மருத்துவ களஞ்சியப் பேரகராதி/X

விக்கிமூலம் இலிருந்து

xanthopsia : மஞ்சள் காட்சி : எல்லாப் பொருட்களும் மஞ்சள் நிறமாகத் தோன்றும் இயல்பு மாறிய பார்வை.

xanthopsin : சாந்தோப்சின் : ரோடாப்சின் மேல் ஒளி படர்வதால் ஏற்படும் கருத்தசிவப்புப் பார்வை.

xanthopsis : மஞ்சள் திசு சீரழிவு : புற்று நோயில் சீரழிந்த திசுக்களின் மஞ்சள் நிறமாற்றம்.

xanthorrhoea : மஞ்சள் போக்கு : யோனிப்புழையிலிருந்து மஞ்சள் நிற வெளிப்பாடு.

xanthosarcoma : மஞ்சள் தசை புற்று : தசை நாருறையின் பேரணுக்கட்டி.

xanthosis : மஞ்சளாதல் : குருதிக் கெரோட்டீன் மிகையில் காணும் தோலின் மஞ்சள் நிறமாற்றம்.

xanthurenic acid : சாந்தூரணிக் அமிலம் : பைரிடாக்ஸின் குறையில் சிறுநீரில் அதிக அளவில் தோன்றும் ஒரு டிரிப்டோ ஃபேனின் சிறுசிதை பொருள்.

xanthuria : மஞ்சள் சிறுநீர் : சிறுநீரில் சாந்தின் அதிக அளவில் வெளியாதல், சிறுநீரில் சாந்தின் மிகை.

X axis : எக்ஸ் அச்சு : கிடைக்கோடாக உள்ள எக்ஸ் அச்சு. இந்த அச்சில் கிடைக்கோடும் நெடுக்கோடும் குறுக்கிடுகின்றன.

X body : எக்ஸ் உடலம் : லேங் கெர்ஹேன் அணுகுருணைத் திசுவில் பெருவிழுங்கணுவில் உள்ள உயிரணுக்கூழ்ம உட் பொருட்கள்.

X cells : எக்ஸ் உயிரணுக்கள் : விழித்திரையின் முக்கியமாக நடுவிலுள்ள நரம்பு முடிச்சனுக்கள். பெரிய பொருட்களைப் பார்க்க இவை தேவைப்படுகின்றன.

X chromatin : எக்ஸ் குரோமோட்டின் : உயிரணுப்பிளவின்போது உட்கருப் பொருட்கள் பாலணு குரோமோசம்கள்.

X chromosome : இனக்கீற்று எக்ஸ் குரோமோசம் : பெண் பாலின குணவியல்புகளைத் தீர்மானிக்கும் குரோமோசம் (நிறக்கீற்று).

X chromosome inactivation : இனக்கீற்றை எக்ஸ் (குரோ மோசம்) செயலற்றதாக்கல் : வளர்கருவின் ஆரம்ப வளர்ச்சி நிலையில் இரண்டு பெண் பாலின எக்ஸ்குரோமோசம்களில் ஏதோ ஒன்றை செயலற்ற தாக்கல்.

X disease : எக்ஸ் நோய் : அஃப் லாடாக்ஸிகோஸின் தயாரிக்கும் ஆஸ்பெர்ஜில்லஸ் ஃப்ளேவஸ் பற்றிய நிலக்கடலையை உண்பதால் உண்டாகும். அஃப்லா டாக்ஸின் நச்சமைவு.

xenobiotic : உயிர் வேற்றுப்பொருள் : ஒரு உயிர்ப்பொருளுக்கு வேற்றாக உள்ள ஒரு செயல்படும் வேதிப்பொருள்.

xenodiagnosis : அயல்நோயறிதல் : நோயாளிக்கு தொற்றாத நோய்க்கடத்திகளைக் கொடுத்து, பூச்சிகள், உண்ணிகள் அல்லது நோய்க்கடத்திகளால் உண்டாகும். நோய்களை உயிரியல் முறையில் கண்டறிய தொற்று உள்ளதா என அவைகளை பரிசோதித்தல்.

xenogeneic : வேற்றின திசு : 1. வேற்றினத் திசு தொடர்பான. 2. உறுப்பு மாற்று அறுவையில் பயன்படும், வேற்றின நபர்களிடமிருந்து பெறும் திசுக்கள்.

