic : இண்டெரெட்டிக் : பெண்ட்ரோஃபுளுசைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
index : அட்டவணை; சுட்டு; நிரல்.
index, blood : குருதி அளவை.
index, colour : நிற அளவை.
index, finger : சுட்டுவிரல்.
Index Medicus : மருத்துவ ஆதார இதழ் : தேசிய மருத்துவ நூலகத்தின் (National library of Medicina) ஒரு வெளியீடு, உயிரி மருந்து இதழ்கள், சுகாதார ஆய்வாதாரங்கள் ஆகியவற்றில் வெளியாகும் கட்டுரைகள் இதில் அடங்கியிருக்கும்.
Indian childhood cirrhosis : இந்திய குழந்தைப் பருவக் கரணை நோய் :குழந்தைகளின் குழவிப் பருவத்தில் ஏற்படும் மரணம் விளைவிக்கும் குடும்ப நோய். இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் நடுத்தர இந்துக் குடும்பங்களில் இது முதல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் காய்ச்சல், திசு ஆக்சிஜன் குறைபாடு, ஈரல் விரிவு, திடீர்க் கரணை, கல்லீரல் செயலின்மை ஆகியவை உண்டாகிறது. உணவில் அளவுக்கு அதிகமாக செம்புச்சத்து சேர் வதால் இது உண்டாவதாகக் கருதப்படுகிறது. செப்புப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதால் இந்த நோய் ஏற்படுவது குறைகிறது.
indian hemp : இந்தியச் சணல்.
indican : இண்டிக்கான் : சிறுநீரிலிருந்து வெளியேறும் பொட் டாசியம் உப்பு.
Indian multipurpose food : இந்திய பலநோக்கு உணவு : 25% வருத்த கடலைப் பருப்பு, 75% நிலக்கடலை மாவு கலவையால் செய்து, கனிமப் பொருள்கள், விட்டமின்கள் கலந்த சத்தூட்டப் பட்டு காய்கறியுடன் கலந்த உணவு.
indicanuria : மிகை இண்டிக்கான் : சிறுநீரில் உள்ள மிகையான பொட்டாசியம் உப்பு. இயல்பான சிறுநீரில் இது சொற்ப அளவில் இருக்கலாம். அதிக அளவில் இருந்தால் குடலில் தடை ஏற்பட்டிருப்பதைக் குறிக்கும். indication : குறியீடு; அறிகுறி; தேவை நிலை : ஒரு நோய்க்கு முறையாகச் சிகிச்சையளிக்கப் படுகிறது என்பதைக் காட்டும் ஒரு குறியீடு அல்லது நிலை.
indicator : காட்டி.
indifferent : அசட்டை நிலை; மெத்தனமான : 1. இயல்பான தூண்டுதலுக்கு செயற்படாத நிலை, 2. வேறுபடுத்திக் காட்டியபடாத உயிரணுக்கள்.
indigenous : வட்டார நோய்கள்; உள்ளுர் நோய் : ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் அல்லது நாட்டில் பரவும் நோய்.
indigested : சீரணிக் காத; செரிமானமில்லாத.
indigestible : செரிமானமின்மை/வயிற்றுமந்தம்; செறியாநிலை : உணவு செரியாத நிலை; எளிதில் உணவு சீரணமாகாத நிலை.
indigestion : செரிமானமின்மை; செரியாநிலை; வயிற்று மந்த நோய் : வயிற்றில் உணவு சீரணிக்காமலிருத்தல், வயிற்று மந்தம்.
indigocarmine : நீலச் சாய கரைசல் : சிறுநீரகம் செயற்படுவதைப் பரிசோதிக்க உதவும் 04% கரைசல், சிறுநீர் நீலநிறமாக இருந்தால் சிறுநீரகம் இயல்பாகச் செயற்படுகிறது என்று பொருள்.
indirect : மறைமுக.
indirect laryngoscopy : மறைமுகக் குரல்வளை ஆய்வு : குரல் வளையை ஒரு கண்ணாடி மூலமாக ஆய்வு செய்யும் முறை.
indispensable : இன்றியமையாத.
indistinct : தெளிவிலா.
indisposed : நலிந்த.
indisposition : உடல் நலமிலா.
individual : தனியாள்; தனிய.
indocid : இண்டோசிட் : இண்டோமெத்தாசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
indole : இண்டோல் : குடல்களிலுள்ள டிரிப்டோஃபான் சிதை வுறுவதால் உண்டாகும் பொருள். இது நுரையீரலில் இண்டாசிலாக ஆக்சிகரணமாகி, சிறுநீரில் இண்டிக்கானாக வெளியேறுகிறது.
indolencea : நோவற்ற புண்; வலியற்ற புண் : வேதனை உண்டு பண்ணாத, ஆனால் மெதுவாக ஆறக்கூடிய புண்.
indoleacetic : இண்டோலிய சிட்டிக் அமிலம் : குடல்களிலுள்ள டிரிஃடோபான் வளர்சிதை வினை மாற்றப் பொருள் சிதைவுறுவதால் உண்டாகும் முக்கிய அமிலப் பொருள். indolent : சோம்பல்; மெள்ளப் பரவும்; வலிமையிலா : வேலை செய்ய மனமில்லாதிருத்தல்; நோவுதராத வேதனை உண்டு பண்ணாத.
indomethacin : இண்டோமீத்தாசின் : வீக்கத்தைக் குறைக்கக் கூடிய மருந்து வாதக் கோளாறுகளுக்குப் பயன்படக் கூடியது. குமட்டலைத் தடுக்க வாய் வழி உட்கொள்ளலாம்.
indoramin : இண்டோராமின் : தாழ்ந்த குருதியழுத்தத்தைக் குறைக்கக் கூடிய மருந்து.
induced abortion : தூண்டிய கருச்சிதைவு; கருச்சிதைவு தூண்டல்; தூண்டல் சிதைவு : மருத்துவ முறை மூலம் கருச்சிதைவினைத் தூண்டிவிடுதல்.
induction : இடுப்புவலி வருவித்தல்; தூண்டல்; ஊக்குதல் : மயக்கம் இடுப்பு வலி, (மகப்பேற்று வலி) போன்றவற்றைத் தூண்டி வருவித்தல்.
induction of labour : பேற்றுத்தூண்டுகை.
induration : உணர்விழப்பு; கடின மாதல் : திசுக்களைக் கடினமாக்கி உணர்ச்சியிழக்கச் செய்தல்.
industrial : தொழில் சார்ந்த.
industrial disease : தொழிலியல் நோய்கள்; தொழில்சார் நோய்கள் : ஒரு தொழிலில் ஈடுபடும் போது தூசு, புகை, வேதியியல் போன்ற பொருள்களால் உருவாகும் நோய்.
industrial therapy : தொழிலியல் மருத்துவம் : உளவியல் மருத்துவ மனையில், தொழிலான நோயாளிகளுக்கு உளவியல் சிகிச்சையளித்து, அவர்களை மீண்டும் தொழிலாளர் சமுதாயத்தில் சேர்ப்பதற்கு ஆயுத்தம் செய்யும் பகுதி.
indwelling : உள்ளுறைதல் : உடலுக்குள் இருக்கும் செருகு குழல், வெளியேற்றுக் குழாய், அல்லது பிற சாதனங்கள் போன்றவை.
inebriation : குடிவெறி; மது மயக்கம்; போதை : குடிபோதையில் உள்ள நிலை, மதுமயக்கத்தில் இருத்தல்.
inertia : செயலின்மை; இயக் கொழிவு; மெதுநிலை : கருப்பை சுருங்கி விரியாமல் செயலற்றதாக இருத்தல்.
inertia, uterine : கருப்பை மெதுநிலை.
inextremis : இறக்குந் தறுவாயில்.
infant : குழவி; பச்சிளங் குழந்தை; கைக்குழந்தை : ஒரு வயதுக்குக் குறைந்த பச்சிளங்குழந்தை. infancy : குழவிப் பருவம்; குழந்தைப் பருவம்; மழலைப் பருவம் : குழந்தையின் மிகு இளம்பருவம் குழந்தைப் பருவத்தொடக்க நிலை.
infant : குழந்தை; மழலை.
infantile : குழந்தைத்தனம்; மழலைய.
infantieism : மழலையம்; குழந்தை நிலை.உடல் மற்றும் உள்ளம் வளர்ச்சியடையாத நிலை.
infant, premature : குறைப் பேற்று மகவு.
infanticide : குழந்தைக் கொலை; மகவுக் கொலை : பிறந்தவுடன் குழந்தையைக் கொன்றுவிடும் பழக்கம், பெரும்பாலும் தாய் உடந்தையாக இருக்கும் நிலையுடைய குழந்தைக் கொலை.
infantism : உடல்-உள வளர்ச்சியின்மை; குழந்தையுள்ளம்; இளந் தோற்றம்; மழலையம் : அறிவோ உடம்போ வளர்ச்சியடையாத நிலை.
infarct : குருவிலி.
infarction : திசு மாள்வு; அழிவு; குருதி நசிவுறல் : இரத்தம் பாய்வது நின்று போவதால் திசுவின் ஒரு பகுதி மாண்டு போதல்.
infect : நோய்த் தொற்று : நோய் உண்டாக்கும் உயிரிகள் பற்றுதல்.
