மருத்துவ களஞ்சியப் பேரகராதி/Z

விக்கிமூலம் இலிருந்து

Z band : இசட்-பட்டை : வரியிட்ட தசையிழையின் ஊடாக குறுக்காக செல்லும் மெல்லிய இருண்ட பட்டை.

Z-deformity : இஸட் உருக்குறை : ருமட்டாய்டு மூட்டழற்சியில் மணிக்கட்டு வெளிப்பக்கம் விலகியும் விரல்கள் உள்பக்கம் விலகியுள்ள நிலை (தடை தாண்டுவோர் ஊர்தியிலும் நடந்தும் செல்வோர்) பெரு விரல். அடிக்கடி அண்மைய விரலெலும்புகள் உள்ளங்கைப் பக்கம் நழுவல்.

zebra body : ஸீ(உ)ப்ரா உடலம் : சில லைசோசோமல் சேமிப்பு நோய்களில் காணப்படும், அகன்ற குறுக்காகக் குவிந்த மையலினாய்டு படலங்களைக் கொண்ட லைசோசோம்.

zebra pattern : வரிக்குதிரை பாங்கு : பாங்கு மயிர்தண்டில் கந்தக அளவு குறைந்திருப்பதால், டிரிக்கோஸ்கைஸிஸ் வியாதியை, முனைப்படு ஒளியுருப் பெருக்கியில் பார்க்கும்போது, தோன்றும் மாறிமாறி வெளுத்த இருண்ட பட்டைகள் கொண்ட மயிர்த் தண்டு.

zeiosis : லியோசிஸ் : உட்கரு உருக்குலைவதோடு மைட்டோகான்ட்ரியா வீக்கமாக வெளிப்படும். நிண அணுவாலான உயிரணு அழிப்பு வகை.

Zeis glands : ஸீயஸ் சுரப்பிகள் : ஜெர்மன் கண் மருத்துவர் எட்வார்டு சீய்ஸ் விவரித்த, இமை ஒரத்திலுள்ள நெய்மச்சுரப்பிகள்.

zeism : ஸீயிஸம் : பெல்லாக்ரா எனும் நோயை குறிக்கிறது. சோளம் மிக அதிகம் சாப் பிடுவதால் ஏற்படும் நிலை.

Zeitgeber : ஸீய்ட்ஜீபெர் : காலம் காட்டி, சூழலில் பருவமுறையிலான ஒரு காரணி. ஒரு 24 மணி நேர சுழற்சியில் உள்பகற் பொழுது ஒழுங்குடன் ஒத்தமைவது.

Zellballen : ஸெல்பாலென் : பக்க நரம்புமுடிச்சுக் கட்டியில் காணப்படும், மென்மையான குருதிநாள நிறைத்திசுவால் சூழப்பட்டுள்ள, வட்ட அல்லது பலகோண முதன்மை உயிரணுக்கள் ஒரே மாதிரி, வலை மாதிரி குவியல்களாய் இருப்பது.

Zellweger's syndrome : ஸெல்வேஜர்க் நோயியம் : அமெரிக்க குழந்தை மருத்துவர் ஹெச் ஸெல்வேஜர் விவரித்த பெரு மூளை கல்லீரல் சிறுநீரக நோயியம்.

Zenker's degeneration : ஸெங்க்கெர் சீர்கேடு : ஜெர்மன் நோய்க்குறியாளர் ஃப்ரெட்ரிக் ஸெ(2)ங்க்கெர் விவரித்த, குறிப் பாக டைபாயிடு நோயில் காணப்படும் எலும்புத் தசைகளின் சீர்கேடு.

Zenker's fluid : ஸெங்க்கெர் திரவம் : ஜெர்மன் திகவியலாளர் கோன்ராடு ஸெங்க்கெர் பெயர் கொண்ட, தண்ணிரும் மெர்க்குரிக் குளோரைடு, பொட்டாசியம் டைக்ரோ மேட், கிளேசியல் அசெட்டிக் அமிலகம் கொண்ட ஒரு திசு நிலைப்படுத்தியை உட்கருவை காணப் பயன்படுத்துவது.

zeolite : லியோலைட் : இயற்கையாகக் கிடைக்கும் நாரிய சிலிக் கேட் கணிப்பொருளுக்கு ஆட்படுவதால் நுரையீரலுரை நடு அடுக்குக்கட்டி வளர்ச்சி.