xenogenesis : வேற்றினப் பிறப்பு : 1. பெற்றவரிடமிருந்து வேறு பட்ட வழிமரபுப் பிறப்புகள். 2. வேறு குணப்பிறப்பு.

xenogenic : அயற்பிறப்புசார் : உயிரினத்துத்துக்குள்ளே செலுத்தப்பட்ட அயற்பொருளில் இருந்து அல்லது உயிரினத்துக்கே வெளியே உருவாகும்.

xenogenous : அயற்பொருள் சார்ந்த : அயற்பொருள் உண்டாக்கிய

xenology : வேற்றியல் : ஒட்டுண்ணிகள் மற்றும் அவற்றின் ஏற்பாளர்களைப் பற்றிய அறிவியல்.

xnomenia : மாதவிடாய்கோளாறு : மாதவிடாய் நின்று போவதால் ஏற்படும் குருதிக் கசிவால் உண்டாகும் கோளாறு.

xenon : செனோன் : ஒர் அரிதான வேதியியலில் மந்தமான, எடை மிகுந்த வாயுத் தனிமம். இது பொதுவான உணர்ச்சியின் மையை உண்டாக்கக்கூடியது.

xenoparasite : அயல்ஒட்டுண்ணி : வலுவிழந்த நபர்களில் மட்டும் ஒட்டுண்ணியாக வாழும் உயிரினம்.

xenophobia : அயல்வெறுப்பு : அயல் வழக்கங்கள் மற்றும் அயலார் பற்றி அறிவுக் கொவ்வாத பயம்.

xenophonia : வேற்றுக்குரல் : குரலின் தன்மை மாற்றம்.

xenophthalmia : அயல்பொருள் கண்நோய் : கண்ணில் அயல் பொருள் இருப்பதால் உண்டாகும் அழற்சி.

Xenopsylla : செனோப்சில்லா : எலிகளிடமிருந்து மனிதனுக்கு பிளேக் கிருமியை பரப்பும் தெள்ளுப்பூச்சியில் ஒரு இனம். பொது உதாரணம், எலித் தெள்ளுப்பூச்சியான செனோப்சில்லா சியோ(ப்)பிஸ் ஆகும்.

xenopsylla : எலியுண்ணி : பிளேக் நோயைப் பரப்பும் கொடிய தெள்ளுப் பூச்சி வகை.

xenorexia : அயல்பொருள்பசி : இயல்புமாறிய பசியால் வெளிப் பொருட்களை அடிக்கடி விழுங்குதல்.

xenotransplantation (xeno graft) : விலங்கு உறுப்புமாற்று அறுவை : மனிதருக்கான உறுப்பு மாற்று அறுவை மருத்துவத்தில் விலங்கு உறுப்புகளைப் பயன்படுத்துதல்.

xenotropic : அயல்வளர்ச்சி : 9(5 பிராணி இனத்தின் உயிரணுக் களில் காணப்படும் வைரஸ் வேறொரு இனப்பிராணியின் உயிரணுக்களைத் தொற்றும் போது மட்டும், பெருக முடிகிறது.

xerasia : உலர்மயிர் : இயல்புக்கு மாறாக உலர்ந்து, உடையக் கூடிய மயிர்நிலை கொண்ட மயிர் வியாதி.

xero : கிஸேரோ : உலர்நிலை தொடர்பான கூடும் (ஆங்கில) வார்த்தை.

xerocyte : அயலணு : இரத்தச் சிவப்பணுவின் சவ்வில் உள்ள குறையால் பொட்டாசியம் மற்றும் தண்ணிர் இழப்பை அனுமதிப்பதால் உயிரணுக்களை நீரிழக்கச் செய்து பாதி இருண்டும் பாதி வெளுத்தும் காணச் செய்கிறது.

xeroderma (xerodermia) : தோல் உலர்வு; வரட்டுத் தோல் : தோல் உலர்ந்து போகும் நோய்.

xerogram : உலர்பதிவுப்டம் : உலர்பதிவால் உண்டாகும் உருவம்.

xerography : உலர்வரைபதிவு : 1. காகிதத்தில் உருவைப் பெறும் கதிர்ப்படமுறை. 2. உலர்கதிர்ப் படப்பதிவு.