infection : நோய்த் தொற்றுதல்; நோய்த்தொற்று; தொற்று; பரவு : காற்று, நீர், மூலம் நோய்க் கிருமிகள் பரவி நோய்த் தொற்றுதல்.
infection, ainborme : வலித்தொற்று.
infection, droplet : திவலைத் தொற்று.
infection. secontary : சார் தொற்று.
infection, silent : மறைத் தொற்று.
infection, subclinical : அடைத்தொற்று; உள் தொற்று.
infectious : தொற்ற வல்ல; தொற்று நிலை.
infectious disease : தொற்று; நோய் : ஒரு குறிப்பிட்ட நோய் கிருமி மூலம் தொற்றுகிற நோய். இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக பரவும்.
infectious mononucIeosis : சுரப்பிக் காய்ச்சல் : ஒருவகைத் தொற்று. நோய். இந்நோய் கண்டவர்களுக்குக் காய்ச்சல், தொண்டைப்புண், நிணநீர்க் கரணைகள் விரிவடைதல் உண்டாகும். infective : தொற்றவைக்கும் இயல்புடைய; தொற்றும் பண்பு : தொற்றுநோயை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தொற்றச் செய்யும் இயல்புடைய.
inferior : கீழார்ந்த.
inferential statistics : ஊகிப்புப் புள்ளியியல் : மாதிரிகளின் அடிப் படையில் நிகழ்தகவுகள் குறித்து பொதுவான முடிவுகளை எடுப்பதற்குப் பயன்படும் முறைகள்.
inferior : தாழ்ந்த; கீழ்.
inferiority complex : தாழ்வு மனப்பான்மை : தனக்குப் பாது காப்பில்லை என ஒருவருக்கு ஏற்படும் உணர்வு. இதனால் சிலர் மூர்க்கத்தனமாக நடக்கக் கூடும்.
infertitle : மலட்டிய.
infertility : மலட்டுத் தன்மை; கருத்தறிக்காமை; மலடு : இனப் பெருக்கம் செய்யும் திறன் இல்லாதிருத்தல். இந்நிலை கணவனிடமோ மனைவியிடமோ இருக்கலாம்.
infestation : ஒட்டுண்ணி மொய்ப்பு; பீடித்தல்; மொய்ப்பு : மனித உடம்பில் விலங்கு ஒட்டுண்ணிகள் நிறைந்திருத்தல்.
infibulation : விழைச்சுக் கட்டு : புணர்ச்சி செய்வதைத் தடுக்கும் பொருட்டுப் பாலுறுப்புகளைக் கொக்கியினால் கட்டிவிடும் முறை.
infiltration : ஊடுபரவல்; ஊடுருவல்; உட்பரவல் : சுற்றுப்புறத் திசுக்கள் ஊடுருவுதல். வடியும் அல்லது கசியும் திரவம் படிப்படியாக உட்சென்று பரவுதல்.
infirm : வலிமை இழப்பு : முதுமை காரணமாக உடல் வலிமை குறைந்து, திறனற்ற நிலையடைதல்.
infirmary : மருத்துவமனை; நோய்மனை.
inflammation : அழற்சி (வீக்கம்): காயம் காரணமாக உயிர் வாழும் திசுக்களில் உண்டாகும் எரிச்சல், வீக்கம், அழற்சி போன்ற விளைவுகள்.
inflation : உப்பல் : காற்று, வாயு அல்லது திரவம் காரணமாக ஒர் உறுப்பு ஊதுதல் அல்லது வீங்குதல்.
influenza : சளிக்காய்ச்சல்; புளுக் காய்ச்சல்; பினுசுரம் : கடுநீர்க் கோப்புடன் கூடிய காய்ச்சல், இது கொள்ளை நோயாகப் பரவக் கூடியது.
influenza cold : கடும் நீர்க்கோப்பு.
informed consent : அறிந்த பின் இசைவு : அறுவைச் சிகிச்சை அல்லது நோய் நடைமுறையையும் அதில் அடங்கியுள்ள அபாயங்களையும் நன்கு விளக்கிக்கூறிய பிறகு அந்த நடை முறைக்கு உள்ளாக இசைவு தெரிவித்தல்.
infrared : செவ்வகல்.
infrared rays : அகச் சிவப்புக்கதிர்கள் : நிறப்பட்டையில் சிவப்பு நிறத்துக்கு அப்பாற்பட்ட கட்புலப்படாக் கதிர்கள்.
infrascapular : தோள் பட்டை எலும்புக்குக் கீழே.
infrasternal : மார்பெலும்புக்கு அடியிலுள்ள.
infundibulum : பெய்குழல் வடிவு; கூப்புப் புழை : ஊற்றாங்குழல் போன்ற வடிவுடைய குழாய்.
infusion : சிரைவழி உட் சொரிதல்; உட் செலுத்துதல்; நீர்ம ஏற்றம்; நீர் ஏற்றல்; நீரேற்றம் : உடலினுள் திரவம் சொரிதல் அமினோ திர வங்களை உடலுக்குள் செலுத்துதல்; திரவ மேற்றுதல்.
ingestion : உணவுச் செலுத்தம்; உட்கோள் : உணவை அல்லது மருந்தை இரப்பைக்குள் கொண்டு செல்லுதல்.
ingram regime : யானைச்சொரி மருத்துவம் : யானைச்சொரி எனப்படும் நமட்டுச் சொறியை குணப்படுத்தும் முறை. இதற்கு டித்ரோனால் குழம்பு, புற ஊதா ஒளி பயன்படுகிறது.
ingravescent : நோய்நிலை சீர்கேடு : நோயுற்ற நிலையில் மேலும் சீர்கேடு அடைதல்.
ingredient : கலவைக் கூறு; உட்பொருள் : ஒரு கூட்டுப் பொருள் அல்லது கலவையின் ஒரு கூறு.
ingrown : உள்முக வளர்ச்சி : உள்நோக்கி வளர்தல், நகம் சதைக்குள் வளர்தல், இதனால் நோய்த் தொற்று தசைவீக்கம் உண்டாகும்.
inguinal : கவட்டு.
inhalant : உள்வாங்கு பொருள் : மூச்சோடு உள்ளிழுத்து நுரை யீரல்களுக்குள் பரவுமாறு உட்கொள்ளும் பொருள்.
inhalation : மூச்சுவழி உள் இழுத்தல்; மூச்சிழுத்தல்; ஆவி பிடித்தல் : காற்று அல்லது பிற ஆவி முதலியவற்றை உள் வாங்குதல் உள் இழுக்கப்படும் மருந்துப் பொருள்.
inhaler : முகர்குழல்.
inherent : உள்ளார்ந்த; உற்ற : இரண்டற நீங்காது உள்ளியல் பாக இருக்கிற.
inheritance : மரபுரிமை.
inhibition : தடையுணர்ச்சி; உட்தடுப்பு : நீடித்த பழக்கம் அல்லது பயிற்சி காரணமாகச் செயல் வேட்கைகளின் உள்ளார்ந்த தடையுணர்ச்சி.
inhibitor : தடைப்பி.
inion : பின் உச்சிப் புடைப்பு : வெளிப்புற பின் மண்டை எலும்பு சார்ந்த புடைப்பு அல்லது வீக்கம்
injection : ஊசி மருந்து ஊசிபோடுதல்; உட்செலுத்துதல்; ஊசி குத்தல் : திசுக்களில் ஊசியிட்டு மருந்து செலுத்துதல் ஊசி வழி மருந்தேற்றல்.
injection, intramuscular : தசை ஊசி.
injection, inrtavenous : நரம்பு ஊசி; குருதி ஊசி.
injector : ஊசிக் கருவி. திரவத்தை அதிக அளவில் பாய்ச்சும் ஒரு சாதனம்.
injury : காயம்.
injury, simple : வெறும் காயம்.
injury, grievous : கடும் காயம்.
inlay : உட்பதிவுப் பொருள் : ஒரு பல்லின் உட்குழிவின் துல்லியமான வடிவத்தில் வைத்து நிரப்பிப்பூகம் திடப்பொருள்.
inlet : உள்வழி.
inlet, pelive : இடுப்பு உள்வழி.
innate : உள்ளியல்பான : உள்ளார்ந்த மரபணுவியல் சார்ந்த இயல்பு.
innervate : நரம்பு வலிவாக்கல்.
innervation : நரம்பு வலுவூட்டுதல்; நரம்பூட்டம்; நரம்பளிப்பு; நரம்பிடல் : ஒர் உறுப்பின் நரம் பூட்டம்.
innocent : தீங்கற்ற; தீமையற்ற; சாதுவான : நோய் வகையில் கடு மையிராத.
innocuous : கேடற்ற; தீங்கிலா; தீதற்ற; தீங்குவிளையா : தீங்கு விளைவிக்காத
innominate : இடுப்பெலும்பு : வயது வந்தவரிடையே மூன்று எலும்புகளின் இணைவாக உருவான இடுப்பெலும்பு.
innominate : பெயரற்ற; பெயரிலா : பெயரிடப்படாத அநாமதேய.
innominate bone : பெயரிடப்படா இடுப்பு எலும்பு : வயது வந்தவரி டையே மூன்று எலும்புகளின் இணைவாக உருவான இடுப்பெலும்பு.
innutrition : உணவு ஊட்டக்குறை.