zero : பூஜ்யம் : ஒன்றும் இல்லை சைஃபர் குறியீடு, வரைபடத்தில் நடநிலை உறுதிப் புள்ளி அதிலிருந்து ஒரு அளவு கோலின் எல்லா அளவை பிரிவுகளும் அளக்கப்படுகின்றன. ஒரு அளவுகோலின் இப்புள்ளியிலிருந்து அளவீடு துவங்குகிறது. இந்த எண் உலகுக்களித்த குறிப்பிடத்தகுந்த கொடையாகும்.

zero fluid balance : பூஜ்யம் பாய்ம சமனிடு : உள்ளெடுக்கும் பாய்ம அளவும் வெளியேறும் பாய்ம அளவும் சமமாய் இருக்கும் நிலை.

zero order kinetics : பூஜ்ய அளவுவிசை இயக்கவியல் : மருந்து வெளியேற்றப்படும் அளவு, நேரத்துடன் நேரான அளவிலும், சிதைய மாற்றத்துக்குப் பொறுப்பான நொதியின் செறிவளவைப் பொறுத்து மாறுபட்டும், வினைப்படு பொருள் செறிவுக்கு சம்பந்தமில்லாமலும் உள்ளது.

Zero-End Expiratory Pressure ZEEP : முடிவு பூஜ்ய வெளிமூச்சு அழுத்தம் : மூச்சு வெளியேறும் இறுதியில் காற்று வெளியேறும் அளவுக்கு திரும்பும் அழுத்தம்.

zero population growth : பூஜ்ய மக்கள்தொகை வளர்ச்சி : ஒரு குறிப்பிட்ட கால அளவில் பிறப்புகளின் எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும்போது மக்கள் தொகையளவு கூடுவதுமில்லை, குறைவதுமில்லை.

zestocautery : கொதிப்புத்தீய்ப்பு : மிகவும் சூடான ஆவியை மருத்துவத்துக்கு பயன்படுத்த உதவும் கருவி.

zetacrit : ஸீட்டாக்ரிட் : ஹெமட்டாக்ரிட்டால் பாதிக்கப்படாத இரத்தச் செவ்வணு படிவு வீதத்தை தீர்மானிக்கும் முறை. ஸீட்டா படிவு வீதம், ஃபைப்ரி னோஜன் மற்றும் காம்மா குளோபுலின் பொறுத்தவரை நேரானது.

Ziegler's operation : ஸீக்ளெர் அறுவைமுறை : அமெரிக்க கண் மருத்துவர் ஸாமுவெல் ஸீக்ளெர் விவரித்த, ஒரு செயற்கை கண்மணியை உருவாக்க வீவடிவத்தில் விழிக் கரும்படலத்தை வெட்டுதல் முறை.

Ziehen's test : ஸீஹென்சோதனை : ஜெர்மன் நரம்பியலாளர் ஜெராக்ஸிஹென் விவரித்த மன நல இயக்க சோதனையில் மாறுபட்ட பொருள்களான பூனை, நாய் இடையே உள்ள வேறுபாட்டை விவரிக்க சொல்லும் சோதனை.

Ziemann's dots : ஸீமான் புள்ளிகள் : பிளாஸ்மோடியம் மலேரியா காய்ச்சலில் சில சமயம் சிவப்பணுப் படலத்தில் காணப்படும் சிறு இளஞ்சிவப்புப்புள்ளிகள்.

Zieve's syndrome : ஸீவ்நோயியம் : மிக அதிகமாக மது அருந்தும் நோயாளிகளில் நாட்பட்ட கல்லீரல் நோய் உண்டாகி, இரத்த அழிவால், வயிற்று வலியும், மஞ்சள் காமாலையும், குருதிக்கொழுப்பு மிகையும் உண்டாகின்றன.

ZIFT : ஸிஃப்ட் : ஒரு பெண்ணின் கருப்பைக் குழாயில் கருவுற்ற முட்டையை செயற்கையாக வைப்பதன் மூலம், மகப்பேற்றின்மையை குணப்படுத்தும் முறை. (கருவுற்ற முட்டையை கருப்பைக்குழலுக்குள் செலுத்தல்).

zig-zag : வளைந்து வளைந்து : முதலில் ஒரு பக்கமும் அடுத்து மறுபக்கமும் கூரான திருப்பங்களை காண்பிக்கும் ஒரு கோடு நீளுதல்.

zileuton : ஸீலில்லியூட்டான் : மிதமான நடுத்தரமான நாட்பட்ட ஆஸ்துமாவில் பயன்படுத்தப்படும் ஒரு 5 லைப்போ ஆக்ஸினேஸ் தடுப்பி.