xeroma : உலர்கட்டி : 1. இயல்புக்கு மாறாக உலர்ந்த இமை இணைப் படலம். 2. உலர்கண்.

xeromammography : உலர்மார்பக வரைபதிவு : படத்தாளில்லாமல் காகிதத்தில் மார்பகத்தின் மென்திசுக் கட்டமைப்பின் இறுதி உருவத்தை உண்டாக்கும், ஒளிக்கடத்தியைக் கொண்டு ஒரு மாற்று கதிர்ப்படமுறை.

xeromenia : மாதவிடாய் கோளாறு; உலர் மாதப்போக்கு : மாதவிடாய் நின்ற பின்னரும் இரத்தக் கசிவு இன்றி மற்ற குறிகள் மட்டும் நிகழும். xerophthalmia (xerosis) : கண்ணழற்சி; வரட்டுக்கண் : நீர்க்கசிவற்ற கண்ணழற்சி நோய். இது வைட்டமின்-ஏ உயிர்ச் சத்துக் குறைபாட்டினால் உண்டாகிறது. இது கண் குருடாவதற்கு வழிவகுக்கும்.

xeroradiography : உலர் கதிர்ப் படப்பதிவு : ஒரு உலர் ஒளிமின் செய்முறையில் கதிரிப்பட உருப்பதிவு செய்தல். இதில் செலெனியம் போன்ற முழுமையற்ற கடத்தி பூசப்பட்ட உலோகத் தகடுகள் மற்றும், படத்தை வெளிப்படுத்த நீர்ம வேதிப் பொருளைப் பயன்படுத்தாமல் உலர்பொடியைப் பயன்படுத்துதல்.

xerotic : உலர்ந்த; உலர்; உலர் நிலை; உலர் பளிங்கு ஒளிப்படல அழற்சி : உலர் இமையினைப் படலத்திலிருந்து உண்டாகும் விழி பளிங்குப் ஒளிப்படல அழற்சி.

xerostomia (xerostoma) : வாய் உலர்வு; வாய் வறட்சி; வரள் வாய் : உமிழ்நீர்க் கசிவின்றி வாய் உலரும் நோய்.

xerotes : உடல் உலர்வு : நீரின்றி உடல் உலர்ந்து போதல்.

xerotocia : உலர்பிரசவம் : பனிக் குடநீர் அளவு குறைந்ததால் உலர்பிரசவம்.

xerotomography : உலர்உள்தளப் பதிவு : உலர் கதிர்படமுறை மூலம் உருவங்களைப் பதிவு செய்யும் உள்தளப் பதிவு.

xiphocostal : வாளுரு விலா எலும்பு சார்ந்த : (மார்பெலும்புக்) கீழ் துருத்தம் மற்றும் விலா எலும்புகளைக் குறிக்கும்.

xiphodynia : வாள்முனை வலி : மார்பெலும்புக் கீழ்முளையில் வலி.

xiphoid (xiphisternum) : மார்பெலும்பின் கீழ்க்கோடி.

xiphopagus : வாள்துருத்த இணை இரட்டையர் : மார்பெலும்பின் கீழ் (முளை)த்துருத்தத்தில் ஒட்டியிணைந்து உள்ள சமச்சீர் இரட்டையர்.

x linkage : பாலினத் தொடர்பு : எக்ஸ் நிறப்புரிகளின் மேல் ஏந்திச் செல்லப்படும் மாறிய மரபணுக்களால் தீர்மானிக்கப்படும் கோளாறுகள்.

X-linked : எக்ஸ் தொடர்பு கொண்ட : பாலினத் தொடர்பு முறையில் மரபணுக்கள் எக்ஸ் நிறப்புரி இனக்கீற்றுகளில் ஏந்திச் சென்று கொண்டு செல்லல், பாதிக்கப்படும் நபர்கள் ஆண்களாவர்.