innutritious : சத்துக் குறைவான; ஊட்டம் தராத. inoculate : தடுப்பூசி போடுதல் : தொற்று நோய்களைத் தடுக்க அந்த நோய் அனுக்களைக் கொண்ட மருந்தின்னை ஊசிமூலம் உடலுக்குள் செலுத்துதல்.
inoculation : நோய்த்தடுப்பு ஊசி; தடுப்பூசி : தொற்று நோய்களைத் தடுக்க பாதுகாப்பு வினையை ஊக்குவிக்க அந்நோயனுக்களைக் கொண்ட மருந்தை ஊசிமூலம் உடலில் செலுத்துதல்.
inoculum : ஊசி மருந்து : ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தப்படும் ஒரு பொருள்.
inoperable : அறுவையிலா.
inorganic : கரியமற்ற கனிம; அல்கரிம : கணிப்பொருள் தோற்ற முடைய.
inositol nicotinate : இனோசிட்டோல் நிக்கோட்னேட் : குருதி நாள விரிவகற்சி மருந்தாகப் பயன் படுத்தப்படும் நிக்கோட்டினேட்.
inpatient : அகநிலை நோயாளி : மருத்துவமனையிலேயே தங்கி மருத்துவம் செய்து கொள்பவர்.
inquest : சடல ஆய்வு; இறப் பாய்வு : திடீரென அல்லது எதிர்பாராமல் நடந்த மரணத்தின் போது உடலைப் பரிசோதனை செய்தல்.
insane : மூளை குழம்பிய; பித்து பிடித்த.
insane asylum : மனநல மருத்துவ மனை; மனநல மருத்துவக் காப்பகம்.
insanitary : துப்புரவற்ற.
insanity : பித்து நிலை; மனக் கேடு; பித்து : மூளை திறம்பிய பித்துப் பிடித்த நிலை, தன்னிலை மறந்த பைத்திய நிலை.
inscription : மருந்துக் குறிப்பு : மருந்துகளின் பெயர்களைக் குறிப்பிடும் மருத்துவ மருந்துக் குறிப்பு.
insect : பூச்சி : ஈ, தேனி, பேன், உண்ணி, சிலந்தி, குளவி, மலை குளவி போன்ற பூச்சி வகை.
insect, borne : பூச்சித் தொற்று.
insecticide : பூச்சிக் கொல்லி மருந்து : புழுபூச்சிகளை அழிப் பதற்கான மருந்து.
insemination : கருவூட்டல்; விந்தேற்றல்; விந்துட்டம்; விந்தளிப்பு; விந்திடல் : பொதுவாகப் பாலுறவு மூலம் கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்.
insemination, artificial : செயற்கை விந்தளிப்பு.
insensible : உணர்ச்சியற்ற; புலப்படா; உணரா : உணர்விழந்து காழ்த்துப் போன. insertion : நுழைப்பு; உறுப்பிணைப்புகல் : தசை உறுப்பு இணைந்திருக்கும் முறை தசையின் இறுதிப் பகுதி எலும்பில் இணைந்திருத்தல்,
insidious : உட்கவடான.
insight : உட்தெளிவு.
insoluble : கரையாத.
insomnia : துயிலொழி நோய்; துயிலொழி : உறக்கமில்லாமல் விழித்துக் கொண்டே இருக்கும் நோய்.
inspecton, sanitory : துப்பரவு ஆய்வாளர்.
inspection : ஆய்வு.
inspiration : உள்சுவாசம்; உள்ளெழுச்சி; உள்மூச்சு : மூச்சினை உள்ளிழுத்தல், நுரையீரல்களுக்குள் காற்றினை உள்வாங்குதல்.
inspire : எழுச்சிவூட்டு; மூச்சிழு.
inspirrated : இறுகிய.
inspissation : பொருள் உலர்த்து : ஒரு பொருளை உலர்த்துவதற்கு அல்லது கெட்டியாக்குவதற்கு செய்யப்படும் செய்முறை.
instability : நிலையின்மை.
instillation : துளிவடித்தல்; சிறுகச் செலுத்துதல் : ஒரு திரவத்தைத் துளிதுளியாக உட்செலுத்துதல்.
institute : நிறுவனம்; நிறுவு; தொடங்கு.
instinct : இயல்புணர்ச்சி; இயல்மை : உயிரினங்களின் இயல்பான நடத்தை முறையின் விளைவாக உண்டாகும் ஒரு வளர்ச்சி முறை.
instruction : அறிவுறுத்தம் : 1 ஓர் அறிவுறுத்துதல் அல்லது கட் டளை. 2. கற்பித்தல், 3. தகவல் தெரிவித்தல்.
instructor : பயிற்சியாளர்.
instrument : சாதனம்; கருவி : 1. கருவியாக உதவும் ஓர் எந்திர சாதனம். 2. குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்கான ஒரு சிறப்புக் க்ருவி.
insüfficiency : போதாமை : ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்குப் போதியதாக இல்லாத நிலை.
insufflation : உள் ஊதுதல் : காற்று, வாயு அல்லது தூள் ஆகியவற்றை உடலின் உட்குழிவுக்குள் ஊதிச் செலுத்துதல்.
insula : மூளைத்தீவு : 1. தீவு. 2. மூளை இடைச்சந்தின் கிடை மட்டப் பரப்பிலுள்ள மூளை மேலுறைப் பகுதியின் முக்கோணப் பரப்பு.
insulation : காப்புப் பொருள்; காப்பிடல் : உடலில் வெப்பம் பாயாமல் பாதுகாப்புச் செய்கிற ஒரு பொருள். insulin : கணையச் சுரப்பு நீர்; தீவியம் : கணையத்தில் சுரக்கும் நீர்ப்பொருள். இது தசைகள். இரத்தத்திலிருந்து சர்க்கரையை எடுத்து, அதை உடைத்து எரியாற்றலாக மாற்ற உதவுகிறது. நீரிழிவு நோய் உடையவர் களிடம் இந்தப் பொருள் சுரப்பதில்லை. அதனால் இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகிறது. எனவே, விலங்குகளின் கணையச் சுரப்பிலிருந்து எடுக்கப் பட்ட கணையச் சுரப்பு நீர் நீரிழிவு நோயாளிகளுக்கு ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.
insulin-dependent diabetes mellitus (IDDM) : இன்சுலின் சார்பு நீரிழிவு நோய் : குழந்தை பருவத்தில் ஊசி மூலம் இன்சுலின் மருந்து வழக்கமாகச் செலுத்தப்பட வேண்டிய நீரிழிவு நோய்.
insulin kinase : இன்சுலின் கைனேஸ் இன்சுலினுக்கு வினையூக்க மளிக்கிற ஒரு செரிமானப் பொருள்.
insulin lipodystrophy : இன்சுலின் கொழுப்பு இழுப்பு : அடிக்கடி இன்சுலின் ஊசி போடுவதனால் ஏற்படும் சிக்கல் காரணமாக நீரிழிவு நோயாளிகளிடம் உள் எல்லைக் கொழுப்புப் படிவுகள் இழப்பு.
insulin preparations : இன்சுலின் தயாரிப்புகள் : விரைவாகச் செயற் படும் நடுத்தரமாகச் செயற்படும் என்பிஎச் ஐசோஃபேன், நீண்ட காலம் செயற்படக் கூடிய (புரோட்டோ மின் துத்தநாக இன்சுலின்-PZI) போன்ற இன்சுலின் தயாரிப்புகள். தூய்மையாக்கிய போர்சின், ஆக்டிராப்பிட், இன்சலாட்டார்ட், மிக்ஸ்டார்ட் ஆகியவை மனித இன்சுலின்.
insulin pump : இன்சுலின் இறைப்பான் : தாழ்ந்த நிலைகளின் ஒழுங்கான வீதத்தில் இன்சுலின் வழங்கும், உள்ளே பொருத்தக் கூடிய சாதனம்.
insulin-regulatable glucose transporter (GRT) : இன்சுலின் சார்ந்த குளுக்கோஸ் அனுப்பீட்டுச் சாதனம் : இன்சுலின் தூண்டுதல் காரணமாக திசுப்பாய்மச் சவ்விலிருந்து குருதிநீர்ச் சவ்வுக்கு இடம் பெயக்கிற தசையிலுள்ள ஒரு புரதம் மற்றும் கொழுப்பு, இதனால் உயிரணுக்குள் குளுக்கோஸ் பாய்வது அதிகரிக்கிறது.
insulin resistance : இன்சுலின் எதிர்ப்பு : இன்சுலின் உடலியல் அளவுக்கான உகந்த அளவுத் துலங்கலை வெளிப்படுத்தும் நிலை. இது சுற்றோட்டமாகச் செல்லும் குளுக்கோகான் அல்லது இன்சுலின் ஏற்பிப் பற்றாக்குறை காரணமாக ஏற்படலாம்.
insulin shock : இன்சுலின் அதிர்ச்சி : இன்சுலினை அளவுக்கு மிகுதியாகச் செலுத்துவதால் இயல்பான மூளைச் செயற்பாட்டுக்குத் தேவையானதை விட மிகுதியாகக் குருதிக் குளுக்கோஸ் குறைபாடு ஏற்படுதல்.