zinacef : லினாசெஃப் : பெனிசிலினை எதிர்க்கும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் செஃபுரோக்சிம் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

zinamide : ஸினாமைடு : காசநோயைக் குணப்படுத்தக் கொடுக்கப்படும் பைராசினா மைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.

zinc : துத்துநாகம் : பல்வேறு செரிமானப் பொருள்களின் இன்றியமையாத பங்கு வகிக்கும் ஒரு தனிமம். புரத இணைப்பில் முக்கியப் பங்கு கொள்கிறது. ஆல்ககால், கருத்தடை மாத்திரைகள் ஆகியவற்றால் இது குறைகிறது. துத்தநாகக் குறைபாட்டினால்,குருதிச் சோகை, குள்ள உருவம், மண் திண்ணும் பழக்கம் உண்டாகிறது.

zingiber : இஞ்சி : இஞ்சிக் கிழங்கு செடியின் வேர்.

Zinn's ligament : ஸின்பிணையம் : ஜெர்மன் உடற்கூறியலாளர் ஜோஷன் ஸி(2)ன் பெயர் கொண்ட, கண்ணின் நேர்த்தசைகளை இணைக்கும் இணைப்புத் திசு.

zipper proglottid : ஸிப்பர் புரோகுளாட்டிடு : சேஃப்ரோனின் மற்றும் இந்தியமை செலுத்தப்படுவதன் மூலம், நாடாப் புழுவின் பாலுறுப்பு முதிர்ந்த பகுதியில் இருக்கும் 15-20 வெளிஜிப் போன்ற கிளைகளைக் காட்டுவது.

zirconium : ஸிர்கோனியம் : 40ஆம் எண்ணிலுள்ள அரிதான உலோகத் தனிமம். குறியீடு Zr.

z-lines : இஸ்ட்கோடுகள் : இதயத்தசை இழைகளில் வரிகளை காண்பிக்கும் குறுக்குக்கோடுகள்.

zombie effect : ஸோம்பீ விளைவு : காரணமில்லா பார்(க்)கின் சன்வியாதியைப் போன்ற தன்மைகள் கொண்ட ஹேலோ பெரிடாலின் கூம்பு வெளித்தட விளைவுகளால் உண்டாகும் ஆளுமை மாற்றங்கள்.

zone : பட்டை வளையம் : புலம்; கை கால்களைத் தாங்கும் எலும்புப்பட்டை வளையம்.

Zondek's syndrome : ஸான்டெக் நோயியம் : ஜெர்மனியில் பிறந்த இஸ்ரேல் மகப்பேறு மருத்துவர் பெர்ன் ஹார்ட் ஸான்டெக் விவரித்த நிலையில் பிரசவத்துக்குப் பிந்திய இரத்தப் போக்கு, மிகுமுலைப்பால் கரப்பு, தைராயிடுமிகை ஆகியவை உள்ளன.

zonesthesia : பகுதி உணர்வு : வயிறு அல்லது இடுப்பைச் சுற்றி உணரப்படும், குறுக்குவது போன்ற வலியுணர்வு. -

zonifugal : பகுதி நீங்கிய : ஒரு பகுதி, பிராந்தியத்திலிருந்து வெளிப்பக்கம் நகருதல்.

zoning phenomenon : பகுதியாக்க காட்சிமுறை : மச்சை நாரிய நோயில் எலும்பு மச்சையில் இயல்பல்லா தட்டனுக்கள் அடுக்கப்பட்டிருத்தல் எலும்பாக்கத் தசையழற்சியில் எலும்புக் குருத்துகட்டி போன்ற வளர்ச்சி மூன்று நுண்ணோக்கியப் பகுதிகளாக உள்ளன.

zonipetal : பகுதிநெருங்கிய : ஒரு பகுதி அல்லது பிராந்தியத்தை நோக்கி நகருதல்.

zonisamide : ஸோனிசாமைடு : வலிப்பு எதிர்ப்பு மருந்தான, பென்ஸிசாக்ஸ்ஸோல் சல்ஃபானமைடு.

zonked : போதையேறிய : மருந்துகள் அல்லது மதுவால் மிகவும் நச்சூட்டப்பட்ட.

zonoskeleton : பகுதி எலும்புக் கூடு : இடுப்பெலும்பு, முதுகுப்பட்டையெலும்பு, காரையெலம்பு போன்ற உறுப்புகள் ஒட்டும் பக்க எலும்புகள்.