X radiation : எக்ஸ் கதிர் வீச்சு : எக்ஸ் கதிர்களுக்கு உட்படுதல் அல்லது எக்ஸ் கதிர்கள் கொண்டு மருத்துவம். x-ray : ஊடுகதிர் (எக்ஸ்-கதிர்) : காமா கதிர்கள் போன்று மிகவும் ஊடுருவும் திறன் கொண்ட கதிர். இது அணுக்கருவிலிருந்து வருவது இல்லை. மாறாக அதைச் சுற்றியமைந்த எலெக்ட்ரான்களிலிருந்து வருகிறது. எலெக்ட்ரான் தாக்குதல் மூலம் இது உண்டாகிறது. இக்கதிர் பெரும்பாலான பொருட்களை ஊடுருவிச் செல்கிறது. இதன் மூலம் எலும்புகளின் உள் உறுப்புகளின் நிழல்களைப் பார்க்கவும், படம்பிடிக்கவும் முடியும்.

x-ray examination : ஊடுகதிர்ச் சோதனை : ஊடுகதிர் (எக்ஸ்ரே) மூலம் கூராய்வு செய்தல்.

x-ray photograph : ஊடுகதிர் ஒளிப்படம் : எலும்பு முதலியவற்றை ஊடுகதிர் (எக்ஸ்ரே) மூலம் ஒளிப்படம் எடுத்தல்.

x-rays short wavelength : ஊடு கதிர்ச் சிற்றலை நீளம் : மின்னியல் கருவியினால் உண்டாக்கப்படும் மின்காந்த ஊடகத்தின் ஊடுருவும் கதிர்கள். பொதுவாக இது ஊடுகதிர்ப் படங்களைக் குறிக்கிறது.

X wave : எக்ஸ் அலை : இதயக் கீழறை சுருக்கத்தின் போது மூவிதழ் வால்வு கீழ் இடம் மாறுவதாலும் மேலறை விரி வடைவதாலும் கழுத்துச் சிரை அழுத்த அலை கீழிறங்குதல்.

xylene : சைலீன் : எளிதில் தீப்பற்றக்கூடிய தெளிவான திரவம் பென்சீனைப்போன்றது. பேன் நோய்க்குக் களிம்பு மருந்தாகப் பயன்படுகிறது.

xylocaine : சைலோகேய்ன் : உறுப்பெல்லை உணர்வு நீக்கும் லிக்னோக்கேய்ன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

xylo : ஸைலோ : மரம் தொடர்பானகூடும் ஆங்கிலச் சொல்.

xylol : சைலோல் : பேன் நோய்க்குப் பயன்படும் சைலின் என்ற களிம்பு மருந்தின் வணிகப் பெயர்.

xylometazoline : சைலோமெட் டாசோலின் : மூக்குக் குருதி நாள இறுக்க மருந்து விரைவாகக் குணமளிக்கும்; ஆனால் குறுகிய காலமே வினை புரிகிறது. அடிக்கடிப் பயன்படுத்துவதால் மூக்கடைப்பு உண்டாகும்.

xylose : சைலோஸ் : மரச்சர்க்கரை.

xylose test : சைலோஸ் சோனை : உள்ளீர்ப்புக் கேடான நோயைக் கண்டறிவதற்கான சோதனை. இதில், சைலோஸ் வாய்வழி கொடுக்கப்பட்டு, அது சிறுநீரில் வெளியேறும். அளவு அளவிடப்படுகிறது. சிறுநீரில் சைலோஸ் வெளியேறும் அளவு 25 விழுக்காட்டிற்குக் குறைவாக இருக்குமானால், உள்ளிர்ப்புக் கேடு இருக்கிறது என அறியப்படுகிறது.

xylosuria : கிளைலோஸ் சிறுநீர் : சிறுநீரில் கிளைலோஸ் காணப்படுதல்.

xylotherapy : மரமருத்துவம் : உடலில் சில மரங்களைப் பயன்படுத்தி மருத்துவம் செய்தல்.

xylotox : சைலோடாக்ஸ் : உறுப்பெல்லை உணர்வு நீக்குப்லிக்னோக்கேய்ன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

xyrospasm: கத்திச்சுரிப்பு : நாவிதர்களில் காணப்படும் கைகள் விரல்களை பாதிக்கும் தொழில் தொடர்பான கரிப்பு.

xysma : சவ்வுத்துணுக்கு : மலப் பொருளில் காணப்படும் சவ்வுத் துணுக்குகள்.

xyster : என்பராவி : எலும்பு கரண்டும் கருவி. எலும்புகளை சுரண்டப் பயன்படுத்தப்படும் ஒரு அறுவை மருத்துவரின் கரம் போன்ற கருவி.