insulin tolerance test : இன்சுலின் தாங்குதிறன் சோதனை : இன்சு லினைப் பயன்படுத்திக் கொள்வதற்கான உடலின் திறனை அறிவதற்கான சோதனை, குருதியிலுள்ள குளுக்கோஸ் அளவு இன்சுலின் செலுத்தி அவ்வப்போது அளவிடப்படுகிறது. குருதி குளுக்கோஸ் அளவு 30 நிமிடத்தில் குறைந்து, 90 நிமிடத்துக்குப் பிறகு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பு கிறது. கால்சியம் குறைபாடுள்ள நோயாளிகளிடம் களுக்கோஸ் குறையும் அளவு குறைவாகவும் இயல்பு நிலைக்குத் திரும்பும் நேரம் குறைவாகவும் இருக்கும்.
insulinoma : மிகை இன்சுலின் சுரப்பு : இன்சுலினை அளவுக்கு அதிகமாகச் சுரக்கும் லாங்கர் ஹான்ஸ் தீவுகளின் பீட்டா உயிரணுக்களில் ஏற்படும் கட்டி இதனால், குருதியில் குளுக்கோஸ் அளவு கணிசமாகக் குறைந்து மயக்கநிலை ஏற்படும்.
insulitis : இன்சுலின் ஊடுருவல் : நீரிழிவு வகையில் கணையத் தீவுகளில் ஒற்றைக் கருமைய உயிரணுக்கள் ஊடுருவுதல்.
insult : இகழ்ச்சி : முன்னரே சீராக்கப்பட்ட நிலையின் பின் னணியில் ஏற்படும் நோய் நிலையில் அழுத்த விசையுடன் கூடிய தூண்டுதல்
intake : உள்வாங்குதல்; ஏற்பு : உணவு, திரவம் ஆகியவை உட் கொள்ளப்படுதல்
integrated : ஒருங்கிணைப்பு.
integration : ஒருங்கிணைப்பு : ஒருங்கிசைந்து செயற்படுவதற்காக பல்வேறு உறுப்புகளை அல்லது செயல்முறைகளை ஒன்றாக ஒருங்கிணைத்தல்.
integrin : இன்ட்டெக்ரின் : ஆக்சி பெர்ட்டின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
integument : புறவுறை மேந்தோல்; புறவரி : தோலின் புறப்போர்வை.
Intellect : அறிவு; அறிவான்மை : பகுத்தறிவுத் திறன் சிந்திக்கும் ஆற்றல.
intelligence : அறிவுத் திறன்; மதிநுட்பம்; அறிவுத் திறம்; நுண்ணறிவு: அறிவாற்றல் : ஆறறிவுடைய உயிர்களுக்குள்ள கூர்மைத் திறன், விவேகம், இதை அறிவு அளவெண் மூலம் அளவிடலாம் அறிவாற்றல்.
intelligence quotient : அறிவுத்திற அளவெண்; அறிவுத் திறனளவு : அறிவுக்குக் குறி எண். மதி நுட்ப அளவு அலகு.
intensity : செறிவு.
intensive care unit (ICU) : தீவிரச் சிகிச்சைப் பிரிவு (ICU) : கடுமை யான நோய், காயம், அறுவைச் சிகிச்சைகாரணமாகத்தொடர்ச்சியான கண்காணிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்காக மருத்துவ மனையிலுள்ள ஒரு தனிப் பிரிவு. இதில் பணியாற்றுபவர்கள் இதற்கெனத் தனிப் பயிற்சி பெற்றவர்கள்.
intensive therapy unity (ITU) : தீவிர மருந்துவப் பிரிவு : மிக உயர்ந்த மருந்து உத்திகள் பயன் படுத்தப்படும் மருத்துவப் பிரிவு.
intensive inoculation : தீவிர மருந்தூசி போடுதல் : படிப்படியாகச் செறிவை மிகுதிப்படுத்தி மருந்துசி போடுதல்.
intention : மருத்துவத் திட்டம்; நோக்கம்; உட்சிமை : 1 நோயைக் குணப்படுத்தும் ஒர் இயற்கை முறை. 2. உட்கருத்து.
interaction : பின்னிய செயல் விளைவு; இடைவினை : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை ஒன்றின் மீது ஒன்று செயல் விளைவினைக் கொண்டிருத்தல்.
interarticular : மூட்டுகளிடையே; முடடிடை.
interatrial : இதயத் தமனிகளிடையே.
intercellular adhesion molecule-1 (ICAM-1) : உயிரணுக்களிடையே ஒட்டு மூலக்கூறு-1 (ICAM-1); அணுவிடை; உயிரணுக்களிடையே : வீக்கமடைந்த திசுவினுள் சென்று பலமுனைக் கரு வெள்ளணுக்களுக்குத் தேவைப்படும் காமா இடையீட்டுப் புரதத்தினால் தூண்டப்பட்ட ஒரு புரத அணு உற்பத்தி.
interception : குறுக்கீடு; கிடைமறிப்பு.
interchange : பரிமாற்றம்.
intercostal : விலாவிடை; இடுப்பெலும்புகளிடையே; விலா எலும்பு இடைவெளி.
Intercourse : பாலுறவு; கலவி; புணர்ச்சி.
intercourse, sexual : பாலினக்கலவி.
intercurrent : உடனிகர்வான : ஏற்கனவே ஒரு நோய் பீடீத்த ஒருவருக்கு இரண்டாவதொரு நோய் பீடித்தல். inter, digital : விரவிடை.
interference : தலையீடு.
interferon : இடையீட்டுப்புரதம் : சில நோய்க்கிருமிகளுக்கு எதிரான ஒருவகைப் புரதம். ஒர் உயிரணுவை ஒரு கிருமி தாக்கும் போது இந்தப் புரதத்தை உற்பத்தி செய்யுமாறு உயிரணு தூண்டப்படுகிறது. அந்தப் புரதம் நோய்க்கிருமியை எதிர்த்துப் போராடுகிறது.
interlobar : தொங்குதசைகளிடையே : பகுதி பிதுக்கங்களிடையே.
interleukins : ஏமக்காப்புப் புரதம் : ஏமக்காப்பு துலங்கல்களை ஒழுங்குபடுத்துகிற புரதப்பொருள். இவை பல்வேறு உயரணு வகைகளினால் துரிதமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
interlocking : பின்னிக் கொளுவுதல் : யோனிக் குழாய் வழி இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் போது அரிதாக ஏற்படும் சிக்கல். இதில் இரட்டையின் முதல் குழந்தை பிட்டப்பிறப்பு நிலையில் வெளிவரும். அப் போது, அது இரண்டாவது இரட்டையின் தலைக்கு மேலே தனது தலையுடன் பின்னிக்கொளுவிக் கொண்டு இறங்கும்.
intermediary : இடையாளர்; இடைபொருள்.
intermediate : இடைநிலை.
intermediate-density lipoprotein (IDL) : நடுத்தர அடர்த்தி கொழுப்புப் புரதம் : குருதி நீர் கொழுப்புப் புரதம் இது கொழுப்புப் புரத லிப்போஸ் மூலம் வி எல் டி எல் நீரியல் பகுப்பு வாயிலாக அமைகிறது. இது குடலிலிருந்து ஈரலுக்கு கொலஸ்டிராலைக் கொண்டு செல்கிறது.
inter menstrual : மாதவிடாய்களிடையே.
intermittent : இடைமிதவல்; இடைவிட்ட : இடைவெளி விட்டு நடைபெறும் மிதவல் நடவடிக்கை.
internal : உள் உட்பகுதியில்; உட்காது : காதின் உள்ளுறுப்புகள் உள்ள பகுதி.
international : பன்னாட்டு; அனைத்து நாட்டு.
international unit IU : பன்னாட்டு அலகு IU : இயக்குநீர், செரி மானப் பொருள், வைட்டமின் போன்ற இயற்கைப் பொருள்களை அளவிடுவதற்குப் பன்னாட்டளவில் ஒப்பளிக்கப்பட்ட அலகு.
internship : உள்ளுறைப்பயிற்சி : ஒரு மருத்துவமனையில் அல்லது சுகாதார மையத்தில் உள்ளறைப் பயிற்சிக்காலம். internuncial : உயிரணுத் தொடர்பு மையம் : நரம்பு உயிரணுக்களி டையிலான தொடர்பு மையம்.
interosseous : எலும்புகளிடையே.
interphase : இடை நிலை : 1. உயிரணுப்பிளவின் ஒரு நிலை. இதில் டி.என்.ஏ மறுபடிவம் ஏற்படுகிறது. 2. ஒரு பொருளின் (வாயு அல்லது திரவம்) இரு நிலைகள் ஒன்றோடொன்ற தொடர்பு கொள்ளும் பகுதி அல்லது மண்டலம்.
interpolation : இடைச் செருகல் : 1. ஒர் ஊடுகதிர்ப்படத்தை ஆராய்ந்து, பகுப்பாய்வு செய்தல், மருத்துவப் படத்தின் முடிவுகளை ஒருங்கிணைத்தல். 2. நோயாளி கூறியவற்றை ஆழமாகப் பகுப்பாய்வு செய்தல்.
interposition operation : சிற்றெலும்பு மாற்று மருந்து : சிறு எலும்பு களின் தொகுதி முழுவதையும் அல்லது ஒரு பகுதியை அறுவை மருத் துவம் மூலம் மாற்றுதல்.
interpretation : உரை விளக்கம்.
interserosal : ஊனீர்ச் சவ்வுகளிடையே.