zonula ciliaris : கண்ணிமை இழைப்பிழை : கண்விழியாடியின் புறப்பகுதியைக் கண்ணிமை மயிருடன் இணைக்கும் தொங்கு இணைப்பிழை.

zonule : பட்டை வளையம்; சிறு பகுதி : சிறுபட்டை வளையம்.

zonulolysis : கண்ணிமை இணைப்பிழை அழற்சி; நுண் புலமுறிவு : கண்ணிமை இழைப் பிழையில் ஏற்படும் வீக்கம்.

zoodermic : பிராணித்தோல் சார்ந்த : தோல் ஒட்டறுவையில் போல் பிராணித்தோல் கொண்டு செய்யப்பட்ட.

zooglea : ஒட்டிய நுண்ணுயிர்கள் : ஊன்பசைப்பொருளால் பதியப்பட்டுள்ள, நுண்ணுயிர்களின் தொகுதி.

zoogony : உயிராக்கம் : உடலுக்குள்ளிருந்து, உயிருள்ள இளம் உயிர் ஒன்றை உருவாக்குதல்.

zoograft : விலங்குத்திசு ஒட்டறுவை : ஒரு கீழ்நிலை (பிராணி) விலங்கிலிருந்து திசுவை எடுத்து ஒட்டறுவை.

zooid : விலங்கு போன்ற : ஒரு விலங்குக் கூட்டத்தில் ஒரு உயிர்.

zoolagnia : விலங்குப்பாலின கவர்ச்சி : விலங்குகளின் மேல் பாலினக் கவர்ச்சி.

zoology : விலங்கியல் : விலங்குகளைப் பற்றிக் கூறும் உயிரியல் விஞ்ஞானப் பிரிவு.

zoomania : விலங்கு வேட்கை : விலங்குகளின் மேல் அளவு மீறிய விருப்பம்.

zoonosis : தாவு நோய்; விலங்கு வழி தொற்று நோய்; விலங்கிய நோய் : விலங்கிடமிருந்து மனிதருக்குத் தாவக்கூடிய நோய், இறைச்சிக் கொட்டில்கள், பண்ணைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு இந்நோய் உண்டாகும்.

zoonotic helminths : விலங்கு ஏந்துகுடற்புழுக்கள் : டிரைக் கிளுல்லாஸ்பைராலிஸ், டாக்ஸோகேரா கேனிஸ், ஆன்ககி லோஸ்டோமாபிரேஸிலியென் சிஸ், க்னேதோ ஸ்டோமா விலங்குகளால் மனிதர்களுக்குப் பரவும் குடற் புழுக்கள். zoophilia : விலங்கு அன்பு : 1. விலங்குகளின் மேல் இயல்பல்லா அன்பு, 2. பாலினக் கிளர்ச்சியை அடைவதற்காக, பாலுறவு அல்லது உடலுறவை விரும்புதல்.

zoospore : விலங்குக் கருமூலம் : சில ஓரணுவுயிர்கள், பூஞ்சைகள், பாசிகள் உருவாக்கும் நகரும் கருவணு.

zootoxin : விலங்குநச்சு :தேள்கள், சிலந்திகள், பாம்புகளின் விஷம் போன்ற விலங்குகளி லிருந்து உருவாகும் நச்சுப் பொருள் அல்லது அது மாதிரி நச்சிலிருந்து தயாரிக்கப்படும் ஊநீர்.

z-plasty : இஸ்ட் ஒட்டறுவை : தழும்புச் சுருக்கங்களை இளக் குவதற்கு செய்யப்படும் வடிவ மைப்பு (சீர்) அறுவை இஸட் வடிவில் கீறி, இரு முக்கோண மடிப்புகளை அவற்றின் முனைகள் சுருக்கக்கோட்டை தாண்டுவது போல் இடம் பெயர்தல்.

zoster : தேமல் : படர் தாமரை, அக்கி.

z protein : இஸ்ட் புரதம் : வரித் தசையின் இஸ்ட்பட்டையில் இயல்பாக உள்ள ஒரு புரதம்.

z score : இஸ்ட்கணிப்பெண் : கணிப்பெண்ணுக்கும் சராசரிக்கும் உள்ள வேறுபாட்டை ஒரு நிலையான விலகலால் வகுப்பதைக் குறிக்கும் மதிப்பெண் விலகல்.

z-track : இஸ்ட் தடம் : உள் செலுத்தப்பட்ட கரைசல் பின் வராமல் தடுக்கின்ற முறையில் உட்செலுத்தும் முறை.