- interupted
- தடங்கல்.
intersection : ஊடுசந்தி.
interspinal : முதுகுத்தண்டு இணைப்பிடையே : முதுகுத்தண்டு இணைப்பு எலும்புகளுக்கிடையே உள்ள.
interval : இடைவெளி.
interval, lucid : தெளிவீடு.
intersex : இருபாலியல்பினர்; பால் திரிபு : இருபாலியல் பண்பு களும் வெவ்வேறு அளவுகளில் காணப்படும் ஒருவர்.
intersexuality : இருபால்தன்மை : ஆண்-பெண் இருபால் தன்மை களுமுடைய.
interstices : சிறுஇடைவெளிகள்: ஒடுங்கிய பிளவுகள் சந்து வெடிப்பு.
intestine : குடல் : உணவுக்குழாயின் கீழ்ப்பகுதி. இது பெருங்குடல், சிறுகுடல் என இரு பகுதிகளைக் கொண்டது.
intestine, small : சிறுகுடல்.intertrigo : தோல் வீக்கம் : ஈர மான தோல் மடிப்புகளில் ஏற்படும்.
intervertebral : முன்னெலும்புகளிடையே.
intima : குருதி நாள உள் பூச்சுச் சவ்வு உட்படலம் : குருதி நாளத் தின் உள் பூச்சுச் சவ்வுத் திசு.
intoed : உள்நோக்கிய கால் விரல்கள்.
intolerance : சகிப்புணர்வின்மை; சகியாமை : சத்துப்பொருள்கள், மருந்துகள் போன்ற குறிப்பிட்ட பொருள்களை உடல் ஏற்றுக் கொள்ள மறுத்தல்.
intorsion : கண்விழி உள்முக சுழற்சி : கண்விழி மூக்கை நோக்கி உள் முகமாகச் சுழல்தல்.
intoxicant : போதைப் பொருள்; வெறியம் : போதையுண்டாக்கும் ஒருவினையூக்கி.
intoxication : போதை : போதை மருந்து அல்லது ஆல்ககால் பானம் மூலம் போதையுண்டாகும் நிலை.
intra-abdominal : உள் அடிவயிறு; வயிற்றுள்; வயிற்றினுள்.
intracapillary : தந்துகியுள்.
intracapsular : பொதியுறையுள்.
intracardiac : இதயத்துள்.
intracath : செருகு ஊசி : ஒரு சிரையினுள் நுழைக்கப்படும் ஒரு செருகு குழல் சூழ்ந்துள்ள வளையாத ஊசி.
intracellular : உயிரணுவுள்.
intracerebral : பெருமூளையுள்.
intracorpuscular : குருதிக் கணத்துள்.
intracranial : மண்டைடோட்டுள்; மண்டையுள்.
intracranial pressure (ICP) : மண்டையோட்டு உள்ளழுத்தம் : மண்டையோட்டினுள் உள்ளழுத்தத்தை முளைத்திசுக்கள் இயல்பான அளவில் வைத்திருத்தல்.
intracutaneous : தோல் திசுவினுள்; சருமத்துள்; தோலுள்.
intradermal : தோலினுள்; தோலுள்.
intradural : மூளைச் சவ்வுள்; கடின உறையுள் : மூளையையும் முதுகுத் தண்டையும் சூழ்ந்திருக்கும் மேல் சவ்வின் உட் பகுதி.
intrahepatic : ஈரலுள்.
intralobular : காது மடலுள்; நுண் வளயக.
intralymphatic : ஊனீர் நாளத்துள். intramedullary : உள் சிறுமூளை சார்ந்த : 1. மூளையின் பின்பகுதி யிலுள்ள 2. தண்டுவடத்தினுள் உள்ள 3, எலும்பு மச்சை உட்குழிவு.
intramedullary : எலும்பு மச்சையினுள்.
intramural : சுவர்ப் படுகையுள்; சுவருள் : புழையுடைய குழாய் அல்லது உறுப்பின் சுவர்ப்படுகைப் பாளங்களுக்குள்.
intramuscular :தசையுள்; தசைக்குள்; தசையுள்.
intranasal : மூக்குள்; நாசியுள்.
intraocular : கண்கூட்டுள்; கண்ணுள்.
intraoperative : அறுவைச் சிகிச்சை சார்ந்த : அறுவைச் சிகிச்சையின்போது நிகழ்கிற.
intraora : வாய்வழியே; வாயுள் : வாய்வழியே செலுத்துதல்.
intraorbital : கண்குழியுள்.
intrapartal : மகப்பேறு காலம் : இடுப்புவலி தொடங்கி குழந்தை பிறக்கும் வரையுள்ள காலம்.
intrapartum : பிறப்பின்போது; பேற்றுள்.
intraperitoneal : வபையுள்; உதரப் பையுள் : அடிவயிற்று உட் பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப் பையுள்.
intrapharyngeal : அடித்தொண்டையள்.
intraplacental : நச்சுக்கொடியுள்.
intrapleural : நுரையீரல் குழியுள்.
intrapulmonary : ஈரலுள்.
intrapunitive : தற்தண்டனைப்போக்கு; தன் நிந்தைய.
intraretinal : விழித்திரையுள் : கண் விழியின் பின்புறத் திறையுள்.
intraspinal : முதுகுத் தண்டுப் புழையுள்; முளைத் தண்டுள்.
intrasplenic : மண்ணீரலுள்.
intrasynovial : உயவு நீர்மத்தினுள்.
intrathoracic : மார்புக் கூட்டினுள்; மார்பகம்.
intratracheal : குரல்வளையுள்.
intrauterine : கருப்பையுள் : கருவுறுவதைத் தடுக்கக் கருப்பையுள் செருகப்படும் சாதனம்.
intravaginal : யோனிக் குழாயினுள்; அல்குலுள் : பெண்ணின் கருப்பைக் குழாயினுள்.
intraval : இண்ட்ராவல் : தியோப்பென்ட்டோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
intravasation : இன்ட்ராவாசேசன் : புறஅதிர்ச்சி அல்லது நோய் நிலையில் குருதி நாளத்துக்குள் புறப்பொருள் நுழைதல். intravascular : குருதி நாளத்துள்; குழலுள்.
intravenous : சிரை வழி; நரம்பு வழி; சிரையுள் : நரம்பின் ஊடாக உட்செலுத்துதல்
intraventricular : இதயக் கீழறையினுள்.
intrinsic : உயிர்க்கூறான; அக நிலை : உள்ளார்ந்த உயிர்க்கூறான.
introitus : உள்வழி நுழைவாயில்; யோனி வாய்; யோனிப் புழை : உடலிலுள்ள ஒர் உள்வழி ஒரு குழிவினுள் உள்ள நுழைவு வாய், குறிப்பாக, கருப்பை வாய்க் குழாய்.
introjection : தூதான்மிய உணர்வு; உள்வீச்சு : புற உலகப் பொருள்களுடனும் ஒன்று பட்டு அவற்றின் நிலைகளையும் முடிவுகளையும் தமதாக உணரும் உணர்வு.
intromission : உறுப்புச் செருகல் : யோனிக் குழாயினுள் ஆண் குறியை நுழைத்தல் போன்று ஒர் உறுப்பினை இன்னொரு உறுப்பினுள் செருகுதல்.
intron : டிஎன்ஏ கூறு : படியெடுக்கப்பட்டுள்ள டிஎன்ஏ, ஆனால், இதில் ஒரு பாலிபெப்டைடுக்கான குறியீட்டுத்வல் அடங்கியிருக்காது.
introspection : உள்முக நோக்கு; தன் உள ஆய்வு : உற்புறக் காட்சி; தற்காட்சி, தன் உள்ளத்தைத் தானே நுணுகிக் காணும் செயல்.
introversion : அகமுகக் கோட்டம்; உட் திருப்பம்; உள்ளொடுக்கம் : அகம் புறமாகத் திருப்புதல் உள்முகச் சிந்தனை எண்ணங்களை உள் நோக்கித்திருப்புதல்
introvert : அகமுக நோக்காளர்; உள் நோக்குபவர்; அழுத்தமானவர் : சிந்தனை உள்முகமாகத் திருப்பும் இயல்புடையவர்; தன்னைப்பற்றியே எண்ணுபவர்.
intubatión : உட்செருகல்; குழல் பொருத்தம்; குழலுட் செலுத்தல் : குரல்வளை திறந்திருக்கும்படி அதனுள் குழாயைச் செருகுதல்.
intubation, endotrachal : மூச்சுக் குழலுள் செலுத்தல்.
intubator : செருகு குழாய்ச் சாதனம் : மூச்சுக் குழாயினுள் அல்லது குருதி நாளத்தினுள் உட்செருகு குழாயைசை செருகிக் கட்டுப்படுத்து வதற்கான ஒரு சாதனம்.
intuition : உள்ளுணர்வு : பகுத்தறிவு முறையில் சிந்திக்காமலேயே ஏதேனும் ஒன்றை நேரடியாக அறியும் அகத்திற உணர்வு. intumescence : வீக்கம்; புடைப்பு.