Zuckerkandl's bodies : ஸீக்கெர் கேன்டில் மெய்மங்கள் : ஜெர்மன் உடற்கூறியலாளர் எமில்க்கர் கேன்டில் விவரித்த, மகாதமனி இரண்டாகப் பிரியுமிடத்திற்கு அருகிலுள்ள பக்க நரம்பு முடிச்சு நரம்பணுத் திரள்கள்.

Zulu dancer's hip : ஸூலு நடனமாடுவோர் இடை : ஸூலு மக்களில் உண்டாகும் தொழில் மய மூட்டழற்சி.

zvalue : இஸட்-மதிப்பு : ஒரு மக்கட் குழுவின் சராசரி குறிப்பிட்ட பெண்ணிடமிருந்து மாறுதல் இல்லை என்னும் புனைவு கோளுக்கான புள்ளி விவரச் சோதனை.

z wave : இஸட்-அலை : இதய மேலறை மற்றும் கீழறைச் சுருக்கங்களுக்கிடை நேரத்தில் மேலறை அழுத்தம் குறைதல்.

zwitterion : ஈரயனி : நேர்மின்னேற்றமும் எதிர்மின்னேற்றமும் கொண்ட அயனி.

zygodactyly : விரலுள்ள : ஒட்டி இணைந்த விரல்களைப் போலி அல்லாமல் விரலெலும்புகளின் எலும்பினைப் பிணைப்பின்றி, தோல் மற்றும் மென்திசுக்களால் ஒட்டியுள்ள விரல்கள்.

zygogene cells : ஜைகோஜீன் அணுக்கள் : பெப்ஸின் சுரக்கும் இரைப்பை உயிரணுக்கள்.

zygoma : கன்ன எலும்பு : கன்னத்தின் வளைவெலும்பு.

zygomaticus : கன்னக்கதுப்புத் தசை : மேலுதட்டை மேலாகவும் வெளிப்பக்கமும் இழுக்கும் முகத்தசை. முகத்தின் இரு பக்கமும் ஒரு பெரியதும் ஒரு சிறியதுமென கன்னக் கதுப்புத் தசைகள் உள்ளன.

zygomycetes : ஒட்டிணைப் பூஞ்சை : எதிர்ப்பு சக்தியிழந்தவர்களில் வளரும் அப்சிடின், மியூகார், ரைஜோபஸ் போன்ற பூஞ்சைக்காளான்) தொகுதி.

zygomycosis : ஒட்டினை பூஞ்சைத் தொற்று : நோயாளிகளில் தோன்றும் மியூகோராசியே குடும்பத்தை சேர்ந்த பூஞ்சைத் தொற்று. ஒதுதோலடித் திசுக்கள் மட்டுமிருக்கக்கூடும் அல்லது இரத்த நாளங்களுக்குப் பரவக்கூடும்.

zygosis : ஒட்டுக்கரு : ஆண் பெண்பாலணுக்களின் (முட்டையும் விந்தணுவும்) இணைவதால் உண்டாகும் கருவுற்ற முட்டை.

zygote : இருபாலணு இணைவுப் பொருள்.

zygotene : ஸைகோட்டேன் : உயிரணுப்பிளவின் முதல் நிலையில் ஒருபடி.

zyme : புளிமா நோய்க்கிருமி.

zymogen : ஸைமோஜன் : ஒரு செயல் திறமிக்க செரிமானப் பொருளின் (என்ஸைம்) முன்னோடிப்பொருள். இது அமிலப்பொருளால் செயலூக்கம் பெறுகிறது.

zymogenesis : ஸமோஜென் நொதியாதல் : ஸைமோஜென் ஒரு செயல்படும் நொதியாக உருமாறுதல்.

zymolysis : நொதியழிவு : நொதிகளின் சீரண மற்றும் புளிக்கும் செயல்கள்.

zymose : ஸைமோஸ் : இன்வெர் டின் ஒரு மானோசாக்கரைடை டைசேக்கரைடுஆக மாற்றும் நொதி.

zymosis : புளிப்பூட்டம் : நண்ம நுழைவுப் பெருக்கக் கோளாறு.

zymotic disease : புளிப்பூட்ட நோய் : உடம்புக்கு வெளியே இருந்து உடலுக்குள் செலுத்தப்படும் கிருமிகளால் உண்டாகும் தொற்றுநோய் புளித்துப் போகச் செய்வது போன்றது.

zz : இஸ்ட் இஸ்ட் : ஆல்ஃபா, டிரிப்ஸின் எதிர்ப்பிக் குறைவில் போன்ற ஒத்தபாலணு வகை.