intussusception : குடல் செருகல்; குடலுள் மடிப்பு; குடலேற்றம் : குடலின் ஒரு பகுதி இன்னொரு பகுதிக்குள் செருகிக் கொண்டிருக்கும் நிலை. இதனால் குடலிலும், வயிற்றிலும் கடும் அடைப்பு ஏற்படும். இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு, குறிப்பாக பால்குடி மறக்கும் வேளையில் ஏற்படும்.
imulase : இனுலேஸ் : இனுலின் என்ற கார்போஹைடிரேட்டை லெவுலோஸ் பழச்சர்க்கரைப் பொருளாக மாற்றும் ஒரு செரி மானப்பொருள்.
inulin : இனுலின் : டி-ஃபிரக்டோஸ் என்ற பழச்சர்க்கரைப் பொருளின் தாவர ஹேர்மோ பாலிசர்க்கரைடு. இது சிறுநீரக துப்புரவினை அளவிடப் பயன் படுத்தப்படுகிறது.
inunction : நெய்யாட்டு; எண்ணெய் தேய்த்தல்; நீவல்; தடவுகை : தோலில் எண்ணெய் தடவுதல்.
in utero : கருப்பையுள்.
in vacuo : உள் குழிவு சார்ந்த : காற்று அகற்றப்பட்ட உட்குழிவினுள் உள்ள.
invagination : உறையிடுதல்; உள்முக மடிப்பு உள்ளுறையீடு; உட்குழிவு : குழாய் போன்ற உறையை அகம்புறமாகத் திருப்புதல்.
invalid : நோயாளி; முடம் படுதல்.
invalidism : நோய்மை.
invasion : வல்லந்த நுழைவு; பற்றுதல்; தாக்கம் : உடலுக்குள் நோய்க்கிருமிகள் வல்லந்தமாக நுழைதல்'
invasive : வல்லந்த நுழைவு : 1. உடல் திசுக்களில் ஒரு கருவி யைச் செருகுவதற்கான மருத்துவ நடைமுறை. 2. ஒரு புற்று தோன்றிய இடத்துக்கு அப்பால் பரவுவதற்கான போக்கு.
invasiveness : வல்லந்தப்பரவல் : வல்லந்தமாக நுழைந்து, பரவும் நிலை.
inversion : தலைகீழ்த் திருப்புதல்; உள் திருப்பல்; கவிழ்த்தல் : கருப்பையைத் தலைகீழாகப் புரட்டுதல் போன்ற தலைகீழ்த்திருப்பம்.
inversion of the uterus : கருப்பை உட்திருப்பம்.
invert : உள் திருப்பு.
invertase : சர்க்கரைப் பகுப்பான் : குடல் நீரிலுள்ள சர்க்கரையை பிரிக்கும் செரிமானப் பொருள்.
invertebrate : முதுகெலும்பில்லா : முதுகெலும்பில்லாத விலங்கு இனங்கள். inverted comma sign : தலைக்கீழ்க் காற்புள்ளிக் குறி : ஒற்றை உறுப்புத் தொங்கு சதையின் மாறுபாட்டைக் காட்டும் சமதள மார்புப் படத்தில் காணப்படும் ஊடுகதிர் இயல்பு திரிபு. வலது மேல்மடலின் மென் தோலில் அதன் ஈரல் சவ்வு முடியிருக்கும்.
invertor : சுழல்தசை : ஒரு தசையின் ஒருபகுதி உள் முகச் சுழல்தல்.
investing : உள்பொதிதல் : ஒரு மேற்படலத்தில் அல்லது தக்க பொருளில் கவசமிடுதல்.
in vitro : கண்ணாடிக் குழாயில்; குழலில்; புறநிலை : வேதியியல் துறை ஆய்வுக் கூடத்தில் சோதனைக் கண்ணாடிக் குழாயில்.
in vive : அக நிலை.
in vivo : உயிருள்ள திசுவில்; உடலுக்குள் அகநிலை.
involcrum : எலும்பு மேலுறை : புதிய எலும்பின் மேலுறை. இது எலும்பு இழைமத்தைச் சுற்றி அமையும்.
involuntary : தன்னியக்க; அனிச்சநிலைய : விருப்பாற்றலுக்குட் படாமல் தானாக இயல்கிற, இதயத் தசைகள், இவ்வாறு இயங்குவன.
involution : உட்பிதுக்கம்; உட்சுருங்கல்; உள் மடிப்பு; உட்சுருள்வு : ஒர் உறுப்பு தனது பணியைச் செய்து முடித்ததும் இயல்பாகச் சுருண்டு சுருங்கி விடுதல். எடுத்துக்காட்டாக, மகப்பேற்றுக்குப் பிறகு கருப்பைச் சுருங்கிக்கொள்ளுதல்.
inward : உள் நோக்கிய.
iodamoeba : குடல் அமீபா : குடல் குழாயில் காணப்படும் அமீபாவின் (ஓரணுவுயிர்) ஒர் இனம்.
iodatol : இயோடாட்டோஸ் : அயோடினேற்றிய எண்ணெயின் வணிகப் பெயர்.
iodex : அயோடெக்ஸ் : அயோடின் அடங்கிய கறைபடாத களிம்பு மருந்தின் வணிகப்பெயர். சுளுக்கு, குழந்தைகளின் மயிர்க்குரு ஆகியவற்றுக்கு ஏற்றது.
iodides : அயோடைடுகள் : மற்றொரு தனிமத்தோடு அயோடின் சேர்ந்த கூட்டுக் கலவை. பொட்டாசியம் அயோடைடு, சோடியம் அயோடைடு ஆகியவை மருத்துவத்தில் பெருமளவில் பயன்படுகின்றன.
iodine : அயோடின் (கறையம்) : கரியப் பொருளைக் கருந்தவிட்டு நிறமாகக் கறைப்படுத்தும். இயல்புடைய தனிமம். சிறு காயங்களுக்கு உடனடியாகப் பூசுவதற்கான 'டிங்சர்' தயாரிக்கப் பயன்படுகிறது.
iodism : அயோடின் நச்சு : அயோடின் அல்லது அயோ டைடுகளினால் நச்சூட்டம் ஏற்படுதல், தடுமன், வேனற்கட்டி ஆகியவை இதன் அறிகுறிகள்.
iodized oil : அயோடினேற்றிய எண்ணெய் : கரிம முறையில் இணைக்கப்பட்ட 40% அயோடின் அடங்கிய கசகசா விதை எண்ணெய். இது நிறமற்றதாகவோ அயோடின் வெண்மஞ்சள் நிறத்திலோ இருக்கும். இதன் கருநிறக் கரைசல்கள் ஊடுகதிர் (எக்ஸ்ரே) சோதனைகளில் பயன்படுகிறது.
iodofrom : அயோடின் நச்சுத் தடை மருந்து : நச்சுத்தடைக் காப்பாகப் பயன்படுத்தப்படும் அயோடின் சேர்மம்.
iodopsin : அயோடாப்சின் : வைட்டமின் Aஇல் உள்ள ஒரு புரதப்பொருள். கண்விழியின் பின்புறத் திரையிலுள்ள கழி வடிவக் கட்டமைப்பில் இருக்கும் கருஞ்சிவப்புப் பகுதியின் ஒரு கூறு.
iodoxyl : அயோடாக்சில் : 50% அயோடின் கலந்த ஒரு கலவை மருந்து, சிறுநீர்க்கோளாறு களுக்கு நரம்பு வழியாகக் சிறிது சிறிதாகச் செலுத்தப்படுகிறது.
ion : அயனி (மின்மயத் துகள்) : நீர்க்கரைசலிலும் சேண் வெளி யிலும் அணு அமைதிக் குறைவால் ஏற்படும் மின்செறிவூட்டப்பட்ட துகள்.
ienamin : அயோனாமின் : ஃபென்ட்டர்மின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
ionizing radiation : அயனியாக்கக் கதிர்வீச்சு : உக்கிரக்கட்டிகளை அழிப்பதற்கான சிகிச்சை யிலும் ஊடுகதிர் உருக்காட்சியிலும் பயன்படுத்துப்படும் கதிர்வீச்சு. இது மரபணு அல்லது உயிரணுச் சேதத்தை உண்டாக்கும்.
ionization : அயனியாக்கம் : கரைசலிலுள்ள ஒரு பொருளைப் பிரித்தல்.
iontophoresis : அயனி இடப்பெயர்வு : 1. கரையும் உப்புகளின் அயனிகளை உப்புகளைத் திசுக்களினுள் மின்னோட்டம் மூலம் உட்செலுத்துதல், 2. ஒரு உப்புக் கரைசலின் வழியாக மின்னோட்டத்தைச் செலுத்தும் செய்முறை. இதனால், நேர் அயனி, எதிர்துருவத்தினுள்ளும், எதிர் அயனி நேர் துருவத்தினுள்ளும் இடம் பெயரும்.
involute : இயல்பு மீட்சி : விரிவாக்கத்துக்குப் பிறகு இயல்பு நிலைக்கு மீள்தல்.
IOP : ஐ.ஒ.பி. : உள்கண்விழி அழுத்தத்தின் (Intraocular pressure) சுருக்கம்.
iopanic acid : அயோப்பானிக் அமிலம் : ஊடுகதிர் ஒளிபுகாத சாயம். பித்தப்பை ஊடுகதிர்ப் படத்தில் இது பயன்படுத்தப் படுகிறது.
iopanic acid : அயோப்பானிக் அமிலம் : புட்யிரிக் அமிலத்திலிருந்து வழிப்பொருளாக எடுக்கப்படும் சிக்கலான அயோடின்.
IP : ஐ.பி. : நோய் முதிர்வுக் காலம் (Incubation period) என்பதன் சுருக்கம்.
ipecae : ஐப்பிக்கா : வாந்தியும் வயிற்றுப் போக்கும் உண்டாக்கும் 'இப்பிகாகுவான்ஹா' என்ற தென் அமெரிக்க மூலிகைச்செடியின் உலர்ந்த வேர்.
IPPB : ஐ.பி.பி.பி. : இடையிட்ட நேரழுத்தச் சுவாசம் (Intermittent positive pressure breathing) என்பதன் சுருக்கம்.
IPPv : ஐ.பி.பி.வி. : இடையிட்ட நேரழுத்த காற்றோட்டம் (Intermittent positive pressure ventiation) என்பதன் சுருக்கம்.
ipsilateral : ஒருபக்க அமைவு : ஒரே பக்கத்தில் அமைந்துள்ள .
IQ : அறிவுத்திற அளவெண்; அறிவுத்திறன் குறியீடு : அறிவுக் குறிவிழுக்காடு எண்.
iridectomy : விழித் திரைப்படல அறுவை மருத்துவம்; திரையெடுப்பு; விழித்திரை நீக்கம் : விழித் திரைப்படலத்தின் ஒரு பகுதியைத் துண்டித்து எடுத்தல்.
iridectasis : விழிவிரிவாக்கம் : விழித்திரைப்படலத்தை அல்லது கண்ணின் மணியை விரிவடையச் செய்தல்.
iridectome : விழித்திரை அறுவைக் கருவி : விழித்திரைப்படல அறுவைச் சிகிச்சையில் விழித்திரையை வெட்டியெடுப்பதற்கான கருவி.
iridium : இரிடியம் (உறுதியம்) : அணு எண் 11 கொண்ட உறுதி மிக்க உலோகத் தனிமம். மார்புப்புற்றுநோயைத் தொடக்கத்தில் குணப்படுத்தப் பயன்படுகிறது.
iridocele : விழித்திரைப் பிதுக்கம் : விழித்திரைப்படலத்தின் ஒரு பகுதி பிதுங்கியிருத்தல்.
iridocyclitis : விழித்திரை வீக்கம்; திரைச் சூழலற்சி; திரை குவித் தசையழற்சி : விழித்திரைப்படலம் வீங்கியிருத்தல்.
iridodialysis : விழித்திரைப் பிரிப்பு : விழித்திரைப் படலத்தைக் கண்ணிமை இணைப்பிலிருந்து தனியாகப் பிரித்தல்.
iridokeratitis : விழிவெண்படல வீக்கம் : விழித்திரைப்படலமும் விழிவெண்படலமும் வீக்கமடைதல்.
iridotomy : விழித்திரைக் கீறல்; திரை வெட்டு :' விழித்திரைப் படலத்தின் கீறல் செய்தல்.
iridoblegia : விழித்திரை வாதம் : விழித்திரைப்படலம் செயலற்றுப் போதல்.
iris : விழித்திரைப்படலம்; விழித்திரை : நடுவில் விழிமணிக்குரிய துளையுடைய ஒரு விழிச் சவ்வு.
iritis : விழித்திரை அழற்சி; திரை அழற்சி.
iron : அயம்/இரும்பு : குருதி நிறமி, செரிமானப் பொருள்கள் உற்பத்தி செய்வதற்கு இன்றியமையாத கனிமப்பொருள். அயம், அதன் உப்புகளின் வடிவத்திலும், அய சல்ஃபேட், அயரெக்ஸ்டிரான் போன்ற கூட்டுப்பொருள்கள் வடிவிலும் பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு இறைச்சி, ஈரல்,முட்டை, மஞ்சள் கரு, கீரை வகைகள், உலர் கனிகள், வெல்லம் ஆகியவற்றில் இரும்புச் சக்தி மிகுதியாக உள்ளது.
irongluconate : அயக்குளுக்கோனேட் : இரும்பின் கரிம உப்புகளில் ஒன்று. எரிச்சலைக் குறைக்கக் கூடியது.
iron chelators : அயம் நீக்கிகள்.
ironlung : அயலீரல்.
irradiate : அயனிக் கதிரியக்க மருத்துவம்; கதிர் ஊட்டயம் : அயனியாக்கக் கதிரியக்கத்துக்கு உட்படுத்திச் கிசிச்சை செய்தல்.
irradiation : அயனிக் கதிர் வீச்சு; கதிர் ஊட்டம் : 1. அயனியாக்கக் கதிரியக்கம் மூலம் சிகிச்சை அளித்தல். 2 மையத்திலிருந்து எல்லாத் திசைகளிலும் பரவச் செய்தல்.
irational : அறிவுக்குப் பொருந்தாத : பகுத்தறிவுக்குப் பொருந்தாத.
irreducible : குறுக்க இயலாத; குறையா; உள்ளொடுங்கா : விரும் பிய நிலைக்குக் கொண்டுவர முடியாதிருத்தல்.
irregularity : ஒழுங்கற்ற; சீரிலா.
irregularity of pulse : நாடிச் சீரின்மை.
irrigation : நீர்மக் குறை; மண்ணியம். irritability : எரிச்சலூட்டும் தன்மை; எரிச்சல்படுதல்; உறுத்து தன்மை : 1. சினமூட்டும் தன்மை 2. ஒரு நிலைமைக்கு மட்டு மீறிய துலங்கல்.
irritable : கூருணர்ச்சியுள்ள : தசைகள், நரம்புகள் வகையில் புறத்தூண்டுதலினால் எளிதில் உயிர்ப்பியக்கம் எழுப்பப்பெறத்தக்க.
irritable bowel syndrome (IBS) : வயிற்றெரிச்சல் நோய் (IBS) : வயிறு இயங்குவதில் ஏற்படும் கோளாறு. இதில் அடிவயிற்றில் வலியுடன் வயிற்றுப்போக்கு அல்லது மலம்போகும் பழக்கத்தில் மாறுதல் உண்டாகும்.
irritant : எரிவந்தப் பொருள்; உறுத்தி : எரிச்சலூட்டக் கூடிய ஒரு பொருள்.
irritation : எரிச்சல்; உறுத்தல் : 1. எரிச்சலூட்டும் அழற்சிக்குத் துலங்கல். 2. நரம்பு அல்லது தசைத் தூண்டுதலுக்கு இயல்பான துலங்கல்.
IRV : ஐஆர்வி IRV : உள் மூச்சுக்காப்பளவு (Inspiratory Reserve Volume) என்பதன் சுருக்கம்.
ischaemia : குருதிப் பற்றாக் குறை; குருதியோட்டக்குறை; இரத்தக்குறை : உடலின் எந்த ஒரு பகுதிக்கும் இரத்தம் போதிய அளவு செல்லாதிருத்தல்.
ischemic colitis : குருதிப் பற்றாக்குறைக் குடல் அழற்சி : கடும் வயிற்று வலியுடன் கூடிய அடி வயிற்றுவலி இதனுடன் குமட்டல், மலச்சிக்கல், காய்ச்சல், இரத்தத்துடன் பேதி ஆகியவையும் உண்டாகும். குடல் இணையத் தமனிகளின் தடிப்பு காரணமாக இது ஏற்படுகிறது. -
ischaemic heart disease : இதயக் குருதிக் குறைநோய் : இதயத் தசைகளுக்கு போதிய அளவு இரத்தம் செல்லாதிருத்தல் உண்டாகும் இதய நோய்.
ischium : இடுப்பெலும்பு; இடுப்பெலிம்பின் கீழ்ப்பகுதி : உட்காரும் போது உடலைத் தாங்குகிற எலும்பு.
island : தீவு : சுற்றியுள்ள திசுவிலிருந்து துண்டிக்கப்பட்ட அல்லது மாறுபட்ட பண்புடைய ஒரு கட்டமைபபு.
islet : குறுந்தீவு; தீவுத்திட்டு : ஒரு வகைத் திசுவினுள்ளேயே இருக்கும் இன்னொரு திசு வகையின் ஒர் நுண்ணிய தனித்த திரள். islets of langerhans : கணைய உயிரணுக்கள் : கணையம் முழு வதிலும் பரவலாக இருக்கும் தனிவகை உயிரணுக்களின் தொகுதி இவை கணைய நீரைச் (இன்சுலின்) சுரக்கின்றன. இந்நீர் இரத்த ஒட்டத்தில் நேரடியாக ஈர்த்துக் கொள்ளப்படுகிறது.
ismelin : ஐஸ்மெலின் : குவாணித் தைடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
isoagglutination : ஓரக ஒட்டுத்திரட்சி : ஒரே இனத்தைச் சேர்ந்த வேறொரு உறுப்பினரின் இரத்தத்திலிருந்து அணு ஒட்டுப்பொருள்களினாய் இரத்தச் சிவப்பணுக்கள் ஒட்டுத் திரட்சி அடைதல்.
isoagglutinin : நிகரிய ஒட்டுத் திரளி.
isocarboxazid : ஐசோகார்பாக்சாசிட் : சோர்வு நீக்கும் மருந்து.
isoetharine : ஐசோனத்தாரின் : மூச்சுக்குழாய் விரிவாக்க மருந் தாகப் பயன்படுத்தப்படும் பீட்டர்-2 என்னும் அண்ணிரகச் சுரப்பு நீர்.
isoenzyme : ஒரகச் செரிமானப் பொருள் : பல்வேறு திசுக்களில் காணப்படும் ஒரு புரத வினையூக்கி.
isoflurane : ஐசோஃபுளுரான் : விரைந்து ஆவியாகக்கூடிய திரவ மயக்கமருந்து. இது உப்பீனியோடு சேர்ந்த ஒருவகை ஈதர்.
isogel : ஐசோஜெல் : பேதி மருந்தாகப் பயன்படும் ஒருவகைக் குருணை மருந்தின் வாணிகப் பெயர்.
isolation : ஒதுக்கம்; தனிமைப் படுத்துதல்; ஒதுக்கிவைப்பு; தனியம் : பல்வேறு காரணங்களுக்காக ஒரு நோயாளியை மற்ற நோயாளிகளிடமிருந்து பிரித்து வைத்தல்.
isolation hospital : தனிமை மருத்துவமனை : தொற்று நோயாளர்களுக்காகத் தனிப்படுத்தப்பட்ட மருத்துவமனை.
isolation ward : தனிமைப் பிரிவு : தொற்று நோயாளர்களுக்காகத் தனிப்படுத்தப்பட்ட மருத்துவ மனைப் பிரிவு.
isoleucine : ஐசோலூசின் : இன்றியமையாத அமினோ அமிலங் களில் ஒன்று.
isolevin : ஐசோலெவின் : ஐசோப் பிரினாலின் சல்ஃபேட் என்ற மருந்தின் வணிகப் பெயர். isomer : ஒரக அயனி : ஒரே மூலக்கூற்றுக் கட்டமைப்பையும், மாறுபட்ட வேதியியல் மற்றும் இயற்பியல் குணங்களையும் கொண்டுள்ள வேதியில் பொருள்கள். மூலக்கூற்றில் மாறுப்பட்ட அணுக்கள் அமைந் திருப்பதால் இவ்வாறு அமைகிறது.
isometric : சம மட்டுடைய; சம நீள்; இணை அளவு : ஒரே சீரான அளவுள்ள.
isometric exercise : ஒரு சீர்மைப்பயிற்சி : தடைக்கு எதிராக அழுத்தம் கொடுத்துத் தசையை வலுப்படுத்தும் தீவிரப் பயிற்சி.
isoniazid : ஐசோனியாசிட் : எலும்புருக்கி நோயில்(காச நோய்) பயன்படுத்தப்படும் மருந்து. இது ஐசோநிக்கோட்டினிக் அமிலத்திலிருந்து வழிப்பொருளாக எடுக்கப்படுகிறது.
isoprenaline sulphate : ஐசோப்பிரினாலின் சல்ஃபேட் : ஈளை நோய்க்குக் (ஆஸ்த்மா) கொடுக்கப்படும் மருந்து, இது குண்டிக்காய் இயக்குநீரிலிருந்து எடுக்கப்படும் பொருள்.
isoproterenol : ஐசோபுரோட்டீரனால் : மூச்சுக்குழாய் விரிவாக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் பீட்டா அண்ணீரகச் சுரப்பநீர்.
isoprenaline : ஐசோபிரினாலின் : ஆற்றல் வாய்ந்த, பீட்டா அண்ணீரகச் சுரப்பு நீர். இது ஆல்ஃபா அண்ணீரகச் சுரப்பு நீருடன் மிகக் குறைந்த அளவே தொடர்புடையது. குறை இதயத் துடிப்பு அல்லது இதய அடைப்பு உள்ள நோயாளிகளுக்கு இதயத் துடிப்பு வேகத்தைத் தூண்டு வதற்கு அவசர நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
isospora : ஐசோஸ்போரா : ஸ்போரோசோவான் ஒட்டுண்ணி. இது கடுமையான வயிற்றுப் போக்கை உண்டாக்கக்கூடியது.
isosthenuria : ஐசோதெனூரியா : திரவ உள் இழுப்பு குறைவாக இருந்தபோதிலும் குருதிநீர் போன்றே ஊடுகலப்புத் திறனுடன் சிறுநீர் சுரத்தல்.
isothermia : ஐசோதெர்மியா : ஒரு வெப்பநிலை உடைய.
isotonic : நிகரழுத்த : 1. ஒரே அளவு நெகிழ்வுத் திறனுடைய ஒரு கரைசல். 2. தசைச் சுருக்கத்தின் போது ஒரே அளவு எதிர்ப்புத் திறனைப் பேணுதல்.
isotope : ஓரகத்தனிமங்கள் : ஒரே எண்ணிக்கையிலான அணு எண்ணையும் உடைய ஒரு வேதியியல் தனிமம். இதில் நியூட்ரான்களின் எண்ணிக்கையும், அணு எடையும் மாறுபட்டு இருக்கும்.
isotopes : ஓரகத் தனிமங்கள் (ஐசோடோப்புகள்) : ஒரே பொருண் மையுடன் எடை மட்டும் வேறுபாடுடைய தனிம வகை. கதிரியக்கத் தன்மையுடைய இத்தகைய தனிமங்கள் மருத்துவத்தில் நோய் மருத்துவத் துக்குப் பயன்படுத்தப்படுகிறது.
isopropanal : ஐசோபுரோப்பானால் : கைகளுக்குத் தொற்றுத் தடைகாப்பு மருந்தாகப் பயன்படும் வேதியியல் பொருள்.
isotone : ஓரெண் அணு :கருவுட் பகுதியில் நொதுமங்களை ஒரே எண்ணாக உடைய அணு.
isoxazole penicilline : ஐசோக்சாசோல் பெனிசிலின் : கொப்புளங்கள், அரச பிளவைகள் ஆகியவற்றைக் குணப்படுத்த வாய்வழி உட்கொள்ளப்படும் மருந்து.
isoxuprine : ஐசோக்சுப்ரின் : கருமுதிர்வுக்கு முன் ஏற்படும் வயிற்று வலிக்குக் கொடுக்கப்படும் மருந்து.
ispaghula : இஸ்பாகுலா : வயிற்று உப்புசத்திற்குப் பயன் படுத்தப்படும் இயற்கை இழைம உணவு.
issue : வெளிப்பாடு : 1. வழித் தோன்றல். 2. சீழ் அல்லது இரத்தம் வெளியேறுதல்.
isthmitis : தொண்டை வீக்கம் : தொண்டையிலும் வாயின் பின்பக்கப் புழையிலும் வீக்கம் உண்டாதல்.
isthmus : இணைப்புறுப்பு; உறுப்பு இடைஇணைப்பு; சந்தி : கேடயச் சுரப்பியின் இரு பகுதிகளையும் இணைக்கும் ஒடுக்கமான உறுப்புக்கும் இச்சொல் பயன்படும்.
itch : சிரங்கு (நமைச்சல்); அரிப்பு; சொறி : தோலில் அரிப்புக் காணும் தொற்று நோய் வகை.
itch-mile : சிரங்குப்பூச்சி : தோலைத் துளைத்து, சிரங்குக்குக் காரண மாக இருக்கும் சிறுபூச்சி வகை.
ITP : ஐ.டி.பி. ITP : முதல்நிலைத் தட்டணுச் செம்புள்ளி நோய் (ldiopathic Thromnbocytopaemic purpura) என்பதன் சுருக்கம்.
ITU : தீவிரச் சிகிச்சைப் பிரிவு.
IUCD : உள்கருப்பைக் கருத்தடைச் சாதனம்.
IUD : ஐ.யு.டி. : உள்கருப்பைச் சாதனம் (Intrauterine device) என்பதன் சுருக்கம்.
IUGR : உள்கருப்பை வளர்ச்சிக் குறைவு. IV : ஐ.வி. : நரம்புவழி (Intravenous) என்பதன் சுருக்கம்.
IVF : சோதனைக் கூடக் கருவுறல்.
Ivory vertebrae : தந்த முதுகெலும்பு : எலும்பாக்கத் திசு இடமாற்றத்தில் காணப்படும் எலும்பு அடர்த்தி.
IVP : ஐ.வி.பி. : நரம்புவழி இரைப்பைப் படம் (Intravenous pyelogram) என்பதன் சுருக்கம்.
izal : ஐசால் : தொற்றுத் தடைகாப்பு மருந்தாகப் பயன்படுத்தப் படும் குழம்பு மருந்தின் வணிகப் பெயர்.
ixodes : இக்சோடஸ் : இக்சோடி டேயி குடும்பத்தைச் சேர்ந்த ஒர் உண்ணி வகை.
ixodidae : இக்சோடிடேயி : வீட்டு விலங்குகளிடமும், மனிதர் களிடமும் நோயைப் பரப்பும் ஒர் உண்ணிக் குடும்பம். இது கியாசனூர்வன நோய், ராக்கி மலைப் புள்ளிக் காய்ச்சல், லைமே நோய், மறுக்களிப்புக் காய்ச்சல் ஆகிய நோய்களை உண்டாக்குகிறது.